Pages

Friday, December 16, 2011

சோனியாவும் கலஞரும் மாறிவிட்டார்கள்---புதிய “வேக்சின்” (vaccine )--மகத்துவம்



அப்பப்பா...அப்பப்பா...--என்ன சண்டை...என்ன சண்டை--காலைல எழுந்திருச்சா....எந்த செய்தி “சானலை ‘ திருப்பினாலும்...ஒரே போராட்ட மயம்..

அதுக்கும் ஒரு எல்லை இல்லை...விவஸ்தையும் இல்லை..ஒரு ஊரே மலைமேல ஏறி நின்னு தற்கொலை பண்ணிக்குமாம்..முல்லைபெரியார் பிரச்சினையை தீர்க்கலைன்னா..

இதுவரை மாநில லெவலுக்கு வந்துவிட்டோம்..இனி இது ரொம்ப ஸ்பீடாக மாறி--..மாவட்டம்---ஊரை கிராஸ் செய்து...தெருவுக்கு தெரு சண்டை வரவேண்டியதுதான் பாக்கி..அதுவராதுன்னு உறுதியா சொல்லமுடியல்லியே..

கற்பனை செய்யமுடியாதது எல்லாம் “நிஜத்தில் “ நடக்கும் கலிகாலம் தான் இது.

அது சரி மலையாளி கடைகளையெல்லாம் உடைக்கிறோமே....கேரளாவில் இருக்கும் தமிழனின் நிலையை எண்ணி பார்த்தோமா?  -நம்மை பார்த்துட்டு அவங்களும் செய்ய நாம் காரணமாகணுமா?-- நாம் நிறுத்தக்கூடாதா?--”அவனை நிறுத்த சொல்லு..நான் நிறுத்தரேன்னு வசனம் பேசணுமா?--

பால் பொங்கி கருகின வாட வருது...சாம்பார் மணம் மூக்கை துளைத்து  ஒரேடியா பசி ஆகுது ---“இதற்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன்தான் காரணம்-- என்று அடித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் போகப்போகிறோமா?--

இதெல்லாம் நமக்கு பழக்கமானதா?--இவ்வாறு நாம் செய்திருக்கிறோமா?--நமக்கு அன்னியமான விஷயங்களை எல்லாம் நாம் தேடி போய் செய்து கொண்டு இருக்கிறோமே..
நம் உறவுகள் எவ்வளவு சௌஜன்யமானது--அதாவது பரிபூரணமானது---விட்டுக்கொடுத்து வாழ்வது...இது எங்கே போனது--இதன் சிதைவுக்கு யார் காரணம்?--

உலக நாடுகளிலேயே குடும்ப உறவு பூரணமானது நம் நாட்டில் மட்டும் தான்..”வசுதெய்வ குடும்பகம்”--அதான் பக்கத்துவீடு---பக்கத்து மாநிலம்...பின் ஏன் அடித்துக்கொள்கிறோம்.?

ஒரு பிரச்சினைக்கு மாநில சட்டசபைகள் தீர்மானம் போடுகிறது? யாரை திருப்திப்படுத்த?--  யார் தவறை மறைக்க?-- தலைவர்கள் “பாகிஸ்தானை---சீனாவை”--திட்டுவதுபோல --அண்டை மாநிலத்தை திட்டி வீர உரை ஆற்றுகிறார்கள்..மககளை உசுப்பேத்துகிறார்கள்.

மாற வேண்டியது யார் மக்களா?--மன்னனா?--தவறிழைத்தது யார் மக்களா?--மன்னனா?--நிவாக சீர்கேடு யாரால்?--மக்களா?--மன்னானா?

