Pages

Monday, July 24, 2017

இனி இது ‘காவிகளின்’ தேசம்


இந்நாடு என்றைக்கு கருப்புகளின் தேசமாகவோ, சிவப்புகளின் கூடாரமாகவோ இருந்தது?

கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்பே தோன்றிய பாரதம் ஆஞ்சனேயனும், அர்ச்சுனனும், பரசுராமனும், பலராமனும், ஸ்ரீ கிருஷ்ணனும், சிவாஜியும், ராணா பிரதாபனும், தங்கள் தேர்களில் மாளிகையில் பறக்க வைத்த கொடி காவிக் கொடி. அதன் கீழ்தான் அவர்கள் ஆட்சி! அப்போதும் இந்நாடு ‘காவி தேசம்தான்’ இன்றும் ‘காவி தேசம் தான்’. இப்போது புதிதாக நீங்கள் சொல்லிதான் இது காவிதேசமாகிவிடப் போகிறதோ? என நீங்கள் கேட்பதும் புரிகிறது!

 இந்த நாட்டின் ஜனாதிபதி, துணைஜனாதிபதி (ஆர்.எஸ்.எஸ்ல் பயிற்சி எடுத்த திரு. ராம்நாத் கோவிந்த், திரு. வெங்கையா நாயுடு ஆகியோர்) ஆக பதவியேற்றிருப்பர். ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ்ஸின் முழு நேர ஊழியராக (பிரச்சாரக்) இருந்த திரு. அடல்பிஹாரி இந்நாட்டின் முதல் ஆர்.எஸ்.எஸ். பிரதமராக பதவியில் இருந்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரே பிரதமராயிருக்கிறார்.
பாரத நாட்டில் இந்த நூற்றாண்டில் அதிகமாக எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டார்கள் இருவர்தான்.

ஒருவர்ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம். இரண்டாவது பிரதமர் நரேந்திர மோடி. இந்த எதிர்மறை விமர்சனங்களில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்ட மக்கள், மோடிக்கு பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதை அமெரிக்காவின் ‘போர்பஸ்’ பத்திரிக்கையும் கடந்த மாத பதிப்பில் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் மோடி அரசாங்கத்தை நாட்டின் 73% சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதோடு உலக நாடுகளில் மக்கள் அதிக அளவில் ஆதரிக்கும் அரசுகளில் இந்தியாவின் மோடி அரசு முதலிடத்தையும் பெற்றுள்ளது!
ஆர்.எஸ்.எஸ். தான் இந்நாட்டை ஆள்கிறது! ஆர்.எஸ்.எஸ். தான் பாஜகவை ஆட்டிப்படைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களை உங்கள் எழுத்து உறுதி செய்கிறதே என நீங்கள் கேட்கலாம்!

ஒழுக்கம், நேர்மை, கட்டுப்பாடு, தேசபக்தி இவைகளை புகட்டுவது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ். ஊழியனும் இதை தன் வாழ்நாளில் செயல்படுத்துகிறான்! ஒரு மகனின் / மகளின் வளர்ப்பில் தாயின் குணம் எப்படி வெளிப்படுகிறதோ அது போலத்தான் இதுவும். இதற்குமேல் விளக்கம் வேண்டுபவர்கள் விதண்டாவாதிகள்!
சரி சப்ஜெக்டுக்கு வருவோம்! சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கழித்து நாட்டின் மிகப் பெரிய பதவியான ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவியை காங்கிரஸ் கட்சி அல்லாதவர் ஒருவர் அலங்கறித்திருக்கிறார்அதாவது
 காங்கிரஸ் கட்சியின் கடைசி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்றாகி இருக்கிறது!

தற்போது பாஜகவிற்கு சூழ்நிலை சாதகமாக இருக்கிறது. இதை வைத்து எப்போதுமே பாஜக வெற்றி பெறும் என்று எப்படி நீங்கள் கூறலாம் என நீங்கள் கேட்பதும் கேட்கிறது!

