Pages

Tuesday, April 30, 2013

”பெங்கால்” சீட்டு மோசடியும், பெருந்துறை ஈமு மோசடியும்


திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தாபானர்ஜிக்கு இது போதாத காலம்...தங்களது 35 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த மந்தாவை தாக்குவதற்கு, கையில் கிடைத்த தூசி, துரும்பு, சிரட்டை , ஓடு எதையும் எடுத்து, மார்க்ஸிஸ்டுகள்,  தயாராக இருந்த போது-- மம்தாவே தானாகவே வலிய வந்து :சிட்பண்டு ஊழல்” வடிவில்  மாட்டிக்கொண்டார்

மம்தாவுக்கு வாக்கு ஸ்தானத்தில் “சனி உச்சம்”--ஒண்ணு கிடக்க ஒண்ணு பேசி, கன்னத்தில் அறைய கையை ஓங்கி, காலில் உதைக்க காலை தூக்கி, தொடர்ந்து கெட்ட பெயர் வாங்கி வருகிறார்..ஆணாதிக்க இந்திய அரசியலும் , பெண்களை விடாமல்..துரத்துவதை நிறுத்தவில்லை..
பாராளுமன்ற சபாநாயகி, ஆளும் கூட்டணி தலைவி, எதிர்க்கட்சி தலைவி, உச்சநீதிமன்ற நீதிபதி, மாநில கவர்னர்கள், என்பனவெல்லாம், ”ஸ்தானங்களை நிரப்பும் பெண்களே” என்றாகிவிட்டது...இவர்கள் சமஸ்தான அதிபதிகளுமல்ல..ஆஸ்தான தலைவிகளுமல்ல....ஆணாதிக்கத்தை மறக்க நடந்த பூசிமொழுகல்கள் “அப்பாயின்மெண்ட்கள் “.என்பதுதான் யதார்த்தம்

இது போகட்டும்..சப்ஜட்டுக்கு வருகிறேன்..மேற்கு வங்கத்தில் கடந்த வாரம் வீசிய “சாரதா சிட்பண்டு ஊழல்--புயற்காற்று”--அதன் முக்கிய குற்ற்வாளி சுதிப்தோ சென்...மம்தா பானர்ஜியின் கட்சியின் இரண்டு எம்.பிக்களுக்கும்..நெருக்கமானவராம்..டி.எம்.சி.கட்சிக்கே ஊழலில் பங்கு உள்ளதாம்..என்ர குற்றசாட்டுக்கள்..இதை மம்தா மறுத்தது வேறு விஷயம்..
எப்போதும் போல்...எல்லா ஏமாற்று கம்பனிகள் செய்வது போல..ஏழை எளிய மக்களுக்கு அதிக வட்டிக்கு ஆசை காட்டியும், சிட்பண்டில் சேர்த்துவிடும் புரோக்கர்களுக்கு அதிக கமிஷன் ஆசை காட்டியும், 10,000/-கோடி ரூபாய்..வரை இந்த சாரதா சிபண்டு குரூப்  சுருட்டியுள்ளது..
இதில் வேடிக்கை என்னவென்றால்,  “சாரதா குரூப் “ என்கிற 160 கம்பெனிகளை உருவாக்கி...அதில் 11 கம்பெனிகள் மூலமாகவே சுமார் 20,000 கோடிகள் வரை கடந்த 10 ஆண்டுகளாக திரட்டியது,இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. சுருட்டிய பணத்தில் ஒரு டி.வி. சேனல் தவிர மற்ற எல்லாமே மீண்டும் மீண்டும் சுருட்ட ஏதுவாக தொடங்கிய கம்பெனிகளே..
இதில் சாரதா ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் --மாதாமாதம் சேமிக்கும் வகையில் ஏழை--நடுத்தட்டு மக்களீடம்..எந்த ஆதாரம், டாக்குமெண்களை காண்பிக்காமல், நிலம் --வீடு தருவதாக வசூல் செய்ததுதான் ...ஆச்சரியம்--நம் மக்களின் “ஏமாளித்த்னத்துக்கு” உதாரணம்.., இதேமாதிரி நம்மூரிலும், இன்றும் நூற்றுக்கணக்கான ரியல் எஸ்டேட்ட்களும், தங்கநகை திட்டத்தில் கடைக்காரர்களும், வசூல் செய்து கொண்டிருப்பதும், அதில் சிலர் ஏமாற்றுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஊழல் வெளியே வந்தவுடன் மேற்கு வங்கம் முழுதும் ஒரே அதிர்ச்சி அலை..முதலில்உங்கள் பணம்.. “போனது போனதுதான் “--என்ற மம்தா..மக்களின் எதிர்ப்புக்கு பிறகு..எப்போதும் போல அந்தர் பல்டி அடித்து, அரசு பணத்தில் 500 கோடி தருவதாக ஒப்புக்கொண்டார்..எப்படி தருவார்?--எப்போது தருவார்?--யார் யாருக்கு தருவார் ?--எனபது எல்லாம் போகப்போகத்தான் தெரியும்..புகையிலை பொருட்களின் மீது வரிவிதித்து வரும் பணம் இதற்காகவேதானாம்..

