Pages

Friday, September 23, 2011

பதவியை காலடியில் கிடத்திய பரம பிதாவே அத்வானியே

நெஞ்சில் எத்தனையோ
 காயங்களை சுமந்து கொண்டு...
 தியாகமே வாழ்வென தொடர்ந்துகொண்டு.....

.இங்கே ஒரு சக்ரவர்த்தி.
.மணிமகுடத்தை தாங்க வேண்டியவன்.
.மரவுரி தரிக்கிறான்.

.அது யார் சாபத்தால்--இல்லை..இல்லை
அது நாம் செய்த பாவத்தால்..

84 அரசியலில் முதுமை இல்லை--
அனுபவம்--பழுத்த அனுபவம்
40 களுக்கு சவால் விடும் நடை..செயல் முறை
மகுடம் வயதுக்கா..குவித்து வைத்த திறமைக்கா

உயரத்தில் இருக்கும் போதே
உச்சத்தை உதறிய உத்தமன்
பதவி பித்தர்களுக்கு புதிய
அரசியல் பாடம் சொன்ன “கீதாச்சாரியன்”

சொன்னானே ஒரு வார்த்தை..........
“ பிரதமர் பதவி அந்தஸ்தை விட பெரிய
பேருகள் பெற்றுவிட்டேன் போதுமென “....

தலைவா..லால் கிருஷ்ன அத்வானியே..
உன்னில் நான் காண்கிறேன் கடவுளை..

Thursday, September 22, 2011

மோடியும்--- முஸ்லீம் தொப்பியும்---


அமைதி ஒற்றுமையை வலியுறுத்தி தனது 61 வது பிறந்த நாளன்று 3 நாள் உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கினார்...

மோடி என்றாலே முதன்மையானவர்---நெஞ்சுரம் மிக்கவர்---உண்மையானவர்---எனபதை மீண்டும் நிருபித்துள்ளார்..

உண்ணாவிரத பந்தலில் இருந்தவர்களில் 100 க்கு--25 பேர் முஸ்லீம்கள்---குஜராத் கலவரத்தில் மோடி முஸ்லீம்களை வேட்டையாடினார்...என்ற காங்கிரஸ் தொடர்  ”பொய்சாரம் “---குப்பையில் கூட போட லாயக்கற்றதானது..


குஜராத் மாநிலத்தில்தான் முஸ்லீம்கள்  வளமாக---வாழ்க்கைதரம் உயர்ந்து---இருக்கிறார்கள்--சொ

ன்னவர் சச்சார் கமிட்டி தலைவர் ராஜேந்திர சச்சார்--இவர் காங்கிரஸ் அடிவருடி எனபது கவனிக்கத்தக்கது..

இன்னொரு பாராட்டு---- காஷ்மீரின் மக்கள் ஜனநாயக முன்னணி தலைவி.... மஹபூபா முக்தியிடமிருந்து---மோடியின் அரசை பாராட்டி--இதை இவர் தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில்தான் இந்த பாராட்டை  கூறியுள்ளார்..


இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி விடுவோம்.......சத்பவன உண்ணாவிரத பந்தலில்..முஸ்லிம் ஒருவர் மோடிக்கு “முஸ்லீம் அணியும் தொப்பி “ ஒன்றை அணிவிக்க வந்ததை மோடி அன்பான புன்னைகையோடு மறுத்துள்ளார்..இதை சிவசேனா கட்சியின் “ சாம்னா “ பத்திரிக்கை பாராட்டியுள்ளது..எப்போதும் போல காங்கிரஸ் குறை கூறியுள்ளது.

ஒரு உண்மையை பேசுவோமா---வந்தே மாதரம் --பாரதநாட்டை மாகாளியென..பராசக்தியென--வர்ணி
த்து வழிபடுவது--இவைகளை முஸ்லீம்கள் ஏற்பதில்லை---காரணம் அவர்கள் மதத்தில் “ ஏக இறைவன் தானாம் “--சரி--------பொட்டுவைப்பதும்..திருநீரு பூசுவதும்...கோயிலுக்குள் போவதும்...இஸ்லாத்துக்கு விரோதமாம்...மீண்டும்சரி..சரி..

 தொப்பி அணிவிப்பதை மோடி ... பணிவாக மறுத்ததை இதுவரை எந்த முஸ்லீம் அமைப்பும் குறை கூற வில்லை.....
ஏனெனில்..அவரவர் மதத்தை அவரவர் கொண்டாடுவது அவரவர் உரிமை..அதுவும்..அடுத்தவர் மனம் புண்படாதபடி-----

தொப்பி வைத்து “ ஜால்ரா  தட்டுவது”--காங்கிரஸ்--கம்யூ---
திராவிட--கும்பல்களின் ஓட்டுப்பொறுக்கி அரசியல்----இந்த முகஸ்துதி அரசியல் மோடிக்கு வராது...

Sunday, September 11, 2011

ஒரு வெறி நாய்..கடி .10..20..30..35.. என ஏறிய.. படி...

கலி முற்றி விட்டது போலிருக்கிறது..நாட்டு நடப்பை பார்த்துப் பார்த்து...அலுத்து அலுத்து...ஆதங்கத்தில் சொன்னதல்ல இது..

நேற்று..ஒரு நாய்..தெரு நாய்..( பின்னால் வெறி நாயாக மாறியது வேறு விஷயம )..ரெயில் பயணத்தில் களைத்து ஊர் திரும்பிய பயணிகளை... கோவை ரெயில் ஸ்டேஷன் அருகில் .கூட்டத்தில் லாரி புகுந்த மாதிரி..ஓட ஓட விரட்டி ....பொது மக்களை கடித்துக் குதறியுள்ளது..