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை காங்கிரஸ் அல்லாதவர் ஆளமுடியும் என்பது கனவாகவே இருந்தது. பாஜகவின் மீது தொடுக்கப்பட்ட ‘இந்துத்வா’ ‘மதவாத’ குற்றச்சாட்டு காற்று முழுவதும் நிறைந்திருந்தது. எதிர் சித்தாந்தத்துக் காரர்களின் அத்தனை கணக்குகளையும் உடைத்து மோடி மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்.

இன்று இந்தியாவின் நிலை என்ன? வேண்டாம், வரக் கூடாது, ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று எதிர்க்கப்பட்ட கட்சி நாட்டின் 31 மாநிலங்களில் 17 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 31 மாநில சட்டசபைகளில் மொத்தம் 1410 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளது. நாட்டின் 60 ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி தேய்ந்து 5 மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்கிறது. அதில் கர்னாடகம் மற்றும் பஞ்சாப் மட்டுமே பெரிய மாநிலம். மொத்தம் 786 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அதன் கணக்கில் உள்ளனர்.

நாடு முழுவதையும் தன்வசம் வைத்திருந்த காங்கிரஸ் இன்று 4 மாநில சட்டமன்றங்களில் ஒரு இடம் கூட பெறவில்லை! இதுதான் காலத்தின் கோலம்! இதுதான் இந்துத்வா எதிர்ப்பாளர்களுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு.

உ.பி. சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்த வெற்றி மக்கள் மன மாற்றத்தின், இதுவரை ஆண்டவர்கள் போலியானவர்கள் என்பதை நிரூபித்ததற்கான ஆதாரம்! அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கை பாஜகவிற்கு ஓட்டளிக்கமாட்டார்கள் என்று பிரச்சாரம் செய்யஅப்பட்ட மைனாரிட்டிகள் 22 சதம் இருந்தனர். 96 சட்டமன்ற தொகுதிகள் வெற்றியை அவர்களே தீர்மானிப்பார்கள் என்றிருந்தது. ஆனால் நடந்தது என்ன? 66 சட்டமன்றம் பாஜக வெற்றி!

இது அடுத்த தலைமுறையை பாஜக ஆளும் என இந்த தலைமுறை செய்த முடிவாகும்!

1984 பொதுத் தேர்தலில், அது இந்திரா காந்தி சுடப்பட்டதற்கு பிறகு நடைபெற்றது, பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. கட்சியை கலைத்து விடலாம் என்று கூட சிலர் பேசினார்கள். 1996ல் அமைந்த ஆட்சியை ஆதரிக்க எந்த கட்சியும் தயாரில்லாததால் 13 நாட்களில் ஆட்சி முடிந்தது!

இன்றென்ன பார்லிமெண்ட் நிலை! லோக்சபாவில் பாஜக கூட்டணி 336, காங்கிரஸ் 44. ராஜ்ய சபாவில் பாஜக கூட்டணி 74, இன்னும் இரண்டு ஆண்டில் ராஜ்யசபாவிலும் பாஜக மெஜாரிட்டி பெரும் என்பது அரசியல் மாற்றம் எவ்வளவு வேகமாக அரங்கேறுகிறது என்பதற்கு அத்தாட்சிகள்!

இந்த அரசியல் மாற்றம் நிரந்தரமானதா? எப்போது வேண்டுமானாலும் மக்கள் எதிராக திரும்பலாம் அல்லவா? என்பதும் சிலரின் சந்தேகங்கள்!

நேற்றைக்கு விடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி திரு. பிரனாப் முகர்ஜி தனது டுவிட்டரில் ”இந்தியாவை ஒரு சிறந்த தேசபக்த பிரதமரிடம் விட்டு செல்கிறேன்” என தனது நம்பிக்கையை தெரிவித்திருப்பதுதான் ஒரு பானை சோற்று உதாரணம்!

