Pages

Sunday, September 26, 2010

மொள்ள மொள்ள குறையுது—தண்ணீர்— அள்ள அள்ள கரையுது --- மின்சாரம்

என்னத்த எழுத—பெரிய சப்ஜெட் ஆச்சே---முயற்சி பண்ரேன்.---

சம்சாரம் இல்லாமல் இருந்தாலும் வாழலாம்—மின்சாரம் இல்லாமல் வாழமுடியாது—பழகிவிட்டோம்---.வசதிகள் பெருகியது—வாய்ப்புக்கள் உருவானது—அனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம்—விடமுடியவில்லை—இனி முடியாது.—அப்படியா.?

மின்சாரம்----வீட்டில், தொட்டது, பட்டது,  விட்டது,  கெட்டது,எல்லாம் மின்சாரம்—
வெய்யிலில் சூட்டை குறைக்க,…குளிரில் சூட்டை நிறைக்க—ஆஸ்பத்திரியில்,..அலுவலகத்தில்,…தொழிற்சாலையில்,..ரோடு,..போர்டு,..கோடு,…ஆல் இன் ஆல் அழகு ராஜா மின்சாரம்.
இது இல்லாமல் மக்கள் படும் பாடு—தொழில்கள் படும் பாடு—இது குறைந்தால் கட்சிகள் படும் பாடு—
இதற்குத்தான் உலகமுழுதும் இன்று ஹை டிமாண்ட்
அதிகம் வைத்திருக்கும் அரபுக்காரனுக்கெல்லாம் ஏக குஷி—அவர்கள் காட்டில் மழை—வறண்ட பாலைவன காரனிடத்தில் இன்று பண மழை.

ரஷ்யா..சைபீரியாவில் உள்ள எண்ணைக் கிணறுகளை “தொடாமல்” பாதுகாத்துவருகிறது.---பிற்காலத்திற்காம்..
உலகின் 4 சதவீதம் மக்கள் தொகையுள்ள அமெரிக்கா, உலகின் மொத்த வசதியில் 24 சதவீதத்தை அனுபவிக்கிறது…  எதிர்கால “எனர்ஜிக்கு “”ஆலாய் பறக்கிறது…
வளர்ந்த நாடுகள் “”மாற்று எரிபொருளை”’ தேடிவருகிறது.
சீனா  இப்போதே இன்னும் 20 ஆண்டுகளை நோக்கி சிந்திக்க தொடங்கிவிட்டது.   “சோலார் எனர்ஜி—சோலார் செல்—சோலார் பவர் “”என திட்டங்கள் தீட்டி எங்கோ போய் விட்டது.

இந்தியாவில் குஜராத்தை தவிர எந்த மாநிலமும் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. எல்லா இடத்திலும் பவர்—கட் நிலைதான். தொலை நோக்கு பார்வையில்—சிந்திக்க தலைவர்கள் பஞ்சம்—    ””வந்தது வரட்டும் –அப்புறம் பார்த்துக்கலாம் “” இப்படித்தான் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. கிடைக்கும் பெட்ரோலியம் முழுவதையும் “ரிலையன்ஸ்ஸுக்கே” தாரை வார்த்துவிட்ட காங்கிரஸ்—
நம்ம நிலமை ரொம்ப கவலைக்கிடம்.

ஒரு நாற்பதாண்டுக்கு முன்பு இவ்வளவு மின்வசதி இல்லை—அதனால் ஏ.சி..பிரிட்ஜ்..வாஷிங் மெஷின்..இல்லை--”கன்ஸூமரிஸம்” இல்லை.அதனால் தேவைக்குமேல் பொருட்களை “”அடைத்து குவிக்கும் “”பழக்கம் இல்லை..ஓலை கை விசிறி..பரண், குதிரில்,,காய்கள், நெல் பராமரிப்பு என இயற்கையோடு இணைந்த வாழ்க்கை..பூமித்தாயை வேகமாக சுரண்டி அனைத்தையும் அள்ளும் மனோபாவம் இல்லாமல் இருந்தது..

