Pages

Saturday, May 19, 2012

ஆயிரமாண்டு பேசும் ஓராண்டு சாதனைகள்...இதோ

நான் 25 கோடி ரூபாய் விளம்பரதாரனில் அடக்கம் அல்ல..
நான் “ஜெ” யின் எதிரியோ “கானா”வின் ஆதரவாளனோ அல்ல
இந்த அரசின் முதலாண்டு சாதனை விளம்பரங்களை பார்த்த பின்பும்...
அதன் “வாசகங்களை “ படித்த பின்பும்...”விமர்சனமே செய்யக்கூடாது” என்று தான் இருந்தேன்

தினசரி “அரைத்த மாவையே”  துறைவாரியாக நம்பணத்தில் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுவதை பார்த்து பொறுக்காமல் பொங்கி எழுந்து விட்டேன்..விளைவு...தலைப்பை மாற்றிவிட்டேன்..ஆயிரமாண்டு பேசும் ஓராண்டு சாதனைகள்...இதோ..


விலையில்லா மிக்ஸியாம்
விலையில்லா மின்விசிறியாம்
இலவசத்துக்கு இப்படியொரு பெயர்
ஓசிக்கு மற்றுமொறு பெயர்

மின்  விசிறிக்கு  பதிலாக
பனை  விசிறி  தந்திருந்தால்
புழுக்கம்  பற ந்திருக்கும்
புஜமும் “பல”ந்திருக்கும்

வார்த்தை  ஜாலத்தில்
ஆட்சி  நகரலாம்
மின்சாரம்  இல்லாமல்
மிக்ஸி  நகருமா?

ஆறுமணி  நேரம்  மின்வெட்டு
பத்துமணி  நேரம்  ஆனது
இரண்டு  ரூபாய்  பஸ்டிக்கட்
ஆறு  ரூபாய்  ஆனது

இல்லாத  மின்  சாரத்துக்கு
சொல்லாமல்  கட்டண  உயர்வு
ஆயிரமாண்டு  பேசும்
ஓராண்டு  சாதனை  இதுவல்லவோ

”குடிமக்கள்”  குஷி  குறைய
“சரக்கு”  விலையும்  உயர்ந்தது
தமிழகம்  முதலிடம்  பெற
“குடிஞர்”  வயதும்  குறைந்தது

ஆணுக்கு  நிகர்  பெண்ணென
“குடி” ”காரிகளும்” கூடினர்
ஆயிரமாண்டு  பேசும்
ஓராண்டு  சாதனை  இவையல்லவோ

இடுப்பு  வளைந்து  தலைவியை
முதுகு  குனிந்து  “அவதாரத்தை”
தலைகள்  கவிழ்ந்து  அன்னையை
மந்திரியும்  எம்.எல்.ஏயும்  செய்யும்

ரோடுஷோ  கூழை  கும்பிடு
பெண்ணின்  பெருமைக்கு  நற்சான்று
ஆயிரம்  ஆண்டுகள்  பேச 

இது ஒன்றே  போதாதா?

Monday, May 14, 2012

பயணங்கள் முடிவதில்லை


பழைய தலைப்பு மட்டுமல்ல..ஏதோ பழைய திரைப்படத்தின் பெயர்போல இருக்கிறதல்லவா?

வாழ்க்கை தத்துவங்களின் வலிமையான கருத்தை சொல்லும் வார்த்தைகளை மாற்ற முடியாதல்லவா?
அவை பழசுதான் ஆனால் என்றும் இளமைதான்..சரி சப்ஜெட்டுக்கு வருவோம்.

நமது 5வது மாநில மாநாடு “தாமரை சங்கமம்” தமிழக பாஜக வரலாற்றில் “பல புதுமைகளை”--”பல முதன்முதலான “ விஷயங்களை செய்துள்ளது.

1..தமிழக பாஜக வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பலகோடி செலவில் நடத்தப்பட்ட முதல்மாநாடு..

