Pages

Monday, February 10, 2014

மோடி என்னும் இணைப்புச் சங்கிலி

பிப்ரவரி 8 சென்னை மாநகரின் சரித்திரத்தில் பொன்னாள்..பொன்னாரின் முயற்சியால் “கண்ணான தலைவன்” நரேந்திர மோடியை மீண்டும் “காணக்கிடைத்த” நாள்.

தங்களுக்கு “மாற்று”இல்லை..எனவே தமிழகத்தில் “மாற்றம் “இல்லை--என ..தமிழ் மக்களை “ஏமாற்றி” வந்த திராவிட கட்சிகளுக்கு “பேதி மருந்து” கொடுக்க மோடி சென்னை வந்த நாள்..

வங்கக்கடல் “வண்டலூருக்குள்” புகுந்ததோ என லட்சக்கணக்கான மனித தலைகள் “அலையென” ஆர்ப்பரித்து வந்த நாள்.

திருச்சி இளந்தாமரை மாநாட்டுக்குப் பிறகு, தமிழக அரசியலை புரட்டிப்போட்டது பாஜக..திராவிட கட்சிகளின் வயிற்றில் “புளியை கரைத்தது “ பாஜக..

கூட்டம் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஆளும் கட்சி தனது போலீசையும் ,போக்குவரத்து அதிகாரிகளையும், முடுக்கிவிட்டு, மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது முதல், பஸ்களுக்கு பர்மிட் கொடுப்பது வரை, ”மறுப்பு” செய்தும், தொந்தரவு கொடுத்து பிறகும் --மாநாட்டில் கூட்டம் லைமோதியது.

மதுரை தாமரை சங்கமத்துக்கு செய்தது போல மாநாட்டு பந்தலுக்கு 15 கி.மீ தூரத்திலேயே தொண்டர்களை  போலீஸ்இறக்கி விட்ட பிறகும், ”நாளைக்கு நாட்டை வழி நடத்த” --இன்றைக்கே 20 கி.மீ தூரம் ஒவ்வொரு பாஜக. தொண்டனும்,  “நடை பயிற்சி.”-செய்ததை பார்க்க முடிந்தது.

திருவாரூர்--வாணியம்பாடி, வேலூர் ,ஆம்பூர்..சென்னை ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த இஸ்லாமிய சகோதரர்கள், மதுரை, குமரி, கோவை பகுதிகளில் இருந்து வந்த கிரிஸ்தவ சகோதரர்கள், சேலம் ,சென்னை , மதுரை பகுதிகளில் இருந்து வந்த வடமாநில அன்பர்கள், என கூட்டம் “நெட்டித்தள்ளியது”

ஐ.ஜே.கே--புதிய நீதிக்கட்சி, மற்றும் மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி என கூட்டணிக்கட்சிகளின் கொடிகட்டிய வகனங்களின் அணிவகுப்பு கண்களை கொள்ளை கொண்டது..

மாநாட்டு மேடையின் ஏற்பாடு எப்போதும் போல் பிர்மாண்டத்தையும், அடுத்த “ஆளும் கட்சி “ யின் “களை “ வந்துவிட்டதையும் பறைசாற்றியது..

மதிமுகவின் மல்லை சத்யாவும் ஐஜெகே யின் பாரிவேந்தரும் சிறப்பாக உரையாற்றினர்..கொங்குவின் ஈஸ்வரனின் பேச்சு புதிய தேர்தல் கோஷத்தை முன்வைத்தது..

“மதத்தை பற்றி பேசாமல் வளர்ச்சியை பற்றி மட்டுமே பேச மற்ற கட்சிகளுக்கு தைரியம் உண்டா?”--என்ற அவரின் கேள்வியே தேர்தல் பிரச்சாரத்தின் மையக்கருத்தாக உருவெடுக்க போகிறது..

வெங்கையா நாயுடுவின் “சரவெடி” அனைத்து கட்சியின் தொண்டர்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது..

“மறு எண்ணிக்கை மந்திரி” சிதம்பரத்துக்கு சவுக்கடி---”ஹார்வெடா?--ஹார்ட்
வொர்க்கா”?என்ற  மோடியின் இதயம் தொட்ட வார்த்தைகள்  தமிழ் மக்களை சிந்திக்க வைத்தது..
மாநாடு முடிந்ததும் மாநாட்டு பந்தலில் “சாரய பாட்டில்கள் இல்லை “ என்னும் செய்திக்கு பதிலாக இம்முறை வண்டலூரை சுற்றிய பகுதிகளில் “டாஸ்மாக்கில்” அதிக விற்பனை என்னும் தினமலர் செய்தி எனக்கு சந்தோஷத்தையே தந்தது..

ஆம்..ஒருபுறம் சாரய விற்பனை  செய்தி “சங்கடத்தை” தந்தாலும், அதுவே பாஜக மாநாட்டில் கூட்டணி கட்சிகள் அதிக அளவில் கலந்து கொண்டதற்கான  ”அத்தாட்சி” என்று எடுத்துக்கொள்ளலாம்.

