Pages

Sunday, October 30, 2011

ஆட்டம் அடங்கிய மும்மர் கடாஃபி--அடங்கப்போகும் இந்திய கடாஃபிகள்

நம்மில் பலரை ” நீ யாராக வேண்டும்”  என் கேட்டுப்பாருங்கள்..நான் ஜெயலலிதாவாக வேண்டும்---ராகுலாக வேண்டும்...விஜய்யாக...சூரியாவாக..வேண்டும்...ரஜினியாக ..கமலாக..வேண்டும்--- என்பார்கள்..பலர்

யாராவது “நான் சங்கராச்சாரியாராக....அடிகளாராக...அமிர்தானந்த மாயியாக....அப்துல் கலாமாக ..வேண்டும் “ என்று சொல்லியிருக்கிறார்களா?---இல்லை அல்லது மிகக்குறைவு..

“ என் வாழ்வின் லட்சியம் நான் போப்பாண்டவராக ஆகவேண்டும் “ இப்படி சொன்னவர்.. இங்கிலாந்தின் மிகப்பெரிய விளம்பர நிறுவனத் தலைவர் “ டேவிட் ஒகில்வி “..

சரி விஜய்க்கும் சூரியாவுக்கும்...ஜெயலலிதாவுக்கும் ..”அவர்கள் யார் ஆக வேண்டும் என்று ஆசை?”..முதல் இரண்டு பேருக்கும் ரஜனியாகவும் “ஜெ” க்கு பிரதமர் ஆக வேண்டும் எனறு ஆசையாக இருக்கலாம்..

இப்போது “இருக்கும் இடத்தைவிட “..”அதைவிட பெரிய-- வேறு இடம் வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின்.--..மனதின் ஆசை..

எம்.எல்.ஏ.---எம்.பி.ஆக ஆசைப்படுகிறான்..எம்.பி...மந்திரியாக..அதுவும் கேபினட் மந்திரி ஆக-- ஆசைப்படிகிறான்..மந்திரி பிரதமர் ஆக ஆசைப்படுகிறான்..

எல்லாம் ஆனபின் என்ன நினைப்பு...யாரும் நெருங்க முடியா சர்வாதிகாரியாக ---அப்படி ஆன பின்பு..நானே கடவுள்..நினைப்பு..கடவுளாக நினைத்து...திமிர் தலைக்கேரி...மக்கள் புரட்சி வெடித்து...கடவுளிடமே போய்ச்சேர்ந்து விடுகிறான்..

சதாம் ஹுஸேன் கதி---மும்மர் கடாஃபி கதி...அனாதை பிணமானார்கள்..

இந்த சர்வல்லமை பொருந்திய அதிகார பதவிகள் தான் ---நாட்டை தாங்கிப்பிடிக்கிறதா?..

இல்லை..இது தலைமேல் இருக்கும் மணிமகுடம் மட்டுமே...தலை--கால்---இடுப்பு--முதுகெலும்ம்பு--கழுத்து--கைகள்---என உடலைத்தாங்கி பிடித்துக்கொண்டிருக்கும் பல்வேறு உறுப்புக்கள் போல --ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புக்கள் நாட்டை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது..அவைகளில் பல வெளியில் தெரியா..

தலையின் ஆட்டத்திற்கு இவைகளும் ஆடும்--ஓவராக தலை ஆடினால்..இவைகள் ஆடும்..ஆனால் “பிய்த்துக்கொண்டு “ போகாது..மணிமகுடம் ஓவராக ஆடினால் “பிய்த்துக்கொண்டு “ போகும்..பறக்கும்..

இது சரித்திரம் சொல்லும் உண்மை...இது தெரிந்தும் இன்னும் சில தலைகள் இங்கு ஏன் ஆடுகிறது ?..


Saturday, October 29, 2011

கடவுள்..( “ஜெ” )..சாட்சியாக



நம் மக்கள் இம்முறையும் “  EXTREME " ஆக முடிவு எடுத்துள்ளார்கள்..ஏப்ரல் சட்டமன்ற தேர்தலில் ஒரேடியாக திமுகவை தண்டித்தது போல..6 மாதம் கழித்து இந்த அக்டோபரிலும் அதே முடிவை மீண்டும் உறுதி செய்துள்ளனர்..