காமராஜர் முதல்வராக இருந்தபோது காவிரியில் தண்ணீர் திறக்க போராட்டம் ஏதும் நடக்கவில்லையே ஏன்?--
அன்றைய முதல்வர் நிஜலிங்கப்பாவோடு பேசி காதும் காதும் வைத்தமாதிரி..தண்ணிர் திறந்துவிடப்பட்டது..அரசியல் இல்லை...ஆர்பாட்டம் இல்லை..மக்களுக்கு தெரிய வேண்டியது மட்டும் தெரிந்தால் போதும்..அரசியல் ஆதாயத்துக்காக அநியாயமாக மக்களை தவறான வழியில் நடத்தவில்லை..

இன்றைய தவறுகளுக்கு யார் காரணம்?--ஆட்சியாளர்கள்தானே?--அவர்கள்தானே திருத்திக்கொள்ள வேண்டும்..பின் ஏன் நாம் மலை மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள வேண்டும்?--கட்சிகளும் கனவான்களும் செய்து கொள்ளட்டுமே?--

யார் கேட்டார் இந்த சட்டசபை தீர்மானங்களை?--அரசின் முழுபக்க விளம்பரங்களை..பஸ்--ரயில் மறியல்களை.

நேற்றைய “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” ஒரு செய்தி..ஏதோ “synthetic biology "--யாம்...அதிலெ ஒரு மருந்தாம்... computer software இல் செய்வது  போல அந்த மருந்தில் ஏற்கனவே “புரொகிறாம் “ செய்திருப்பார்களாம்..  ..அதை நம் உடலில் செலுத்தினால்..அந்த “புரோகிறாமில்” உள்ளது போலவே நம் மூளை செயல் படுமாம்..

அப்பாடா..இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று கவலையாய் இருந்தேன்..பயந்திருந்தேன்..இப்போது விடிவு கிடைத்து விட்டது..

“சண்டை சச்சரவை உருவாக்காத....ஊழல் புரியாத....நிர்வாகத்திறன் கொண்ட...மக்களை நேசிக்கிற மன கொண்ட ஒரு “புரோகிறாமை “ கொண்ட “வாக்ஸினை “ரெடி பண்ணி  சோனியா---உம்மன் சண்டி---ஜெயலலிதா..கருணாநிதி--லாலுபிரஸாத்--மாயாவதி---மன்மோகன் சிங்---குழுமத்திற்கு செலுத்தினால்....தீர்வுகிடைப்பது நிச்சயம்..

மருந்து வரப்போகிறது..நம் பிரச்சினை தீரப்போகிறது...நன்றி.....சிந்தடிக் பயாலஜி..மீண்டும் மீண்டும் நன்றி--உனக்கு.

Thursday, December 15, 2011

பயம் ---பிராண நாசம்---ஜெ..யும்...சோனியாவும் வளர்ச்சி நாசம்



நீரின்றி வாழ்வே பறிபோகும்--இது தமிழகம்
நீரினால் உயிரே ஜலசமாதி ஆகும்--இது கேரளா

அணு உலை எங்கள் உயிருக்கு உலை வைக்கும்----இது கூடங்குள மக்கள்
வீட்டில் உலை கொதிக்க அணு உலை இயங்க வேண்டும்--இது தமிழக மக்கள்

ஒரு பகுதிக்கு வாழ்வு தரும் நீரும் ---உலையும்--இன்னொரு பகுதிக்கு காலனாக இருக்கிறது--இது உண்மையா?---இப்படித்தானே அந்தந்த பகுதி மக்கள் நம்புகின்றனர்..அதனால்தானே போராட்டம்.

முல்லைப்பெரியார்...இத்தனை லட்சம் மக்களுக்கு உணவளிக்கும் பாசனப்பகுதிகளுக்கான நீர் ஆதாரம்--அது பறிபோனால்..நாங்கள் பட்டினிகிடப்போம்.இது அப்பகுதி மக்கள் வாதம்

முல்லைப்பெரியார் உடையாமல் காக்க --இத்தனை லட்சம் டன்னில் -- கான்கிரீட் சுவர்கள்--கயிறுகள்---கம்பிகள்---ஆகவே கவலைப் படகாரணமில்லை--இது பொறியாளர்கள் அறிக்கை..