பொதுக்கூட்டத்தில் “விசில்” சத்தம் வருவதும்..தலையில் கட்சிக்கொடியை தொண்டன் கட்டிக்கொண்டு வருவதும், பாஜக அடித்தட்டு மக்களிடமும் சென்று விட்டது என்பதற்கு அர்த்தம்..

தமிழ்நாட்டில், பாஜக மாநாடு நடந்த பகுதியில், டாஸ்மாக்கில் விற்பனை அதிகம் என்றால், கூட்டணிக்கட்சி தொண்டர்கள் அதிகம் கலந்து கொண்டார்கள் என்று அர்த்தம்..

அது இப்போது நடந்திருக்கிறது..பாஜக கூட்டணிகட்சிகளை அதிகம் ஈர்த்திருக்கிறது..என்ன சரிதானே..

ஆக காங்கிரஸ் நாட்டு மக்களை வறுமை--ஊழல், வளர்ச்சியின்மை என்னும் அடிமை சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தது.
பாஜகவின் நரேந்திர மோடி சென்னைக்கு வந்து,தமிழ்நாட்டு மக்களை, தேசிய நீரோட்ட்த்தில், வளர்ச்சிப்பாதையில், சகோதரத்துவத்தில், ஒற்றுமை  “சங்கிலியால்” இணைத்து விட்டார்..
மோடியின் “அன்புச்சங்கிலியில்” தமிழகம் கட்டுண்டது..ஆம்...சென்னையில்..

Friday, January 31, 2014

என்ன குடும்பம் இது--பாகம் இரண்டு

நான் கொஞ்சம் “லேட்தான்”—ஆனாலும் கருணாநிதி பற்றி எழுதினால் தாமதமானாலும்..சூடுகுறையாதுதான்..

துங்குகின்ற தந்தையை காலை 6.30 மணிக்கு எழுப்பிய தனயன் ( கருணாநிதி அதிகாலையிலேயே எழுந்து விடுவார் என்பதும், தற்போது நடக்க முடியாததால், யோகாசன பயிற்சி மட்டும் செய்கிறார் எனபதும் பத்திரிக்கை செய்திகள்)..தன் தரப்பு நியாயங்களை வாதிட்டதும், பிற்பகலில் தந்தை இவரை கட்சியை விட்டே நீக்கியதும், நாடறிந்த செய்தி..

பதவிப்போட்டிகள் உலகத்தில் “நடக்காதது ” ஒன்றுமில்லை..கலைஞர் குடும்பத்தில் இது நடப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை..ஆட்சியில் இருந்த போதே தமிழகத்தை 4 ஆக கூறு போட்டு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வசூல் உரிமை பட்டாவை  வழங்கியவர் கலைஞர் அவர்கள்.

முதல் பங்கை கடைசி மகள் கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி.யாகவும், இலக்கிய அணி செயலாளராகவும், கொடுத்து, துணைவி ராசாத்தி குடும்பம் “பொங்கி எழாமல்” “ அணைத்து” வைத்தார் கலைஞர்..

இரண்டாவது பங்கில், முதல் மனைவி, தயாளு குடும்பத்தில், அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும்தான் தொடர் குடைச்சல்கள்..இதற்கு முன்னமே அழகிரி கொடுத்த குடைச்சல்களில் அழகிரியை எவ்வளவு முறை தான் கலைஞர் காப்பாற்ற முடியும்?

இந்துமதம் தெய்வீக மதமல்லவா?—முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமல்லவா?—கலியுகத்தில் செய்தபாவங்களை கண்முன்னமே அனுபவித்தாகவேண்டும் என்பது விதியல்லவா?

கட்சியையே உயிராகவும் கலைஞரையே தெய்வமாகவும் நினைத்து பணியாற்றிய அவரது மந்திரிசபை சகா..தா.கிருட்டிணன்..அவர்களை மகன் அழகிரிக்கு போட்டியாக வந்துவிட்டதாக எண்ணி,மகனுடைய ஆட்கள் அவரை தீர்த்துக்கட்ட,--- நீதி வழங்கி அனுதாம் தெரிவிக்க வேண்டிய கலைஞர், ---மகனுக்கு ஆதரவாக, “இதுமாதிரி கொலைகள், திராவிட இயக்கத்தில், நடக்காத ஒன்றுமில்லை”, என்றார்..அதிமுக அரசு “நீதி வழங்கிவிடாமல்” இருக்க, வழக்கை அடுத்த மாநிலம், ஆந்திராவுக்கு மாற்றி, மகனுக்கு விடுதலை பெற்றுத்தந்தார் கலஞர் அவர்கள்..

மருமகன்கள், கலாநிதி, தயாநிதி, நடத்தும், பத்திரிக்கை தினகரனில், முதலமைச்சர் பந்தயத்தில் ஸ்டாலின் தான் முன்னிலை…அழகிரி ஆட்டத்திலேயே இல்லை..என எழுதியபோது, பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடி, தீவைத்து இரண்டு அப்பாவி உயிர்களை கொன்றது அழகிரி ஆட்களல்லவா?