திமுகவி தண்டனை உறுதி செய்யபட்டது என்போர் சிலர்..அதிமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்போறும் சிலர்.

மின்வெட்டு தீரவில்லை..ஏன் தளர்வுகூட இல்லை..விலைவாசி குறைய வில்லை..லஞ்சம் தலையை இன்னும் “முடிந்து “ கொள்ளக்கூட இல்லை..விரித்தாடிக்கொண்டுதான் இருக்கிறது..

“சமச்சீர் கல்வி...ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு...கூடங்குளம் அணிமின் நிலையம் “ பிரச்சினைகளில்..முதலில் ஒரு கருத்து...பின்னர் பொது கருத்து --பிரஷர்... ஜாஸ்தியான போது..”யூ டர்ன் “எடுத்து “அந்தர் பல்டி “ அடித்து ‘ ஜெ ‘ யின் மீண்டும் புதுக்கருத்து..

இதுதான் “ ஜெ “ கடந்து வந்த 6 மாதங்கள்...கடந்த 3 மாதத்துக்கு முன் “தினத்தந்தியில் “ ஜெ காரில் செல்லும் படம் ஒன்று வந்தது..அதில் கார்களின் அணிவகுப்பில்லை..போக்குவரத்து நிறுத்தப்படவில்லை..இதுதான் நாம் எதிர்பார்ப்பது...” ஜெ” மாறியிருந்தால் அது வரவேற்கத்தக்கது..என்று நான் எழுதியிருந்தேன்.

சிரிப்பு நடிகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திரு எஸ்.வி.சேகர் அவர்கள் என் கட்டுரையை படித்துவிட்டு “ ஜெ  தன் காலில் யாரும் விழுவதை விரும்பவில்லை..புகழ்ச்சியிலும் அவர்க்கு உடன்பாடில்லை..” என்பது மாதிரி எனக்கு எழுதியிருந்தார்..

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பல அதிமுக பிரதிநிதிகள்..”ஜெ “ யின் பேரால் உறுதி ஏற்றதும்...சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் திரு சைதை. துரைசாமி அவர்கள் உறுதிமொழியை படித்து அதில்” கடவுள் அறிய ”..என்னும் வாசகத்தை படிக்கும் போது  பக்கத்தில் அமர்ந்திருந்த “ஜெ” யை திரும்பிப்பார்த்ததும்..அப்போது “ஜெ” யின் முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலும்..வெட்கமும்..எஸ்.வி.சேகரின் பதிலை ஆமோதிப்பதாக இல்லை..

ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட திமுகவும் அதன் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிமுகவினருக்கு இந்தவிஷயத்தில் எந்த விதத்திலும் குறையவில்லை..அவர்கள் கலைஞர் பெயரால் உறுதி ஏற்ற “தமாஷ்” களும் அரங்கேறியது...

பிரிட்டிஷ்காரன் போய் வெகுநாளாகிவிட்டது..அடிமைத்தனம் அப்படியே தொடர்கிறது..”ஜால்ரத்தனத்துக்கு “ அந்நியப்பட்ட அந்நிய நாட்டுப்பெண் சோனியாவைக்கூட அதற்கு அடிமைப்படுதிய பெருமை நம் காங்கிரஸ் சகோதரர்களைச்சாரும்..

திமுக ஆட்சியில் காதை செவிடாக்கியது “ஜால்ரா சத்தம் “..ஏற்கனவே “கடவுள்..துர்க்கா...மகிஷாசுரமர்த்தினி..ஜீஸஸ் “--என ஓவர் ஜால்ரா சத்ததினால் மக்கள் “ ஜெ “க்கு  5 ஆண்டு ஓய்வு கொடுத்திருந்தனர்.

மதுரை..... சத்ததிற்கு பெயர் போனது ..மார்கழி மாதம் மதுரையின் ஒவ்வொரு கோயிலும் அது பிளாட்பார கோயில் உட்பட “ கோனிகல் ஸ்பீக்கரில் “ அலறும்..இந்த “நாய்ஸ் பொலுஷனிலிருந்து” மதுரையை காப்பாற்ற இதுவரை யாராலும் முடியவில்லை.ஓவராக போனால் அது பக்தி இல்லை..தமாஷ்...இடைஞ்சல்..

