Pages

Friday, March 27, 2015

மீத்தேன் திட்டம் ரத்து--பாராட்டு யாருக்கு?

பார்லிமெண்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரெங்கராஜனின் கேள்விக்கு பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிமீ பரப்பளவு மீத்தேன் எரிவாயு தோண்டியெடுப்பதற்கான “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனிக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது..எனவும்...

“மேலும் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக ONGC நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை” எனவும்..

என இரண்டு செய்திகளை அறிவித்திருக்கிறார்..

இதற்கு மீத்தேன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு, திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் “திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தெரியாமல் 2011-ல் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இதற்கு ஒப்புதல் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு தான்” என 20-ந் தேதி திருவாரூரில் பேசியுள்ளார்.

இதிலுள்ள உண்மைகள் என்னென்ன? 
  1. ”காங்கிரஸ் ஆட்சிதான் ஒப்புதல் கொடுத்தது” என்றால், 2013 வரை அதனுடன் கூட்டணியில் நீடித்த திமுக, மீத்தேன் திட்ட ஒப்புதலை ரத்து செய்ய ஏன் கோரவில்லை?
  2. தமிழ்நாட்டில் புதிதாக 2011-ல் பொறுப்பேற்ற அதிமுக அரசு, திமுக தொடங்கிய புதிய தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு திட்டங்களை “கேன்சல்” செய்தது போல “மீத்தேன் திட்டத்தை” ஏன் கேன்சல் செய்யவில்லை.
  3. கங்கிரஸ் கொண்டுவந்த மீத்தேன் திட்டத்திற்கு பாஜக அரசு மீது கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் அரசியல் நியாயம்?
மீத்தேன் திட்டத்தை பாஜக அரசு பூரணமாக ரத்து செய்யவில்லை! “கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்பரேஷன்” மத்திய அரசின் டெண்டர் கண்டிஷன்களை பூர்த்தி செய்யவில்லை. எனவே “காண்ட்ராக்ட்” தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என்று தமிழகத்தின் எதிர் கட்சிகளும், “வாய்ச்சவடால்” வைகோவும், “மீத்தேன் திட்ட நாயகி” கனிமொழியும் திருவாய் மலர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ONGC க்கு எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று பெட்ரோலிய மந்திரி எழுத்து மூலமாக அறிவித்திருப்பதும், பழைய திட்டம் ஒப்பந்தம் ரத்தும் என்பதும் புதிய திட்டம் இல்லை என்பதையும் தெளிவாக்கிவிட்ட பிறகு---” தமிழக கட்சிகளின் மற்றுமொரு அரசியல் வியாபாரமான “மீத்தேன் வியாபாரம்” முடிவுக்கு பாஜக கொண்டுவந்துவிட்டது....மீத்தேன் கடை மூடப்பட்டுவிட்டது”

இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் காங்கிரஸின் “விவசாயிகள் விரோத திட்டத்திற்கு” மூடுவிழா நடத்திய பாஜகவை பாராட்ட மனம் இல்லாதது மட்டுமல்ல... மீத்தேன் திட்டத்தை முழுதாக ரத்து செய்யவில்லை என்று கூக்குரல் இடுகிறார்கள்!

மீத்தேன் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார் - ஜெயலலிதா தொடர்ந்தார்... காங்கிரஸ் கொண்டு வந்தது - பாஜக ரத்து செய்தது! இது சரித்திரம் சொல்லும் உண்மை..

ஆனால் கொண்டுவந்தவர்களையும், தொடங்கியவர்களையும், கண்டிக்காத, எதிர்த்து ஆர்ப்பட்டம் செய்யாத-- கம்யூனிஸ்ட், வைகோ மற்றும் தமிழக கட்சிகள், பாஜக மீது புழுதி வீசக்காத்திருந்தது. ஆனால் மீத்தேன் திட்டத்தை இவ்வளவு விரைவில் பாஜக ரத்தும் செய்யும் என கனவிலும் நினைக்காத தமிழக கட்சிகளின் “கனவில்” மண் விழுந்தது.

அவர்கள் பாஜக மீது வீச வைத்திருந்த புழுதியில் அவர்களே இன்று “மறைந்து போனார்கள்”

இவர்களின் “மீத்தேன்” அரசியல் வியாபாரம் வாங்க ஆளின்றி கடை மூட-- பாஜக காரணமாகிவிட்டது.
வியாபாரத்தில் நஷ்ட்டமடைந்தவர்கள் பாஜகவை எப்படி பாராட்டுவார்கள்?