ஒரு பக்கம் நமது வெளியுறவு உச்சம் பெற்று கொடிகட்டி பறக்கிறது. முன் எப்போதும் இல்லாத இந்தியாவிற்கு உலக நாடுகளின் அங்கீகாரம்! இன்னும் சொல்லப்போனால், இன்று நாம் உலகத் தலைவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்!
சீனா, பாக் உள்ளிட்ட அச்சுறுத்திய அண்டைநாடுகள் கட்டுக்குள் வைக்கப்பட்ட, அடக்கி வைக்கப்பட்ட நிலை 60 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்துள்ளது!

நாட்டின் வளர்ச்சி தாரக மந்திரமாகி, அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சிக்கான இன்றைய விதை, பண மதிப்பிழப்பு, நாடு முழுதும் ஒரே வரி என்ற சீர்திருத்தம் தூவப்பட்டுள்ளது! இந்த தைரியஅமான செயலை உலகமே பார்த்து வியக்கிறது!

ஏதோ பாஜகவின் வளர்ச்சி, உயர்ச்சி, ஆட்சி பற்றியே எழுதிக் கொண்டு போகிறீர்களே இதற்கும் உங்கள் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்ற சந்தேகமும் எனக்கு புரிகிறது!

‘இந்துத்வா’ அல்லது ‘காவிமய’ சித்தாந்த குற்றச்சாட்டுகளுக்கு சொந்தக்காரன் ‘வரவே முடியாது’ என்றார்கள். வந்துவிட்டோம்! அதுமட்டுமல்ல நாடு முழுதும் இந்திய வரைபடம் அவர்கள் கொடுக்கப்பட்ட கலரின் காவிமயம்! (நமக்கு எல்லா நிறமும் நம் நிறம்தான். காவி மீது ஒரு தனி மரியாதை அவ்வளவுதான்) இந்த மாற்றங்களை விளக்கவே சட்டமன்ற (நாடாளுமன்ற) ஆட்சி புள்ளிவிவரங்கள்!

இனி இதை எப்படி தக்க வைத்துக் கொள்வீர்கள்? என நம் ஆதரவாளர்களும் கேட்பது புரிகிறது!

மக்கள் நல அரசு, மக்கள் நலனோடு நின்று விட்டால், நலன் தொடரலாம்! அரசு தொடருமா என்பது சந்தேகமே! 1996ல் மிகச் சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேச சந்தர்லால் பட்வா அரசு கட்சி தொண்டர்கள் மக்களை சந்திக்க மறந்ததால் தோற்றது!
தற்போதைய பாஜக கட்சியும் மக்களும் இரண்டற கலக்க, இடைவிடாது பணிபுரிகிறது!
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவெடுத்துவிட்டோம் என்ற மமதையில் இல்லாமல், தொடர்ந்து வெற்றிபெற்று வரும் மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் மக்களை அமீத்ஷா முதல் அடிமட்ட தொண்டன் வரை சந்திக்கும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ நடந்து வருகிறது.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ‘நாட்டுக்காக நம்மை அர்ப்பணிப்போம்’ என முழுநேரம் கொடுத்து இயக்கப்பணி செய்யும் தன்னார்வ தொண்டர்கள் எண்ணிக்கை வெள்ளம் போல உயர்ந்து வருகிறது!

ஒரு மிகச் சிறந்த தொழிலதிபர் தன் தொழிலின் விஸ்தரிப்புக்கு ‘எல்லைகளை நிர்ணயிக்காது’ ‘எல்லையில்லாது’ விஸ்தரிப்பை தொடர்வது போல, கட்சியின் மக்கள் சந்திப்பு மற்றும் விஸ்தரிப்பு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

சித்தாந்தம் என்பது இதயத்தில் இருத்தியது! சிந்தனையில் கலந்தது! அது நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும், அதிலே இரண்டற கலக்கும்! இதற்கு இதை கற்பித்த குரு அருகிலிருக்க வேண்டும், போன் போட்டு சொல்ல வேண்டும், இருவர் இடையேயும், கயிறு போட்டு கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதில்லை!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அரசியல் செயல் வடிவம் பாஜக என்பது மறைக்க வேண்டிய ரகசியமல்ல! அரசியல் களமில்லா மற்ற களங்களில் இதை கொண்டு சென்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் போல, அரசியல் களத்தில் பாஜக எடுத்துச் செல்கிறது!