2..”தகவல் தொழில் நுட்பம் “ ஒரு அரசியல் கட்சியால் அதிகமாக பயன்படுத்தபட்ட மாநாடு..என்னும் பெருமை இதற்கே
.
3..பிர்மாண்டமான பந்தல்..ஒரே நேரத்தில் 11/2 லட்சம் பேர் அமரக்கூடியது என்பதும் முதல்முறை

4...தமிழகம் முழுதும் ஒரு ஊர்கூட பாக்கியில்லாமல் சுவர் வாசகம், பிளக்ஸ் போர்ட் வைத்து விளம்பரம் செய்ததுடன், அத்தனை ஊர்களிலிருந்தும்
 லட்சக்கணக்கில் திரணட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர் களின் கைக்காசே..என்பதும் வித்தியாசம்

5..போலீஸின் அதீத அத்துமீறலால்  பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட தொண்டர்கள் அத்தனைபேரும், குறைந்தபட்சம் 17 கி.மீ தூரம் நடந்தே மாநாட்டுப்பந்தலை அடைந்தனர்.
அந்தவகையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதிக தூரம் நடந்து, நடத்திய முதல் அரசியல் கட்சி மாநாடு என்னும் பெருமை பெருகிறது. அனேகமாக இது “கின்னஸ் “ சாதனையாக கூட இருக்கலாம்...

6..ஒரு இடத்தில்கூட தள்ளுமுள்ளு..வாய்த்தகராறு,..கைகலப்பு, பொருட்கள் காணாமல் போதல், என்ற எந்த அசம்பாவிதமும் இல்லை.

7...பேட்டரிகாரில் திரு கட்கரியை அழைத்து வந்த வித்தியாசம்.
.
8..ஊருக்குள் நுழையும் ஒருசில இடங்களில் போலீஸின் அத்துமீறல்களால் தடியடியால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டாலும் அமைதிகாத்தது தமிழக அரசியல் வரலற்றில் முதல்முறை..

9..மிகப்பெரிய” எல்.ஈ.டி..ஸ்கிரீன்.”.எந்த இடத்திலிருந்தும் மேடையை பார்க்கும் பிரம்மாண்டம்..

10...கலை நிகழ்ச்சிகள் கண் கவர்ந்தது..மனங்கவர்ந்தது..கலாச்சார பெருமையை பறை சாற்றியது..குட்டி குட்டி குழந்தைகளும், பங்குபெற்ற மெகா பரதநாட்டியம்...மகிஷாசுரமர்த்தினி ஆட்டம் என ஒவ்வொன்றும், பிரமிக்கவைத்தது..கலை இலக்கிய அணி விஸ்வரூபம் எடுத்தது.


மிகத்துல்லியமாக திட்டமிடப்பட்டது..மிகச்சரியாக செயல்படுத்த ஆவன செய்யப்பட்டது..தொடர்ந்து காற்றும் மழையும் மாறி மாறி நம் செயல்பாடுகளுக்கு “செக்” வைத்தது..

இவையெல்லாம் மீறி அன்னை மீனாஷி --அம்மன் மதுரகாளியின், அருளால், நம்மால் இயற்கையின் சீற்றத்தின் கஷ்டங்களை ஓரளவுக்குத்தான் கட்டுக்குள் கொண்டுவரமுடிந்தது.

அதனால்தான் “ஒரளவு குறைகளும்..கஷ்டங்களும் “ ஏற்பட்டிருக்கலாம்.

ஒருவேளை இயற்கை நமக்கு இடர்பாடுகள் தராமல் இருந்திருந்தால், “துல்லியமாக திட்டமிடப்பட்டு அங்குலம் அங்குலமாக சிறப்பாக நடத்தப்பட்ட மாநாடு “ என்னும் முழுப்பெருமையை பெற்றிருப்போம்.

வாழ்க்கை பயணத்தில் சோதனைகள் வருவது சகஜம்...அரசியல் கட்சியின் வாழ்விலும்  சாதனை..சோதனைப் பயணங்கள் தொடர்கின்றன..இந்த மாநாடு தொடங்கிவைத்த நமது பயணம் முடியவில்லை..தொடரும்...மீண்டும் மீண்டும் மாபெரும் வெற்றிகளைக் குவிக்கும்...



Sunday, May 13, 2012

பொருளுக்கு “ஸ்டைல்” வேண்டும்....அருளுக்குமா?


ஜக்கி வாசுதேவ்வின் புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்...பக்கம் பக்கமாக படங்கள்....ஒவ்வொன்றிலும் ஒரு “ரிச்” காஸ்ட்யூம்..தலையில் ஹரியானா விவசாயின் “முருக்கிய” டர்பன்..
ஆர்ட் ஒர்க் செய்த பெரிய சால்வை
 ரஜ்னி ஸ்டைல்லில் போர்த்தியபடி..
பிரசங்கமாயினும்..பிராணாயாமமாயினும் ஸ்டைலான சால்வைதான்..