((( எஸ். ஆர். சேகர் )))

Thursday, March 26, 2015

பிகார் பிட்ட்--உ.பி.--கத்த்தீ----தமிக்ழ்நாடு வாட்ட்ஸப்--எது ஈஸியானது?

பிகாரில் பொதுத்தேர்வுகளில் “பிட்” வைத்து காப்பி அடிக்கும் பழக்கம் வெகுகாலமாக உள்ளது! தற்போது காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு “பிட் கொடுத்து உதவ மாணவர்களின் நண்பர்களும், பெற்றோர்களும், பள்ளி கட்டிடத்தின் மீது ஏறி நிற்கும் புகைப்படம் பத்திரிக்கைகளில் வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் 4 மாவட்டங்களில் “பிட்” மற்றும் காப்பி அடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர்மீது கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. இது பற்றி நிதிஷ்குமாரும் கவலை தெரிவித்திருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டு இல்லாததால் ஊடகங்கள் பிகார் முதல்வர் நிதிஷ் மீது மாபெரும் ”வன்மம்”- பாராட்டாமல் அவரை மென்மையாக கடிந்து கொண்டுள்ளது. ஒரு வேளை பாஜக ஆளும் மாநிலங்களில் இது நடந்திருந்தால் “ஊடகங்கள் காட்டில் மழைதான்” ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு வேறு செய்தியே வேண்டி இருந்திருக்காது!

சரி சப்ஜெட்டுக்கு வருவோம்! பிகாரிலும் உ.பி-யிலும், மாணவர்கள் ”டேபிள் மீது கத்தியை”-- வைத்துக்கொண்டு, ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்து “பிட்” அடிப்பது நீண்ட நாள் சரித்திரம். இன்றைய மத்திய உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங் உ.பி. முதல்வராக இருந்த போது இதற்கு தடை விதித்து நடந்து கொண்டார். மாணவர்கள் மட்டுமல்ல, இதற்கு காரணமான பெற்றோர்களையும் கைது செய்///தார்.

விளைவு..... காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ‘ஓஹோ” என்று கூப்பாடு போட்டனர். ராஜ்நாத்சிங் கடும் கண்டனங்களை சந்திக்க வேண்டியிருந்தது.பின்னாலே ஆட்சியையும் இழந்தார்..”பிட்”--லாபி அவ்வளவு பவர்ஃபுல்” ஆனது..அதனால்தான்..முன்னாள் பிஹார் முதல்வரும் தற்போதயை நித்திஷ் குமார் கூடாளியுமான “லல்லு பிரசாத் யாதவ்” "நான் ஆட்சிக்கு வந்தால், பரிட்சையில் காப்பி அடிக்க புத்தகத்தையே தருவேன்” உறுதி(?) அளித்துள்ளார்..

இன்று நிதிஷ்குமார் ஊடகங்களின் “செல்லப்பிள்ளை” அதனால் இந்த காப்பி அடிப்பு-- “பிட்” வைப்பு பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பாவம் பாட்னா ஹைகோர்ட் ரொம்ப ”சின்சிரியராக” இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. பிகார் அரசிடமிருந்து அறிக்கை கேட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் நடந்த விவகாரங்கள் நம்மை கவலை கொள்ளச்செய்துள்ளது..கல்வித்துறை ஊழலில் பிகாரை விஞ்சும் வளர்ச்சியும் அதற்காக “டெக்னாலஜி” சிறப்பாக பயன்படுத்தி கொள்ளப்படிருக்கிறது நம்மை வாய் பிளக்கச்செய்கிறது..

தர்மபுரி--கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வுக்கான கேள்வித்தாள்கள் திருடப்பட்டு--”வாட்ஸப்” மூலம் மாணவர்களுக்கு வினியோகிக்க பட்டுள்ளது..

வாட்ஸப் தவிர திருடப்பட்ட வினாத்தாள்கள்..ஜெராக்ஸ் எடுக்கப்பட்டும் வினியோகிக்கப்பட்டுள்ளது..

வினாத்தாள்கள் திருடப்படுவது தமிழகத்தில், அதிசயமாக நிகழ்ந்து விடவில்லை..ஏற்கன்வே சில ஆண்டுகளுக்கு முன்பு, இது மாதிரி வினாத்தாள்கள் வெளியாகி, இதில் சம்பந்த பட்ட குற்றவாளிகள், சங்கிலி தொடர்போல கைது செய்யப்பட்டதும், நாம் அறிந்ததே.