இந்த இரண்டின் கூட்டுத் தொகை இப்போது வெற்றிகளை குவித்து வருகிறது!

ஆதலால் இது என்றென்றும் காவிதேசம். என்றாலும்

இனிமேல் இது ‘காவி களின்’ தேசம்!

Friday, July 14, 2017

‘பிக்பாஸ்’ என்னும் ‘பன்றிக் காய்ச்சல்’


கமலஹாசன் என்னும் சினிமா நடிகர் ‘சர்ச்சைக்கு’ பெயர் போனவர்! தான் உலகுக்குத் தெரிய வேண்டும் என்கிற ‘அங்கீகாரப் பசி’ Rewgniion Hunger காரணமாக, ஏதாவது ஒரு கோரிக்கையை முன்நிறுத்தி நிர்வாணமாக ஓடுவது வெளி நாடுகளில் சகஜம்!
இந்த சித்தாந்தத்தை கொஞ்சம் நாட்களுக்கு முன் இறக்குமதி செய்து டெல்லியில் ‘வெள்ளோட்டம்’ விட்டார். 20 ஏக்கர் ஏழை விவசாயி ‘ஆடிக்கார் அய்யாக்கண்ணு’.
சினிமா வியாபாரம் படுத்துக் கொண்ட பிறகு, சின்னத் திரையில் ‘சின்னத்தனமான’ வியாபாரம் செய்து, தன் வக்கிர எண்ணங்களை வடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் கமலஹாசன்.
விஜய் டிவி, அதன் தயாரிப்பு நிர்வாகம் கிறிஸ்தவர் கைக்கு போன பிறகு, இன்று மத விரோத, கலாச்சார விரோத, பழக்க வழக்க விரோத, நிகழ்ச்சிகளை தயாரித்து ‘சர்ச்சைக்கிடமான’ நிலையை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது!
வெளி நாடுகளில் பிரபலமாகி, தற்போது இந்தி டிவிக்களில் ‘சக்கை போடு’ போட்டுவரும், 100 நாள் ‘கம்யூன்’ வாழ்க்கை டிவி தொடர்  ‘பிக் பாஸ்’.
சமூகம் ஏற்றுக் கொள்ளாத, புறக்கணித்த, செய்கைகளை பத்துப் பன்னிரண்டு பேர், சேர்ந்து வாழ்வதாக, ஓரிடத்தில் வைத்து, அவர்களது படுக்கை அறையில், கேமராவை நுழைத்து, ‘வக்கிர’ எண்ணத்தை ஊக்குவிக்கும் காட்சிகளை, ‘சென்சார்’ இல்லாமல் காட்டும் நிகழ்ச்சிதான் ‘பிக்பாஸ்’.
இந்த தொடர் 100 நாட்கள் நடப்பதாக விளம்பர படுத்தி வசனம் எழுதி, ஒத்திகை பார்த்து (10 நாளிலேயே) ஷூட்டிங் முடித்து, இயல்பாக நடப்பதுபோல ‘பாவ்லா’ காண்பிக்கிறார்கள்.
 பிக்பாஸ்  அது ஒளிபரப்பாகும் அத்தனை காட்சிகளிலும் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்க வேண்டும். அதைப் பற்றியே மக்கள் பேச வேண்டும். அதன் டிஆர்பி ரேட்டிங் மேலே மேலே எகிர வேண்டும். விஜய் டிவியின் ‘கஜானா’ நிரம்பி வழிய வேண்டும். மக்களின் ‘ஏமாளித்தனம்’ தொடர்ந்து உயர்ந்து வரவேண்டும். இதுதான் இந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் உள்நோக்கம்!
