Pages

Sunday, October 28, 2012

மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா


மோடியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா 


ஆமதாபாத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாட வசதிகள் சரியாக கிடைக்கிறது என்பதை இதுவரை சந்தித்த மக்கள் வாயிலாக அறிந்துகொண்டோம் ..

ஐந்தாவது நாள் பரோடா மக்களை சந்திக்க காரில் புறப்பட்டோம்... 6 வழி தேசிய நெடுஞ்சாலை அது.... வல்லவன் வாஜ்பாயியின் தங்க நாற்கர சாலைதிட்டத்தில் உருவானது.

என்னோடு வந்தவர்கள் பெருமையாக அந்த சாலையை பேசினார்கள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லை.நம்மூரில் கோவை --சேலம்--தருமபுரி--கிருஷ்ணகிரி
--சென்னை--திருச்சி--மதுரை--கன்யாகுமரி --சாலைகளை பார்த்து இது ஒன்றும் அதிசயமாக தெரியவில்லை.

விரைவு 
வண்டிகள் வலது  ஓர கடைசி லைனிலும் பெரிய வண்டிகள் நடுவிலும்-..ஆம்புலன்ஸ் இடது ஓர லைனிலும் செல்கிறார்கள்..
லைன்மாறினால் ஹாரன் அடித்து காதை  தொளைக்கிரார்கள் ..

பரோடா மன்னர்களின் சமஸ்தானம் ..கெய்க்வாட் அரசகுடும்பங்களின் தலைநகரம் ..ஊரும் அழ்காக பின்னப்பட்டிருக்கிறது...நடுத்
ட்டு--மேல்தட்டு மக்களின் சொர்க்க  பூமி ..

பரோடா தமிழ்சங்கத்தை சேர்ந்த திரு சேகர் செட்டி விட்டில் 50 க்கும் அதிகமான தமிழர்களை சந்தித்தோம்.அதை 
சுற்றியுள்ள 7 சட்டமன்ற தொகிதிகளில் 40,000 பேர்கள் வாழ்கிறார்களாம்.அனைவரும் ஒட்டு மொத்தமாக பாஜக விற்குத்தான் ஒட்டுப்போடுவார்கலாம்..

  நாங்கள் வந்த  செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்த ..பரோடா நகர பாஜக தலைவரும் அப்பகுதி கவுன்சிலரும் ..வீட்டுக்கு பார்க்க வந்துவிட்டார்கள்.கூடியிருந்தவர்கள் அனைவரையும்... கவுன்சிலர் பெயர் சொல்லி அழைக்கிறார்.அந்த அளவுக்கு அவருக்கு மக்கள் தொடர்பு  இருப்பதை பார்க்க முடிந்ததது

ஒரு தமிழ் நண்பர் மோடியின் உதவியால் அவர் பிரச்சினையை திர்த்தகதையை சொன்னார்.ஒரு சொத்து பிரச்சனையில் உள்ளூர் போலிஸ் எதிர்  பார்ட்டியிடம் காசு வாங்கி கொண்டு இவருக்கு எதிராக கஞ்சா கேஸ் போட்டு மூணு மாதம் இவரை உள்ளே தள்ளி விட்டார்களாம் .ஆமதாபாத் சென்று மோதியை பார்த்து ஆதாரங்களுடன் இவர் விளக்கியவுடன் ..இப்போது எஸ்.பி.முதல் பெரிய அதிகாரிகள் அனைவரும் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்கலாம்.---இது எப்பிடி இருக்கு..?இங்க இப்படி நடக்குமா .வளர்ப்பு மகன் மேலையே இங்கு கஞ்சா கேஸ் ..

ஆமதாபாத்தில் பி.ஆர்.ட்டி ..என்கிற விரைவு பஸ் போக்குவரத்து மிகவும் பிரபலமாகி வருகிறது.போக்குவரத்து 
நெரிசலில்      சீக்கிரமாக விரும்பும் இடங்களுக்கு போய்சேர -----இருக்கும் சாலைக்கு நடுவிலேயே மோதி-- ஒரு தனி பஸ் பாதையை அமைத்துள்ளார்....பிரயாண நேரம் வெகுவாக குறைந்து விட்டதாம்..இதுதான் அங்கு இப்போது "டாக் ஆப் தி டவுன் "..இம்ம்ம் .......நம்மூரில் இது எப்போது நடக்கும்.

நர்மதா நதிக்கரை ஓரம் மரங்கள் மிகுந்த பூங்காக்களை உருவாக்கி மிகவும் அழ்கு படுத்தி இருக்கிறார்கள். எதோ வெளி நாட்டில்  இருப்பது போல்
 இருக்கிறது ..