இதில் வினாத்தாள்கள் ”எப்படி கிடைத்தது?” என்ற வினாவிற்கு...மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அச்சகத்தில், தமிழக வினாத்தள்கள் அடிக்கப்பட்டபோது..அங்கு அவைக்கு விலைபேசப்பட்டு தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது..

இந்த முறை வினாத்தாள்கள் எப்படி எங்கு யாரால் திருடப்பட்டது?--என்பது இன்னும் தெரியாத நிலையில், அது வினியோகிக்கப்பட்ட சங்கிலித்தொடரில் சம்பந்த பட்ட குற்றவாளிகள் கல்வித்துறையை சார்ந்த மிகப்பெரிய அதிகாரிகள். மற்றும் ஆசிரியர்கள் என்பதுதான் மாபெரும் அதிர்ச்சி அளிக்கு செய்தியாகும்,,

அதோடு மட்டுமின்றி,”காப்பி அடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க” சில பள்ளிகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட “தேர்வுகண்காணிப்பாளர்களை”விதிகளை வீசி எறிந்துவிட்டு, வேறு பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டு, “லிஸ்ட்டில்” இல்லாத-- மற்றும் மாணவர்களுக்கு “உதவும்” தேர்வு கண்காணிப்பாளர்கள்” பணிக்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது..

பல பள்ளிகள் கள்வி வியாபார போட்டியில் கடுமையாக இறங்கியுள்ளது..தங்கள் மாணவர்கள் அதிகமான மார்க் எடுக்க வைப்பதன் மூலம் அதிகமான மாணவ்ர்களை சேர்க்கும்”மாட்டுத் தொழுவங்களாக” மாறி வருகிறது..

அதிகசதவீத பாஸ் --கொடுக்கும் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் “வியாபார சந்தையாக”வும் ஆகிவருகிறது..

இதை ஊக்குவிக்கும் வண்ணம் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை சேர்க்க “ஒரே பள்ளிகளை” நோக்கி படையெடுக்கும்  போக்கும் அதிகரித்து வருகிறது..

இதைவிட மேலாக “அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?”என்கிற ”கவுன்சிலிங்” மற்றும் மாணவ-மாணவியருக்கு கூட்டங்கூட்டமாக “வழிகாட்டும் மாநாடுகள்” எல்லா பத்திரிக்கைகள் மற்றும் பள்ளிகளால் நடத்தப்படுவது மேலும் வருத்தமளிக்கும் செய்தியாகும்..

இதன் வெளிப்பாடுகளில் ஒருபகுதிதான் இந்த போட்டியில் ”ஓடமுடியாதவர்களுக்கு ஆறுதலாக”--குறுக்கு வழி வெற்றிக்கு வகை செய்யும் “வினாத்தாள்கள் வினியோகிக்கும்” அவலங்கள்...

இதற்காகத்தான் பிரதமர் மோடி அவர்கள் தனது “மனந்திறந்த பேச்சு” ரேடியொ ஒலிபரப்பில்..
மாணவர்களுக்குபரிட்ச்சைக்கு வெற்றிக்கு வாழ்த்து கூறி உரையாற்றும் போது, “மார்க்க் எடுக்கும் ஒரு நோக்கோடு மட்டும் “ படிக்காமல் “புரிந்து படித்து”--நல்ல எதிர்கால சந்ததிகளாக மாணவர்கள் வரவேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்..

லல்லு பிரசாத்தின் “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..புத்தகத்தை பார்த்து எழுத அனுமதிப்பேன்”--என்ற கல்வியிலும் ஓட்டு அரசியலும்.. பிஹாரின் பிட்டும், உ.பி.யின் கத்தியும் நாம் மிகவும் கவலை பட வேண்டிய விஷயமாகும்..

இந்தியாவில் ஏதோ சில வேற்று மாநிலங்களில்தானே இது நடக்கிரது என நாம் நினைக்கும் முன்பு--அதுவே தமிழகத்திலும், “வேறு மாதிரியாக” நடப்பது, இந்தியாவின் எதிர்காலமான “நம் இளைஞர்களை” பற்றி கவலையுறச்செய்கிறது..

இதை ஆரம்பத்திலேயே “கிள்ளிவிடுவது” நாட்டிற்கு நல்லது.....தமிழகத்திற்கு மிகவும் நல்லது..