ஆக தன் குடும்பத்திலுள்ளவர்களை எதிர்த்தால், அவன் ”மந்திரியானாலும், தீர்த்துக் கட்டு…மருமகனானாலும் போட்டுத்தள்ளு…தன் குடும்பத்திலுள்ளவரே தன்னை எதிர்த்தாலும், அவரை முடித்து விடு..கட்சி விட்டு நீக்கிவிடு… ””இறந்து போவாய் என சாபமிட்டார்”—என கொலைப்பழி சுமத்திவிடு…இதுவே திமுகவின் “கலைஞரிசம்”--வைக்கோவை கொலைப்பழி சுமத்திதானே வெளியாற்ரினார்கள்.

இதெல்லாம் சரிதான்..கலைஞர் குடும்பம் இப்படித்தான் சாதாரணகாலத்தில் “வேலையை காட்டுவார்கள்”..--பிரச்சினை என்று வந்துவிட்டால் ( 2000த்தில் கலைஞரை கைது செய்தபோது..நடந்தது கொண்டது போல..) குடும்பமே ஒன்றாய் கூடி ஊரையே ரெண்டு படுத்தி விடுவார்கள்..

எனக்கு ஒன்று மட்டும் புரிய வில்லை..படுக்கையில் இருந்த தகப்பன் கலைஞரை மகன் அடித்ததாக வந்த செய்தியில், ஆச்சரியம் எதுவும் இல்லை..அது அவர்கள் குடும்ப பண்பாடு—பாரம்பரியம்..ஏற்கனவே ஸ்டாலினும் தந்தைக்கு ”அடி”க்கடி”—இப்படித்தான் பரிசு கொடுப்பார் எனபதும் பத்திரிக்கை செய்தி..இப்படி ஒரு “பண்பட்ட “ குடும்பம் இது..

ஆனால் “ஸ்டாலின் இன்னும் நான்கு மாதத்தில்------------…………………….”என்று ஒருவேளை அழகிரி கூறினார் என்பது உண்மை என்று ஒத்துக்கொண்டால் கூட…அந்த செய்தியை ஒரு தகப்பனே பத்திரிக்கையில் எழுதுவது பேசுவது,  உலகில் எந்த நாகரீகமான குடும்பத்திலும் நடக்காது

இப்படிச்சொல்லி மகன் அழகிரியை “காட்டிக்கொடுப்பதால்---போட்டுக்கொடுப்பதால்”—தனுக்கு மாபெரும் தலைகுனிவு—அவமானம்—என்பதை கலைஞர் உணராமல் இருப்பார் என்று நீங்கள் நம்புகிருகீர்களா?
பின் ஏன் இப்படி அழகிரி மீது ஒரு மாபெரும் குற்றச்சாட்டு?—ஒருவேளை நாளைக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால்-----அத்ற்கான ஆதாரம் உண்டாக்கும் முயற்ச்சியா இது?—அல்லது அனுதாபம் தேடும் நிகழ்ச்சியா இது?

சேற்றில் விழுந்து உடலெல்லம் அசிங்கமானதை பற்றி கவலைப்படாமல், மூக்கில் வழிந்த சேரை அகற்றி மீசையை முருக்குவது போல,இந்த களயபரத்திலும், ஸ்டாலினுக்கு “இசட்” பிரிவு பாதுகாப்பு கேட்டத்துதான்..சிரிப்பின் உச்சகட்டம்..

ஆக கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் கட்சிகளின் காலில் விழுந்து கெஞ்சுவது ஒருபுறம், குடும்பத்தில் நடக்கும் அடிதடிகளில், “தனயன்கள் ஒவ்வொருவரும் சுமத்திக்கொள்ளும கொலைப்பழியை ” பத்திரிக்கைகளுக்கு கொடுத்து விளம்பரம் தேடும் அவலம் மறுபுறம்..

என்ன குடும்பம் இது –விசித்திரமான குடும்பம்..

Sunday, January 12, 2014

100 நாட்கள் பொறுப்போம்

”ஆம் ஆத்மீயின் --ஜன்தா தர்பார்” ரில் கூச்சல்--குழப்பம்--திடீர் ரத்து”

ஆட்சிக்கு புதியவர்..ஆசைகள் அதிகம்--ஒரேநாளில் அத்தனையும் மாற்ற முடியும் --என காட்ட நினைக்கிறார்.. கெஜ்ரிவால்..அதனால் ஏற்பாடுகளில் குழப்பம்..எதிர்பார்க்காத அளவு கூட்டம்..

ஜனநெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

2000 பேரை எதிர்பார்த்து--- 1500 சேர்கள் போடப்பட்டு---50 ஆயிரம் பேர் கூடியுள்ளனர்..என்பது எதை காட்டுகிறது..

15ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை காட்டுகிறது..

காங்கிரசால் சீரழிந்த டெல்லி மக்கள் கெஜ்ரிவாலிடம் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது..

மக்களை கெஜ்ரிவால் காப்பாற்றுவாரா?---காங்கிரசின்மீது ஏறி சவாரி செய்துகொண்டே காங்கிரசின் கண்ணை  குத்த காங்கிரஸ் அனுமதிக்குமா? ..

