Pages

Tuesday, February 22, 2011

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

அத்வானி என்ற "பெரிய மனிதரை "--சிறுமைப் படுத்தாதீர்கள்

சோனியா குடும்பத்திற்கு "கணக்கில் வராத கறுப்புப் பணம் பல கோடி இருக்கிறது "--என சுவிஸ் தேசத்து பத்திரிக்கைகளும்--வெளி நாட்டு ஊடகங்களும் சொன்ன செய்திகள்--மற்றும் பல ஆதாரங்களை வைத்து பாஜகவின் சிறப்புக்குழு ஒன்று  ஆய்ந்து அதை உறுதி செய்தது  ..

சோனியாவோ--அவர் குடும்பத்தினரோ இதை மறுக்க விலை--மறுத்து அறிக்கைஎதுவும்  வெளியிடவும் இல்லை.

போன வாரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சோனியா--திடீரென அத்வானி அவர்ளுக்கு ஒரு கடிதம் எழுதினர். தன குடும்பத்தினருக்கு அப்படி ஏதும் சொத்து  வெளி நாட்டு வங்கிகளில் இல்லை ---என்று அதில்  மறுத்திருந்தார்... 

அத்வானி அவர்கள் அக்கடிதத்தை வெளியிட வில்லை--பத்திரிகைகளுக்கு தரவில்லை.

ஆனால் அத்வானி ஒரு பொறுப்பான --தலைவர் மற்றும் தகப்பன் உணர்வோடு --"நீங்கள் இம்மருப்பை --முன்னனமே தெரிவித்திருந்தால் --பாஜகவின் சிறப்புக்குழு ---அதையும் கருத்தில் கொண்டிருக்கும் "---இருந்தாலும் என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் "--என்று சோனியாவிற்கு எழுதியிருக்கிறார் (ஆங்கில கடிதம் பாக்ஸில்....பார்க்க..)
This is the text of Advani's letter to Sonia Gandhi, dated February 16:
Dear Smt Soniaji,On my return from Kolkata last night, I found your letter dated 15th  February awaiting me.
I am happy that you have denied the reports relating to you and your family alluded to in
the Task Force's Report on Black Money.If these had been denied earlier, the Task Force would have taken your  denial into account. Even so, I deeply regret the distress caused to you.With best regards,
Yours sincerely,
L K Advani
இதில் எங்கே மன்னிப்பு கேட்கப்பட்டிருக்கிறது? - ""எந்த இடத்திலயும் ---   சோனியா தவறு செய்யவில்ல--சோனியாவிற்கு சுவிஸ் வங்கியில் கணக்கில்லை ""--என்று சொன்னதாகவும்  இல்லையே

அத்வானியிடம் குறைகாண இதில் வேறு என்னதான் இருக்கிறது--ஒன்றுமே இல்லாத போது
--மனிதாபிமானமும்---மனிதபன்பும்--
பெண் என்பதால்  இருக்கும் இரக்கமும் மட்டுமே இருப்பதால்தான் அத்வானியை பற்றி "கண்ணா பின்னா  வென்று " பேசுகிறார்களோ --?-----

இவ்வளவு நாகரீகத்துடன் எழுதிய -- அத்வானியின் கடிதத்தை பத்திரிக்கைக்கு கொடுத்தது யார்? அதையும் தவறாக --உண்மைக்கு மாறாக --எழுத சொன்னது யார்?--
சோனியாவின்  கடிதத்தை அரசியில் நாகரீகம் கருதி வெளியிடாமல் பாதுகாத்த அத்வானி எங்கே?
அத்வானியின் கடிதத்தை நாகரீகமின்றி வெளியிட்ட சோனியா எங்கே? 
சிந்திக்க முடிந்தவர்கள் சிந்திக்கட்டும்

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி 

ஒரு நடுத்தட்டு வர்க்கம் --ஒரு ஆண்டு வரி கட்டாமலே இருந்தாலே --வரிந்து கட்டிக்கொண்டு நோட்டிஸ் அனுப்பும் வருமான வரித்துறை---பல ஆண்டுகளாக --அதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் --வரி கட்டவேண்டியவருக்கு --நம் மன்மோகன் சிங்ஜி அரசு --இப்போதுதான் நோட்டிஸ் அனிப்பியுள்ளது .