எது எப்படியும் தொலையட்டும்! உள்ளே அடிக்கும் ‘கூத்து’ பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். அது ‘ஒத்திகை பார்த்து மீண்டும் கேமராமுன் அரங்கேறும் கூத்து’.. வெறும் வாயில் அள்ளி அள்ளி அவலைப் போட்டு, ஊர்வாய் மூடாமல் பார்த்துக் கொள்ளும் குழாயடிச் சண்டை, டீக்கடை பெஞ்ச் கூத்து! அதற்கு நேரம் உள்ளவர்களும், ஆர்வம் உள்ளவர்களும் அதை பார்த்துக் கொள்ளட்டும்!
நமது கவலையெல்லாம், கமலஹாசனின் இரண்டு ‘திருவாய் மலர்ந்து’ அருளல் பற்றியதுதான்! ஒன்று தமிழ்நாட்டில் உணவுக்கு ஏன் மதத்தின் பெயரை வைத்தீர்கள்? சைவ உணவு அசைவ உணவு என்று எப்போது ஏன் எதற்காக பெயரிடப்பட்டது! என்பதுதான்!
இமயமலைக்கு தெற்கே இருப்பது தான் பாரதம் என்பது நமது முன்னோர்கள், நூல்கள், இதிகாசங்களின் அருள்வாக்கு! எம்பெருமான் ஈசனை வணங்குபவர்கள் சைவர்கள். அவர்கள் உண்ணும் உணவு சைவம் என்று சொல்லமுடியாது. காரணம் ஈசனை வணங்குபவர்களில் மாமிசம் உண்பவர்களும் உள்ளனர்!
உணவுப் பழக்கம் ஒரு மனிதனின் மனம், குணத்தை நிர்ணயிக்கும், மாமிச உணவே வீரத்தையும் அதிக சக்தியையும் தரும் என்பவன எல்லாம் நம்பிக்கைகளே! ஆக்ரோஷமான, வலிமையான இரண்டு மிகப் பெரும் காட்டுவிலங்குகள், காண்டாமிருகமும், யானையும் சாகபட்சிணி, கமலஹாசனுக்கு புரியும் பாஷையில் சொன்னால் சைவம்!
உடற்கூறு விஞ்ஞானம் கூட, மனித உடலின் ஜீரண உறுப்புக்கள், மரக்கறி உணவை செரிப்பதற்குண்டான, அமினோஅமிலங்களை மட்டுமே சுரக்கிறது என விளிக்கிறது!
உலகின் மிகப் பெரிய இயக்கம் ‘வேகன்’ 'Vegan' என்னும் மரக்கறி உணவு சாப்பிடுவோர் இயக்கம். இது பிரிட்டனில் 1800களில் தோற்றுவிக்கப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான சைவ உணவாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இதற்கு விலக்கல்ல!
தமிழ்நாட்டில் ‘கழகங்களின்’ கை ஓங்குவதற்கு முன்பு வரை சைவ உணவு ஓட்டல்கள் என்ற பெயர் வழக்கில் இல்லை! மரக்கறி உணவு வேண்டுவோருக்கென இருந்தது ‘பிறாமணாள் காபி கிளப்’புக்கள் தான்! அசைவத்துக்கு மதுரை முணியாண்டி விலாஸ். பின்னாளில் திராவிடர் கழகங்களின் பூணூல் அறுப்பு வெறியாட்டத்தினால் இங்கு பெயர்ப்பலகை மாற்றப்பட்டு, தமிழ் தேசிய வாதிகள் மற்றும் தனித்தமிழ் கழகக் காவலர்கள் ஆசியுடனே ‘சைவ உணவு ரெஸ்ட்ராண்ட்’கள் அறிமுகம் ஆக ஆரம்பித்தது! என்னுடைய இந்த கருத்து விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியது!
