இடம் –போயஸ் தோட்டம் –கான்ஃபரன்ஸ் ஹால்
“ ஜெ “ –சசி—சோ—இளவரசி---வளர்மதி—பேசி க்கொண்டிருக்கிறார்கள்..
ஓ.பன்னீர் செல்வம் சோகமாக உள்ளே நுழைகிறார்..
ஜெ---ஏன்யா..மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டுருக்க…உன்னதான் ..மாத்தல்லியே.
ஓபி---அதான்மா பயமா இருக்கு---அடுத்து நான் தானோ.ன்னு.
சசி—சேச்சே—அக்கா அப்பிடி செய்யமாட்டாங்க---செங்கோட்டையன பாத்து பயந்துட்டுங்கிளா-----பெங்களுரு கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு நீதான்யா சிஎம்..
ஜெ----(-சசியை முறைத்துப் பார்த்து…)---அப்பிடி எதுவும் நடக்காது---நம்ம ஜோசியர் சொல்லிட்டார்---
சசி-----அதுக்கில்லக்கா---ஓபி எஸ்..மாதிரி நல்ல ”எந்திரன் “ நமக்கு யார் கிடைப்பாங்க அக்கா..
ஜெ----ஆமான்..ல்..ல..
வளர்மதி---அம்மா..என்ன..கொஞ்சம் ..கவ…னிங்க..ம்மா----…(என இழுக்க..)
சசி---நீ 25 வது ரீஷஃப்ல இருக்க..வளர்..
வளர்மதி----அம்மா அவ்வ்ளவு நாளாகுமா..
ஜெ----அது ஒன் அதிர்ஷ்டத்தை பொறுத்தது..அடுத்த மாசமே வந்தாலும் வரலாம்..
சோ---அதிருக்கட்டும் அம்மு---( சோ--—ஜெயை அப்படித்தான் அழைப்பாராம் )—இந்த லைப்ரரியை மாத்தரது எனக்கு சரியாப்படல்லை..
ஜெ-----எனக்கும்தான்-இந்த “பெரிசு “சும்மா இல்லாமல் என்ன சீண்டிகிட்டே இருக்கே----அப்ப நான் மாத்துரத தவிர வேறு என்ன செய்ய—
சோ-----இவ்வளவு ..மக்கள் ..எதிர்ப்பு இருக்கே----
ஜெ------எந்த மக்கள் எதிர்ப்பும் இல்லை—கருணாநிதி மக்கள் மட்டும்தான் எதிர்க்கிறார்கள்ளுன்னு..உளவுத் துறை டி.ஐ.ஜி.யே சொல்லிட்டார்..ஜோசியர் பணிக்கரும்..லைப்ரரி குள்ள..கண்ணகியோட புக் ஒண்ணு இருக்காம்—அது எனக்கு ஆகாதாம்—
சோ---அதுக்காக…லைப்ரரியவே மாத்தணூமா---
ஜெ-------லைப்ரரிய மாத்தரப்ப அந்த புக்க தூக்கி எரிஞ்சுடுவேன்..இல்ல
இந்நேரம் பார்த்து ஐ.ஏ.எஸ்—ஐ.பி.எஸ்----ஆஃபிஸர் அச்சோசியேஷன் சேர்ந்தவர்கள் உள்ளே வந்து ஜெ யிடம் ஒரு மகஜர் தருகிறார்கள்..
அதில் அடிக்கடி “மாற்றல்கள்” சிரமமாக உள்ளது என்று இருக்கிறது
ஜெ---அதுக்கு நான் என்ன செய்யணும்---
ஆஃபிசர்கள்--- மேடம்—நீங்க—பதவியையும்—ஊரையும் மாத்துங்க—ஆனால்..நாங்க உக்காந்திருக்கிற சீட்டை மட்டும் மாத்தாதீங்க..எங்களால அலைய முடியலை..
சோ---அது எப்பிடி முடியும்—
ஜெ---சோ..நீங்க சும்மா இருங்க---( ஆஃபிசர்களை பார்த்து ஜெ )நீங்க அதே சீட்ல அதே ஊர்ல இருங்க---டிபார்ட்மெண்ட் அங்கேயே வரும் –நான் பார்த்துக்குரேன்..
அப்போது செங்கோட்டையன் உள்ளே நுழைகிறார்..
செங்----அம்மா—ஐ.டி—பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதேம்மா—
ஜெ-----ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்கரது..எனக்கு தெரியும் –அதனால தான் போட்டேன்..
செங்—இன்னும் எவ்வளவு நாள் நான் கஷ்ட்டப்படணூம் அம்மா
ஜெ----ஜஸ்ட்—25 அவர்ஸ்
சோ---அதென்ன 25 மணி நேரம்..அம்மு
ஜெ-----எத செஞ்சாலும் 16—25---34—லதான் செய்யணுமாம்—ஜோசியர் சொல்லியிருக்கார்..
சோ—அப்ப மந்திரி மட்டும் எப்பிடி 6 மாத்தின
ஜெ---இந்த மாசம் 6 தான் நல்ல நம்பர்
சோ---நீங்க போர போக்க பாத்தா..எல்லாருக்கும் மந்திரி பதவி கொடுத்துடுவீங்க போல இருக்கே அம்மு
சசி---துக்ளக் ஸார்..( சோவை சசி அப்படித்தான் அழைப்பாராம் )ஒருசில பேருக்கு ஒருதடவைக்கு மேல் சான்ஸ் கிடைக்கலாம்
சோ----அடுத்தடவை மந்திரிங்களை எப்பிடி செலெக்ட் பண்ணுவீங்க சசி—
சசி—செலக்ஷனாவது மண்ணாவது---முதல்ல அக்காவோட---,என்னோட ஜாதகத்தோட ஒத்து போகணும்---குடுக்குர பொட்டிய திறக்காம கொண்டு குடுப்பார்ன்னு உளவுத்துறை டி.ஐ.ஜி.சொல்லணும்..அப்புறம் அக்கா சீட்டு குலுக்கி போடும்—நான் எடுப்பேன்..
சோ---மொட்டை தலையை தடவியபடி---இப்பவும் நம் செலக்ஷன் தப்புதான் போலிருக்கிறது--என முணுமுணுத்தபடி நடையை கட்டுகிறார்..
அப்ப நாமும் தலைப்ப மாத்துவோம்—சீட்டுகட்டு ராஜா இல்ல—சீட்டுகுலுக்கல் மந்திரிகள்..
இலவச இணைப்பு:-----
இலவச இணைப்பு:-----
No comments:
Post a Comment