இதற்கிடையே..”உன்னாலதான்.இந்த மோசடி...--இல்லை உன்னாலதான் இது..”..--”ஐ.ஆம்..ஓக்கே..யூ..
ஆர் நாட் ஓக்கே”--என்ற லாவணி கச்சேரிகள் காங்கிரஸ்--காம்ரேடுகள் மற்றும் மம்தா கட்சியினர் இடையே வங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது..
இவற்றை படிக்கிற போது தமிழர்களாகிய நமக்கு.. “பெங்காலியர்களை “பார்த்து சிரிப்புத்தான் வருகிறது..
எங்க ஊரில் (தமிழ்நாட்டில்..) இவையெல்லாம் சகஜம் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லைதான்...
திருப்பூர் “பாசி” நிறுவனம் முதல்..பெருந்துறை ஈமு கோழிப்பண்ணைகள் வரை---தீபாவளி பலகார சீட்டு முதல், பொள்ளாச்சி கொப்பறை தேங்காய்..நாட்டுக்கோழி வளர்ப்புவரை ..பல்வேறு வகை--புதுப்புது ஊழல்கள்..ஏமாற்றுதிட்டங்களில்
எத்தனை லட்சம் குடும்பங்கள் இங்கு ஏமாந்திருக்கிற்து.இதற்காக அழுதோமா?---தொடர்ந்து ஏமாந்ததால்..அழுவதற்கு கண்ணீர் ஏது?..எல்லாம் வற்றிவிட்டது..
ஒரு சீட்டில் ஏமாந்து..ஒரு ஈமு கோழியில் பணத்தை பறிகொடுத்து..அதே மாதிரி வேறு ஒரு சீட்டுக்காரனும் கோழிக்கரானும் வந்தபோது தெரிந்தே மீண்டும் ஏமாந்தோமல்லவா?.இதெல்லாம் தமிழ்நாட்டில் சகஜம் என்ற நிலைக்கு வந்தபோது இப்போது மீண்டும் எப்படி உற்சாகமாக இருக்கிறோம் பாருங்கள்..
இப்படி ஏமாற்றும்.. சீட்டுக்கம்பெனிகளின் அங்க லட்சணங்கள்  என்ன?
1..ஆடம்பரமான துவக்கம்..2..அதிக வட்டி---வருமானத்திற்கான ஆசை வார்த்தைகள்..3..அரசியல் வாதிகள்--அதிகாரிகளின் ஆசிகள் ஆதரவு..என பட்டியலிடலாம்..
மக்கள் ஏன் ஏமாந்தார்கள்?--1.குறைந்தகாலத்தில் அதிக வருவாய் வேண்டும் என்கிற ஆசை--எண்ணம்,,2..உடனடி பணம்--அதுவும் பெரும் பணம்..3..இது சாத்தியமா?--எப்படி இதை கம்பெனிகள்  தருவார்கள்?--எத்தனை நாளைக்கு தருவார்கள்?--என்ற சிந்தனை இல்லாமை..
அடுத்த கேள்வி...இந்த ஏமாற்று கம்பெனிகளை --அரசு பார்த்துக்கொண்டு ஏன் சும்மா இருந்தது என்பதுதான்
..
இது சரியான கேள்வி அல்ல..பல்வேறு சட்டங்கள்--இம்முறைகேடுகளை கட்டுப்படுத்துவதற்கு இருந்தாலும் கூட..இதற்குள் ஒரு உள்கேள்வி எழுகிறது..
அரசு என்பது யார்?..அங்கு யார் இருக்கிறார்கள்?--நம்மில் ஒருவர்தான்.. அரசும் ..அதற்குள் இருப்பவரும் --