முல்லைப்பெரியார்---தமிழகம் சொல்கின்ற பாதுகாப்புக் குறிப்புக்களை பரிசீலித்ததில் --அவைகள் திருப்திகரம்--இது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்திற்கு தண்ணீர் தர எங்களுக்கு ஆட்சேபம் இல்லை--ஆனால் டேம் உடைந்தால்----3 ஜில்லாக்களில் மக்கள் “ஜலசமாதி “ ஆவார்களே--இது சரியா?
இது கேரளா வாதம்

டேம் பகுதி நில நடுக்க தாக்குதலுக்கு உட்பட்ட பகுதி--எந்நேரமும் நிலநடுக்கம் வரலாம்--வந்தால்---டேம் உடைந்தால்---உங்களை காக்கும் நீரே---எங்களை அழிக்குமே--இது நியாயமா?--இது இடுக்கி மக்களின் வாதம்--

மாறி மாறி மாநில அரசாங்கங்களின் அறிக்கை போர்--இரு மாநில மக்களிடையேயும் ஒரு அறிவிக்கப்படாத “போர் சூழல்”
நாம் எங்கே போகிறோம்?--இதற்கு தீர்வுதான் என்ன?  தீர்வு கிடைக்குமா?--சாத்தியமா?--

தீர்வு வந்துவிடக்கூடாது எனபதில் தீவிரமாக இருக்கும் கட்சிகளே ஆண்டன--ஆள்கின்றன--இது ஒரு புறம்..

கூடங்குளம் அணு உலை தொழில் நுட்பம்--- ரஷ்யவின் செத்துப்போன பழைய தொழில் நுட்பம்---அதை செயல் படுத்தி எங்களையெல்லாம் செத்துப்போகச் சொல்கிறீர்களா?--
செர்னோபில்---ஜப்பாந்-அணு உலைகள் வெடிப்பில் ஆயிரக்கணக்கில் மரணம்--லட்சக்கணக்கில் பாதிப்பு.. --தொழில் நுட்ப “கிங் “--ஜப்பானே இப்படி என்றால்...”பிஸ்கோத்து நாம்”-எங்கே?---கூடங்குளத்தில் எங்களை கொல்லவா பார்க்கிறீர்கள் ?--இது கூடங்குள மக்கள்

நம் மின் தேவை “விலைவாசி மாதிரி “ விர்ரென உயர்ந்து வருகிறது.மின் தேவைக்கும் தயரிப்புக்கும் உள்ள பெரும் இடைவெளியே 7--8 மணி நேர மின் வெட்டு...கூடங்குளம் இயங்கினால் நம் வளர்ச்சி உயரும்--இது தமிழக மக்கள்..

பிரச்சினையை சுருக்கினால்....கூடங்குள மக்களும் கேரள மக்களூம் ஓரணி---தமிழக மக்கள் ஓரணி என்று இப்போது எடுத்துக்கொள்லலாமா?  ஓகே..
இந்த இரண்டு பக்கங்களிலும் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் “ SILVER LINE " என்ன?/--

யார் பிரச்சினையை கிளப்பி விட்டார்கள்?--யாருடைய வாதம் சரி ?--ஸ்ட்ராங்?--யாருடைய தேவை ஞாயமானது?  இதற்கெல்லாம் பதில் நிச்சயமாக அவசியமில்லை..தீர்வுக்கு இவை எள்ளளவும் உதவாது...

வேறு வழி-?---உன் உயிருக்கு ஆபத்து---நீ ஜலசாமாதி ஆகிவிடுவாய்---என்று சொன்னால்--உன்னை அணுக்கதிர்வீச்சு கொன்று போடும்-- என்று சொன்னால் ---நம்பினால்----அரசோ--ஆள்பவரோ---தங்கத்தை மூட்டை மூட்டையாக கொடுத்தாலும்---ஹெலிகாப்டரை வீட்டுவாசலில் கொண்டு நிறுத்தினாலும்---மக்கள்  ஏற்றுக்கொள்வார்களா? அவர்கள் மனம்தான் மாறுமா?---
உயிரா?---..சோறா..?-----ஒருபக்கம்----உயிரா..?---வளர்ச்சியா.?--மறுபக்கம்..

