Pages

Sunday, December 13, 2015

மீடியா --கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்


டிசம்பர் 1ந்தேதி இரவு கடும் மழை ..இரண்டாம்தேதி சென்னை மற்றும் கடலுரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகியது.


1ந்தேதி பிற்பகல் 2 மணிக்கே சென்னை குரோம்பேட்டை விவேகானதா பள்ளியில் சேவாபாரதி அடுப்பு பற்றவைத்துவிட்டது. சுமார் 1500 உணவு ,பொட்டலங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு குரோம் பேட்டை--தாம்பரம் ரயில் நிலையங்களில் "அல்லாடிக்கொண்டிருந்த" பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது..( கடும் மழையால் பலர் கடையை அடைத்துவிட்டு எஸ்கேப்)

இரண்டாம்தேதி மாலை செம்பரபாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு "ஏரி "களில் கட்டிய வீடுகள் --அப்பார்ட்மெண்ட்" முழ்கத்தொடங்கியது..ஆங்காங்கே இருந்த "ஸ்வயம் சேவகர்கள்" எந்த கட்டளையும் எதிர்பார்க்காமல் இரவோடு இரவாக மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினர்..

3ந்தேதி காலை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் "பரிவார் இயக்க " நிர்வாகிகள் கூடி புரசைவால்கம் சேவாபாரதி அலுவலகம்,-- பாஜக கமலாலயம், ----குரோம்பேட் பள்ளி என 3 பகுதிகள் உடனடியாக செயல் படத்துவன்கினர் ..

முதலில் காப்பாற்றுதல்--மற்றும் மீட்பு பனி
இரண்டாவது தங்கவைத்தால் மற்றும் உணவு
முன்றாவதாக நிவாரணம் மறுவாழ்வு

ஆ.ர.எஸ்.எஸில் சாதாரணமாக எந்த விஷயத்தையும் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.. கூட்டங்களில் "நடந்தவற்றை" சொல்லும் பொது அது புள்ளி விவரமாக இருக்கும்..அந்த புள்ளிவிவரம் பெரும்பாலும் 100 சதவீதம் சரியாக(உண்மையாக) இருக்கும்

இதுவரை அங்கிருந்து கிடைத்த விவரங்கள்

1.சென்னையை 17 பகுதிகளாக பிரித்து அதில் 112 மய்யங்களில் பணி

2..இதில் காஞசிபுரம்-- கடலூர் பகுதியில் பணியில் இடுபட்டுள்ள 29 மையங்களும் அடங்கும்

3.இதுவரை 18 லட்சம் உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ..இது தவிர 8 லட்சம் சப்பாத்திகளும் உண்டு

4.--35000 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப்பருட்களில் உடனடித்தேவையான
குடம்--மக்கு--தீப்பெட்டி --மெழுகுவர்த்தி--பாய்--தட்டு--டம்ளர்--பிளீச்சிங் பவுடர்--பினாயில்--அரிசி --பருப்பு--காய்கறிகள் --எண்ணெய் கொண்ட ஒரு பாக்கட் கொடுக்கப்பட்டுள்ளது --இதை இன்னும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கும் நீட்டிக்க முயற்ச்சி நடந்து வருகிறது..

5--இது தவிர இருசக்கரவாகன பழுது நீக்கும் முகாம் 22 இடங்களில் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து நடந்து வருகிறது..இதி ரூ 500 பெருமான உதிரிபாகங்களும்--சர்வீசும் இலவசம்

6..பதிமுன்று மாநகராட்சி பள்ளிகள் முழுவதுமாக கன்னாடி போல சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது..

7..--115 மருத்துவ முகாம் களில் , இதுவரை 35,000 பேருக்கு சிகிச்சை மற்றும் இலவச மருன்து வழங்க பட்டுள்ளது..இதில் 165 டாக்டர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்..

8..இந்த சேவை பணியில், 11,780, ஆ.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி பாஜக தொண்டர்கள் இடுபட்டுள்ளனர்.