மும்மர் கடாஃபி உட்பட எத்தனையோ சர்வாதிகளைக்கண்டு மக்கள் பயந்து பணிந்து போயிருக்கிறார்கள்..அது உயிருக்கு பயந்து.....இங்கு “ஜெ”யைக்கண்டு பயப்பட என்ன இருக்கிறது..பதவியோ   ஐந்து ஆண்டுகாலம்தான்..அதுவும் திக்விஜயசிங் மாதிரி ஒரு “லூஸு” பிரதமரானால் உடனே ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட முடியும்....

பின் ஏன் அதிமுக காரன் “ ஜெ “ காலில் விழுகிறான்.. பதவி படுத்தும் பாடு..அதிமுகவில் பதவிகள் தியாகம் --சீனியாரிட்டி..அடிப்படையில் கொடுப்பதில்லை...கிடைப்பதில்லை..இந்த உண்மை கடைசியாக நடந்த துணை மேயர் தேர்வுவரை தொடர்கிறது..

இந்த “தொடர்ச்சிதான் “ காலில் விழுவதையும்..கடவுளாக துதி படுவதையும்..தூண்டுகிறது..

சாமியார்கள் சிலரே தங்களை அவதாரமாகவும் கடவுளாக அலங்கரிதுக்கொள்வதையும் பார்க்கும் போது..ஒரு சாதாரண அரசியல்வாதி “ஜெ’ க்கு ”கடவுளாக” ஆசை வருவது ஆச்சரியம் இல்லையே..

Saturday, October 22, 2011

”ஜெ” க்கு அஜீரணம்---விஜய்காந்தே சூரணம்..

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் “ஜெ” க்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்..கூட்டணி கிடைக்காமல் ( பா.ஜ.தவிர )மற்ற கட்சிகள் வேறு வழியில்லாமல் தனியாக நின்றன.

நிச்சயம் எல்லா கட்சிகளுக்குமென்று ஒரு ஓட்டு வங்கி உண்டு.அதனால் ஓட்டு பிரியும் போது “ஜெ “ இமாலய வெற்றி பெற முடியாது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதினார்கள்.

அதுவுமின்றி உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட “தனிப்பட்ட செல்வாக்கும் “ ஒரு குறிப்படதக்க அங்கம்...எனவே எல்லா கட்சிகளும் தன் பலத்தை காண்பிக்கும் என்றுதான் நம்பினோம்.

ஆனால் திமுக மீது மக்களுக்கு இருந்த கோபம் இன்னும் தீரவில்லை எனபது மறுபடியும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் “ எனபது போல “வாக்காளர் தெய்வம் “”போயஸ் தோட்டதை “பிய்த்துக்கொண்டு கொட்டிவிட்டது. இது அதிமுகவிற்கு அஜீரணக் கோளாரை “உண்டு பண்ணிவிடுமோ என்பதே நம்கவலை.

10 மாநகராட்சிகளிலும் வெற்றி..எல்லா இடங்களிலும் ஏகோபித்த வெற்றி..இந்த மிருக பலம் “சர்வாதிகாரத்திற்கு “ வித்திடுமோ என்கிற ஐயப்பாடு எல்லோர் மனதிலும் ஏற்படுகிறது.
திமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து நிற்கிறது..அதற்கு மேல் அவர்களை பயமுறுத்த “நில அபகரிப்பு “வழக்குகளை ஏதோ “பாஞ்சாலி சேலை “போல உரிய உரிய போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..பல முன்னாள் மந்திரிகள் “ஜெயிலுக்குள்”…..திமுக சோர்ந்து போயிருக்கிறது.