“கன்னா--பின்னா” அறிக்கைகள் விடும் கட்சிக்காரர்களின் வாயை மூடி---மற்றகட்சிக்காரார்களின் “வாயில் விழாமல்” இருந்தால் கெஜ்ரிவாலுக்கு பாதி வெற்றிதான்..என்ன செய்யப்போகிறார்...

அன்று திமுக ஆட்சி அமைத்தபோது கர்மவீரர் காமராசரும்--இன்று வாழும் காமராசர் “பொன்னாரும்” சொன்னது போல்--குறைந்தது 100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..

Saturday, January 11, 2014

ஆம் ஆத்மீக்கு நன்றி..நன்றி..நன்றி

”பாஜக முதல்வர்கள் ஆம் ஆத்மீயை பார்த்து கற்றுக்கொள்கிறார்கள்”

இப்ப்படித்தான் மீடியாக்களில் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்
..
ஆம்..ராஜஸ்தான் பாஜக முதல்வர்  வசுந்தரா ராஜே அவர்கள்  தான் வரும் பாதையில், தனக்கு..பொலீஸ்--” பாதுகாப்பு என்கிற பெயரில் கெடுபிடிகள்”--செய்யவேண்டாமென்று கூறியிருக்கிறார்....
சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங்கும், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும், “ஊழல் புகாரை தெரிவிக்க   தொலை பேசி எண்கள் கொடுத்திருக்கிறார்கள்..”
இவைகளைத்தான்..பாஜக.. ஆமாத்மீ பார்ட்டி வழியில் செல்வதாக பத்திரிக்ககைகள் எழுத துவங்கியுள்ளனர்..

வசுந்தரா ராஜே சொன்னது..ஆம் ஆத்மீ அறிவிப்புக்கு முன்னரே ஆகும்....அவர்கள் பதவி ஏற்புக்கு முன்னதே. சொன்னது..
ராமன் சிங்க்கின் அறிவிப்பூம் ஆம் ஆத்மீ அறிவிப்புக்குமுன்னரே ஆகும்....ஆக மீடியாவின் எழுத்தின் உண்மை அளவு என்ன என்பது தெரியவே இதை எழுதுகிறேன்.

.அடுத்து...

“ஸ்வாகத்” என்னும் பெயரில் குஜராத்தில், . --2012 ஆம் ஆண்டிலிருந்தே மக்களை--மந்திரிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும்  நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.. கடந்த ஓராண்டில் பெறப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான புகார் மனுக்களில் 98 சதவீதம் பேருக்கு  “நிவாரணம் “ கொடுக்கப்பட்டுள்ளது..கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்தே நரேந்திர மோடி அவர்கள் மக்களை தனது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்துக்கொண்டிருக்கிறார்....
நரேந்திர மோடி அவர்கள் தலைநகரத்தில் அதாவது அகமதாபாத்தில் இருந்தால் 24 மணிநேரத்தில் அவரை சந்தித்து விடலாம் என்று பார்த்தவர்கள் உறுதி கூறுகின்றனர்..13 ஆண்டுகாலமாக மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவரை இவ்வளவு எளிதாக பார்க்கமுடியும் என்றால் உண்மையிலேயே  “யார் எளிமையானவர்? “ என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்..

கோவாவின் முதல்வர்..மனோகர் பாரிக்கர்...எந்த விளம்பரமும் இன்றி..டாக்சியிலும், ஸ்கூட்டரிலும், இன்றும்..இன்னும்...சென்றுகொண்டிருக்கிறார்.ஐ.ஐ.டியில் படித்து பட்டம் பெற்று மாநிலத்தின் முதலமைச்சரான முதல் ஐ.ஐ.டி. பட்டதாரி இவர்தான் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்..பாஜக என்றாவது இப்படி விளம்பரம் செய்த்ததா?.
இது ஒருபுறம் இருக்க கடந்த 10 நாட்களாக இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டும் பார்க்கும் ஆங்கில மீடியாக்கள்..ஆம் ஆத்மீயின் சில அறிக்கைகளை தலைப்புச்செய்தியாக விளம்பரப்படுத்தி வருகின்றன....அது இதுதான்..
“ஆம் ஆத்மீ பார்ட்டி..வரும் லோக்சபா தேர்தலில் 300 இடங்களில் போட்டியிடும்..
ஆம் ஆத்மீ பார்ட்டி ஜனவரி 26 ஆம் தேதிக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும்..
இவைகள் எல்லாம் ஆம் ஆத்மீ பார்ட்டியின் உள்கட்சி செய்திகள்..இவைகளுக்கு மீடியாக்கள் அதிமுக்கியத்வம் கொடுக்கும் நோக்கம் என்ன? 