உயிருக்கு உத்தரவாதம் தருவோம் என்று யார் சொன்னால் மக்கள் கேட்பார்கள்..அப்துல் கலாம் சொன்னார் --மக்கள் கேட்கவில்லையே--சுப்ரீம் கோர்ட் சொன்னது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லயே---

சோனியா--ஜெ---கருணா போன்ற ...வாக்கில் நேர்மையும் --தூய்மையும் இல்லாத தலைவர்கள் கூட்டமே மண்டிக்கிடப்பதால்... நாட்டின் வளர்ச்சி நாசம்...--அதன் தொடர்ச்சிதான்  போராட்டம்..

உண்மை ஊர்வலம் வர வேண்டும்--பொய்மை மூலையில் கிடத்தப்படவேண்டும்--அப்போதுதான் மக்கள் மனதிலுள்ள பயம் விரட்டப்படும்..ஊருக்குள் உலவும் சிங்கம்---- கூடங்குளமும் --முல்லைப்பெரியாரும் கூண்டிற்குள் போய் அடையும்..

Tuesday, December 6, 2011

சலிக்குமா.... சரணமையப்பா ?


காலையில் எந்த  ரேடியொவை திருப்பினாலும்…சரணமையப்பா பாடல்களே காதைப் பிளக்கிறது..
கார்த்திகை …மார்கழி மாதங்கள் என்பதால்தான் இது...
ரேடியோ..டி.விக்காரர்களும்…துணிக்கடைக்காரகளும் கடைந்தெடுத்த வியாபாரிகள்..

ஜாதி..மதம் பார்க்காத உண்மையான “செக்குலரிஸ்ட் “ அவர்கள்தான்..
அத்தனை பண்டிகைகளையும் “ சரியாக  ஞாபகபடுத்துபவர்கள் அவர்கள்தான்..
”தவறாக “ ஒளி..ஒலி..பரப்புபவர்களும் அவர்கள்தான்..

இப்படி செய்தால்தான் “ வாடிக்கையாளர்கள்—பக்தர்கள் “—திருப்தியுருவார்களோ..?..
இதை கேட்டு..கேட்டு..உண்மையான பக்தர்கள்..கொதித்துப் போகிறார்கள்….
வெறுத்துப் போகிறார்கள்---சோர்வுறுகிறார்கள்…

இப்படி வருடம் முழுதும் விழாக்கொண்டாடி..கடவுளை தூங்க விடாமல்…
கடவுள் பெயரால் நம்மையும் தூங்க விடாததால்தான் ..
சூரிய உதயத்தையே பார்க்காத சூரியன் கட்சிகாரர்கள்..பொங்கி எழுந்து
“இறைவனுக்கெதிராக “ போராட்டங்கள்  நடத்தினார்கள்..

உண்மையில் நம் முன்னோர்கள்..திருவிழாக்களை காலத்திற்கேற்ப திட்டமிட்டே ஏற்படுத்தி இருக்கிறார்கள்..
அதை “ஓவராக “ செய்யும் வியாபாரிகளும் விவஸ்தை கெட்டவர்களும்..
” ஈ.வே.ரா.க்கள்” உருவாக காரணமாகிவிட்டர்கள்..

நாம் “செம்மரி ஆட்டுக்கூட்டமா /” –பிரிட்டிஷ் காரன் சொன்னது சரியா?..

ஒரு டி.வி—ரேடியொவில் “ ஒரு நிகழ்ச்சி பிரபலமானால்..
உடனே அதே மாதிரியான நிகழ்ச்சிகளை ஒவ்வொரு .டி.வி..க்களும் கொண்டுவருகிறதே..ஏன்.?