எங்கள் கிராமம் கொத்தங்குடியிலிருந்து நாச்சியார் கோயிலுக்கு 5 கல் தொலைவு நடந்தோ மாட்டு வண்டியிலோதான் போவோம்..திருமலை ராசனாரைத் தாண்டி நல்லாடை தார் ரோட்டுக்குப் போனால் பஸ் வரும். பொது போக்குவரத்துத்தான்..பெட்ரோலியம் செலவு குறைவு.

இப்படியெல்லாம் எழுதுவதால் கற்காலத்தை நோக்கி போகச் சொல்லும் சிந்தனையா இது. அல்ல—அல்லவே அல்ல.
என் நண்பர் “ஓசை செல்லா” மலைவெளிகளில் சாலை மைத்து தங்குகிறார்..”சோலார்..செல்லில்””எல்.சி.டி.—விளக்கில் படிக்கிறார்..300 ஆண்டுகள்வரை அழியாமல் பூமித்தாயை மலடியாக்கும் டிட்டர்ஜெண்ட்டை பயன்படுத்தாமல் இயற்கை வழிகளில் துணி துவைத்து, சோப்பின்றி கடலை மாவு போட்டு குளிக்கிறார்.—

நம் மகன் -மகளுக்கு பணம் சேமிக்கிறோம்—நகை சேமிக்கிறோம்—தண்ணீர்—மின்சாரம் சேமிக்க வேண்டாமா? எல்லாவற்றையும் நாமே காலி செய்துவிடுவதா? வரும் சந்ததி வறட்சியில் வாடவேண்டுமா?—மிரட்சியில் வீழவேண்டுமா?

--

Saturday, September 25, 2010

தொண்டனுக்கு தூக்கு---தலைவிக்கு பல்லக்கு

தர்மபுரி மாவட்டம் இலக்கியபட்டியில் கடந்த 2000 ஆம் ஆண்டு  நடந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் கைதான 3  அதிமுக தொண்டர்களுக்கு உச்ச நீதி மன்றம் --மாவட்ட கோர்டின்  தீர்ப்பை உறுதி செய்து மரண தண்டனை கொடுத்திருக்கிறது

2000 ஆம் ஆண்டு கொடைக்கானல் ஓட்டல் வழக்கில்  அதிமுக தலைவி ஜெயலலிதாவிற்கு கோர்ட் தண்டனை வழங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகமெங்கும் பஸ்களை  தீயிட்டு கொளுத்தினர். உல்லாசப்பயணம் சென்ற கோவை விவசாயக் கல்லூரி மாணவியர் சென்ற பஸ்ஸை தர்மபுரி மாவட்டம் இலக்கியப்பட்டியில் அதிமுகவினர் தீயிட்டு கொளுத்தினர். விளைவு மூன்று மாணவியர் தீயில் வெந்து மாண்டனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் தண்டிக்கபட்டவர்கள்--ஏற்கனவே குற்றவாளிகள் இல்லை. கட்சியின் சாதாரண தொண்டர்கள். அம்மாவின் ஆணையை ஏற்று--அம்மாவிடம் விசுவாசத்தை காண்பிக்கவேண்டி--- இப்படியொரு மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர்.விளைவு அவர்களுக்கு தூக்கு.அம்மா இன்னும் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். தொண்டன் தூக்கில்--அம்மா பல்லாக்கில்--