ஏற்கனவே “அஞ்சாநெஞ்சன் “ அமைதியாகிவிட்டார்…ஸ்டாலினும் வம்பு தும்புக்கு போகாமல் “ஏதோ சம்பிரதாயத்துக்கு “ அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் திமுகவிடமிருந்து எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை எதிர்பார்ப்பது “வேஸ்ட்”

அடுத்த “பொறுப்பு “ விஜய்காந்த்துக்குத்தான். ..29 எம்.எல்ஏக்களுடன் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியும் அவர்தான்.கடந்த 6 மாதத்தில் அவர் சட்டமன்றத்திலும் சரி , வெளியிலும் சரி, வாய் திறக்கவே இல்லை.

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர் கட்சியை போட்டுத்தாக்கி குப்புற கவிழ்த்து விட்டது..ஏற்கனவே ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் இருந்தது போலவும் இப்போது இழந்துவிட்டார் போலவும் இதற்கு அர்த்தமில்லை.

தமிழ்நாட்டில் தற்போது “ ஜெ “ கலைஞர்—தவிர மூன்றாவது நபர் முதல்வர் என்று சட்டமன்ற தேர்தலில் பேசப்பட்டது  விஜயகாந்த் மட்டும்தான்..ஆனால் இன்று இளங்கோவனும்—வாசனும்—திருமாவும் “ அடுத்த முதல்வரே வருக “ என்று தனக்குத்தானே போஸ்டர் ஒட்டிக்கொள்வதற்கு விஜயகாந்த் நிலை சமாமாகிவிட்ட பரிதாபம்.

விஜயகாந்த்துக்கு அரசியல் புதிது..தேர்தல் புதிது..எதிர்கட்சி தலைவரும் புதிது.இந்த கடைசி புதிதை வைத்துக்கொண்டு அவர் முயன்றால் தமிழகத்துக்கு பல புதிதுகளை செய்ய முடியும்.

மக்கள் வாக்களித்து பெற்றுக்கொடுத்த “எதிர்கட்சி தலைவர் “ பதவியை அவர் மக்களுக்காக பயன் படுத்த வேண்டும்.

திமுக புறமுதுகு காட்டி ஓடும் நிலையில்…பாஜகவிற்கு தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வரும் 5 ஆண்டுகள் விஜயகாந்த்தின் செயல்பாடுகளே “ ஜெ “ யின் அசுரபல அஜீரணத்தை செரிமானம் ஆக்கும் “ சூரணமாக “ அமையும்.—செய்வாரா?

Sunday, October 16, 2011

மகேஷ் குமாரின் மரண வாக்குமூலம்



ஆண்--பெண் உறவு---கணவன் மனைவி நெருக்கம்---காதலன் --காதலி  ஈர்ப்பு---
சிதைந்து போனதா--உடைந்து போனதா?--இளைத்து..சிறுத்து..கருத்துப் போனதா?

அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம் என்கிறது மகேஷ் குமார் மனைவி “சியாமளாவின் “ கொலை

“சீதையை “ தேடிய ராமனுக்கு --சில்க் ஸ்மிதா போன்ற மனைவி அமைந்ததால்--கணவன் மகேஷ் குமார் ராமனுக்கு பதிலாக “வீரபத்திரனாக “மாறிய சோகம் .அரங்கேறியது...

”பெண்ணியம் “ களங்கப்பட்டு விட்டதா?--தகவல் தொழில்நுட்பம்..உலகமயமாக்கல்..கலாச்சார சீரழிவை விதைத்து வருகிறதா?---டி.வி.க்களும்--எஃப்.எம் களும் சமூகசீரழிவை “பாலூற்றி “ வளர்த்து வருகிறதா?--ஒழுக்கம் அறவே கெட்டு விட்டதா?--

இப்படி குமுறும் நெஞ்சங்களுக்கு வடிகால் ஏது?--நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?--நாம் நல்லவர்கள்---இவைகளால்தான் நாம் கெட்டுப்போனோமா?

தற்கொலை செய்துகொண்ட மகேஷ் குமாரின் 26 பக்க கடிதம்--நிச்சயமாக ஒரு “சம்மட்டி அடி “---நம் சிந்தனையை சீண்டும் ஒரு சாட்டை அடி..