பாட்னா ஹைகோர்ட் போல சென்னை உயர்நீதி மன்றமும் தலையிட வேண்டியிருக்குமா?--அல்லது “மக்களின் முதல்வரும்--”மா”க்களின் முதல்வருமே “சரி செய்து” விடுவார்களா?

Wednesday, March 18, 2015

மீடியாக்களின் வினோதமான மத சார்பின்மை


ஒரே நாளில் மூன்று சம்பவங்கள் மூன்றும் மூன்று மாநிலங்களில்... அனைத்தும் “மைனாரிட்டிகள்” சம்பந்தப்பட்டது. அதற்கான “ரியாக்‌ஷனை” பார்த்தால் நாம் கடைபிடித்து வரும் “செலக்டிவ்” மதசார்பின்மை புரியும்!

ஒன்று உத்திரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம். இங்குள்ள 100 மசூதிகளில் முஸ்லீம்கள் ஒன்று கூடி ஒரு “பத்வா” அறிவிக்கிறார்கள்! என்ன அது?
இனி முஸ்லீம் “நிக்காஹ்”க்களில் மேளம், நாதஸ்வரம், தாரை தப்பட்டை வாத்தியங்கள் வாசிக்கக்கூடாது! எனெனில், நாதஸ்வரம் - மேளம் இஸ்லாத்திற்கு எதிரானது!

திடீரென ஏன் இந்த முடிவு. அல்லாவிற்கே வெளிச்சம்! இதற்கு முன் எப்படி இருந்தது!

இந்துத்திருமணத்தில் நடத்துவது போல மேள தாள கச்சேரி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இஸ்லாமிய திருமணங்களிலும் கோலாகலமாக இருந்தது!

இஸ்லாமிய காஜிக்கள் இந்துக்களின் நாதஸ்வரம் - மேளத்திற்கு தடை விதித்ததை “மதசார்பற்ற தன்மை” என எல்லா அரசியல் கட்சிகளும், பொது ஜன அமைப்புகளும், NDTV, இந்து பத்திரிக்கைகளும் ஏற்றுக் கொண்டுவிட்டதால் எந்த விவாதமும் இனி தேவை இல்லை. எந்த செய்தியும் இது பற்றி மேலும் அவசியம் இல்லை. உத்திரபிரதேச மாநில அரசை யாரும் கண்டிக்கவும் வேண்டியது .இல்லை.இதுதான் சமூக நீதி..மீடியா மரபு..

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் ஒரு சர்ச்சில் திருடுவதையே தொழிலாகக் கொண்ட ஒரு கொள்ளை கூட்டம் உள்ளே புகுந்து சர்ச்சை சூறையாடி அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்துள்ளது.இது கண்டிக்கத்தகது..காட்டும்பிராண்டித்தனமானது

பொங்கி எழுந்தார்கள் NDTV இந்து பத்திரிக்கை போன்றவர்கள்..மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டினார். சட்டம் ஒழுங்கு போலீஸ் மாநிலத்தின் அதிகாரத்தில் உள்ளது. கம்யூனிஸ்டுகளை ஒடுக்க போலீசை ஏவிவிடும் மம்தாபனார்ஜி திருடர்கள் மீது போலீசை ஏவி இருந்தால் இக்குற்றம் நடந்திருக்காது..
..
மம்தாவை ஒருவர் கூட விரல் நுனியைக் கூட காட்டி குற்றம் கூறவில்லை ..சர்ச்சை சேர்ந்த ஒரு பெண்” புகார் கொடுத்து பல மணி நேரம் ஆகியும் ஸ்டேசனிலிருந்து போலீஸ் வரவே இல்லை”-- என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவர் “கார்டினல்” முதலமைச்சர் “சரியாக செயல்படுவதாக புகழ்ந்துள்ளார்..ஆனால் இன்னும் முக்கிய குற்றவாளி ஒருவர்கூட பிடிபடவில்லை..அவர்களுக்கு இன்னும் மம்தா புனிதமானவராகவே காட்சி அளிக்கிறார்.

குற்றத்தை தடுக்க வேண்டிய மாநில அரசை சும்மா விட்டுவிட்டு மத்திய அரசை குற்றம் சாட்டுவதுதான் “ஒரிஜினல் மதசார்பின்மையா?”