புனேவை சேர்ந்த ஒரு குதிரை வியாபாரி--சுவிஸ் வங்கியில் ஒரே நேரத்தில் 8 பில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்கிறார்.உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ""ஹவாலா''--மற்றும் "கறுப்புப் பண பரிவர்த்தனைகள்--பல்வேறு பத்திரிகைகள்--போட்டி போட்டுக்கொண்டு "ஹசன் அலி கான் " என்ற அந்த :நலல்வரின் "--முகத்திரையை கிழிக்கின்றது.

மன்மோகனும் சோனியாவும் கண்ண்டுகொள்ளவே இல்லை --காங்கிரசின் உறக்கம் கலையவே இல்லை--

திடிரென சுயநினைவு வந்த  சோனியா அரசு --ஹசன் அலியை ஏதாவது ஒரு வகையில் கைது செய்யாவிடில் மீடியாக்கள் வாயை மூடமுடியாது --எனவே ஒரு கேஸ் போடுவது மாதிரி போட்டு விட்டுடுவோம்-- என முடிவு செய்து ரூ .70 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட சொல்லியுள்ளது.. 

இதில் வேடிக்கை என்னவென்றால் --ஹசன் அலிக்கு ஒரு பைசா சொத்து கூட இந்தியாவில் கிடையாது--ஹசன் அலியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ""அத்தனையும் போலி"-- இவர் மீது போடப்படும் எந்த வழக்கும் நிற்காது--இவை எல்லாம் தெரிந்து தான் இந்த "நோட்டிஸ் " அனுப்பப்பட்டுள்ளது. ஹசன் அலி எவ்வளவு "ஜகஜால கில்லாடி " பாருங்கள்.

ஒரு வேளை ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவும் --கருணாவும் --கொஞ்சம் நாளைக்கு முன்பே ஹசன்  அலி யை "கன்சல்ட் "செய்திருந்தால் ---சி.பி.ஐ.இடம் சிக்காமல் தப்பித்திருக்கலாமோ?

Saturday, February 12, 2011

மருவத்தூர் அம்மாவை--மேரியம்மாவாக அலங்கரித்த பங்காரு அடிகள்
 அன்பிற்கினியவர்களே-

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து--தலையில் ஜீஸஸ் கீரீடம் வைத்து--- குழந்தை யேசுவை  கைய்யில் கொடுத்து--- மருவூர் அரசிக்கு  -- புது அவதாரம் கொடுத்து-- --தன் மத நல்லிணக்கத்தை பறைசாற்றியுள்ளார்-----

இந்த எழுத்தின்  நோக்கம்--மேல்மருவத்தூர் பங்காரு அடிகளை அவமதிப்பதல்ல--


$ பராசக்தி மாதாவை மேரி மாதாவாக மாற்ற இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?--
$ யார் அதிகாரம் கொடுத்தது?
$ ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில்--இப்படி செய்ய- ஆகம விதிகளில் இடமுண்டா?
$ இவரை நம்பும் லட்சக்கணக்கான் பக்தர்களுக்கு இவரின் இந்த செயலுக்கு  ஒப்புதல் உண்டா? 