பொது சொத்திற்கு சேதம் விளைவிப்பதை எந்த கட்சியும் நிறுத்திய பாடில்லை.   கலைஞர் கைது செய்யப்பட்ட போது தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது. பஸ்கள் எலும்புக்கூடானது. தொண்டன் தீக்குளித்து மாண்டான். கலைஞர் குடும்பம் ஹாயாக இருந்தது. தினகரனில் மு..க. அழகிரிக்கு முதல்வராக ஆதரவில்லை என்று  கருத்துக்கணிப்பு வெளியானது.--மதுரை நகரமே தீயில் கொழுந்து விட்டு எரிந்தது. தினகரன் ஊழியர்கள் மூவரும் எரிக்கப்பட்டனர். மாறன் சகோதரர்கள் வீரவசனம் பேசினர். குடும்பதுக்குள் குழப்பம் தீர்ந்தது--எரிந்து பிணமானவர்கள் குடும்பதின் வயிறு எரிந்ததுதான் மிச்சம்-அழகிரி மீது வழக்கில்லை.

பாமக.ராமதாஸ் நடத்திய போராட்டங்களில் மரங்கள் பலியாயின. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.திருமாவளவன் கைதுக்கும் எலும்புக்கூடான பஸ்கள் எத்தனையோ--போது சொத்துக்கு நாசம் விளைவிப்பதில் தமிழக கட்சிகள் போட்டிபோடுகின்றன.இறுதியில் வழக்குகளை சந்தித்து கோர்ட் வாசல்படியில் வாழ்க்கை முடியும் தொண்டர்களே ஏராளம்.

தூண்டிவிட்ட தலைவர்கள் தப்பித்து விடுகின்றனர்--தா.கிரிட்டிணன் கொலையில் --தினகரன் ஊழியர்கள் எரிப்பில்--மு.க.அழகிரிக்கு எந்த தண்டனையும் இல்லை--இந்திரா காந்தி கொலைக்குப்பின் டெல்லியில் சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் ஜகதீஷ் டைட்லர் தப்பிக்க வைக்கப்பட்டார்--தண்டனை இல்லை.மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதில் ராமதாஸ் மீது வழக்குகள் இல்லை--

தர்மபுரி பஸ் எரிப்பில் தூண்டிய “”சிறுதாவூர் சிங்காரி” ஜெயலலிதாமீது “”திருவாருர் தீயசக்தி””வழக்கு தொடரவில்லை--அம்புகள் மட்டுமே தூக்கை முத்தமிடுகின்றன--

வில்லாதிவில்லன்கள்--------
இன்னும் பல்லக்கிலே பவனி வந்துகொண்டிருக்கின்றனர்.

Wednesday, September 22, 2010

வல்லபாய் பட்டேலே வருக--சிதம்பரமே செல்க

இந்திய அரசமைப்பு சட்டம் உருவானபோது ஒரு முக்கிய விவாதம் நடந்தது. அமெரிக்கா போன்று “”பெடரல் “”அமைப்பா?--அல்லது ஒருங்கிணந்த இந்தியாவின் “”சமஷ்ட்டி ஆட்சிமுறையா?””--union--

அமெரிக்கவில் பெடரல் அமைப்பில் உள்ள மாநிலங்கள்--எப்போதுவேண்டுமானாலும் பிரிந்துபோகலாம்--புதிதாகவும் வந்து சேரலாம்--இக்காரணத்தால் இது இந்தியாவுக்கு ஒவ்வாது--என பெடரல் முறையை கடுமையாக எதிர்த்தவர் பாபா சாகிப் அம்பேத்கார் அவர்கள்.

பிரிந்துபோகும் எண்ணமே வரக்கூடாது என்பதற்காகத்தான் “”இந்திய யூனியன்--யூனியன் ஆஃப் இந்தியா “”---என்ற வாசகங்கள் அரசமைப்பு சட்டதில் சேர்க்கப்பட்டது. 63  ஆஅண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒரு நிலை காஷ்மீர் மூலம் வந்துவிடுமோ என்ற ஐயத்தில் அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்திருக்கிறார்.

தற்போதைய காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்துபோகவேண்டும் என்பதை முன்நிறுத்தியே காஷ்மீர் கலவரங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை “தாஜா” செய்யவே சிதம்பரம் அண்டு கோ காஷ்மீரில் அவர்களை தனித்தனியாக சந்தித்திருக்கிறது.

ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம்---தமிழ்நாட்டிலும் சரி--ஏன் அகில இந்தியாவிலும் சரி--ஏதாவதொரு மாநிலத்தில் பிரிவினை கோரி ஒரு கட்சியோ ---ஒரு தலைவரோ அறிக்கை வெளியிட்டாலே அவர்கள் நிலை என்னவாகும்---ஆயுள்முழுதும் சிறைவாசம்தான் --

ஆனால் காஷ்மீரில் சோனியா அரசு பிரிவினைவாதிகளின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.சிதம்பரம் பிரிவினைவாதிகளுக்கு அறிவுரை வழங்குகிறார்.இந்தியாவோடு இருப்பதுதான் அவர்களுக்கு நல்லதாம்--இப்படி காலில் விழாதகுறையாக கெஞ்சுகிறார்.

70 ஆண்டுகளுக்குமுன்பு முகமது அலி ஜின்னாஹ் இப்படித்தான் பிரிவினைகோரினார்..பிரிவினைகோரி நாட்டையே ரத்தக்காடாக்கினார்--நாட்டை பிரிப்பது என்பது ஒரு மாபெரும் முட்டாள்தனம்-- PARTITION IS A FANTASTIC NON-SENSE --என்றார் நேரு..தேசப்பிரிவினை என்பது என் சவத்தின் மீதுதான் நடக்கும் என்றார் மகாத்மா காந்தி.--நாடு துண்டாடப்பட்டபோது இருவரும் கையெழுத்துப் போட்டார்கள். அதே முஸ்லீம் லீக்கோடு அதே காங்கிரஸ் இன்று கூட்டு சேர்ந்துள்ளது. அன்று முஸ்லீம்களை தாஜா செய்தது போல இன்றும் காங்கிரஸ் --நேற்று---காஷ்மீரில் -- பிரிவினைவாதிகளை வீட்டுக்கே சென்று நேரில் சந்தித்துள்ளது..

அனைத்துக் கட்சி கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு மாறாக தன்னிச்சையாக சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். சந்திப்பு முந்தவுடன் பிரிவினை வாதிகள் இன்னும் அதிக “”தெனாவெட்டோடு “” பேசுகிறார்கள். 70 ஆண்டுகளுக்குமுன் ஜவஹர்லால் நேரு தலமையிலான காங்கிரஸ் செய்ததையே அவரது பேரனின் மனைவி சோனியாவின் தலைமயிலான காங்கிரஸும் செய்கிறது..

1947 க்கு பிறகு பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள் இன்னும் காஷ்மீரத்தில் அகதிகளாக வாழ்கின்றனர்.அவர்களுக்கு காஷ்மீர் மக்களுக்குள்ள எந்த உரிமையும் கிடையாது. பல ஆண்டுகளுக்குமுன்பு வன்முறையாளர்களாலும் பிரிவினைவாதிகளாலும் அடித்துவிரட்டப்பட்ட “”காஷ்மீரத்து பண்டிட்கள்””இன்னும் இந்தியாவெங்கும் அகதிகளாக திரிகிறார்கள். அவர்களை காஷ்மீரில் குடியமர்த்த இவர்கள் கவலைப்படவில்லை. சிதம்பரம் இவர்களோடு பேச்சு நடத்தவில்லை. ஆனால் பிரிவினை வாதிகளை “”தாங்கு..தாங்கு என்று “”தாங்குகிறார்.

அமைதியாக நடக்கும் ஊர்வலங்களில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துகிறது--எங்களை கொன்று குவிக்கிறது--இப்படி சிதம்பரம் அண்டு கோ விடம் மனு கொடுக்கப்படுகிறது. கருணாநிதி எப்போதும் சொல்லுவாரே அதுபோல ஒரு ஒப்பீடு செய்து பார்த்தோமேயானால்---உத்திரப்பிரதேசம்--பிஹார் போன்ற மாநிலங்களில் நடக்கும் போலிஸ் துப்பாக்கி சூட்டைவிட வன்முறை சூழ்ந்த காஷ்மீரில் துப்பாக்கி சூடு மிகக் குறைவே--வன்முறையாளர்களின் உயிர்ப்பலியும் குறைவே.