ஒரு சினிமாவோ—பாடலோ பிரபலமானால்---
அதே மாதிரி ( பெயர் கூட...கிழக்கு வாசல்...கிழக்குக் கரை..) .கதைகளும்..பாடல்களும்
( கொலவெறி..டி..) புற்றீசல் போல் பிரபலமாவது ஏன் ?

“மானாட..மயிலாட..” பிரபலமானால்—
குயிலாடா..கோட்டானாட…--குட்டிப்போடுகிறதே  ..ஏன் ?”

ஒருவர் தென்னை மரம் வைத்தால்….”வெனிலா கன்று “ வைத்தால்..
பொள்ளாச்சி முழுதும்..மரக்கன்றுகளே..ஏன்..?

பம்பு செட்…கிரைண்டர்….பட்டாசுக்கடை----மெடிகல் ஷாப்----
ஒன்று வைத்தால் கோவை முழுதும் பல முளைக்கிறது..எப்படி..?

லயன் டேட்ஸ்…வியாபார ரீதியில் வெற்றி பெற்றால்…
புலி டேட்ஸ்…நரி டேஸ்…என ஊரெங்கும் ஒரே டேட்ஸ் மயம் ..ஏன்?

பட்டி மன்றங்கள்—இப்படித்தான் பிரபலம் ஆனது
—ஆர்க்கஸ்ட்ரா…கலக்கப்போவது யாரு ?—என கோயில் விழாக்கள்—
குத்தாட்டங்களின் கூடாரம் ஆனது இப்படித்தான்..

“ஜெர்ஸி பசு வந்ததும்—நாட்டு மாடுகள் காணாமல் போயின—
காங்கேயம் காளைகள் வந்தது..உள்ளூர் மயிலை காளைகள்—மொட்டை மாடுகள்..மறைந்தே போயின..

கிராம சந்தைகளில் சிம்லா ஆப்பிள்..மெழுகு பூசப்பட்ட வெளிநாட்டு ஆப்பிள்கள்..
உள்ளூர் காய் கனிகள் எங்கே காணாமல் போயின ?—

இந்த “காப்பி அடிக்கும் பழக்கம்—நோகாமல் நோம்பி நூற்கும் பழக்கம் “ எப்போது மறையும்?

இந்த பழக்கத்தால் உங்களுக்கு என்ன நஷ்டம். ?—ஊருக்கு என்ன நஷ்டம்?—
”survaival of the fittest “—சாமர்த்தியம் உள்ளவன் சம்பாதிக்கிறான்
“ உனக்கு ஏன் பொறாமை ?—என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது..

புதுமைகளை செய்யாமல்---சிந்திக்காமல்—புகுத்தாமல்---
”சிந்தனைகளை கடன் வாங்கினால் “----
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ரொம்ப நல்லதிட்டமாகவே தெரியும்..

புதுக்கல்யாணம் ஆறுமாதம் ( ஆசை அறுவது நாள் )--
நல்லாத்தான் இருக்கும்..அதற்குப்பிறகுதான் நம்ம மாப்பிள்ளை..
பெண்ணை அரபு நாட்டுக்கு விற்கும் “ லவ் ஜிஹாத் “ என்று புரியும்…

இதையே “வால் மார்ட் “ தொழிலாக செய்கிறான்..
ஏமாறுவதையே நாம் “தொழிலாக “ கொள்ளலாமா..?

சரி..ஐய்யப்பனிடம் ஆரம்பித்து வால்மர்ட்ல முடிச்சுட்டேனே ....
இது சரிதானா ?—ஆம்..சரிதான்.—

சாமி பேரை சொல்லி கூப்பிட்டாவது..
உங்கள் அகக் கண்களை  திறக்க முடிகிறதா என்று பார்த்தேன்..

சலிக்காது..... சரணமையப்பா…

Sunday, December 4, 2011

என்(ன) குடும்பம் இது..?



சிறைச் சாலையில் தள்ளப்பட்ட “கனியை “--அப்பா..அம்மாமார்கள்--அண்ணன்மார்கள்--சென்று பார்த்ததை புரிந்து கொள்ள முடிகிறது..ஆனால்..