பாஜக ஆளும் ஹரியானாவில் ஒரு சர்ச்சில் ஏசுகிறிஸ்துவின் சிலைக்கு சேதாரம் உணாக்கப்பட்டிருக்கிறது..ஹரியானா முதல்வர் கட்டார் மற்றும் பிரதமர் மோடி இதை கண்டித்து, குற்றவாளியை கைது செய்துள்ளார்.

.”காப்பாற்றப்படவேண்டியது மனிதர்கள்..பசுக்களல்ல”--என்று யாரோ சொல்லிக்கொடுத்து “கார்டினல்” அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது இந்துக்கள் மனதை புண்படுத்தாதா?--மத சார்பின்மைக்கு எதிரானது அல்லவா?

.பாஜக அரசு என்றால் “கார்டினல்” கூட “கார்டியலாக” இருக்கமாட்டார் போலும்..

மூன்றாவது பாகிஸ்தானில் லாகூர் மகாணத்தில் ஒரு சர்ச்சுக்குள் புகுந்து பிராத்தனை நடத்திக் கொண்டிருந்த அப்பாவி கிறிஸ்தவர்களை, மனித வெடிகுண்டான ஒரு தலிபான் தன்னை சிதர அடித்துக் கொண்டு 11 பேரை கொன்றிருக்கிறான்!

இந்திய அரசியல் கட்சிகள் வாய் மூடி மவுனம் காக்கிறது. காரணம் குண்டு வைத்தவன் முஸ்லீம்.... அவனை குற்றம் சுமத்தினால் “ஓட்டுக்கு வேட்டு” விழுந்துவிடும் என்பதால் அதனை அத்தனை கட்சிகளும் “கப்சிப்”.. NDTV இந்துவும் சேர்ந்து “கப்பு சிப்பு”.

இது போதுமா.... இன்னும் வேண்டுமா? இந்தியாவின் “வினோத மதசார்பின்மை” தத்துவத்திற்கு வலு சேர்க்கும் சம்பவங்களை சுட்டிக் காட்ட பட்டியல் போட....

Tuesday, March 10, 2015

இந்தியாவை “கொச்சைப்படுத்தும்”--இந்தியாவின் மகள்” --டாக்குமெண்டரி

இந்தியாவை தூற்றும் டாக்குமண்ட்ரி---”இந்தியாவின் மகள்”

இந்தியா பாம்பாட்டிகள், பிச்சைகாரர்கள் மிகுந்த ஏழைகள் நாடு என்ற ....... ”ஸ்லம் டாக் மிலியனர்” திரைப்படம்

இந்தியா காமவெறிபிடித்த ரேப்பிஸ்ட்கள் நாடு” -என்கிற இண்டியாஸ் டாட்டர்" டாக்குமெண்ட்ரி

”கருத்துச் சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம் பறிபோய் விட்டது” - பத்திரிக்கைகள் ஊடகங்கள் இந்நாட்டில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை”.

இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக கூக்குரல்கள், விவாதங்கள், மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மை என்ன?

ஊடகங்கள் தாங்களாக ஒருவிஷயத்தை எடுத்து-- தனக்கு சாதகமான வரிகளை மேற்கோள் காட்டி,-- தனக்கு ஒத்தகருத்தியலாளர்களை வைத்து கூட்டம் போட்டு”,--” தன் கருத்தே சரிஎன்கிற மாதிரி கேள்விகள் கேட்டு,-- கருத்துக்களை பெற்று-- வெளியிட்டு-- தீர்ப்பு சொல்லும் ஒரு புதிய  நீதிகோர்ட்டுகளாகஉருவாகி வருகிறது.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்தியாவின் மகள்என்கிற லெஸ்லி எட்வின்என்கிற பிரிட்டிஷ் திரைப்பட தயாரிப்பாளர் எடுத்த டாக்குமெண்டரியைவெளியிடக்கூடாது என்கிற இடைக்கால  நிறுத்தம் ... தடை அல்ல “Restrain"  பற்றிய விவாதங்கள்.

இந்த “Restrain”  டெல்லி மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டின் நீதிபதி திரு. புனித் பாவா கொடுத்த தீர்ப்பாகும்! “மத்திய அரசு தடை செய்தது” என்பது இங்கே எப்படி வந்தது? தடை என்பது “Ban”-- இந்த Restrain-ம் நிரந்தரம் அல்ல. இந்த Restrain-ம் முழு டாகுமெண்டரிக்கும் அல்ல... வழக்கு விசாரணையில் உள்ள நிர்பயாகுற்றவாளிகளின் இன்டர்வியூக்குமட்டும்தான்.