நேற்று நம்ம “நித்திக்கு “ பட்டாபிஷேகம்..
டி.வி.--வீடியோ...பார்த்தால்..”லலிதா ஜுவல்லரி கடையே நடந்து வருவதுபோல..
ஆபரண யுத்தம்..அழகி போட்டிபோல..உடலெங்கும்..ஆபரணம்..
அடையாளத்துக்கு காவி..இதுதான் நித்தி ..

ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்..எதுக்கு 3 ஸ்ரீ..அதுதான் அவருக்கான அடையாளம்..ஸ்டைல்..

முழுநீள சாட்டின் காவி அங்கி...பறக்கவிட்ட சுருள் தலைமுடி..சாயீ பாபா ஸ்டைல்..

இப்படி சாமியாருக்குள் ஸ்டைல் போகவில்லை..ஸ்டைலுக்குள் சாமியார்கள் போனார்கள்...ஏன்?

பொருளுக்கு லோகோ...ஸ்டைல் வேண்டும்..அருளுக்கும் ஸ்டைல் வேண்டுமா ?

சட்டையில் ரோஜா வைத்தால் நேரு ஸ்டைல்
கச்சை கட்டி தடியுடன் நடந்தால் காந்தி ஸ்டைல்
ஃபர்ன் குல்லாய்..முழுக்கை சட்டை..கூலிங் கிளாஸ்..வலது கை வாட்ச்..இது எம்ஜியார் ஸ்டைல்
மேல் துண்டு அண்னாதுரை..மஞ்சள் துண்டு கருணாநிதி..சிவப்புத்துண்டு ராஜபட்ஷே...

தெய்வங்கள் கூட ஸ்டைல்லில்தான் திரிகின்றன..
மீனாஷி என்றால் மாணிக்க மூக்குத்தி...கன்யாகுமரி என்றால் வைரமூக்குத்தி..ஆண்டாள்னா...கொண்டை,,,கிளி.......திருப்பதின்னா நாமம்...காளின்னா கோபம்..

சாமிகளே ஸ்டைல் பண்ணும்போது ..சாமியார்கள் பண்ணக்கூடாதா?
அரசியல் வாதிகள் ஸ்டைல் பண்னும்போது ...அவர்கள் வணங்கும் ஆதீனங்கள் ஸ்டைல் பண்ணக்கூடாதா?

பொட்டிப் பாம்பாய் ..இருக்கும் சாமியார்களை.. எட்டி நின்று பார்க்க ஆளில்லையே
அடங்கி ஒடுங்கி இருக்கும் ஆதீனத்தை.. அண்டியிருக்க ஆளில்லையே

கூட்டம் கூடணும்னா.. ஆட்டம் போடணுமாம்....இதனால்தான் நித்தி பின்னால் ” 292 ” (மதுரை ஆதீனம் )ஓடியது..
ஆர்ப்பாட்டமில்லாத....ஆரவாரமில்லாத....ஆண்டவனும்,, ஆதீனமும்,, அரசியலும்,, வேண்டும்---கிடைப்பார்களா?

அனுதினமும் எமக்கு அன்னையர் தினமே



இன்று அன்னையர் தினமாம்
அப்படியானால் மற்ற நாட்கள்  ?
ஆங்கிலேயனுக்கு ஒரு நாள்தான்
நமக்கு தினம் தினமுமே..

காப்பியடிக்கும் கலையிலே நாம் வல்லவர்கள்
தொழிலிலே காப்பியடி  கோடிகளைச் சேர்
அரசியலில் காப்பியடி கேடிகளைச் சேர்
தொண்டில் காப்பியடி புண்ணியத்தைச் சேர்
ஆன்மீகத்தில் காப்பியடி ஆதீனமாக சேர்

உறவுகளில் காப்பியடித்தால் உண்மை சுருங்கும்
உண்மையை காப்பியடித்தால் பொய்மை பெருகும்
அன்னை என்பவள் நம் தொப்புள்கொடி பந்தம்
அவளுடைய உறவுநம் ஆயுள் பர்யந்தம்

ஒருநாளில் முடிவதில்லை அன்னையின் உறவு
உறவுக்கு ஒருதினம் இல்லைநம் மரபு
தாயாக தாரமாக தங்கையாக மகளாக
ஆயுள்முழுதும் போற்றுவதே நம்முடைய இயல்பு..