காஷ்மிர் மக்கள் தொகையில் 60 சதம் பேர் 25 வயதிற்கு குறைந்த இளைஞர்களே..இவர்களை பிரிவினை வாதிகள் மூளைச்சலவை செய்து வன்முறையில் ஈடுபடுத்துகின்றனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பணமும் ஆயுதமும் பெருமளவில் சப்ளை செய்கிறது. போதாக்குறைக்கு தற்போது சென்ற அனைத்துக் கட்சி “”டீமும்”--பா..ஜ.தவிர--பிரிவினையாளர்களை போட்டி--போட்டு “”தாஜா” செய்துவிட்டு வந்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினை தீர இன்றைய தேவை--வல்லபாய் பட்டேலே--சிதம்பரங்கள் அல்ல.     

Monday, September 20, 2010

காலமே--கவலைகளை கரைக்கும்-- ஜாலமே

அறுபது வயதானவருக்கு அப்பா இருக்கலாம்
ஆறு வயதிலேயே அப்பாக்கியமும் நழுவலாம்
கரு உருவானதோடு சரி பெற்றோரை
போட்டோவில்  பார்க்கவே அவனுக்கு பாக்கியம்
 
பத்திரிக்கையிலே ஒரு போட்டோ
குடும்பமே விபத்தில் பலி
அப்பாவும் அம்மாவும் அருகருகே நிற்க
இடையிலே குழந்தைகள் என்ன கோரமிது

மலர்ந்தது போடவில்லை உதிர்ந்தது ஒரேநாளாம்
ஓடியது நாட்கள் மாதங்கள் ஆண்டுகள்
இதயத்தின் கனங்கள் காலத்தால் கரைந்தது
கவலைகளை கரைக்கும் காலத்தை வணங்குகிறேன்

அதிகாரியிடம் அவமானப்படும் ஊழியர்
அண்ணனிடம் அடிபடும் தம்பி
உற்றாரின் உரசலால் நொந்துபோன சொந்தம்
உண்மையான தொண்டனுக்கு கட்சியிலே பங்கம்

உதிரத்தைஉள்ளத்தில் கொட்டவைத்த நிகழ்வுகள்
தீப்பட்ட புண்போல மாறாத வடுவாக
நாட்பட்ட நோய்போல தீராத வலியாக
ஆறாத ரணங்களை ஆற்றுகின்ற அருமருந்தே

காலமே நீ இல்லாவிட்டால் நாங்கள்
காற்றினிலே கரைந்து போயிருப்போம்
கவலைகள் துயரை அவமானத்தை
ஆற்றுகின்ற அருமருந்தே காலமே---வணங்குகிறேன்

Sunday, September 19, 2010

தீர்ப்புகளில் திருத்தம் வருமா--அல்லது---தீர்ப்புகளால் திருத்தம் வருமா

””   249 வீடுகளில் திருட்டு போயிருக்கிறது---இதுவரை 56 பேர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.---பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்--கவலை வேண்டாம்--நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் ( திருடர்கள்--கொலைகாரர்கள்--என்று குறிப்பிடக்கூட அச்சசம் ) பிடிபடுவார்கள். அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்--( தண்டனை பெற்றுத்தருவோம் என்று சொல்லக்கூட அச்சம் ). ஒரு வேளை கோர்ட் தீர்ப்பு “ஒரு மாதிரியாக “ வந்தால்கூட --அது சட்டதின் நடைமுறைதான் -யாரும் கவலைப்படவேண்டாம்--பொறுமை காக்கவும். அதற்கு மேல்முறையீடு செய்யக்கூட வழியிருக்கிறது..என்பதை நினைவு படுத்தவிரும்புகிறேன்.”””