பக்தன் பகவானை எட்டிநின்றுதான் பார்க்கவேண்டும்-- தொட்டுப் பார்க்க முடியாது எனபதை மாற்றி--- யார் வேண்டுமானாலும் பகவானை தொட்டு அபிஷேகம் செய்யலாம் என மாற்றியவர் அடிகளார்---பாராட்டுகிறோம்

பெண்கள் “”எப்போது வேண்டுமானாலும் “ பகவானிடம் போகலாம் --தொடலாம்--அர்ச்சனை--அபிஷேகம் செய்யலாம்” என கீழ்
த்தட்டு மக்களையும் பகவானிடம் நெருக்கமாக செய்தவர் அடிகளார் அவர்கள்--பாராட்டுகிறோம்.அதற்காக சமயத்தை சமாதி கட்டும் விஷங்களையும் செய்யலாமா? 

 
நாம் நம்பும்--வணங்கும் கடவுளுக்கு வேற்று மதத்து சின்னங்களை அணிவித்து அட்டஹாசம் செய்வதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?--கேட்காமல் இருக்க முடியும்
கோடிக்கணக்கில் பக்தர்கள் குவியும் சபரிமலையில் கூட “வாவர் சமாதி” என்று ஒன்று உண்டு--லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் மதுரையில் “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் “ திருவிழாவில் கூட --அடுத்தநாள் அழகர் “துலுக்க நாச்சியார்” மண்டபதிற்கு செல்வார்---இவையெல்லாம் “வரலாற்று திரிபுகள்”--இடைக்காலத்தில் “”யாரையோ திருப்திப்படுத்த--யாரோ எழுதிய கட்டுக்கதைகள்--என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.

இல்லாதவற்றை சொல்லி இணைத்து வைப்பதல்ல இணக்கம்--மத நல்லிணக்கம்--அது இயல்பாகவே வரவேண்டும்--இது “இந்துக்களிடம் நிச்சயம் உண்டு--என்றும் உண்டு “ நல்லிணக்கத்தை இப்பொய்யுரை தான் “ ஏற்படுத்தும் என்றால்--இதுவரை அது ஏன் இன்னும் ஏற்படவில்லை?--இன்னும் அது ஏன் ஒருதலை காதலாகவே உள்ளது?--இது ஒரு பெரிய விவாதம் --அதற்குள் போவது என் எண்ணம் இல்லை..


--அதிமுக காரன் உணர்ச்சிவசப்பட்டு  ஜெயலலிதாவை மேரிமாதாவாக சித்தரித்தான் --கிறிஸ்தவம் வெகுண்டு எழுந்தது----பாதிரியார்கள் மாநிலம் முழுக்க அவர்கள் பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக்குழந்தைகளை வைத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள்..
 
ஏற்கனவே இந்துமதம் எவ்வளவு பேரையோ ஏற்றுக்கொண்டுள்ளது--இங்கு ஏற்கனவே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள்--அதோடு சேர்ந்து நாம் ஏசுவையும் இன்னொரு தேவதையாக ஏற்பதில் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை--பிரச்சினை யேசுவல்ல---யேசுவை கோவில்லுக்குள் இழுத்ததுதான் --

நம் சாமிகளுக்கு நாம் மோகினி அலங்காரம் --ராமர் அலங்காரம் --கிருஷ்ணர் அலன்காரம் --என பல பல அலங்காரங்களை செய்துள்ளோம்--

முதல் முதல் இந்து சமய வரலாற்றில்  ஆதி பராசக்தி அம்மாவுக்கு “”யேசு அலங்காரம் “ செய்த பெருமை ---பங்காரு அடிகளாருக்கே உண்டு--இதை பெருமையோடு அவர்கள் நடத்தும் “” சக்தி ஒளி “ பத்திரிக்கையிலே வேறு வெளியிட்டுள்ளார்கள்.