Friday, May 11, 2012

செம்பும் நாளைக்கு தங்கமாகும்

அந்தப் பாலைவனத்தின் புழுதிப் புயலில்
புதை மணலில் அனல் காற்றில்
மிடுக்காய் ஒரு ஒட்டகம்
மிதந்து சென்றது.ஆம்!
அது பாலைவனக் கப்பலல்லவா.!

பொந்திலிருந்து ஓடி வந்த ஒருஎலி
தாவிஏறி திமிலில் அமர்ந்தது.
ஹை!ஹை! நாந்தான் ஒட்டகத்தை
ஓட்டுகிறேன் என்றது..

ஈச்சமர நிழலில் இளைப்பார
அமர்ந்த (படுத்த ) ஒட்டகம்
எழுந்திருக்கும் போது மணலில்
புதைந்திருந்த பூரான் ஒட்டகத்தை
தூக்கிவிட்டது நாந்தான் என்றது.

ஓடிவரும் நதியின் வேகத்தை
ஒடிந்து விழும் நாணல் தடுத்ததாம்.
உருண்டுவிழும் நீர்வீழ்ச்சியின் பாதையை
உருண்டு வரும் கூழாங்கற்கள் தீர்மானிக்குதாம்.

இவையெல்லாம் உண்மையெனில்
 இம் மாநாட்டில்.. நான் செய்தேன்
நான் செய்தேன்..நாந்தான் செய்தேன்.. என்பதும்..
அவனால்தான்.. அவனால்தான்.. அவனால் மட்டும்தான் ....
என்பதும் உண்மையாகும்..இதுதான் உரைகல் என்றால்
செம்பும் நாளைக்கு தன்னை தங்கமென கொண்டாடும்.


அத்தனையும் நடத்தியவள் அன்னை மீனாஷி
அவளோடு இணைந்து செய்தவள் மதுரகாளி
இந்த உண்மை உணர்ந்தால் ஈயமும்
செம்பும் கூட நாளைக்கு தங்கம் ஆகும்



Sunday, May 6, 2012

தேர் ...ஓடும்.....வீதியிலே....உயிர்....ஓடுதே




*** 3.5.2012 அன்று ஆரணி கோட்டை கைலாசநாதர் கோயில் தேர் சக்கரம் உடைந்து 5 பக்தர்கள் பலி..

****குடியாத்தம் சிவகாம சுந்தரி--பாலசாதுலீஸ்வரர் கோயில் தேர் மின்கம்பத்தில் உராய்ந்து  5 பக்தர்கள் பலி..

**5.5.12 அன்று கோவை பாலமலை ரெங்கநாதர் கோயில் தேர் சாய்ந்து ஒரு பக்தர் பலி..

**ஸ்ரீமுஷ்ணம் பூவராகவப் பெருமாள் கோயில் தேர் இழுக்கமுடியாமல் பாதிவழியில் நின்றது...


                                                    ” என்னாடா இந்து கடவுளருக்கு வந்த சோதனை---தேர்களுக்கு வந்த வேதனை...”

                                                   சித்திரை மாதம் அக்னிநட்சத்திரம் என சுட்டெரிக்கும் வெய்யிலின் அனலை--வேதனையை--மறக்க நாம் ஏராளமான கோயில் திருவிழாக்களை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்...

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வர... ஒரு தெய்வம் மறந்தாலும் ...மற்றோரு தெய்வம் வந்துவிடும் என்பதால் ...நமது நூற்றுக்கணக்கான தெய்வங்களுக்கு ..நாம் தேரோட்டம் நடத்துகிறோம்.

திருவாரூர் ஆழித்தேர்...ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பகல் பத்து--ராப்பத்துக்கு பிந்தைய தேர்...கும்பகோணம் ஒப்பிலியப்பன் தேர்....மதுரை மீனாஷி தேர்...ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாள் தேர்...என.. நீரற்ற நெற்றியில்லை..தேர்ற்ற கோயிலில்லை..என தேரில்லா தெய்வமே இல்லை..

இத் தேர்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும் பராமரிப்பு என்பதே இல்லை...ஒரு தேரோட்டத்திலிருந்து அடுத்த தேரோட்டம் வரை 360 நாட்கள் காய்ந்து கருவாடாக நட்ட நடு ரோட்டில் அநாதையாக தேர் நிற்பதும்..துரு பிடித்து..உளுத்து..போவதும் ஆண்டவனுக்கே தெரியும்..ஆள்பவருக்கு ஏன் தெரிவதில்லை..