இப்படி நம்மூர் போலிஸ் கமிஷனர் அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்கும்--இதற்கும் 16 ந்தேதி நமதுநாட்டின் பிரதமர் மன்மோஹன் சிங் வெளியிட்ட பத்திரிக்கை விளம்பர செய்திக்கும் என்ன வேறுபாடு?

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக நாட்டின் பெரும்பான்மை மக்களும்--ராமர் கோயில் இடம் மசூதிக்கே சொந்தம் என முஸ்லீம் தரப்பும் சொல்கின்றனர்.--இருக்கக்கூடிய ஆதாரங்களை வைத்து அரசே தீர்ப்பு சொல்லியிருக்கலாம். அப்படி தீர்ப்பு சொல்ல அரசுக்கு “”முதுகெலும்பு “” இல்லை. எப்படி தீர்ப்பு சொன்னாலும் ---ஆதாரங்களை வைத்து சொன்னாலும் --அநியாயமாக சொன்னாலும்---ஆளும் கட்சி ஒரு தரப்பை பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதைவிட முக்கியம் “”ஓட்டு வங்கியை””இழக்கவேண்டியிருக்கும்.

சரி--ஒருவேளை ஓட்டு வங்கியை இழக்காமல் தீர்ப்பு சொல்லமுடியுமா?--முடியாது.--அதிக பட்சம் தீர்ப்பை தள்ளித்தான் போடமுடியும்.. அதற்கு இப்போது சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

சரி--தீர்ப்பு எப்படி வந்தாலும் --நாட்டின் இறையண்மைக்கு சவால் விடும் சம்பவங்கள் நடந்தால்---அதை தடுக்கும் --தைரியம்--தில்லாவது அரசுக்கு வேண்டும்....அதுவும் இல்லை--சட்டம் ஒழுங்குக்கு சவால் விடப்பட்டால்---””இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் “”--என்றாவது சொல்லவேண்டும்---அதோடு நிறுத்தாமல் “”செய்யவேண்டும் “”--சொல்லவே முடியாத அரசால் எப்படி செய்யமுடியும்?--

தீர்ப்பு சட்டத்தின் ஒரு நடைமுறையாம்--அதற்க்காக யாரும் அஞ்சவேண்டாமாம்---மேல்முறயீடு உண்டாம்---யாருக்கு சொல்கிறார் பிரதமர்?---எதோ பஞ்சாயத்து செய்பவறை போலல்லவா பேசுகிறார்.சட்டத்தையும் போலிசையும் தன்கைய்யில் வைத்துள்ள அரசு தீர்ப்பைக்கண்டு ஏன் இவ்வளவு பயப்படவேண்டும் ?--இவ்வளவு என்பதைவிட --யாரைக்கண்டு இவருக்கு பயம் ?--சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என்றால் இவருக்கு ஏன் பிரதமர் பதவி?--

24 ந்தேதி தீர்ப்புக்காக நாடுமுழுதும் “”பாதுகாப்பு “”என்ற பெயரில் போலிஸ் பந்தோபஸ்த்து பலப்படுத்தப் பட்டு வருகிறது.--பல ஊர்களில் “”சமாதான கமிட்டி “”கூட்டம் போலிஸால் கூட்டப்படுகிறது---அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க இந்த ஏற்பாடாம்---விநோதமாக இருக்கிறதல்லவா?---இந்த சூழலுக்கு யார் காரணம்?--இந்த சூழல் ஏன் ஏற்பட்டது?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்--யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி--என்ற நிலப்பட்டை அரசு எடுத்திருந்தால் இதுமாதிரி அறிக்கைகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்குமா?--பார்லிமெண்ட்டை தாக்கிய அப்சல்குருவுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையே இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை--அரசு தன் பலவீனத்தை “”தண்டோரா “”போடாமலே வெளிப்படுத்திவருகிறது.  ஒருவேளை அப்சல்குருவுக்கு பதிலாக “கோவிந்த பாஸ்கர ரெட்டி “குற்றவாளியாக இருந்திருந்தால்--இந்த அரசு தண்டனையை நிறைவேற்றியிருக்குமோ?