டாக்டர் சுரேந்திர சிங் ..கட்சியின் கட்சியின் நீண்ட  நாளைய உறுப்பினர்.தமிழர் ...மோடியின் சிறப்பு குணங்களை வரிசை படுத்தினார்..

பிரச்சாரம் --யாத்திரைகள்--நிகழ்ச்சிகளுக்கு வரும்போதெல்லாம் ஒவ்வொரு தெருவிலுள்ள தொண்டர்களையும் மோடி பெயர் சொல்லி அழைப்பாராம். வீடுகளுக்குள் சென்று நலம் விசாரிப்பாராம்..ஆமதாபாத் தெருக்களில் எந்த இடத்தில் வளைவுகள் வருகிறது..எந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளது என்ற தகவல் வரை அவருக்கு அத்துப்படி. என்றார்.

சென்ற  ஆண்டு கிளைக்கமிட்டி தலைவர் உட்பட பல ஆயிரம் பேர்களை சர்தார் சரோவர் பிராஜக்ட் பகுதிக்கு கூட்டிப்போனாரம்.மதிய உணவின் பொது ஒவ்வொரு தொண்டநிடமும் வந்து அவனிடம் அளவளாவி அவன் இலையில் இருந்து  உணவு எடுத்து சாப்பிட்டுவிட்டு சென்றாராம்

தொண்டனின் குஷிக்கு கேட்கவாவேண்டும் ..


மோடியின் வெற்றியின் ரகசியம் இப்போது புரிகிறதா?

Friday, October 26, 2012

அனுபவம் புதுமை..ஆமதாபாத்தில் கண்டேன்..

மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்….3

குஜராத் வாக்காளர்கள் யார் பக்கம்?
குஜராத் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்கப்போகிறார்கள்?
பிரம்மாண்டங்களை சாதிக்கும் மோடி அரசு சாமானியனுக்கு என்ன செய்தது?
வளர்ச்சி மட்டுமே முக்கிய நோக்கமென்றால் அன்றாடங் காய்ச்சிகள் நிலை என்ன?

இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டி காத்துக்கிடந்தேன்..”சொசைட்டிகளில்”—(நம்மூர்..அப்பார்ட்மெண்ட்) சிக்கிய தமிழர்கள்…நவராத்திரி கொண்டாட்டங்களில்..வீடுகளுக்கு உறவுமுறைகளை அழைத்து ”கொலு”—வைத்து கூடியிருந்தார்கள்.

சுண்டலோடு சர்க்கரை பொங்கல் நம்மூர்..தொன்னையில் கொடுத்ததை சுவைத்துக்கொண்டே கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தேன்..

அதற்கு முன் ஒரு முக்கிய விஷயம் ..நான் தமிழர்களிடம் வாக்கு பற்றி பேசவில்லை..அவர்களின் வாழ்க்கைத்தரம்..மோடி அரசில் அவர்களீன் தேவைகள்…அவர்களது கோரிக்கைகள்…என்ன என்றுதான் பேசிக்கொண்டிருந்தேன்..

“ மோதி” அரசில் தினசரி தேவைகள்..அத்தியாவசிய தேவைகள்..குடிதண்ணீர்..சுகாதாரம்..மின்சாரம்..வேலைவாய்ப்பு…இவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை..
பெண்களுக்கு அவரவர்..தேவைக்கு ஏற்ப 7 நாட்களுக்கும் வேலை கிடைக்கிறது..வேலை செய்யும் “சூழலும்” நன்றாக இருக்கிறது..”

“ மோதி”—தமிழர்களிஅ அதிகம் நம்புகிறார்..அவரது அரசின் முக்கிய அதிகாரிகள்..பலர் தமிழர்களே..தகவல் கமிஷனர்…நர்மதா வேலி தலைவர்…வைபிரண்ட் குஜராத் சேர்மன்..பல மாவட்டங்களின் கலக்டர்..போலீஸ் கமிஷனர்கள்..தமிழர்களே..


மோதியின் சொந்த தொகுதியான மணிநகரில் 15000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர்..அதனால்தான்..சென்னையில்..இங்கு துக்ளக்..ஆண்டுவிழாவில் அவர் பேசும் போது “என் வெற்றிக்கு தமிழர்களும் காரணம் “ என்றார்.
“யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்விக்கே இடமில்லை..எங்கள் ஓட்டு அனைத்தும் மோதிக்குத்தான்”—எனறனர்.