தேரோட்டத்திற்கு ஒரு நாளைக்குமுன்...கொஞ்சம் பெயிண்ட்..கொஞ்சம் கிரீஸ்....அவ்வளவுதான்...அது ஓடப்போகும் சாலையின் ”தரம்..குண்டு..குழி...மின்கம்பிகள் குருக்கீடு...தேரின் உயரம் எடை..அகலம்”..இவை அனைத்தும் அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும்..பஞ்சாயத்து..முனிசிபாலிடி..மாநகராட்சிகளுக்கும் தெரியும்..

பின் ஏன் விபத்துக்கள்....அதுவும் இவர்கள் ”செயல்பாடு குறை பாட்டால்”.. நிகழும் விபத்துக்கள்..இவைகளை ஏன் தடுக்க முடிவதில்லை?

தேரோட்டத்தில் ஏற்படும் விபத்து..இடர்கள்..அந்த ஆண்டு முழுதும் அவ்வூர் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது..ஏதோ தெய்வ குற்றமோ என அஞ்சுகின்றனர்....உண்மையிலே குற்றம் அரசுடையது...

அம்மா...தேர்..ஓடட்டும்..தேர் ஏறி உயிர் ஓடாமால் பார்த்துக்கொள்ளுங்கள்...சரியா?..

Tuesday, May 1, 2012

அன்சாரியா..?..அப்துல் கலாமா..? யார் அடுத்த ஜனாதிபதி ?



சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இது பழமொழி...காங்கிரஸ் குடுமி காசுக்காக ஆடும் அல்லது ஓட்டுக்காக ஆடும்..இரண்டும் இல்லை என்றால் கதர்க் குல்லாய்க் குள் சென்று பதுங்கிக்கொள்ளும்.

அன்சாரி மீது காங்கிரஸ் உட்பட சில கட்சிகளின் பாசமும், ஆதரவும், அப்துல் கலாமை அவர்கள் தள்ளி வைத்திருப்பதற்கும் என்ன காரணம்?


ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் இந்த இருவரும் தான் வேட்பாளர்கள் என்றால்---, ஒருவேளை நமக்கும் ஓட்டிருந்தால்.--.நாம் யாருக்கு ஓட்டுப்போடுவது..

மொஹமது ஹமீது அன்சாரி--..இதுதான் இவர் முழுப்பெயர்...பிறப்பிடம் இன்றைய கொல்கொத்தா...அதுதான் நம்ம காம்ரேட்களின் பழைய பூமி..30 திலிருந்து 35 சதவீதம் முஸ்லீம்கள் வாழும் மாநிலம்..இவரது மாமா முக்தார் அஹமது அன்சாரி..காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். பெரிய காங்கிரஸ் குடும்பம்..


அன்சாரி 1961 ஆண்டு பேட்ச் ஐ.எஃப் எஸ் அதிகாரி..இவருடைய வேறு தகுதிகள் என்ன?


**குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு இழப்பீடு தொகை வாங்கித்தர பணியாற்றியிருக்கிறார்...இது பெரிய தகுதி ஆயிற்றே..
** அலிகார் பல்கலை கழக துணைவேந்தராக இருந்துள்ளார்.
** தேசிய மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்துள்ளார்.
**பாலஸ்தீன முஸ்லீம் ஆதரவு புத்தக எழுதியுள்ளார்.
** ஈரான்-ஈராக் பற்றிய இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்படு எடுத்தவர்..--அவ்வளவு தேச பக்தி
** ஜம்மு காஷ்மீர் மக்கள் ந்ம்பிக்கையூட்டும் குழு தலைவர்--அவ்வளவு இனப்பாசம்
** மைனாரிட்டி கமிஷன் தலைவராக இருந்தபோது மத மாற்ரத்தை ஊக்குவிக்கும் வண்னம்” தலித் கிரிஸ்தவர்களுக்கு இட ஒதிக்கீடு வழங்குவோம்”
என செயிண்ட் சேவியர் கல்லூரி எடுத்த முடிவை அங்கீகரித்த நல்லவர்..