எது எப்படியோ---இந்த அரசின் செயல்பாடுகளால் காஷ்மீரம் இமயமலைக்கு பக்கத்திலிருந்து எரிந்து கொண்டிருக்கிறது---இந்த தீர்ப்புக்கு பிறகு நாட்டையே காஷ்மீராக்காமல் இருந்தால் சரி.

Wednesday, September 8, 2010

மேரா குருஜி கலைஞர் சாப்
                                      ஒரு கற்பனை உரையாடல்.

தன் மந்திரிசபை சகாக்கள் அடித்துக்கொள்வதை—”அவர்களது சுதந்திரம்” என திருவாய் மலர்ந்தருளிய மன்மோகன் சிங்கை பற்றிய ஒரு உரையாடல் காவியம்.

கருணா------என்னால ஏழுந்திருக்க முடியல—அதனால ஒக்காந்துகிட்டே சொல்றேன்  --வாங்க மன்மோகன் சிங்ஜி அவர்களே---நேத்து பேட்டி பிச்சுடீங்க--இந்திரா காந்தி--நேருவெல்லாம் கூட செம தாக்கு -- -ஒங்க குரு யாருன்னு தெரிஞ்குக்கலாமா

சிங்-----சும்மா வெருப்பேத்தாதீங்க---கலைஞ்ரே----கட்சிக்குள்ள ஒரே புகைச்சல்----ஒருத்தனுக்கொருத்தன்…அடிச்சுகிரானுங்க ---ஒரு பயலும் நான் சொல்ரத கேக்குராநில்ல----ரொம்ப உப்புச்சமா இருக்கு.

கருணா-----அதான்  -பொட்டு பொட்டுன்னு  போட்டு ஒடக்கிராங்களே—

சிங்------பொத்தி பொத்தி வச்சிருந்தேன்  ---எல்லாத்தயும் ப்ரஸ்ல ரெலீஸ் பண்ணிக்கிட்டு----- இருக்காங்க ---ம்ம்ம்ம்ம்—ஏந்தலயெழுத்து---( கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு முனகுகிறார் )

கருணா---நீங்க ஸ்டிரிக்டா இருந்திருக்க வேண்டியதுதானே---

சிங்----ஸ்டிரிக்டா—அப்பிடீன்னா---

அழகிரி-----(-சிங்கை பார்த்து-)----தமிழினத்தலைவரை பார்த்து கத்துகுங்க----ஒங்கள…வெருப்பேத்துனா……ஒண்ணு மிரட்டணும்---இல்ல…எரிக்கணும்----அதுதான் எங்க பாலிஸி

சிங்------தம்பி நல்லா பேசுதே---இதமாதிரி பார்லிமெண்ட்லயும் பேசலாமே

அழகிரி----பெரிசு—நா…பேச மாட்டேன்  -மைக்க புடிங்கி எரிவேன்……   -அப்டி…….யே—-----எரிவேன்  

ராகுல்-----(சிங்கை பார்த்து)-----அங்கிள்—நீங்க ஏன் பாட்டி தாத்தாவ--( இந்திரா-நேரு )-- புடிச்சு….வம்புக்கு இழுக்கீறீங்க---

மணிஷங்கர் அய்யர்----------அப்பிடி சொல்லுங்க ராகுல்ஜி---500 டைம்ஸ்—ஏன்…1000 டைம்ஸ் பேட்டி கொடுத்தாலும் இவரு அவ்ங்க மாதிரி ஆகமுடியாது…..( காலர தூக்கிவிட்டுக்கொள்கிறார் )