இதே முக்கியத்துவம் இதற்குமுன்பு துவங்கப்பட்ட ஊழலை ஒழிக்க புறப்பட்ட “லோக்சத்தா” போன்ற  கட்சிகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? ..இந்த மீடியாக்களில் நேரடியாகவோ..மறைமுகமாகவோ..காங்கிரசின் பங்குகள் இருப்பதாலோ?..
ஆம் ஆத்மீ பார்ட்டியை நான் முழுமனதோடு வரவேற்கிறேன்..ஊழலை ஒழிக்கவும், காங்கிரசின் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவும் ஆம் ஆத்மீ பார்ட்டியின் வரவு உதவும் என்று நான் எதிர்பார்த்தேன்..
ஆனால் ”ஆம் ஆத்மீ பார்ட்டி பாஜகவுக்கு மாற்றாக இருக்கும்”-- என்கிற காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் இடதுசாரிகளும் பிரச்சாரம் செய்வதை ஏற்கமுடியாது-- என்பதற்கு என்னுடைய காரணங்களை நான் கீழே தருகிறேன்..
ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஆம் ஆத்மீ கட்சி காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு” காங்கிரசிற்கு எதிரான வாக்குகளை பெற்று” ---ஆட்சி அமைப்பதற்க்காக..--ஊழலின் ஊற்றுக்கண்ணான காங்கிரசின் ஆதரவைப் பெற்றது  சரியா?
எளிமை ஏன்னும் பெயரில் மெட்ரொ ரயிலில் பிரயாணம் செய்து ஆம் ஆத்மீ கட்சிகாரர்கள் மொத்த ரயிலையே டிக்கட் இல்லாமல் பயணம் செய்த்தது சரியா?..இதுதான் எளிமையா?
இலவசங்களை அள்ளிவீசும் ஆட்சிக்கு எதிராக பேசிய ஆம் ஆத்மீ--- “பொய்யான இலவசமின்சாரம்”--மக்களை ஏமாற்றும் 700 லிட்டர் இலவச குடிநீர் “----அறிவிப்புக்கள்   சரிதானா?--

இவைகளைத்தானே இதுவரை காங்கிரஸ் செய்து வந்தது..? ஆம் ஆத்மீ காங்கிரசுக்கு மாற்றா? அல்லது காங்கிரசின் இரண்டாவது அணியா?
நாட்டின் மிக முக்கியமான பல பிரச்சினைகளில்..குறிப்பாக ஆர்டிகிள் 370, பொதுசிவில் சட்டம், போன்றவற்றிக்கு தங்கள் கொள்கைகளை ஆம் ஆத்மீ இன்னும் சொல்லவில்லையே ஏன்?---
மாறாக அவர்கள் கட்சியின் மிகமுக்கியமான தலைவர் பிரசாந்த் பூஷன் காஷ்மீர் பற்றி பேசி..  நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்து --அதை  “அது அவரின் சொந்த கருத்து “ என கெஜ்ரிவால் சொல்வது சரியா?--நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கட்சியின் கருத்து ஒன்றும், தனிப்பட்ட கருத்து ஒன்றும் வைத்துக்கொள்ளாமா?
அரசியலில் புதிதாக வந்திருக்கும் கட்சிக்கு வரவேற்பு தெரிவிக்க ஆசைபட்டேன்..அது காங்கிரசுக்கு மாற்றாக இருக்கும் என நினைத்து..ஆனால் அது காங்கிரசின் “பி” டீமாக இருப்பது கண்டு இப்போது வருத்தப்படுகிறேன்...
என்றென்றைக்கும் இந்தியாவின் பிரச்சனைக்கு தீர்வு பாஜகவும் நரேந்திர மோடியும்தான் என்பது மீண்டும் நிரூபணமாக்கிய ஆம் ஆத்மீக்கு நன்றி--நன்றி..நன்றி..

Monday, December 30, 2013

போலிசை கைது செய்

போக்குவரத்து போலீசாரின் "அறிவு கெட்டத் தனத்தால்" ( கொஞ்சம் மரபு மீறிய சொல்தான்..ஆனாலும், கோபத்தின்   வெளிப்பாடு)..உளுந்தூர் பேட்டையை  அடுத்த ஷேக் ஹுசைன் பேட்டை அருகே 7 அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாகி இருக்கிறது..

இதை எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை..இப்படி " மடத்தனமாக" ( மீண்டும் மரபு மீறிய சொல்) போக்குவரத்து பொலிசார் நடந்துகொள்வது இது முதல் முறையல்ல..

சாலைகள் ஏதோ இவர்கள் அப்பன் வீட்டு சொத்து போலவும், 80 கி.மி, 100 கி.மி வேகத்தில் வரும் வாகனங்களை எந்த முன் தடுப்பு நடவடிக்கைகளும், ( வேகத்தடை--செக் போஸ்ட் தடை போல . )இல்லாமல், இடம் பொருள் ஏவல் பாராமல், திடீரென கையை காட்டி, ஓரங்கட்ட சொல்வதும், அதை எதிர் பாராத பின்னால் வரும் வாகனங்களில் உள்ளோர் பரலோகம் போவதும், தொடர்ந்து கொண்டிருப்பது நெஞ்சம் கனக்க  வைக்கிறது,