நமக்கு---உடனடி பணம்--அதிகப்பணம் --ஆசை இருப்பது போல “அரசில் இருக்கும் “ --அவருக்கும்-- இருக்கத்தானே செய்யும்..அதனால் அவருக்கு பணம் கொடுத்து அவரை---அரசை--சரிக்கட்டி விடுகிறார்கள்.அப்படித்தானே “திருப்பூர் பாஸி நிற்வன ஊழல்” சுருட்டலில் ஒரு ஐ.பி.எஸ்.அதிகாரி மாட்டிக்கொண்டார்..
நாம் உழைத்து சம்பாதித்த பணம் ஒரே நாளில் அதிக குட்டி போடவேண்டும் என்று நினைத்தால்...பணம்..”.சுருட்டி கொண்டு ஓடுபவர்கள் கைக்குத்தான் போகும்”..இதை சட்டம் போட்டு தடுக்க முடியாது..மாட்டிக்கொண்டால் சட்டப்படியான தண்டனை மட்டுமே கிடைக்கும் ..
நம்மிடம் குற்றங்களை தடுக்க ஏராளமான சட்டங்கள் உள்ளன..ஆனால் அவைகளை நிரைவேற்றத்தான் சரியான அதிகாரிகள் இல்லை.
போலீசுக்கு “அதிக பளு”--எனவே குற்றங்கள் நடந்து முடிந்த பின்னரே அவர்கள் சினிமாக்களில் வருவதுபோல வருகிறார்கள்.
நாம்தான் மக்களை இவர்களிடமிருந்து காக்க வேண்டும்..நம்மிலுள்ள “சமூக சிந்தனையாளர்கள்’--”சேவை அமைப்புக்கள்”--மக்களிடையே பாடம் நடத்தியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தியும் --”ஏமாற்று திட்டங்களையும், கம்பெனிகளையும்” மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டவேண்டும்..
மக்களும்..அதிகவட்டி---உடனடி பணத்திற்கு ஆசைப்படாமல்..நம்பிக்கையான தேசிய வங்கிகளில் “ முதலீடு செய்து பனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்..

போணி ஆகாத விஜய காந்தும், வைக்கோவும் ஏணி ஆவார்களா?


இன்று ( 30.4.13 )..இந்து பத்திரிக்கையில் ஒரு “நாலு பத்தி படம்”—திருமாவளவனும், வைக்கோவும் சிரித்து போஸ் கொடுக்கும் படம்..நேற்றைய முன்தினமும்  விஜகாந்த்தும், திருமாவளவனும் சிரித்து போஸ் கொடுத்து இதே அளவு படம் வந்தது.

திடீரென இவர்கள் “உறவாட “ என்ன காரணம்?..சினிமாவை வெறுக்கும் ராமதாசு முகாமிலிருந்து சினிமாக்காரர் விஜயகாந்த் முகாமுக்கு திருமா தாவக் காரணம் என்ன?

மது ஒழிப்பு நடை பயணம் மூலம், தன் கட்சிக்கு “கூட்டணிக்குள் சேரும் “ அந்தஸ்தை உய்ர்த்திக்காட்ட நினைக்கும், வைக்கோவிற்கு, திருமாவின் மீது, என்ன திடீர் காதல்?

இதுமாதிரி நட்பு ஏதும் ஏற்படக்கூடாது..என அரசியலில்..ஏதாவது விதி இருக்கிறதா?—என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மரக்காணத்தில் பா.ம.க.விற்கும், வி.சி.க்கும், நடந்த மோதலில், பாதிப்பு வி.சி.க்குத்தான் அதிகமாம்.வன்னியர் சங்கம், பாம,க. ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம், சித்திரை முழுநிலவு பெருவிழாவில், பேசிய ஆவேசமான உரைகளும் இதற்கு காரணமாம்..