கருணா-------சரி சிங்ஜி….விட்ட எடத்துக்கு வருவோம்----ஒங்க குருஜி யாருன்னு சொல்லாவே இல்லையே…

சிங்---எஸ் மிஸ்டர்—கருணா—””கல்லாவ பூட்றயோ இல்லியோ—வாய பூட்டியே வச்சுறுன்னு”” –வோல்டு பாங்க்ல வேலபாத்தப்ப எனக்கு சொல்லிகுடுத்துருக்காங்க…

சோனியா-----அதயதான் இப்பவும் நான் திருப்பி சொல்றேன் -ஸாப்

சோனியாவின் இந்தி ஆசிரியர் ---  (குறிக்கிட்டு)--------ஸாப் இல்ல-- மேடம்---ஸார்—------இல்லாட்டி---  ஜி

சோனியா-----சும்மா இருங்க குருஜி---இத்தாலில எழுதிவச்சு—இந்தில படிக்கரதே கஷ்டமா இருக்கு—இதுல நீங்க வேர—

கருணா----சிங்ஜி—இன்னும் நீங்க சப்ஜட்டுக்கே வரல்லியே---ஒங்க குருஜி யாரு---

கனிமொழி-----தலைவரே---( அப்பாவ…அவங்க குடும்பமே—அப்பிடித்தான் கூப்பிடுமாம் )---தா.கிருட்டினனை—அண்ணன் போட்டுதள்ளிச்சுல்ல—அதச்சொல்லி….சிங்ஜிக்கு தகிரியம் குடுங்க---

சிங்--- (ஆச்சரியமாக….) அதென்ன கருணா---ஸாரி—ஸாரி—தலைவரே—

அய்யர்------------ம்ம்ம்ஹூம்ம்—ஒங்ளுக்கு அவர் தலைவரா---உருப்பட்ட மாதிரித்தான் -( முணுமுணுக்கிறார் )

கருணா--------அதொண்ணுமில்ல சிங்ஜி—நம்ம கேபினட்ல—ஒரு மந்திரி ரொம்ப ரவுசு விட்டுகிட்டுருந்தப்ல---தம்பி அழகிரிக்கு வந்துச்சே கோபம்---( மகன்களையும் கருணா “தம்பி “ என்றேதான் விளிப்பார் ) சும்ம ஒரு தட்டு தட்டுச்சு—பொட்டுன்னு போயிட்டார்---

சிங்-------(அப்பாவியாக )-----அத—ஏன் ஏங்கிட்ட சொல்றீங்க—

கருணா-------சும்மா---ஒரு ஜீக்கே (general knowledge-)க்குத்தான் ---ஒங்க மந்திரிங்க ஒங்க பேச்சு கேக்கலைனா—எதுக்கும் இருக்கட்டுமேன்னுதான்

சிங்----------(மீண்டும் அப்பாவியாக )----எதுக்கும் இருக்கட்டும்னா---

கருணா---------அவங்கள--ஒங்க கட்சி நிகழ்ச்சிக்கு  மதுர பக்கம் அனுப்புங்க---தம்பி அழகிரி தட்டிடும்—பழிய இளங்கோவன் மேல போட்டுறலாம்—

சிங்ஜி------------தலைவரே—( மீண்டும் தலைவரா ? )----நீங்க ரொம்ப நேரமா கேட்டீங்களே---இப்ப சொல்றேன்---சந்தேகமில்லாம நீங்கதான் என் குருஜி—

ராகுலும் சோனியாவும் ஆச்சரியதில் வாயைபிளக்கின்றனர்-
-அய்யர் முகத்தை திருப்பிக்கொள்கிறார்---
ஆ.ராசா மகிழ்ச்சியில் “சிங்குக்கெல்லாம் சிங்கு---சிங்கத்தலைவர்—டாக்டர்.கலைஞர் வாழ்க “என கோஷம் போடுகிறார்.