ஒரு நடுத்தர குடும்பத்து பெண் ...அடிப்படை வசதி வேண்டி ..வேலைக்கு போனாள்..அங்கு எப்படி எல்லாம் பல ஆண்களை சொக்க வைத்தாள்--சிக்கி மகிழ்ந்தாள்..எனபதும்..

திருமணமான பின்பும்..எப்படி அவளது ஆண் தொடர்புகள் தொடரவும் ..பெருகவும்...செய்தது என்பதையும்..

மகேஷ் குமாரின் மரண வாக்குமூலம் தெளிவு படுத்துகிறது.அப்பெண்ணின் மீதிருந்த காதல் வசத்தாலோ...அல்லது..தனது “கையாலகாத தனத்தாலோ “அவனால் அவளை சகித்து கொள்ள முடிந்தது..சகிப்புத்தன்மை சருக்கியபோது..சியாமளாவின் கழுத்து இருகியது..

மகேஷ் குமாரின் கடிதம் தன் குலம்..கலாச்சாரம்...பெண்ணின் பெருமை...குடும்ப பாசம்..என சோகம் பிழியும் “சொர்ண புஷ்ப மாலை “யாக கட்டப்பட்டிருந்தது.

இதே மாதிரி காதல் கொலைகள்..கணவன் மனைவி கொலைகள்.பலப்பல.நடந்திருக்கலாம்..அவர்கள் செயலின் “கரு “ தெரியாததால்...மகேஷ் குமாரின் மனக்கிடக்கை..கடிதத்தின் மூலம் வெளிப்பட்டதால்..இக்கொலை வித்தியாசமான..படிப்பினையான..பாடம் சொல்வதாக உள்ளது...

கள்ள உறவு கொள்வதும்.... பலபேரிடம் கபட நாடகம் ஆடுவதும்..கண்ணியக்குறைவாக நடந்து கொள்வதும்...அதை செய்பவர்களுக்கு “தவறு “ என தெரியாதா?--சிறு வயதில் நாம் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவில்லையா?--நம் நீதி நூல்களும் பெரியோர்களும் தொடர்ந்து “போதித்துக்கொண்டிருப்பது “ இவர்கள் காதில் விழுந்ததில்லையா?  நாம்..நாமாக தேடிக்கொண்ட “கெட்ட பழக்கங்களுக்கு “ மேநாட்டினரைத்தான் நாம் குற்றஞ்சொல்லவேண்டுமா?

குடும்ப ஒழுக்கம் --சமூக ஒழுக்கம் எந்நாட்டினரையும் விட நமக்கு அதிகமாகவே புகட்டப்பட்டிருக்கிறது..இது நம் ரத்தத்தோடு கலந்தது..எத்தனை புரட்சி வந்தாலும் இவை மிரளாது..மாறாது..ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு...அவர்களை நாம் தொடராமல் நம்மை காத்துக்கொள்வோம்..

அப்போது ....சமூகம் சீரழிவில் சிக்காமல் இயல்பாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும்..

Wednesday, October 12, 2011

கொசு ஓட--”டிச் “ஓட---அய்யா--அம்மா திமுகவை ஓட்டுவோம்-

கொசு ஓட--”டிச் “ஓட---அய்யா--அம்மா திமுகவை ஓட்டுவோம்-
தாமரைக்கு வாக்களிப்போம்                                    

இது 18 நாள் நடக்கும் குருசேத்திர யுத்தம் அல்ல
இது 14 நாள் நடக்கும் உள்ளாட்சிப் போர்

டி.வி--ஃபேன் -மிக்ஸி--ஆடு மாடு என
இலவசங்களை இரைக்கிறார்கள்
இலவசங்கள் எதுவும் வேண்டாம்
அப்ப என்ன வேணும் சொல்றோம் கேளு

குடிக்க நல்லதண்ணி கொடு
படிக்க தடையில்லா மின்சாரம் கொடு
நடக்க குண்டுங்குழியில்லா ரோடு கொடு

அப்பன் ஆத்தா செத்துப் போனா
லஞ்சம் வாங்காம சர்ட்டிபிகேட் கொடு
அக்கா தங்கை புள்ள பெத்தா
காசு கேக்காம சான்றிதழ் கொடு