சில மாதங்களுக்கு முன்பு, தர்மபுரி மாவட்டத்தில், வன்னிய பெண்—தலித் பய்யனுக்கும் இடையேயான காதலும், அதன் விளைவாக ஒரு கிராமமே எரிக்கப்பட்டதும், பா.ம.க. தலித் பகுதியை சூறையாடி, தர்மபுரி மாவட்டம் , பிஹார் மாநிலத்தில் உள்ளதா? என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியது..

தலித்களுக்கும், தேவர்களுக்கும், --தேவர்களுக்கும்—நாடார்களுக்கும், நாடார்களுக்கும்,--தலித்களூக்கும்---என தென் மாவட்டங்களில் அடிக்கடி சாதி மோதல்கள் நடைபெறுவது சகஜமாகிவிட்டது..

தற்போது அதுபோல மேற்கு மாவட்டங்களில், அன்புமணி---ராமதாசு---காடுவெட்டி குரு கைங்கரியத்தில்,வன்னியர்—தலித் சாதிமோதல்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது..

கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு முழுதும் மாவட்டம் தோறும் சென்று.., அனைத்து பிற்படுத்தப்பட்ட சாதியினரை தலித்களுக்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் ராமதாசு இறங்கி சாதி மோதல்களை உருவாக்கி சமூக நல்லுணர்வை சீரழித்து வருகிறார்.... 

இதில் தூரதிருஷ்டம் என்னவென்றால், பாஜக தவிர எந்த அர்சியல் கட்சியும் ராமதாசின் இச்செய்கையை கண்டிக்கவில்லை..பாஜகவும், ஆர்.எஸ்ஸும் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில் உடனடியாக களத்தில் இரங்கி, சமூக நல்லுணர்வை சீரமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும், தலித்கள்மீது, வைக்கோவுக்கும், விஜய்காந்துக்கும் என்ன திடீர் பாசம்..எல்லாம் விரைவில் தேர்தல் வருவதால் வரும் வேஷம்..இவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு ஏதாவது தரமுடியுமா/

தமிழ்நாட்டு மக்களின் குரலை சட்டமன்றத்தில் ஒலித்து குறைகளுக்கு தீர்வு காண ஆளும் கட்சிக்கு அங்குசமான எதிர்கட்சியாக செயல்படும் அந்தஸ்தை விஜயகாந்த்துக்கு  நாம் கொடுத்தோம்..அவரும் அவர்கட்சியும் சட்டசபைக்கு போனால்தானே நம் பிரச்சினை பற்றி பேச..கொடுத்த வாய்ப்பை எடுத்து செயல்பட முடியத விஜயகாந்த அடுத்தவாய்ப்புக்கு ஆலாய் பறப்பது ஏனோ?—இவர்தான் திருமாவின் ஆபத் பாந்தவரோ?

சமூக நல்லிணக்கத்தை சீரழிக்க நினைத்த ராமதாசை மாவட்ட்ம் தோறும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியமைக்கும், மரக்காணம் கலவரத்துக்கு அவர்தன் காரணம் என்பதை வெளிப்படையாக கூறியமைக்கும், தமிழக முதல்வர் பாராட்டப்படவேண்டியவரே..

சாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் யாரக இருந்தாலும் அவர்களின் மீது தேசிய பதுகப்புச் சட்டம் பாய வேண்டும்..செய்யுமா தமிழக அரசு?

Monday, April 22, 2013

இசைமேதை டி.எம்..கிருஷ்ணாவே…இசை பாடுங்கள்….வசை பாடாதீர்கள்..

இசைமேதை டி.எம்..கிருஷ்ணாவே…இசை பாடுங்கள்….வசை பாடாதீர்கள்..
காங்கிரசின் கைகளே ரத்தக்கரை படிந்தவை….மோடியுடையது அல்ல..

சன் டி.வியின் விவாத மேடை நிகழ்ச்சியில். மனித நேய மக்கள் கட்சி பிரமுகர் ஹாஜாகனி அவர்கள், மோடி முஸ்லீம்களை கொன்று குவித்தார்,  என்றார்.