இதில் ஆச்சரியம் என்னவென்றால்..கிரிக்கட்டில்.....கம்யூட்டர் கேம்ஸில்... “ஆக்‌ஷன் ரீப்லே “..மாதிரி.கடித்துவிட்டு ஓடிய நாய்...5 ந்து நிமிடங்களுக்கொருமுறை    ஒளிந்து..ஒளிந்து..மீண்டும் மீண்டும் வந்து..கொரில்லா தாக்குதல் நடத்தியிருக்கிறது..

இப்படி மக்கள் கூட்டத்தை..திரும்பத்..திரும்பத் தாக்குவது..அரசியல்வாதிகள்..ஆட்சியாளர்கள்...அதிகாரிகள்.மட்டும்தான்...இவர்களிடம் “கடிபட்டது “ போதாது என்று..நாயிடமும் மக்கள் கடிபடுவது..”கலி “ முற்றினால்தானே நடக்கும்..

இதைவிட தமாஷ்..பத்திரிக்கை களில்..இதைப்பற்றி வந்த தலைப்புச் செய்திகள்தான்..

தி.ஹிந்து...வெறிநாய் 10 பேரைக்கடித்துக் காயம்..
டைம்ஸ் ஆஃப் இந்தியா...வெறி நாய் கடிக்கு 20 பேர் காயம்
தினமலர்....30 பேரை வெறி நாய் கடித்து குதறியது..
தினகரன்...35 பேரைக்கடித்தது வெறி நாய்..

“ நாய் மனிதனை கடித்தால் செய்தி இல்லை..மனிதன் நாயை கடித்தால் தான் செய்தியாம்...என்பதால் ...கடிபட்டவர் எண்ணிக்கையை ஏற்றிக்காட்டி..இது தகுதியான செய்திதான் என்கிறார்களோ..
அல்லது ..இவர்கள் அந்த நாயின் “ ரசிகர் மன்றத்தை “ சேர்ந்தவர்களோ.....

Thursday, September 8, 2011

இந்தியாவை..கொலைக்களமாக்கும்..ப.சிதம்பரம்

நுனி நாக்கு ஆங்கிலம்...பூர்ஷ்வா மன ஓட்டம்....அரசர் காலத்து “ திமிர்த்தனம் “...சாமான்யன் நெருங்க முடியாத “ சுல்தானிஸம் “..இதுதான் இந்தியாவின் போலீஸ் மந்திரி..ப.சிதம்பரம்..


 
நேற்று..( 7.9.11. )..டெல்லி உயர்நீதிமன்றத்தில்...அநியாயமா... ( இதுவரை ) 11 அப்பாவிகள் பலி...கொல்லப்பட்டனர் என்பதே சரி.. 

மறுபடியும் மன்மொஹன் சிங் ஆறுதல்...ராஹுல் ஆஸ்பத்திரி விஜயம்...”இந்தியா பயங்கரவாதத்தை வலிவோடு எதிர்கொள்ளும் “...என பாராளுமன்றத்தில்...எம்பிக்கள்..வீராவேசம்....இவைகள்..பையித்தியக்காரத்தனமாக தெரியவில்லையா?..

எத்தனை நாளைக்கு இது தொடரும்...எத்தனை வருடங்களுக்கு இவ்வரசுகள் மக்களை ஏமாற்றும்?...ஓட்டுக்காக திருப்தி படுத்தும் வேலை தொடரத் தொடர..குண்டு வெடிப்புகளும் தொடருதே..

வெட்கம் கெட்டவர்கள்...மானத்தை காற்றில் பறக்க விட்டவர்கள்...ரோசம் என்றால்..என்னவென்று தெரியாதவர்கள்...இவர்கள்தான் இப்போது ஆள்கிறார்கள்...அவர்களின் அடையாள சின்னம்...”அராகண்ட் ஃபேஸ்” தான் ப.சிதம்பரம்..

மே மாதத்தில் ஒரு டெல்லி பிளாஸ்ட்...மும்பய்..ஜாவேரி பஜார் பிளாஸ்ட்....சென்ற ஆண்டு...அதற்குமுன்...அதற்குமுன்....என புள்ளி விவரங்களை கொடுத்து என்ன பயன்?...எண்ணிக்கை ஏறுகிறதே தவிர..குறைந்த பாடில்லையே..

வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும்..அந்நிய சக்திகளை தடுக்கவில்லை..அல்லது தடுப்பதில் தோல்வி...உள்நாட்டில் குண்டு வைப்பவன்..அவனுக்கு துணை போபவன்..அவனை கண்டு பிடிப்பதில்லை..கண்டுபிடித்தாலும்..மரண தண்டனை இல்லை..ஓட்டுக்காக நாட்டையே கொலைக்களமாக்குது காங்கிரஸ் கட்சி.

இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை...மக்களே ..பொதுநல அமைப்புக்களே...உள்ளூர் அஸோஸியேசன்களே...ஆங்காங்கே..தங்களுக்கு தேவையான..பாதுகாப்பை..நிறுவிக்கொள்ள..பேணிக்கொள்ள...உறுதிபடுத்திக்கொள்ள..வேண்டியதுதான்..

அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்..எனபது பழைய மொழி
அரசை நம்பினால் உசுரை எடுப்போம்..எனபது ப.சிதம்பரம் மொழி