“ஜெ”யை விடுவிக்கக்
கூடாது என்பதோ..”ஜெ” வை விடுவித்தே ஆகவேண்டும் என்பதோ என் கருத்து அல்ல..
“ஜெ” கைது சரி
என்றோ..”ஜெ” யுக்கு கொடுத்த தண்டனை தவறு என்றோ நான் எழுதப்போவதில்லை..
இந்தியாவின் நீதித்துறை—சட்டம்
எல்லாம் மே மாதம் 26 ந்தேதிக்கு முன்பாக “ஒரு மாதிரியாகவும்”, தற்போது “வேறு ஒரு மாதிரியாகவும்”,
அதாவது “தள்ளாடாமல்” –சுத்ந்திரமாக, “தன்காலில்” நின்று செயல்படுகிறது..அதனால்தான்
எழுதப்பட்ட தீர்ப்புக்கள் ”திருத்தப்படாமல்” வாசிக்கப்படுகின்றன..இங்கே “நீதி விற்பனைக்கல்ல”
என்ற நிலை எழுந்துள்ளது..ஆறுதலான விஷயம்..
அது போகட்டும்
,,விஷயத்துக்கு வருகிறேன்..”ஜெ” யின் “வழக்கு தீர்ப்புநாள்” மற்றும் இன்று அதாவது
“ஜாமீன் மனு தீர்ப்பு நாள்” இரண்டுக்கும் சில ஒற்றுமைகளை நான் பார்க்கிறேன்..
செப்டம்பர் 27ந்தேதி
“தீர்ப்பு” நாளன்று..பகல் 1.00 மணிவரை “தீர்ப்பு” தண்டனையில் முடியுமென்று..யாராலும்
ஊகிக்க முடியாத படி கோர்ட்டின் செயல்பாடுகள் இருந்தது..3.00 மணிக்கு “ஜெ” குற்றவாளி—5.00
மணிக்கு தண்டனை விவரம் அறிவிப்பு வெளியானது..
அதெமாதிரி அக்டோபர்
7-ந்தேதியான இன்று..மாலை 4.00 மணிவரை, இடையில் அரசுதரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின்
“ஒரு பல்டியினால்” ஏர்பட்ட தற்காலிக “ஆரவாரம்” தவிர “ஜாமின் நிராகரிப்பு” இருக்கும்
என யாரு கணிக்க முடியாத சூழல் இருந்தது..இவை இரண்டும் ஆட்சியாளர்களை விட நீதி மன்றத்தின்
மேலாண்மை உயர்வானது என்பதற்கான ஒரு சிக்னல்..…
ஒரு சாமானியனாக
எனக்கு இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றியது..
ஒன்று---”ஜெ” கைதுக்கும்
“ஜாமீன் மறுப்புக்கும்” அதிமுகவினர் ஏன் இவ்வளவு “ரவுஸ்” விடுகின்றனர்..அப்படி என்ன--
“ஜெ” கைது செய்யப்படக்கூடாத—கைது செய்யப்பட முடியாத..”ஸ்பெஷல் பிறவியா”?—”ஜெ”வை விடுவிக்காவிட்டால்,
காற்று வீசுவது நின்றுபோகும்?—எப்போதாவது பெய்யும் ம்ழையும் கூட பொழியாது போகும்?—திருப்பூர்
சாய ஆலைகள் கழிவு நீரை “பூரணமாக சுத்திகரித்து “வெளியில் விடுவர்?—என்பதெல்லாம் நடந்து
விடுமா?
இரண்டு—அதிமுகவினர்,
கருப்பு சட்டை அணிவது.., , வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவது, சாலையில்
படுத்து புரண்டு போராட்டம், அலகு குத்தி, தீ மிதித்து, காவடி எடுத்து, ஊர்வலம் போவது,
பதவி ஏற்பில் “அழுதுகொண்டே” உரை வாசிப்பது, --இவை யாவும், ”கேமராவோ, வீடியோவோ படம்
பிடிக்காது,” என்று சொன்னால், அப்போதும் இதுபோல செய்வார்களா?
எழுதக்கூடாது என்றுதான்
நினைக்கிறேன்..இருந்தாலும் உள்ளுக்குள்ளே உருத்திக்கொண்டிருக்கும் உண்மை எழுதத்தூண்டுகிறது..
சங்கராச்சாரியார்—சங்கராச்சரியார்
என்று மடத்துக்கு அதிபதி..ஜெயேந்திரர் என்று பெயர்..தவறு செய்தாரா?—தண்டனைக்கு உரியவரா?
என்பதெல்லாம் எனக்குத்தெரியாது..இன்னும் சொல்லப்போனல் நான் மனிதர்களை வணங்குவதில்லை..என்
தாய், தந்தை, குரு தவிர.--.எனவே எனக்கு ‘ஜெயேந்திரர்” மீது எனக்கு எந்த ஈர்ப்பும்
“சாஃப்ட் கார்னரும்” கிடையாது.
ஆனால் லட்சோபம்
லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை
மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில்
செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில் ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி
வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—
பிரபல பெண் எழுத்தாளர்கள்,
திரைப்பட நடிகைகளை எல்லாம் விட்டு, “எனக்கு சாமியாரோடு தொடர்பு உண்டு “ என அறிக்கை
விடச்சொன்ன அநியாயம்..