இப்படி முழுக்க முஸ்லீம் ஆதரவு---முஸ்லீம் நாடுகள் ஆதரவு...இந்துவிரோத செயல்பாடு...கிறிஸ்தவ ஆதரவு செயல்பாடு..செய்த பெரும் காங்கிரஸ் குடும்பத்தை சார்ந்தவரை காங்கிரஸ் ஆதரிப்பதில் அதிசயம் இல்லையே..

ஜேடியு..ஜேடிஎஸ்..சிபிஎம்..லாலு போன்றோர் ஆதரிக்க--- மே.வங்கம்..உ.பி.--பிஹார்..--லுள்ள முஸ்லீம் ஓட்டு எண்ணிக்கையே காரணம்..


அப்துல் கலாமும் முஸ்லீம் தானே..அவரை ஆதரித்தாலும் முஸ்லீம் ஓட்டு கிடைக்குமே --என நீங்கள் கூறூவது என் காதில் விழுகிறது.அதற்கு என்ன பதில் --படியுங்கள்..

பெயர் ..ஏபிஜே.அப்துல் கலாம்...பிறப்பு ராமேஸ்வரம்--தாய்மொழி தமிழ்.....பிடித்த நூல்கள் திருக்குறள்---வீணை வாசிக்கத்தெரியும்---கர்னாடக சங்கீததில் மிக்க ஆர்வம்---சாப்பிடுவது சங்கீதா ஓட்டல் சைவ உணவு--தாடி இல்லை ஆனால் தொழுகை உண்டு

முஸ்லீம் மத பல்கலை கழக வேந்தரல்ல--
ஆனால் IIST...என்ற விஞ்ஞான பல்கலை கழக தலைவர்..
மதத்தலைவரல்ல--விஞ்ஞானத்தின் தந்தை
MISSILE MAN OF INDIA என்ற பெயர் வாங்கியவர்
மக்கள் ஜனதிபதி என புகழப்பட்டவர்
IIM-- அஹமதாபாத் மற்றும் இந்தூரின் பேராசிரியர்

மாமா காங்கிரச் தலைவரல்ல...பணக்கார குடும்பமுமல்ல
ஏழ்மை காரணமாக சிறு வயதில் “பேப்பர் பாய்” வேலை பார்த்தவர்.
இதயக்குழாய் அடைப்பை சரி செய்யும் “ ஸ்டென்” தயாரித்து அதற்கு “கலாம்--ராஜு” ஸ்டெண்ட்” என்ற பெயருமுண்டு
பொக்ரானில் அணுகுண்டு வெடித்து இந்தியாவை தலை நிமிர வைத்தவர்..

இவருக்கு எந்த முஸ்லீம் ஓட்டுப்போடுவான்..?இந்த நல்லவரைக்காட்டி எந்த முஸ்லீம் வாக்குக்களை கவர முடியும்?
வடநாட்டில் உள்ள முஸ்லீம்களுக்கு இவரை முஸ்லீம் என்றே தெரியாதே..
பிறகு காங்கிரஸுக்கும்--லாலுவுக்கும் நிதிஷுக்கும் இவரால் பிஹாரிலும்..உ.பியிலும் எப்படி முச்லீம் ஓட்டுக்களை வாங்கித்தர முடியும்?
காம்ரெடுகளுக்கு தாய்மண் பாசம்--வங்க பாசம்--அதோடு முஸ்லீம் ஓட்டு நேசம்..அத்னால் அன்சாரி பாசம்..

ஏற்கனவே தோல்வியின் விளிம்பில் இருக்கும் காங்கிரஸ்--ஐமுகூட்டணி..அன்சாரியை காட்டி கொஞ்சம் முஸ்லீம் ஓட்டுக்காளை வாங்கலாம் என கனவு கண்டு கொண்டிருக்கும் போது..நடுநிலையாளர்--முழு இந்தியன் அப்துல் கலமை நிறுத்த அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

இப்போது புரிகிறதா?--ஏன்?--எஸ் அன்சாரி!!---நோ கலாம்!!--என்று

இப்போது சொல்லுங்கள் நாம் நம் ஓட்டை யாருக்கு போடுவது?

அதை பத்திர மாக வைத்திருங்கள்..ஜனதிபதி தேர்தலில் ஓட்டு நமக்கில்லை..

“இவர்கள்தான் “ போடுவார்கள்---போட்டவர் ஜெயிப்பார்...

”இவர்கள் “ தோற்பார்கள்..2014 இதைத்தான் கூறப்போகிறது..