அப்பப்பா...அப்பப்பா...--என்ன சண்டை...என்ன சண்டை--காலைல எழுந்திருச்சா....எந்த செய்தி “சானலை ‘ திருப்பினாலும்...ஒரே போராட்ட மயம்..
அதுக்கும் ஒரு எல்லை இல்லை...விவஸ்தையும் இல்லை..ஒரு ஊரே மலைமேல ஏறி நின்னு தற்கொலை பண்ணிக்குமாம்..முல்லைபெரியார் பிரச்சினையை தீர்க்கலைன்னா..
இதுவரை மாநில லெவலுக்கு வந்துவிட்டோம்..இனி இது ரொம்ப ஸ்பீடாக மாறி--..மாவட்டம்---ஊரை கிராஸ் செய்து...தெருவுக்கு தெரு சண்டை வரவேண்டியதுதான் பாக்கி..அதுவராதுன்னு உறுதியா சொல்லமுடியல்லியே..
கற்பனை செய்யமுடியாதது எல்லாம் “நிஜத்தில் “ நடக்கும் கலிகாலம் தான் இது.
அது சரி மலையாளி கடைகளையெல்லாம் உடைக்கிறோமே....கேரளாவில் இருக்கும் தமிழனின் நிலையை எண்ணி பார்த்தோமா? -நம்மை பார்த்துட்டு அவங்களும் செய்ய நாம் காரணமாகணுமா?-- நாம் நிறுத்தக்கூடாதா?--”அவனை நிறுத்த சொல்லு..நான் நிறுத்தரேன்னு வசனம் பேசணுமா?--
பால் பொங்கி கருகின வாட வருது...சாம்பார் மணம் மூக்கை துளைத்து ஒரேடியா பசி ஆகுது ---“இதற்கெல்லாம் பக்கத்து வீட்டுக்காரன்தான் காரணம்-- என்று அடித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் போகப்போகிறோமா?--
இதெல்லாம் நமக்கு பழக்கமானதா?--இவ்வாறு நாம் செய்திருக்கிறோமா?--நமக்கு அன்னியமான விஷயங்களை எல்லாம் நாம் தேடி போய் செய்து கொண்டு இருக்கிறோமே..
நம் உறவுகள் எவ்வளவு சௌஜன்யமானது--அதாவது பரிபூரணமானது---விட்டுக்கொடுத்
உலக நாடுகளிலேயே குடும்ப உறவு பூரணமானது நம் நாட்டில் மட்டும் தான்..”வசுதெய்வ குடும்பகம்”--அதான் பக்கத்துவீடு---பக்கத்து மாநிலம்...பின் ஏன் அடித்துக்கொள்கிறோம்.?
ஒரு பிரச்சினைக்கு மாநில சட்டசபைகள் தீர்மானம் போடுகிறது? யாரை திருப்திப்படுத்த?-- யார் தவறை மறைக்க?-- தலைவர்கள் “பாகிஸ்தானை---சீனாவை”--திட்டு
மாற வேண்டியது யார் மக்களா?--மன்னனா?--தவறிழைத்தது யார் மக்களா?--மன்னனா?--நிவாக சீர்கேடு யாரால்?--மக்களா?--மன்னானா?
காமராஜர் முதல்வராக இருந்தபோது காவிரியில் தண்ணீர் திறக்க போராட்டம் ஏதும் நடக்கவில்லையே ஏன்?--
அன்றைய முதல்வர் நிஜலிங்கப்பாவோடு பேசி காதும் காதும் வைத்தமாதிரி..தண்ணிர் திறந்துவிடப்பட்டது..அரசியல் இல்லை...ஆர்பாட்டம் இல்லை..மக்களுக்கு தெரிய வேண்டியது மட்டும் தெரிந்தால் போதும்..அரசியல் ஆதாயத்துக்காக அநியாயமாக மக்களை தவறான வழியில் நடத்தவில்லை..
இன்றைய தவறுகளுக்கு யார் காரணம்?--ஆட்சியாளர்கள்தானே?--
யார் கேட்டார் இந்த சட்டசபை தீர்மானங்களை?--அரசின் முழுபக்க விளம்பரங்களை..பஸ்--ரயில் மறியல்களை.
நேற்றைய “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” ஒரு செய்தி..ஏதோ “synthetic biology "--யாம்...அதிலெ ஒரு மருந்தாம்... computer software இல் செய்வது போல அந்த மருந்தில் ஏற்கனவே “புரொகிறாம் “ செய்திருப்பார்களாம்.. ..அதை நம் உடலில் செலுத்தினால்..அந்த “புரோகிறாமில்” உள்ளது போலவே நம் மூளை செயல் படுமாம்..
அப்பாடா..இந்த நாட்டை திருத்தவே முடியாது என்று கவலையாய் இருந்தேன்..பயந்திருந்தேன்..இப்
“சண்டை சச்சரவை உருவாக்காத....ஊழல் புரியாத....நிர்வாகத்திறன் கொண்ட...மக்களை நேசிக்கிற மன கொண்ட ஒரு “புரோகிறாமை “ கொண்ட “வாக்ஸினை “ரெடி பண்ணி சோனியா---உம்மன் சண்டி---ஜெயலலிதா..கருணாநிதி--
மருந்து வரப்போகிறது..நம் பிரச்சினை தீரப்போகிறது...நன்றி.....சிந்
No comments:
Post a Comment