என்னுடைய ஆச்சரியமெல்லாம்..நான் சந்தித்த 500 பேரில் ஒருவர்கூட தன் ஓட்டு மோதிக்கு இல்லை என சொல்லவில்லை.
தமிழ்ப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சேகர் அவர்கள் 40 வருடமாக ஆமதாபாத்தில் பணி புரிகிறார்..என்னை பள்ளியின் மத்திய உணவுக்கு அழைத்தார்..

அன்று..வெஜிடெபில் புலாவ்…அதில் பச்சை பட்டாணி..முந்திரி பருப்பு..நெய்யுடன் சுடச்சுட..ஆவி பறக்க வந்தது..”டாரண்ட்” என்ற கார்பரேட் கம்பெனி..”செண்ட்ரலைசுடு..கிச்சனில்” சுத்தமாக—சுகாதாரமாக சமையல் செய்து..”ஹாட் பேக்கில்” ஆவி பறக்க குழந்தைகள் சாப்பிட 10 நிமிடம் முன் கொண்டுவந்து கொடுக்கின்றனர் …என்றார்..சேகர்..

குழந்தகள் வயிறு நிறைய கிடைக்குமா? என்றேன்..குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டத்து போக அதோ அங்கே இருக்கிறதே 4 பசு மாடுகள்..அதுவும் இதை சாப்பீட்டுத்தான் வளர்கிறது எண்றார்.
நம்மூர் மதிய உணவில் கரி அடுப்பு..விறகு அடுப்பு..பாதி வெந்தது..பாதி வேகாதது..பல்லி விழுந்தது…என ..எத்தனை ரகம்..

மனம் வருத்தப்பட்டது…தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு எப்போது இப்படி ஒரு நல்ல உணவு கிடைக்கும்?..இதற்கும் மோடி தான் வரவேண்டுமா?..

ஒரு போக்குவரத்து காவலரை சந்தித்தேன்..வாய் நிறைய “பான்..பராக்”..குஜராத்தில் வாயில் பான் அடக்காதவரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மோதியின் ஆட்சியில் போலீஸ் கவுரவமாக நடத்தப்படுகிறார்களாம்.ஒரேஒரு குறைதானாம்..ஒருமுறை இவர் பணியின் இடையில் சிறுநீர் கழிக்க சென்ற போது..”வயர்லஸ் போனை” பக்கத்து கடையில் கொடுத்து விட்டு சென்றதால்…”அட்டண்” பண்ன முடியல்லையாம்…அதனால் ஒருவாரம் “சஸ்பெண்ட்டாம்”…

Thursday, October 25, 2012

மோடி ராஜ்ஜியம்—ராமராஜ்ஜியம்—2


ஞாயிற்றுக்கிழமை காலை சந்திப்பு –அரசு அதிகாரிகள்..தமிழ்ச்சங்க நிவாகிகள்…மற்றும் ஆமாதாபாத் வைதீக சமாஜ முக்கியஸ்தர்கள்.. இருந்தனர்..

என் பேச்சுக்கு எல்லோரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்..ஒரு குழு மட்டும் வாய் திறவாமல் இருந்தது..
நான்…..தமிழ்நாட்டில் இப்போது “சேனல்கள்” பல வந்துவிட்டன..நான் டி.வி.விவாதங்களில் பங்கு கொள்கிறேன்..பெரும்பாலான டி.வி.க்களில் இப்படித்தான் கேள்வி கெட்கிறார்கள்….

”குஜராத்தில் ரத்த ஆறு ஓடுகிறது..மோடி ஒரு மரண வியாபாரி..இந்துமத வெறியன்..முஸ்லீம்களை கொன்று குவிக்கிறார்..” என்று கேட்கிறார்கள்.என்றேன்……எனக்கு பதில் தெரியவில்லை..இது உண்மையா..நீங்கள்தான் சொல்லவேண்டும் என்றேன்..

அதுவரை பங்குகொள்ளாத குழு கொதித்தெழுந்தது..”இங்கு இந்துக்கள் உயிரோடு நடமாட முடிகிறது என்றால் அது மோதியால்தான்..இந்துப்பெண்கள் இரவில் தனியாக நடுநிசிவரை வேலை பார்த்துவிட்டு தனியாக வீடு திரும்ப முடிகிறது என்றால்..அது மோதியால்தான்..