அந்த மகானுபாவரின்
“நெஞ்சு” எப்படி “வெந்து” இருக்கும்?—அந்த “மாமடத்தின்” மானம் எப்படி காற்றில் பறந்திருக்கும்??—”வாய்தா—வாய்தா””என
எத்தனை முறை, அந்த பாதங்கள், கோர்ட் படி ஏறி இறங்கி இருக்கும்?
இவை எல்லாம் இப்போது
நினைத்து பார்க்க காரணம் என்ன?—ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது,
,”தெய்வம் நின்று
கொல்லும்”--.,
இந்து தர்மம் சனாதனமானது..புராதனமானது…இப்பிறவியில்
செய்த பாவபுண்ணியங்களின் கணக்கு, இப்பிறவியிலேயே “சரி செய்யப்படும்”
—”நோ டேக்கிங் ஓவர்”—நோ
கேரி ஃபார்வர்ட்”
இது “ஆச்சாரியாருக்கும்
பொருந்தும்—ஆட்சியாளருக்கும் பொருந்தும்”
சரி பிளாஷ் பேக்
முடிவுற்றது..சப்ஜெட்டுக்கு வருகிறேன்..
“ஊழல் என்பது மனித
உரிமை மீறலாம்---ஊழல் வாதிகளுக்கு “ஜாமீன்” அடிப்படை உரிமை இல்லையாம்—
இதை கர்னாடகா ஹைகோர்ட்
மட்டும் சொல்லவில்லை—ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட சொல்கிறது..
சொல்வதை சொல்லிவிட்டேன்..திருந்த
வேண்டியவர்கள் திருந்தினால் திருந்தட்டும்..இல்லாவிட்டால்---
காலம் –திருத்தும்—
4 comments:
தவறு தண்டிக்க பட வேண்டியதே.
சங்கர ராமன் தானாகவே இறந்தாரா.. கற்பனை உலகில் இருக்க வேண்டாம்.
சங்கரச்சாரி தப்பி இருக்கலாம். அவன் செய்த கேடுகளை பலர் வெளியே சொல்ல வருவதில்லை .
பெண் பித்தனாக இருந்து கொண்டு எதற்கு துறவி வேசம்.
நம் குடும்பத்தில் ஒருவர் அவனிடம் பாதிப்பு அடைந்திருந்தால் என்ன செய்வோம்.
அனுராதா ரமணன் என்ற எழுத்தாளர் இறக்கும் முன்பு இவரை பற்றி கூறியது தெரியுமா ?
60 க்கும் மேற்பட்ட சாட்சிகள் பல்டி அடிக்க நீதி மன்றத்தில் தப்பினர்.
நிச்சயம் ஒரு நாள் இவர் தண்டிக்க படுவார்.
அதிமுக குண்டண்கள் திருந்தவா இந்தப் பதிவு? அவர்கள் அறியாமல் செய்ய அவர்கள் என்ன சிறு பிள்ளைகளா?
ஒவ்வொன்றுக்கும் விலை அய்யா விலை. இயற்கையாக அவர்கள் இதை செய்தார்கள் என்றால் எல்லா மந்திரிகளும், எம் எல் ஏக்களும், எம் பிக்களும் சாகும் வரை உண்ணாவிரதம் கடைபிடிக்கட்டுமே. செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்களிடம் ஆட்சியின் போது கொள்ளையடித்த பணம் இருக்கிறது. என்றைக்கும் இலவசங்களுக்கு அலையும் பிச்சைக் கார தொண்டனுக்கு பணம் குவாட்டர், பிரியாணியும் தேவைப்படுகிறது. மானம் கேட்ட பிழைப்பு என்பதற்கு சரியான உதாரணம்தான் இந்த நிகழ்வுகள். தமிழன் என்று சொல்லடா என இனி யாராவது சொல்லமுடியுமா?
///லட்சோபம் லட்சம் இந்துக்கள் புனிதமாக கருதும் ஒரு மடத்தின் அதிபதியை, தர்மம், நியாயம், சாஸ்திரங்களை மீறி, நள்ளிரவில், “விசாரணைக்கு மட்டும்தான்”—வந்து போ—என சொல்லி, அரசு பணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து, தீவிர வாதியை பிடிப்பது போல ஹெலிகாப்டரில் ஆந்திரா சென்று, இழுத்து வந்து, கைய்யில், சந்நியாசி வைத்திருக்கும் “தண்டத்தோடு”, சிறைச்சாலைக்குள் தள்ளிய காட்சி---, அப்ப..பப்பா?—////
நீங்கள் கூறும் சங்கறு ஆச்சாரி பிராமணர்களில் ஒரு பிரிவான அய்யர்களுக்கு மட்டுமே ஆச்சாரி. அந்த சங்கறு ஆச்சாரி கும்பல் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நினைக்கின்றீர்களா? ஜெயின் தவறுகளால் அவர் சிறை சென்றுள்ளார். அந்த காஞ்சி சங்கறு ஆச்சாரி எப்படி வந்தாரூ?
One cannot forget Balu Jewellers Poor Man, pity for his family
Post a Comment