போக்குவரத்து பொலிசாரின் "வாகனப்பரிசொதனை" என்கிற லஞ்ச நாடகத்தினால், இதுவரை எத்தனையோ, டாக்டர்கள், வக்கீல்கள், கலைஞர்கள், சிறார்கள், பெண்கள், அரசுஅதிகாரிகள், அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்..இரு
ந்தும்கூட போலிஸ் மேலிடத்திலிருந்த, இப்படி  செய்யாதீர்கள்" ..பரிசோதனை இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள், என்ற எந்த வழிகாட்டுதலும், வந்ததாக தெரியவில்லை..
பொலிசார் எந்த காலத்திலும், சொந்த புத்தியோடு செயல் பட்டதாக தெரியவில்லை..வழிகாட்டுதல்கள் வந்தாலாவது மாறுவார்களா? என்கிற ஆதங்கம்தான் இப்படி எழுத துண்டியது..

நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளிலும்,வாகன பரிசோதனைகளுக்கு சரியான இடம் தேர்வு செய்யாமல் , முக்குகளில் மறைந்து நின்று, சினிமா வில்லன் போல திடீரென் தோன்றி, கையைக்காட்டி நிறுத்தி, சாலைகளை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு பெரும் இடையுறு செய்து, முடிந்த அளவுக்கு விபத்து ஏற்படுத்தும் பொலிசாரின் செயல்களை யார் தடுப்பது?--அந்த "மரமண்டைகளுக்கு" ( மீண்டும் மறு மீறிய சொல்)யார் புத்திமதி சொல்வது?--

நேற்று முன்தினம் உளுந்தூர் பேட்டை விபத்து, நெஞ்சை உலுக்குகிறது..நெடுஞ்சாலையில் அதிவேக மாக வந்த வாகனத்தை மடக்கி நிறுத்தி, தீவிரவாதிகளை கைது செய்யப்போகிறார்களா?--கொள்ளையனை பிடிக்கப்போகிரார்களா?--மணல் லாரியிலிருந்து 100 ரூபாய் லஞ்சம் வாங்க கையை நீட்டி, 7 அப்பாவி உயிர்களை அநியாயமாக கொன்று விட்டார்களே ..

இந்த உயிர்பலிக்கு காரணமான பொலிசார் மிது கொலைவழக்கு போடவேண்டும்..ம்ம்ம்..ஹூம்...ரொ
ம்ப கோபப்படுகிறேன் நான்.----.ஒரு பிஸ்கோத்தும் நடக்காது.."மெமோ" கூட கொடுக்கமாட்டார்கள்..
இதற்க்கு பின் என்னதீர்வு?--ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்...பிளாக்கில்..."பொங்
கி வழியலாம்"..அக்கம் பக்கம் பார்ப்பவரிடம் "குமுறலாம்"'..சொந்தக்காரகளாக இருந்தால் "போலிஸ் ஸ்டேஷனை முற்றுகை " இடலாம்..
வேறென்ன செய்யமுடியும்..எத்தனை "புலம்பினாலும்" எந்த போலீசுக்கும் "புத்தி வரப்போவதில்லை"..எந்த மேலதிகாரியும் ஆணை இடப்போவதில்லை..

நம் தலைவிதி இவ்வளவுதான்...பிரேக் பிடிக்காத  வண்டி  ,  போலிஸ் மேல் மோதினால்தான் திருந்துவார்களோ ?

Friday, December 27, 2013

குப்பையுடன் கூட்டணி சேர்ந்த “துடைப்பம்”


"ஊழலை கூட்டி தள்ளுவேன் "--என "துடைப்பத்தை " எடுத்தார்...அண்ணா ஹஜாரே --ஊழல்--- குப்பைகளை கூட்டி தள்ளும் முன்பே--- துடைப்பத்தை பிடுங்கிக் கொண்டு  ஓடிவிட்டார் ஹஜாரே சிஷ்யர் அரவிந்த் கேஜ்ரிவால்.
.
துடைப்பத்தை காட்டி --ஊழல் குப்பைகளை கூட்டித் தள்ளுவேன்-- என சூளுரைத்து டெல்லி மக்கள் வாக்குக்களை பெற்று, பாஜகவிற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் கேஜ்ரிவால்..

32 இடங்களை பிடித்த பாஜக மேஜாரிடிக்கு 4 இடங்கள் குறைந்ததால், "ஆட்சி அமைக்க போவதில்லை " என சொல்லியத்தால், 28 இடங்களை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டது.

10 நாள் அவகாசம் கேட்ட கேஜ்ரிவால், இரண்டு நாளில் முடிவு சொல்வதாக கூறி, ஒரே நாளில் ஆட்சி அமைக்கிறோம் என்று முடிவை வெளியிட்டார்..

நிபந்தனை அற்ற ஆதரவு---நிபந்தனையுடன் கூடிய ஆதரவு--என்று காங்கிரஸ் மாற்றி மாற்றி சொன்னாலும், கடைசியாக "வெளியிலிருந்து" ஆதரவு தந்ததால்,  கேஜ்ரிவால் வரும் 28 ந்தேதி டெல்லி முதல்வராக முடிசூடப்போகிறார்..