சரி இது ஒருபுறம் இருந்தாலும், படத் தயாரிப்பாளர் பிரிட்டிஷ் பெண் லெஸ்லி வுட்வின் கூற்றுப்படி== அவர் மத்திய உள்துறை அமைச்சகம்,  திஹார் ஜெயில் ஆகியவற்றின் clearance-ஐ பெற்றுவிட்டேன்.. என்று பேட்டி அளித்திருக்கிறார்.

அவரது பேட்டியிலும் அவருக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்திருக்கும் மீடியாக்களிலும் ”மறைக்கப்பட்ட” மிக முக்கியமான உண்மை... லெஸ்லி உட்வின் திஹார் ஜெயில் அதிகாரிகளிடம் படம் எடுக்க கேட்ட அனுமதி....இந்த திரைப்படம் ”ஆராய்ச்சி மாணவர்களுக்காக”, ”academic purpose”-- என்பதுதான் ஆனல் நடந்தது என்ன?

நேற்று திங்கள் கிழமை உலக சந்தையில் இதை விற்பதற்கு “வியாபார நோக்குடன்” ஹாலிவுட் திரைப்பட நடிகர்களை வைத்து நியூயார்க் நகரில் வெளியிட்டு இருக்கிறார்? இது தான் academic ஆ?

“கல்லூரிகள், பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடம் நடத்த” என்று அனுமதி கேட்டு- படம் எடுத்துவிட்டு, இந்திய வியாபாரத்திற்கு NDTV-யும் உலக வியாபாரத்திற்கு ஹாலிவுட்டையும் தேர்ந்தெடுத்ததை “நம் நாட்டு கருத்து சுதந்திர ஆதரவாளர்கள்” ஏன் சவுகரியமாக கவனிக்கவில்லை.....

இந்தியாவை “ரேப்பிஸ்டுகள் நாடு” என்று உலகமுழுவதும் இப்படம் கொண்டு செல்லும் அதுதான் அவரின் நோக்கமும் கூட என்று நாம் சொன்னால் நம்மீது “கருத்து சுதந்திரம்” வெகுண்டு எழும்.

ஆனால் இன்றைய நாளிதழில், ஜெர்மனில், ஆரய்ச்சி மாணவர் ஒருவர், அவர் இந்தியர், அவருக்கு தன் குழுவில் சேர்த்துக்கொண்டு பாடம் நடத்த, அந்த ஜெர்மானிய பேராசிரியர் மறுத்திருக்கிறார். காரணம், இந்தியர ரேப்பிஸ்டுகள் நாடு, அதிலிருந்து வந்திருக்கும் இந்திய மாணவரை நம்பத்தயாரில்லை என தன்னுடைய இணையதளத்தில் கூறி --அனுமதி மறுத்திருக்கிறார்...

இந்நிலைக்கு யார் காரணம்? கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் “இந்திய கௌரவத்தை சீர் குலைக்க முயற்ச்சிக்கும்” பிரிட்டிஷ் படங்களுக்கு வக்காலத்து வாங்கும் நண்பர்கள் சொல்வார்களா?

பிரிட்டன் --இந்திய மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு, அங்கு நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நம்மைவிட 3 மடங்கு அதிகம்! அந்த கொடுமை செய்தவர்களை படம் எடுத்து உலகம் முழுவதும் வினியோகிக்க நமது “தூர்தர்ஷனுக்கு” பிரிட்டிஷ் அரசு அனுமதி கொடுக்குமா?

கருத்து சுதந்திரத்தில் பிரிடின், இந்தியா என்று ஊடகவியலாருக்கு பாகுபாடு உண்டா?

ஸ்லம்டாக் மிலினியர்” என்ற திரைப்படம் ஆஸ்கார் பரிசுகளை வென்றது! ஏன்? இந்தியாவை பிச்சைக்கார நாடாக காண்பித்ததற்காக?

“இந்தியாவின் மகள்” படத்தை உலகமுழுவதும் திரையிட்ட அன்றே ஜெர்மனியில் இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு இடம் தர மறுத்துள்ளனர்!

இந்த வகையாக “இந்தியாவை கேவலமாக அந்நியர்கள் சித்தரிக்கும் செயல்பாடுகளை ஆதரிப்பது தான் கருத்து சுதந்திரம் என்றால்-- இந்தியாவை, காக்க நாம் இன்னும் போராட வேண்டியிருக்கும்.