சரி! கமலஹாசனின் குற்றச்சாட்டுக்கு வருவோம்; எப்போதும் ‘மமதையில்’ இருப்பதால், மதம் அவர் மனதை உறுத்துவதால், உணவுப் பழக்கத்தில், வழக்கில் உள்ள ஒரு பெயரை மதத்துக்கானதாக எடுத்துக்கொண்டு, தமிழகம் நினைத்துப் பார்க்காத, ஏன் திராவிட இயக்கத்தினரே யோசிக்காத குற்றச்சாட்டை நம் மீது எய்திருக்கிறார்.
இரண்டாவதாக இப்போது அரசியல் பேசுகிறார். தமிழ்நாடு அரசில் ஊழல் மலிந்துவிட்டதாக புலம்புகிறார்! ‘ஜெ’ உயிரோடு இருந்தவரை ‘அரசியல் பற்றி வாய்திறக்காத’ இந்த வாய் சொல்லாளர், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு இவர் நம்பிய இவரது இஸ்லாமிய நண்பர்கள் தடைபோட்டு வெறுப்பேற்றியபோது மண்டியிட்டு, துவாசெய்து அவர்கள் சொன்ன இடங்களிலெல்லாம் ‘வெட்டி’ படத்தை வெளியிட்டு தன்னை காத்துக் கொண்டவர், ஊழல் பற்றி பேசி அரசியல் களத்தில் நுழைய எத்தனிக்கிறார்!
கமலஹாசனின் அரசியல் ஆசை, பிரவேசம் பற்றி நமக்கு எந்த கருத்துமில்லை! ஆனால் இந்த புது அவதாரம், வேஷம், அரிதாரம் நடிகனுக்கு புதிதில்லையென்றாலும், அரசியல் களத்தின் இன்றைய காலகட்டத்துக்கு புதிது! ரஜினிக்கு போட்டியாக, களத்தில் கமலஹாசன் குதித்தால், அவரது ரசிகன் குதுகலிக்கலாம்! இதில் நமக்கென்ன  இருக்கிறது!
பன்றிக்காய்ச்சல், சாதாரண உடல்வலி, உடல் உஷ்ணத்தோடு தான் ஆரம்பிக்கும்! சாதாரண மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படாது. உயிரைப் போக்கும் எந்த அறிகுறிகளையும் தராது! சரியான மருத்துவரிடம், சரியான நேரத்திற்கு செல்லாவிட்டால், கதை கந்தல்தான்!
விஷவித்துக்களை, தினசரி சாப்பிடும் தானியங்களோடு கலந்துவிடுவது, தேசவிரோத, கலாச்சார விரோத கும்பலுடைய வாடிக்கை! இந்த கும்பல்களின் ஆதிக்கம் பாரதத்தின் பலத் துறைகளிலும் பரவி இருக்கிறது! நரேந்திர மோடி அரசு இந்த ‘வைரஸ்களை’ அழிக்கும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து அழித்து வருகிறது! ஆனால் வைரஸ்களும் தனது பெருக்கத்தை குறைக்க மறுக்கிறது!
இந்த தேசவிரோத கும்பலின் தற்போதைய தமிழ் ஊடகப் பணிமனை விஜய் டிவி. புதிதாக வந்த வாகனத்தின் சீப் மெகானிக், ‘வைரஸ் வியாபாரியாக’ கமலஹாசன் பொறுப்பேற்றிருக்கிறார்! இந்த வைரஸ்களை பார்த்து பழக்கப்பட்டுப்போன மாற்று மருந்து ஏற்கனவே ‘இந்துத்வா பணிமனையில்’ இருப்பில்(ஸ்டாக்கில்) உள்ளது!
எடுப்போம்! எய்துவோம்! அழிப்போம்! அகற்றுவோம்! 

காப்பாற்றுவோம் தமிழ்நாட்டை!