விதை நெல்லை விற்காதே
சென்னைத் துறைமுக பொறுப்புக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தேன்..ஒரு பணிநிமித்தமாக…உணவுக்காக அருகே உள்ள “beach station” சரவணபவனுக்கு செல்லவேண்டியிருந்தது..
இதற்கு துறைமுகம் “உள்ளாலேயே” வழி உள்ளது..இப்போது புதிதாக “ரயில் லைன் “போட்டுள்ளார்கள்..ரயில் பாதையின் மீது நடந்துதான்…
வழிநெடுக---மலை..மலையாக..”பாக்சைட்”..தாது..குவிக்கப்பட்டு இருந்தது..எல்லாம் வெளிநாட்டுக்கு எற்றுமதியாம்..ரயிலில் வேகன்..வேகனாக..கர்னாடகாவிலிருந்து இரும்புத்தாது வேறு வந்து குவிந்தவண்ணம் இருந்தது..
கேரளாவின் கடற்கரை ஓரங்களிலிருந்து கிடைக்கும்…“கிராஃப்பைட் தாதுவும் –அலுமினியமும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது..இப்படி அன்னை பாரதமாதா..நமக்களித்த இயற்கை தாதுக்கள்..கனிம வளங்கள்..வெளிநாட்டுக்கு தாறுமாறாக ஏற்றுமதி செய்யப்படுகிறது..நமது அன்னை பூமியின் வளங்கள் நமக்கு மட்டுமேயல்ல… நமது சந்ததியினருக்கும் சேர்த்து.. சொந்தம்—அவை நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற “”பூர்வீக சொத்துக்கள்”—இதை எடுத்து அள்ளிவிட யாருக்கும் உரிமை இல்லை—இதை எடுத்து raw material ஐ finished goods ஆக்கி நாமே அனுபவிக்கவே நமக்கு உரிமை உண்டு..
கடந்த 10 ஆண்டுகளாக நம் மண்ணின் கனிம வளங்கள் முழுதும் கொள்ளை அடிக்கப் படுகிறது—இந்த கொள்ளைச் சண்டையின் ஒரு பகுதிதான் கர்னாடகா ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்—
அடுத்த 20 ஆண்டுகளில் உலகெங்கும் கனிமங்கள் தட்டுப்பாடு வரும் –விலை உயரும்..குறிப்பாக இரும்பு விலை கன்னா பின்னாவென்று உயரும்.. சீனா இந்தியாவிலிருந்து இரும்புத்தாதுவை வாங்கி குவித்தவண்ணம் உள்ளது. காரணம் இதுதான்.
நாம் “விதை நெல்லை விற்கிறோம்””—நம் மூதாதையர் விட்டுச் சென்ற..நம் சந்ததியினருக்கு வைக்கவேண்டிய சொத்தை—நாசமாக்கி வருகிறோம்..
இது ஒரு எச்சரிக்கை--விழித்துக்கொள்வோம்
No comments:
Post a Comment