இதே.. நிகழ்ச்சியில் கடந்தமாதம் தவ்ஹீத் ஜமாத் பிரமுகர், மோடி முஸ்லீம் கர்ப்பிணிப்பெண்னை கொன்று வயிற்றிலிருந்த குழந்தையை எடுத்து நெருப்பில் போட்டார் என்றார்..

முஸ்லீம்கள் இப்படி பொய்குற்றச்சாட்டை சொல்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..அவர்களுக்கு மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டங்களில் இவ்வாறு போதிக்கப்படுகிறது..

ஜாமாத்தின் சிரப்புக்கூட்டங்களில் உரையாற்றும் அவர்களின் “இறைத்தூதர்கள்”..இப்படி “அமில மழை பொழிந்தாலே” அடுத்த கூட்டங்களுக்கு அழைக்கப்படுவர்.

இதே மாதிரி காங்கிரசும் இடது சாரிகளும், மோடிமீதும், பாஜக மீதும் அமில மழை பொழிவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது..

அமில எழுத்துக்களை இரவல் வாங்கி பிரசுரிக்கும் “இந்துவும்” நமக்கு அன்னியப்பட்டதல்ல…ஆனால் டி.எம்.கிருஷ்ணா போன்ற கர்னாடக இசை மேதைகள்..இந்த “தூஷணைகளில்” ஏன் இரங்கினார்கள் என்பது புரியவில்லை..

“ரத்தக்கரை படிந்த மோடியாம்…யார் கேட்டார்கள் வளர்சியை?---மனிதநேயமல்லவா வேண்டும்>>.”--என்று மோடியை பற்றி இன்றைய (22.4.13 )..இந்துவில் அதன் ஆசிரியர் அழுத்ததில் கேட்டுப்பெற்ற கட்டுரை ஒன்றை திரு.கிருஷ்ணா எழுதியுள்ளார்..

இவர் இசையை விட்டு விட்டு வசைபாட ஏன் வந்தார் என்று எனக்கு புரிய வில்லை..
அவரிடம் ஒருசில கேள்விகள் கேட்கிறேன் பதில் சொல்வாரா?

1..பாதசாரி ஒருவர் மீது பஸ் ஏறி கொன்றுவிட்டால்…பொது மக்கள் பஸ்சை ஏன் அடித்து நொறுக்குகிறர்கள்?...சிலசமயம் பஸ்ஸும் தீக்கிரயாக்கப்படுகிறதே..ஏன்?
2..ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டால், தவறான சிகிச்சை என்று உறவினர்கள் கருதினால்..அக்குடும்பம் முழுதும் ரோட்டுக்கு வந்து ஆஸ்பத்திரியை தீர்த்துக்கட்டுகிறதே..ஏன்?
3..டெல்லி பாலியல் கொலையில் மாணவிக்கு ஆதரவாக நாடே திரண்டதே..ஏன்?..
இதுதான் பாதிக்கபட்டவர்களின்,,—பாதிக்கபட்டவர்களுக்கு ஆதரவான மன எழுச்சி—மக்கள் எழுச்சி..
குஜராத் கலவரத்துக்கும் இதே காரணம் தான்..இதில் மோடி எங்கே வந்தார்?

4..கோத்ரா ரயில் நிலயத்தில்,58 அப்பாவிகள் அதில் 43 பேர் சிறுவர்கள் மற்றும் பெண்கள்..உயிரோடூ எரித்துக்கொன்றார்களே..அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லையே ஏன்?..இந்து உயிர் செல்லாக்காசா?
5..காலை 7 மணிக்கு அந்த சிறிய ரெயில் நிலையத்தில் 2000 முஸ்லீம்கள் கூடி இருந்தனரே..எதற்கு?..இது யதேச்சையானதா? திட்டமிட்டதா?
6..ரெயில் பெட்டியை வெளியே பூட்டினரே..தப்பிக்கக்கூடாது என்பதற்காகவா?—அல்லது விளையாட்டாகவா?
7….8 கேன்களில் 40 லிட்டர் பெட்ரோலை ரெயில் பெட்டிக்குள் ஊற்றினார்களே..குளிக்கவா..அல்லது குளிர்விக்கவா?