9--.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் ஒரு கொசுவலை கொடுக்கும் திட்டமும் உள்ளது

10--இந்த மனிதநேயப்பணியில், சாதி, மத, மொழி, மாகான எல்லைகளை கடந்து, இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உதவி மற்றும் உணவு வழ்ங்கப்பட்டுள்ளது..

11..ஆங்காங்கே முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்த "தொண்டாளர்களுடன் " சேர்ந்து பணியாற்றியும், பொருட்கள் "கொடுத்து--வாங்கியும்" பணியாற்றிய நல்ல அனுபவங்கள் நடந்தேறியுள்ளது.

இவ்வளவு செய்த்தேன் என்கிறீர்களே --உங்களை தொலைகாட்சியில் காட்டவில்லையே என வெளியூர்களில் இருந்து பலர் எங்களை கேட்ட வண்ணம் இருந்தனர்

தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக செய்பவர்கள் அல்ல நாங்கள்..

ஆனாலும், ஒருசிலரை மட்டுமே குறிவைத்து தொலை காட்சிகள், காண்பித்தன --அல்லது இருட்டடிப்பு செய்தன --என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?--இது ஊடகங்களுக்கே வெளிச்சம்..

அவர்கள் ஆத்மா பரிசோதனை செய்துகொண்டால், எங்களுக்கு எவ்வளவு "ஸ்பேஸ் "--கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்
எனவே

இது
வேண்டுமென்றே செய்யப்பட்டதா?
தெரியாமல் நடந்ததா?
அரிநது செய்யப்பட இருட்டடிப்பா?
அல்லது இந்து இயக்கங்கள் மீது உள்ள "இன்டாலரன்ஸ்"ஆ

கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்

Tuesday, December 8, 2015

”லாவணி கச்சேரிகளை” நிறுத்துங்களேன்..


ராமதாசு--இளங்கோவந்-கலைஞருக்கு--சென்னை பொதுஜனம் வேண்டுகோள்..

மக்கள் சேற்றுக்குள் சிக்கி சித்ரவதை பட்டுக்கொண்டிருக்கின்றனர்..

ஐயா..ராமதாசும், இளங்கோவனாரும்--மூத்ததலைவர் கலைஞரும், நிவாரண ப்பணியில் பங்கேற்காமல், 10,000/- ரூபாய் கொடு---10,000/-கோடி கொடு என மத்திய மாநில அரசுகளுக்கு “வாய்ப்பந்தல்” அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றனர்..

பாஜக..ஆர்.எஸ்.எஸ்--சேவாபாரதி--மட்டும்..நிவாரணப்பணியன்றி--வேறொன்றும் எண்ணாமல்..களத்தில் பணியாற்றி வருகிரது..

சென்னையில், 600 குழுக்கள்..7000 பேர் நேற்று களத்தில்..
இன்றுமுதல் ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு பகுதியாக பொருப்பெடுக்கிறது..

மாவட்டத்திற்கு 100 தொண்டர்கள்

3 நாளைக்கு ஒரு ஷிஃப்ட்..

கொடுக்கும் எந்த பொருளுளின் மீதும் எந்த ஸ்டிக்கரோ--அடையாளமோ இல்லை..

அரசுக்கு எந்த கோரிக்கையும் இல்லை--எங்களை பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்பதை தவிர..

ஐய்யா அரசியல் வாதிகளே..மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல--பேரிடரினால் துயருருகிறார்கள்..வீடுவாசலை இழந்திருக்கிறார்கள்

நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிந்தாலே அவர்கள் விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவார்கள்-

வாய் ஜாலங்களை நிறுத்திவிட்டு கைஜாலங்களை காண்பியுங்கள்
செயலில் இறங்குங்கள்..

நிலமையை சகஜ நிலைக்கு கொண்டுவந்துவிட்டு “நீங்கள்தான் எல்லாம் செய்தீர்கள்” என பட்டயம் வேண்டுமானால் போட்டுதந்து விடுகிறோம்..