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் எப்போதும் 144 தடைதான்..ஊரடங்கு உத்தராவுதான்..வீடுபுகுந்து முஸ்லீம் நம்மை அடிக்கும்போதெல்லாம் எந்த நாதியும் இல்லாதிருந்தோம்..
இன்று குஜராத்துக்கு மோதி வேண்டுமோ இல்லையோ..எங்களுக்கு மோதி வேண்டும்..உங்கள் தமிழ்நாட்டு பத்திரிக்கை டி.வி. காரர்களை இங்கு வரச்சொல்லுங்கள்..நாங்கள் செலவை ஏற்றுக்கொள்கிறோ.ம்..நேரில் பார்க்கட்டும்..அப்போது புரியும் “ என்று ஒரே மூச்சில் பேசி முடித்தனர்.

பிற்பகலில் முருகன் கோவிலில் ஒரு பெரிய பெண்கள் குழுவை சந்தித்தோம்..
“இங்கு ரேஷன் கடைகளில் எந்த இலவசமும் கிடையாது..ரேஷன் கார்டு ஒரு அடையாள அட்டைதான்..பி.பி.எல்.கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன்…அதுவும் நம்மூர் மதிரி இலவசம் கிடையாது..விலை குரைவு..மிகவும் தரமான சரக்கு..இங்கு யாரும் இலவசங்களை விரும்புவதில்லை…
எங்களது வீடுகளில் நாங்கள் இரவில் கதவை பூட்டுவதே இல்லை..ஸ்கூட்டர்—கார்கள் ரோட்டில் பூட்டாமலே கிடக்கும்..நாங்கள் இரவில் மில் வேலை முடித்து 2. மணிக்குதான் அதுவும் தனியாகவே வீடு திரும்புவோம் எந்த பயமும் கிடையாது.”.என்றனர்…

மறுபடியும் கிள்ளிப்பார்த்து கொண்டேன்..நான் கனவு கானவில்லையே என்று..

உசிலம்பட்டியை சேர்ந்த ராமுத்தேவர்..15 பையன்களை தமிழ்நாட்டிலிருந்து அழைத்து வந்து கடலை மிட்டாய்—தேன் மிட்டாய்—லட்டு வியாபாரம் கடந்த 15 வருடமாக செய்கிறார்..

“நாங்கள் பரம்பரை திமுக..எங்க ஊரில் ஓட்டு மாற்றிப்போட்டால்..மாறு கை..மாறு கால்தான்>>.ஆனால் குஜராத்தில் நாங்கள் மோதி ஆள்..
முன்பெல்லாம் வியாபாரத்துக்கு போய்..திரும்ப வீடு வந்து சேர்வது நிச்சயமில்லை..அதுவும் முஸ்லீம் ஏரியாக்களுக்கு போனால் திரும்ப வந்தால்தான் நிச்சயம்..மோதி வந்த பிறகு எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது..வியாபாரம் செய்த காசும் ஒழுங்காக திரும்பி வருகிரது..”என்றார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு…கேசுபாய் பட்டேலோ..சோனியா காந்தியோ..மோடியின் வெற்றிக்கு இடைஞ்சல்…என்று யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிரது..

குஜராத்தில் காங்கிரசுக்கு 10 சீட் கிடைத்தால் பெரிது..என்பதே இன்றைய நிலை..

Wednesday, October 24, 2012

மோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1

கடந்த வாரம் பணி நிமித்தமாக குஜராத் போயிருந்தேன்…மோடி மீதும் பா.ஜ.க மீதும் சேற்றை வாரி இறைக்கும் “மீடியா” வும்,,காங்கிரசும் சொல்லுவது உண்மைதானா?..என்பதை கண்ணால் கண்டுவிடவேண்டும் என்பதை மனம் சொல்லிக்கொண்டிருந்தது..

குஜராத் தலைநகர் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல்.ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்..கண்ணால் காண்பது எல்லாம் மனதுக்குள் “போட்டோ” பிடித்து வைத்துக்கொண்டேன்.
தங்குமிடம் செல்ல “ஆட்டோவையே”.. தேர்வு செய்தேன்..பேச்சு கொடுக்கலாமல்லவா?..ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளலாமல்லவா?