தலைக்கு மேலே கொசுவா சுத்துது
அடிச்சு அடிச்சு தலையே சுத்துது
தண்ணி ஓடி கொசுவும் ஓடணும்

இலவசங்கள் யாருக்கு வேண்டும்
இத்ற்கெல்லாம் தீர்வுதான் வேண்டும்

ஊர் மாறி ஊர் வந்தா
ரேஷன் கார்டு வாங்கி கொடு
ஏழை பாழை எல்லாருக்கும்
நலத்திட்ட உதவி வாங்கிகொடு

இதுக்குத் தானே தேர்தல்--இதை
செய்பவர் தானே கவுன்சிலர்..

இதை ஏதும் செய்யாம
அய்யா கட்சி ஆண்டாச்சு
அம்மா கட்சி ஆளுது

இதை நல்லா செய்யும்
அய்யா ஒருத்தர் இருக்கிறாரு
அவர் பேரு நரேந்திர மோடி
அவர் ஆளும் மாநிலம் குஜராத்

குஜராத்தை தமிழகத்துக்கு கொண்டுவர
அளித்திடுவீர் தாமரைக்கு உங்கள் வாக்குதனை..

தாமரைக்கு வாக்களிப்போம்
உள்ளாட்சியில் நல்லாட்சி காண்போம்..

Tuesday, October 4, 2011

” மெகலோமேனியா “—மோடியா…நேரு குடும்பமா ?



சஞ்சீவ் பட்மீது காங்கிரஸுக்கு ஏனிந்த காதல் ?---மோகம்---கவலை..

பதவி நீக்கம் செய்யப்பட்ட குஜராத் ஐ.பி.எஸ். ஆஃபீஸர்..சஞ்சீவ் பட்டின் பூர்வாசிரமம் என்ன ?—காங்கிரஸின் கையாள்…மாநிலத்தின் எதிர்கட்சி தலைவரின் ( காங்கிரஸ் )மிக நெருங்கிய நண்பர்..



காங்கிரஸுக்காக அரசுக்குள்ளிருந்து ஒற்றர் வேலை பார்த்து..சோனியாவிற்கு தெரிவிப்பது…இப்படி மோடிக்கு எதிராக—காங்கிரஸுக்கு ஆதரவாக –உதவி செய்தவரை கைவிட்டால்---அவர் போலிஸ் புத்தியை காண்பித்து—காங்கிரஸை காண்பித்து கொடுத்து விட்டு அப்ப்ரூவர் ஆகிவிட்டால்—



காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் பதியப்பட்டிருந்தது…அதிலிருந்து தப்பிக்கும் அவர் முயற்சிக்கு அன்று காங்கிரஸ் உதவவில்லை..இன்று அரசியல் காரணக்களுக்காக அவரை காங்கிரஸ் பகடை காயாக உருட்டுகிறது.



அபிஷேக் ” சிங்-” வி—என்ற “ நரி “வி—” குரு “வி---விரக்தியின் எல்லைக்கே போய் சொன்ன வார்த்தைகளை பாருங்கள்..

குஜராத்தில் மோடியின் வார்த்தைகளே சட்டமாம்—மோடியின் புருவம் அசைந்தால் ஜனநாயகம் சாகடிக்கப்படுமாம்---மோடி தும்மினால் பார்லிமெண்ட்டே ஸ்தம்பிக்குமாம்---மோடி ஒரு அதிகார வெறி பிடித்த மனநோயாளியாம்…ஆஹா..என்ன வர்ணனை..என்ன வர்ணனை---சினிமாவுக்கு வசனமெழுத போகலாம்.



அன்று 1975 இல் எமெர்ஜென்சியில்..இந்திரா காந்தி தும்மினால் இந்தியா தும்மியது..இந்திரா கண்னசைத்தால் சட்டம் சதிராடியது..கோர்ட் குப்புற அடித்து படுத்துக்கொண்டது..

இந்திரா கை காட்டியதால் “ ஜேபி “ உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை ஏதுமிண்றி 25 மாதம் காலாகிரகத்தில் இருந்தனர்.