இதற்கு பதில் தெரிந்தால் குஜராத் கலவரத்திற்கும் காரணம் தெரியும்..கிருஷ்ணன் அவர்களே..

என் தாயை தாக்கினால் நான் திருப்பி தாக்குவேன் என்பது தாக்குபவனுக்கு தெரியாதா?—

அயோத்தி கரசேவகர்கள் 58 பேரை தீக்கிரையாக்கினால், இந்து சமூகம் பொங்கி எழாமல்..பூப்பறித்துகொண்டிருக்க வேண்டும் என்று ”கோத்ரா கொலைகாரர்களும், கிருஷ்ணனும்,” இந்து பத்திரிக்கையும் “ எதிர்பார்க்கிறார்களா?

எரிக்கப்பட்ட 58 பேரில் ஒருவர் தன் வீட்டிலிருந்து இருந்திருந்தால், மோடியின் கைகள் ரத்தக்கரை படிந்தது என எழுத எவனுக்காவது மனம் வந்திருக்குமா?

பாகிஸ்தானின் 22 சத இந்துக்கள் தற்போது 2 சதமாக குறைந்து --அவர்களும் அங்கு நடக்கும் அக்கிரமம் பொறுக்கமுடியாமல் அகதிகளாக இந்தியாவிற்கு ஓடிவருவது கிருஷ்ணாவுக்கு தெரியுமா?

காஷ்மீரின் பூர்வகுடிகள் “காஷ்மீர் பண்டிட்கள்” அங்கிருந்து துரத்தப்பட்டு நம்நாட்டிலேயே டெல்லி தெருக்களில் அகதிகளாக வாழ்வது கிருஷ்னாவுக்கு தெரியுமா? 

உண்மையிலேயே ரத்தக்கரை படிந்த கரங்களை கொண்ட ஹிதேந்திர தேசாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜோதி பாசு, எஸ்.பி.சவாண், அருண் கோகை, இவர்களை கிருஷ்ணன் வசதியாக மறந்துவிட்டாரா..அல்லது இவர்களது சரித்திரம் கிருஷ்ணாவுக்கு தெரிந்திருக்க வில்லையா? 

திரு கிருஷ்ணா அவர்களே-- தனி மனித சுதந்திரம் --–பேச்சுரிமை—எழுத்துரிமை—இதனால்.. எழுதினேன் --என்று சொல்வதை விட்டு விட்டு, மனித நேயம் –பண்பாடு –இதை போதிப்பதை நிறுத்திவிட்டு, இசை பரப்புவதை மட்டும்  செய்யுங்கள்..

மோடியை  மக்கள் பார்த்துக்கொள்வார்கள்..

இந்தியா—தலிபானாக மாறாமல் இருக்க வேண்டும் என்றால்---உங்கள் இசைப்பயணம் மேடைகள் தோறும்..தொடர வேண்டும் என்றால் அதற்கு மோடியின் ஆட்சி வேண்டும்…இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்..

Sunday, April 21, 2013

திமுக--காங்கிரஸ்--குழாயடிச் சண்டை துவங்கிவிட்டது.
2-ஜி அலைக் கற்றை ஊழலை ஊத்தி மூட..காங்கிரஸ் செய்யும் சதி ரொம்ப வித்தியாசமாக உள்ளது..அதுவும் கொஞ்சம்கூட பயமும் வெட்கமும் இன்றி...காங்கிரஸ் நடந்து கொள்ளும் விதம் வினோதமாக உள்ளது..

2 ஜி அலைக்கற்றை ஊழல்-- சி.ஏ.ஜி மூலம் வெளியானவுடன்..சோனியாவின் தொண்டரடிப்பொடிகள்...கபில் சிபலும்..ப.சிதம்பரமும்..போட்டிப்போட்டுக்கொண்டு பேட்டிகளில் கூறியதாவது..

1..சி.ஏ.ஜி....பொய் சொல்கிறது..
2..அரசுக்கு ஒரு பைசாகூட இழப்பில்லை..
3..தே.ஜ.கூ. அரசு கையாண்ட கொள்கையையே நாங்களும் கையாளுகிறோம்..
4..ராஜா தப்பு செய்யவில்லை.