அதுவரை..”உஷ்..” சத்தமின்றி..சும்மா இருங்கள்

கேட்காமலே கொடுக்கும் மோடி

நான் இந்த தலைப்பு போட்டிருக்கக்கூடாது தான்..

ஆனால் “உணர்ச்சியைவிட” “உண்மை “ வலிமையாய் இருந்ததால் போடவேண்டிய கட்டாயம்

ஆம்..உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் தம் மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநிலமுதல்வர் படகூடாது என்று

தமிழகத்தில் மழைபொழியும் போதே மத்திய அரசு அணைத்து உதவிகளையும் செய்யதயார் என அறிவித்தது தமிழகம் 10நாட்கள் கழித்துதான் நிவாரணம்கேட்டு அறிக்கை சமர்பித்தது அடுத்த சில நிமிடங்களில் 940கோடி கொடுக்கப்பட்டது

சில நாட்களில் மீண்டும்மழை முன்பு மழைக்கு உதவ தயார் என்ற போதே 10நாட்கள் கழீத்து உதவிகேட்டவர்களின் வேகத்தை உணர்ந்த பிரதமர் தானே நேரடியாக தமிழகமுதல்வரிடம் பேசினார் அவர்கேட்டதை உடனே செய்வதாக அறிவித்தார்

அடுத்த சில நிமிடங்களில் முன்புமழைக்கு வந்து தங்கியிருந்த ராணுவத்தினர் களம் இறங்கினர்

மறுநாள் 800தேசிய பேரிடர்குழு வீரர்கள் படகு, 4ஹெலிகாப்டர்கள்
கடற்படை கப்பல் நிவாரண பொருட்களோடு களமிறங்கியது
மீட்புபணியில் சுணக்கத்தை உணர்ந்த பிரதமர் தானே மாநில அரசு அழைக்காமலே பாதிப்புகளை பார்வையிட்டார் அதன் பலன்
உடன் 1000கோடி தமிழகத்திற்கு

ஒரு வாரம் BSNLதொலைபேசி இலவச சேவை

நெடுஞ்சாலை சுங்கசாவடிகளில் வரி இல்லை
50000சுரியசக்தி மின் விளக்குகள்

ரெயில்வே நிர்வாகம் மூலம் 100000 வாட்டர் பாட்டில்கள் இலவசம்
கப்பல் மூலம் 850 டன் குடிநீர் பாக்கட்
கப்பல் மூலம் 350 டன் அரிசி

விமானநிலையம் பாதிக்கப்பட்டபோது ராணுவதளத்தில் குறைவான கட்டனத்தில் விமான சேவை

வாளி,குவளை,துண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கடற்படை ஊழியர்கள்மூலம் விநியோகம்

சனிகிழமை முதல் அனைத்து ATM லும் பணம் வைக்க கடும் உத்தரவு

முதல் முறையாக நடமாடும் ATM சேவை

இந்தியாவில் முதல்முறையாக ஞாயிற்று கிழமை வங்கி செயல்பட உத்தரவு
ராணுவதளபதி ஆய்வு

4ஹெலிகாப்டர் 7ஆனது மேலும் 200கடற்படை வீரர்கள் சேர்கப்பட்டார்கள்

மேலும் 20தேசிய பேரிடர்மீட்புகுழு 800வீரர்களோடு வருகிறது

இரண்டு கடற்படைபோர்கப்பல்கள் நிவாரணபொருட்களோடு வருகிறது..
தமிழார்வலர்--பாஜக-- எம்.பி. தருண்விஜய் ரூ 50 லட்சம் நிவாரண உதவி..

வங்கிகள் கடன் தவணையை இம்மாதம் வசூலிக்காது...அதற்கான “ஃபைன்” தள்ளுபடி

இவை எல்லாம் இந்தியபிரதமராக யார் வரக்கூடாது என நினைத்து தமிழகம்
வாக்களித்ததோ அவர் தன் கடமையாக தமிழகத்திற்க்கு பறந்து வந்து செய்தது
இவ்வளவு செய்தபிறகும் ”அள்ளிக்கொடுதார் “ என எழுதுவது தவறா?