சஞ்சய் காந்தியின் ஜனநாயக படுகொலையால் டில்லி துர்க்மான் கேட்டில் ஆயிரக்கணக்கோனோர் கட்டாய குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டனர்.



நேரு கண்ணசைத்ததால் ஊழல் கிருஷ்ணமேனன் தப்பித்து கொண்டார்..இந்திரா கண்ணசைத்தார்..ஜனநாயகம் சிறைச்சாலைக்குள் போய் ஒளிந்துகொண்டது..

ராஜிவ் கண்ணசைத்தார் “போஃபர்ஸ் ஊழல் புகழ் கொட்ரோச்சி “ஜாலியாக “வலம் வந்தார்..இன்று சோனியா கண்ணசைப்பில் மாப்பிள்ளை “ ராபர்ட் வடோதரா” எண்னிலடங்கா லட்சம் கோடிகளை சந்தடியின்றி குவித்துள்ளார்..




இப்படி சர்வாதிகாரிகளும் கொள்ளைக்காரகளும் கொண்ட காங்கிரஸ் கும்பலில் வளர்ந்ததால் அபிஷேக் சிங்விக்கு அந்த நினைப்புதானே வரும்..

கசாப்புக் கடைக்காரன் வளர்க்கும் கிளி--” வெட்டு--குத்து “ என்று தான் பேசும் --காங்கிரஸ் கசாப்புக்கடை--கிளி--சிங்வி...இப்படி பேசுவது-- ஆச்சரியமில்லையே..

ஆக -----அதிகார வெறிபிடித்த “மெகலோமேனியாக் “ கும்பல் சோனியாவா—மோடியா முடிவு செய்யுங்கள்..

Monday, October 3, 2011

இனி கல்யாணம் 2 வருஷம்தான்………….




கேக்குரத்துக்கு பலபேருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே…

இது வெறும் தலைப்புதானா..உண்மையா>>?—உண்மைன்னா உடனே விவரம் சொல்லுங்க…நாங்க ரொம்ப ஆர்வ இருக்கம்…என்று எவ்வளவு குரல்கள் காதில் விழுது…எவ்வளவு துடிக்கும் இதயங்களின் சப்தம் காதை பிளக்கிறது..

ஆம்! தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில்தான் இதே மாதிரியான ஒரு சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டுரிக்கிறது..

மெக்ஸிகோ நாட்டு மக்களுக்கு திருமண பந்தத்தில் நுழைவது சிரமமில்லையாம்…அதிலிருந்து நினைத்த நேரத்தில் வெளியே வருவதில்தான் சிரமமாம்…”டைவர்ஸ் “ விதிமுறைகள் மிகவும் நோகடிக்க செய்கிறதாம்.

புதிய சட்டத்தின்படி திருமணம் என்பது 2 ஆண்டு ஒப்பந்தமாம்…விருப்பபட்டால் அதை மேலும் நீட்டித்துக் கொள்ளலாமாம்..ஒப்பந்தம் காலாவதி ஆனவுடன் வீடு காலி பண்ணுவது போல்..இருவரும் வேறு வேறு ஆளை தேடிக்கொள்லலமாம்..

இதில் ஒரு பிரச்சினையாம்..அதாவது..ஒப்பந்தகாலத்தில்  சம்பாதிக்கும் சொத்தும்..உருவாகும் வாரிசும் யார் யாருக்கு எனபதுதானாம்..இதையும் “ சீரியஸாக” யோசித்து வருகிறார்களாம்..

ஏற்கனவே ஓரின சேர்க்கை..ஓரின திருமணம்..இவைகளுக்குபல நாடுகள் சட்ட அங்கீகாரம் கொடுத்து விட்டது..இப்போது வீடு ஒப்பந்தம்—வீடு லீஸ்—வீடு ஒத்தி----மாதிரி திருமண பந்தமும் “காண்ட்ராக்ட் “ முறையில் கொண்டுவர சட்டமியற்ற மெக்ஸிகோ நாடு  தயாராகி வருகிறது..

இது இந்தியாவிற்கு உடனே வருமா?—நாளாகுமா?---இந்தக் கேள்வியும் காதில் விழத்தான் செய்கிறது--