"காங்கிரஸ் என்னும் ஊழல் குப்பையை அகற்றுவோம் "--என்று சூளுரைத்த ஆம் ஆத்மியின் "துடைப்பம்" --ஆட்சியை பிடித்தது, ஆனால் ஆட்சி அமைக்க போதிய ஆதரவு இல்லாதததால், 8 சீட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் "குப்பையை" கூட்டு சேர்த்துக்கொண்டது..

ஆக குப்பையை அகற்ற களமிறங்கிய துடைப்பம் கடைசியாக குப்பையுடனேயே கூட்டு சேர்ந்து கொண்ட அவலம் டெல்லியில் நடந்தது.---இது ஒரு புறம்..

இந்த ஆம் ஆத்மி துடைப்பம் உண்மையிலேயே துடைக்குமா/..அல்லது பேப்பரில் இருக்கும் விளம்பர துடைப்பமா? --பார்ப்போம்..

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஆர்.எஸ். வரூமானவரி  அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால், ஊர் ஊர் ஆக மாறிச்செல்ல வேண்டிய பதவியில் இருந்தாலும், அன்னை சோனியாவின் அருளால், எந்த ஊருக்கும் மாறுதல்-- ”ஆக்காமல்”,-- டெல்லிக்குள்ளேயே மாறுதல் ஆகாமல் தொடர்ந்து இருந்தார்..ஆனால் அந்த சோனியாவையே எதிர்த்து பின்னாளில் போராட்டம் நடத்தினார்..

"காங்கிரஸ்--பாஜக எதுவுடன் கூட்டணி சேரமாட்டேன்" என வாக்குறுதி அளித்தார்..ஆனால் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார்..

டெல்லி போலிஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டது..அதன் அனுமதியில்லாமல் ஒரு போலிஸ் காரரைக் கூட மாற்றும் அதிகாரம் டெல்லி அரசுக்கு இல்லை. இதை நன்றாக.தெரிந்த ஐ,ஆர்.எஸ். அதிகாரி கேஜ்ரிவால், "போலிஸ் சீர்திருத்தம் " கொண்டுவருவேன் என்று  கூசாமல் பொய்சொல்கிறார்..

ஜன்லோக்பால் மசோதா மட்டுமல்ல எந்த சட்டமும் இயற்றுவது சட்டமன்றம்தான்..இது தெரிந்த கேஜ்ரிவால், மக்கள் மன்றத்தில்சட்டமியற்றுவேன் என அடம் பிடிக்கிறார். 

காங்கிரசும் பாஜகவும் பணக்காரர் கட்சி என்று சொல்லும் கேஜ்ரிவாளின் கட்சியில் 28 க்கு 12 எம்.எல்.ஏ க்கள் கோடிஸ்வரர்கள்..

"மக்களை மேலும் பிச்சைக்காரகள் ஆக்கும்  மற்ற அரசியல கட்சிகளுக்கு நான்தான் மாற்று" --என்று தேர்தல் கோஷம் எழுப்பினான்ர். ஆனால் மக்களை கையேந்த வைக்கும் -- இலவச மின்சாரம்--இலவச குடிநீர் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்..

மொத்தத்தில் ஆம் ஆத்மி என்பது காங்கிரசின் "பி" டீம் என்பது வெட்டவெளிச்சமானது..

குப்பையை கூட்டி எரிய வேண்டிய துடைப்பம்-- குப்பையுடன் கூட்டு சேர்ந்தது. .

Tuesday, December 10, 2013

பாஜக திமுகவோடு கூட்டணியா?



தமிழக பாஜக சரித்திரத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற மாநில செயற்குழுக்கள் நடைபெற்றுள்ளன..அதில் நவம்பர் 27—28 ந்தேதி பரமக்குடியில் நடந்த மாநில செயற்குழு வித்தியாசமானது.

அங்கு மூன்று வகை வித்தியாசங்களை என்னால் பார்க்கமுடிந்தது..
1 “.பாராளுமன்ற தேர்தலை நாம் எப்படி அணுகவேண்டும்?—கூட்டணி என்று வைத்துக்கொண்டால் அது யாரோடு?---உங்கள் மனந்திறந்த கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.”.—என்று மாநிலத்தலைவர் திரு.பொன்னார் அவர்கள் அழைத்தவுடன் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்குமேல் கருத்து சொன்ன ஆர்வம்.

.2. நம் லட்சியத்தோடும் கொள்கையோடும் என்றும் ஒத்துப்போகாத ..நமக்கு என்றுமே ஒத்துவராத..திமுகவோடு கூட கூட்டணி வைத்துக்கொள்ளலாம்..என நம்மில் சிலரே சொன்ன “ஆச்சரியமான---அதிர்ச்சிகரமான ” கருத்துக்கள்..

3.” வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை ஓட்டம்—மற்றும் கிராம யாத்திரை” பற்றிய விரிவான விபரமான ஆழமான கருத்து பரிமாற்றம் வழங்கிய திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கருப்பு முருகானந்தத்தின் விளக்கங்கள்..