“மஹிந்தர் ராஜ்புட்”..ஆட்டோவாலா..(அங்கு அப்படித்தான் நாமகரணம்)…பேசுகிறார்…”மோதி..ராஜ்ஜியத்தில் ( குஜராத்தில் “மோடி”யை..”மோதி” என்றுதான் உச்சரிக்கிறார்கள் )நாங்கள் சுதந்திரமாக ஆட்டோ ஓட்ட முடிகிறது…ஒரு பகுதியிலிருந்து முன்னமெல்லாம் நினைத்த போது செல்ல முடியாது..மாதத்தில் பாதி நாள் “ஊரடங்கு உத்தரவு—144 தடை “ இருக்கும்..சில பகுதிகளில் இந்த தடை மாதக்கணக்கிலும் நீடிக்கும்..அதனால் எங்களுக்கு நோட்டம் இருக்காது..வருமானம் இருக்காது..
இப்போது அதெல்லாம் “பழங்கதை”..மீண்டும் இந்த தேர்தலில் “மோதிதான்”ஜெயிப்பார்..அதுவும் பெரும் மெஜாரிட்டியோடு>>ஏனெனில் அவர்தான் எங்களுக்கு “பாதுகாப்பு”..

ஆரம்பமே நல்லா இருக்கே..போகப்போக எப்படி இருக்கும்..என் ஆர்வம் அதிகரித்தது..பார்த்துவிடுவோம்.என .தங்குமிடத்துக்கு வந்தவுடன் ஓட்டல்காரரை கேட்டேன்..
“ 24 மணி நேரமும் “தரமான மின்சாரம்”.( லோ..வோல்டேஜ்..இல்லை)..எங்கள் ஓட்டலில் யு.பி.எஸ்.இல்லை..ஜெனெரெட்டர் இல்லை..24 மணிநேரமும் “டேப்பை” திருகிணால் தண்ணீர்..அதும் குடி தண்ணீர்.”மோதி சாப்” வந்தவுடன் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த “டார்ச்சரும்” இல்லை..”

நான் நாடு மாறி போய் விட்டேனா?—இல்லை கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?—கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்..
மனம் சும்மா இருக்க விடவில்லை..சாலையில் சென்று “ஒரு பாணிபூரி வாலாவை” பார்த்தேன்..கேட்டேன்..கேள்விக்கணைகளை தொடுத்தேன்..

“நான் ராஜஸ்தானை சேர்ந்தவன்..குஜராத் வந்து 20 வருஷமாகிறது..எனக்கு 2 பெண் குழந்தைகள்..பள்ளியில் படிக்கிறார்கள்..படிப்பு—புத்தகம்—சீருடை—மதிய உணவு இலவசம்..(நம்மூர் பாஷை படி “விலையில்லா”) இப்போது அரசே “இலவச…விலையில்லா..ஸ்கூல் பஸ்” குழந்தைகளை வீடுதேடி வந்து கூட்டிப்போகிறது..”
“மோதி” வந்த பிறகு சாலையில் வியாபாரம் செய்யும் என்னிடம் இதுவரை எந்த போலீஸும் “கை நீட்டியதில்லை”
சலை வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்காது..அசுத்தப்படுத்தாது..வியாபாரம் செய்தால்..மோதி சர்க்கார் ஒன்றும் செய்யாது..குஜராத்தில் வெளிமாநிலத்துக்காரர்கள் நிம்மதியாக வாழ முடிகிறது…இந்த தேர்தலில் “வெளிமாநில ஓட்டுக்கள் முழுதும்” மோதிக்குத்தான்..”என கொட்டித்தீர்த்தார்.

ஆஹா..நரி முகத்தில் முழித்துவிட்டுத்தான்..ஆமதாபாத்..பிளைட் ஏறினோம் போலிருக்கிறது..என நினைத்துக்கொண்டேன்.படுக்கப்போகும் முன் ஒரு கிளாஸ் “தூத்”.(பால்) ஆர்டர் செய்தேன்..வந்தது..ஒரு கண்ணாடி டம்ளரில் சுமார் அரை லிட்டருக்கு பக்கமிருக்கும்.குடித்தால் கிளாஸிலிருந்து பால் வெளியெ வர வெட்கப்பட்டது. அவ்வளவு “திக்னஸ்”—கள்ளிச்சொட்டாய்”” ”அமுல்” தந்த  தேசமல்லவா..பாலுக்கு என்ன குறைச்சல்..

அடுத்த நாள் என் வேட்டையை தொடர்ந்தேன்..இம்முறை நம் தமிழ் நண்பர்களை பார்த்துவிடுவதென்று,,
ஆமதாபாத் தமிழ்ச்சங்கத்தலைவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன்..அவர் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நம்மை அழைத்துச் சென்றார்…குஜராத்தின் “தமிழ்க்குரல்” எப்படி இருக்குமோ என பயந்தேன்..ஆனால் பார்த்தவுடன்..-கேட்டவுடன்....வியந்தேன்..

“மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்---2”--தொடரும்