சிறையிலிருந்து “ஜாமீனில் “ வெளிவந்த பிறகு...அப்பாவே “ஏர்போர்ட் “ சென்று வரவேற்றதை புரிந்து கொள்ள முடியவில்லையே---

அரசியலில் இதெல்லாம் சஹஜமப்பா--என்பதா?..
தாரை தப்பட்டை--பாண்டுவாத்யங்கள்---
ஒயிலாட்டம்..கரகாட்டம்---”சிறைப்பறவையே--சீறும் கடலலையே---அடுத்த முதல்வரே...
என தடபுடலான..”பிளக்ஸ்  ..போர்டுகளுடன்”--வரவேற்பு..

அப்பாவும் மகளும் அருகருகே காரில் அமர்ந்திருக்கும் “போஸுடன் “பத்திரிக்கையில் படங்கள்..

இவையெல்லாம் என்ன கொலை பாதகங்களா?--
வரவேற்க போகக்கூடாதா?--
பத்திரிக்கையில் படங்களே வரக்கூடாதா?---

-சரி..இப்படி கேள்வி கேட்பது தவறானவையா?--

நம் வீட்டில் வெளியூரிலிருந்து வரும் நம் குடும்பத்தினரை கூப்பிட்டு வர..ரயில் நிலையம்--ஏர்போர்ட்டுக்கு நாம் செல்வோம்.இது வரவேற்க அல்ல..அழைத்து வர...ஒருவேளை நாம் இல்லாவிட்டால்..ஓட்டுனரை அனுப்புவோம் வண்டியுடன்.அதுவும் இயலாவிட்டால் அவர்களே வாடகை வண்டியில் வீடு வந்து சேர்வர்..
அதுதானே வழக்கம்..

கருணாநிதி குடும்பம் வித்தியாசமானது...தகப்பன்..---மகனை--தம்பி என்று அழைப்பார்...
அப்பனை..மகன்கள்..மகள்..பார்க்கும் போதெல்லாம் மாலை--சால்வை அணிவித்து வரவேற்பர்..
பேரக்குழந்தைக்கு..தாத்தாவை காட்டுவதெல்லாம் டி.வி.க்கள் மூலமே நடைபெரும்..

ஒருவேளை கருணாநிதி முதலமைச்சராகவும் கனிமொழி மத்திய அமைச்சராகவும் இருந்திருந்தால் வரவேற்க செல்வது “பதவி நிமித்தமாக “ என்று சொல்லலாம்.
இது “உறவு நிமித்தமாக” என்றால் --நம் நாட்டில் எந்தக் குடும்பத்தில் இப்படி நடக்கிறது...கிடையாதே..
ராகுல் காந்திகூட சோனியாவை வரவேற்க ஏற்போர்ட் போவதில்லையே..
விஜயகாந்தை வரவேற்க பிரேமலதா செல்வதில்லயே..
”ஜெ”யை வரவேற்க “சசி “ செல்வதில்லையே..(எப்போதும் ஒருவரை
விட்டு ஒருவர் பிரிவதில்லை எனபது வேறு விஷயம் )..

பணத்தாலே--பதவியாலே மட்டும் கட்டுண்டுள்ள  குடும்பத்தில்
..”வரவேற்புக்கள் “நிகழ்த்தப்படாவிட்டால்..உறவுகள் “மரவுரி “தரிக்கும்.--
ராசாத்திக்கள்--ராட்சசிக்களாக மாறுவர்..
அம்மாக்கள் அதிருப்தி அடைவர்...
சகோதர சகோதரிகள்..சதுராடுவர்---

அப்படி ஒரு விஷப் பரிட்சை நடத்தும் நிலையில் கருணாநிதி இன்று இல்லை...

தடபுடல் வரவேற்பு --கருணாநிதியின் இடர்களை சரிசெய்யவே..

இது என்ன குடும்பம் என்கிறீர்களா?--இதுதான் அவர் குடும்பம்..