சில இந்து சாமியார்கள் பிறை--சிலுவை--ஓம்--என மூன்றையும்--ஒன்றாக போட்டு நன்றாக “”ஆன்மீக வியாபாரம்””செய்து வருகிறார்கள்--- இன்று மதத்தை மாசு படுத்த-- மற்றோருவர்--      -கிளம்பியிருக்கிறார்--

வருத்தமாக இருக்கிறது--நெஞ்சம் வேதனைப் படுகிறது--

Thursday, February 10, 2011

ஜெ --யைக் --காத்த திமுக

ஜெ --யைக்  --காத்த திமுக

சட்ட மன்ற கூட்டத்தொடர்களில் ஜெ கலந்து கொள்வதே இல்லை--அத்தி பூத்த மாதிரி அது இரண்டுமுறை மட்டுமே நடந்தது.
தொடர்ந்து 60 நாள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடில்  எம்.எல்.ஏ . பதவி பறிபோகும் --இதை காப்பாற்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடிலும்-- அவ்வப்போது சட்டசபைக்கு வேலியே    உள்ள "ரிஜிஸ்டரில்     "கைய்யேழுத்துப்போட்டு --ஜெ பதவியை காப்பாற்றி வந்துள்ளார்.

அதுவும் அவருக்கு "போரடிச்சு போச்சு "--சரி இதுக்கு நிரந்தரமாக ஏதாவது வழி செய்யவேண்டுமே?--அவர்கள் கட்சி எம்.எல்.ஏ. எல்லாம் ஒன்று சேர்ந்து ""அம்மாவுக்கு உடம்புக்கு  நோவு ""--என டாக்டர் சர்டிபிகேட் வாங்கினார்கள்.

சட்டசபையில் தீர்மானம் போட்டு " லீவு"-- சொன்னால் --சட்டபூர்வமாக "டிமிக்கி " கொடுக்கலாம்--
  அதிமுக தீர்மானத்தை முன்மொழிந்தது..தீர்மான எதிர்ப்பின்றி நிறைவேறியது --எதிர்ப்பு காட்டவேண்டிய திமுக மவுனம் காத்தது..அம்மா இனி சட்டசபைக்கு வரவேண்டாம்--பதவியும் பறிபோகாது --

அம்மாவை திமுக காத்தது. அம்மாவுக்கு உஅடம்பு  நன்றாகவேதான் உள்ளது. எல்லா வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது திமுகவுக்கு தெரியாதா?" மெடிகல் சர்டிபிகேட் பொய் " என்பதும் திமுக அறியாததா?---அம்மா சட்டசபைக்கு வருவதால் திமுக வுக்கு பயமா?

இதில் எதுவுமே காரணமில்லை --திமுக ஆட்சியில் அதிமுக தலைவியும் --அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதியும் --சட்டசபைக்கு வருவதே இல்லை--வெளி ரிஜிஸ்டரில் கையெழுத்து போடுவதோடு சரி. இதுதான் இவர்களின்  " மக்கள் பிரதிநிதி லட்சணம் "--ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு ---

அடுத்த சட்டமன்றத்திலும் கருணாநிதிக்கு இதே நிலைதான் ஏற்ப்படும் என திமுக நினைப்பதால் --திமுகவே முந்திக்கொண்டு "அம்மாவைக் காப்பாற்றியுள்ளது"--அதனால் தான் தனக்காக ---தான் எதிர்க்கட்சி தலைவராக வந்துவிட்டால் ---என --:எதிர்க்கட்சி தலைவருக்கான  அறையை "பெரிய்ய "அறையாக கட்டியுள்ளார் கருணாநிதி..

காமராஜர் சொன்னது இன்றும் உண்மையாக உள்ளது--""கூட்டுக்களவாணிகள்---ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் "--திமுக --அதிமுக

""ஜேக்கு பூரண ஓய்வு--டாக்டர்கள் அறிவுரை "--இதுதான் பத்திரிக்கை தலைப்பு செய்தி---ஆம் ஜெயக்கு மட்டுமல்ல கலைஞருக்கும்--பூரண ஓய்வு --அரசியலிலிருந்தும் கொடுத்து விடலாம்--அதுதான் தமிழ்நாட்டிற்கும்--மக்களுக்கும்--தமிழ் இனத்திற்கும் நல்லது..