செயற்குழுவன்று காலை “தினமலரில்” திமுக கூட்டணிக்கு ஆதரவான முடிவில் பாஜக இருப்பதாக வந்த கட்டுரையும், செயற்குழு முடிந்த அடுத்த நாட்களில், அதே அர்த்தத்தில், வேறு சில பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளும், என்னைப்போன்ற பாஜக தொண்டனையே உலுக்கியது என்பது உண்மைதான்..

இச்செய்தி பாஜகவின் தொண்டனையும், நமது இயக்க ஆதரவாளர்களையும் பெரும் அதிச்சியில் ஆழ்த்தி வருகிறது என்பதை “முகநூலிலும்” நேரில் என்னிடம் பார்க்கும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்தும், மேலும் உறுதியாகிறது..

செயற்குழுவின் நிறைவுரையில், முதலில் பேசிய திரு எல்.ஜி. அவர்கள், “ஒரே கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் “ இருக்க முடியாது என்பதையும், அடுத்த கூட்டணி..( திமுக பாஜக கூட்டணி)—யின் ரசாயனம் ( கெமிஸ்ட்ரி)..வீழ்படிவுகளைத்தான் (பிரிசிபிடேட்)..உண்டாக்கும் என்பதையும் அழகாக..சிலேடையாக சொல்லி நம் “அதிர்ச்சிக்கு “ முற்றுப்புள்ளி வைத்தார்.

நிறைவுரை ஆற்றிய திரு.பொன்னார் அவர்கள், “ மதுரை தாமரை சங்கமத்தின் மூலம், தமிழகத்தில் பாஜக இருக்கிறது என்று காட்டினோம்..எங்கே இருக்கிறது? என்று கேட்டவர்களுக்கு,..திருச்சி “இளந்தாமரை “ மாநாட்டின் மூலம் “தமிழகம் எங்கும் இருக்கிறது” என்று நிரூபித்தோம்..நாம் கூட்டணிகளை தேடிப்போன காலம் போய் கூட்டணிகள நம்மைத்தேடி வரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.”.

“ .கூட்டணி அமைந்தால் அது நம் தலைமையிலேயே அமையும்..அதற்க்குள் நம் வலிமையை நாம் பெருக்கிக்கொள்வோம்..12500 கிராமங்களிலும் யாத்திரை செய்து மக்களை சந்தித்து புதிய பாஜக கிளைகளை உருவாக்குவோம்..சர்தார் வல்லபாய் பட்டேலின் “ஒற்றுமை ஓட்டத்தை “ பள்ளி கல்லூரி மாணவர்களை திரட்டி நடத்துவோம்.” என்று தெளிவாக தொண்டர்களுக்கு செய்தி சொன்னார்..

தற்போது சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும், “தெளிவான பாஜக தொண்டனையும்” குழப்பத்தில் ஆழ்த்தும் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது..இதை நம்பிய ஒருசில தொண்டர்களும், ஆதரவாளர்களும், “ தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சண்டாளர்களுடனா கூட்டு?—நாம் சூடு சொரணையை இழந்து விட்டோமா? “என்றவகையில் “முகநூலில்” கொதிப்பதை பார்க்க முடிகிறது..

இப்படி பதட்டப்படவோ இம்மாதிரியான கூட்டணி செய்திகளை நம்புவதோ அவசியமற்றது..நமது தலைவர்கள் தெளிவானவர்கள்…அவர்கள் காங்கிரஸ் கட்சியைப்போல மேலிருந்து திணிகப்பட்டவர்கள் அல்ல..நம்மில் ஒருவராக இருந்து உயர்ந்தவர்கள்தான்…நம் உணர்வுகளை மட்டுமல்ல நாட்டின் சூழ்நிலைகளையும் தெளிவாக புரிந்தவர்கள்..நம் லட்சியம்—கொள்கைக்கு என்றும் வலுசேர்ப்பவர்கள்...

பொய்ச்செய்திகளை படித்து நம்மை நாமே குழப்பிக்கொள்வதை தவிர்ப்போம்..வல்லபாய் பட்டேல் ஒற்றுமை ஓட்டத்தை மாபெரும் வெற்றியுடன் நடத்தி, மக்கள் ஆதரவை திரட்டுவோம்..கிராமங்கள் தோறும் பாதயாத்திரை நடத்தி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே, ஆயிரக்கணக்கான புதிய கிளைகளையும், லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களையும் சேர்த்து, மேலும் வலு பெற்ற தமிழக பாஜகவை உருவாக்குவோம்..

நம் லட்சியம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 20+ எம்.பி.க்களை அனுப்பி மோடி அவர்களை பிரதமராக்குவது மட்டுமல்ல..2016 சட்டமன்ற தேர்தலில்..ஆட்சியை பிடிக்கும் வலுப்பெற்ற கட்சியாக மாறுவதும் ஆகும்…

இதை நிறைவேற்ற… உடனே புறப்படுவோம்..
ஒற்றுமை ஓட்டத்தில் கிராமம் தோறும் செல்வோம்.. .