இவை யாவிலும் உண்மை இல்லை என்று தெரிந்து ஊர் சிரித்ததும்,,நாடே சிரித்ததும், ராசாவை காப்பாற்ற காங்கிரஸ் ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட்டது..
சோனியாவின் கைத்தடி பி.சி.சாக்கோவை தலைவராக போட்டு, காங்கிரசையும் திமுகவையும், ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதே இதன் நோக்கம்..

இடையில் திமுக விற்கு “சனி வலுத்து வாக்கு ஸ்தானம் பலவீனம் அடைந்து..” காங்கிரஸ் கூட்ட்ணீயில் இருந்து விலகிக்கொண்டது..
பங்கு முழுதும் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் இதுதான் தருணம் என்று, பழிமுழுதும் ஆ.ராசாமீது போட்டு,தப்பிக்க பார்த்தது..

ராசா மூலம் திமுகவும் காங்கிரசை விடாமல துரத்தியது.
1..இது பிரதமருக்கும், ப,சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் எல்லாம் நடந்தது
2..என்னிடம் 100 பக்க அறிக்கை உள்ளது..அதில் உண்மை முழுதும் உள்ளது..
3..என்னை ஜே.பி.சி. விசாரணைக்கு அழைக்க வேண்டும் .. 

என ஆ.ராசா..அடம் பிடித்தவுடன் காங்கிரஸ் கலகலத்துப்போனது.
இப்போது ஜே.பி.சி.யை வைத்து காங்கிரஸ் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முடிவு செய்தது.
1..அத்தனைக்கும் காரணம் ராசாதான்..
2..பிரதமரும்..ப.சிதம்பரமும், மினரல் வாட்டர் போல சுத்தமானவர்கள்.

இப்படி ஒரு ரிப்போர்ட் தான் ஜே.பி.சியின் இன்றைய “லீக் செய்யப்பட்ட” ரிப்போர்ட்...
1..முதலில் “சுத்தமானவர்”..என்ற  ராசாவை இப்போது “தீட்டு பட்டவர் “ என்றது
2..கட்டு கட்டாக பச்சை பொய்களை வெட்கமில்லமல் அடுக்கியது..

இது பற்றிய புதிய தலைமுறை டி.வி. விவாதத்தில் பங்கும் கொண்ட காங்கிரசின் வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.திரு ஞானசேகரன் ..ராசாவை ஜே.பி.சி அழைத்தால்..ராசா...ப.சிதம்பரமும், பிரதமரும், தான் குற்றவாளி என சொன்னாலும் சொல்லிவிடுவார்...என்ற உண்மையை போட்டு உடைத்தார்..

ராசாவை காக்க வந்த கருணாநிதியின் நண்பர் சுப.வீரபாண்டியனும், ரிசர்வ் வங்கி தலைவர் சுப்பாராவும், ராசா..2ஜி அலைகற்றை விலையை உயர்த்தாமல் 2001 ஆம் ஆண்டு விலைக்கு விற்றது சரிதான் எனச் சொன்னதாக..சொன்னார்..

ஆனால் இன்றைய 21.4.2013 இந்து பத்திரிக்கையில், சுப்பாராவ் அப்படி சொல்லவில்லை என்றும் மாறாக 2008 ஆண்டில் 2001 ஆண்டு விலைக்கு கொடு[ப்பது எப்படி நியாயம் ஆகும் என 22.11.2007 ஆண்டு தனது கடிததில் தொலைதொடர்பு செய்லாளரை கேள்வி கேட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

ஆக உண்மையை மறைத்து புளுகு மூட்டையை மட்டுமே அவிழ்த்துக்காட்டும், இரண்டு கட்சிகள், “குழாயடிச் சண்டை போட “ இப்போது தெருவுக்கு வந்து விட்டது.


காங்கிரஸ் --ஜே.பி.சி.யை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது..
தி.மு.க.வும் ஆ.ராசாவும் என்ன செய்யப்போகிறார்கள்....பொருத்திருந்து பார்ப்போம்..