தைத் திங்களா தைப் பொங்கலா
உழவர் திருநாளா தமிழர் திருநாளா
மகர சங்கராந்தியா தமிழ் புத்தாண்டா
ஒரேஒரு திருநாள் புயலாய் சுழலுதுபார்
எத்தனை பெயர்களால் சொன்னாலும்
சூரியனுக்கு உகந்த நாள் இது
அறுவடை பார்த்த விவசாயி
ஆண்டவனுக்கு படைக்கும் நாள் இது
அவனுக்கு உழைத்த கால்நடைக்கு
விருந்து படைக்கும் நாள் இது
இதற்குமேல் இதில் ஏதாவது உண்டா
சூரியன் தன் பாதையை மாற்றும் நாளிது
தமிழன் தலைவிதி மாறநினைக்கும் நாளிது
பேஸ்புக் டுவிட்டரில் மற்றவனை திட்டும் நாளிது
தமிழ் எழுத படிக்க தெரிந்துவிட்டால்
தமிழ் கூறும் நல்லுலகு எனக்கே சொந்தமா
மாற்று மொழிகாரனெல்லாம் எதிரியென்ற பந்தமா
சிந்தனையும் பேச்சுக்களும் “வெறிக்குள்ளே” தஞ்சமா
“ஒன்வே” சிந்தனை ”நோஎண்ட்ரி” வாதங்கள்
தமிழனை தளர வைக்கும் அறிவுசேரா கருத்துக்கள்
சித்திரை நித்திரைக்கு போகும்
தையே அரியணை ஏறும்
மார்க்ஸீய பெரியாரீய தமிழீய
இழி(ளி)க்கும் ஈய சிந்தைகள்
ஒருகருத்து ஒருபுறமட்டுமே உடைத்ததா
மறுபுறமும் பார்க்க மறுப்பதேன் நண்பா
எழுத பக்கங்கள் கிடைத்து விட்டால்
படிக்க பாமரன் இருந்து விட்டால்
வாந்தி எடுத்து தள்ளுகிறீர்களே
வயிறு வெந்து பிளிறிரீர்களே
ஊடகங்கள் இணைய தளங்களை உபயோகியுங்கள்
அறிவையும் அன்பையும் குழைத்து ஊட்டுங்கள்
எண்ணங்கள் பேச்சுக்கள் எதிர்கால சந்ததிகள்
இணைந்துவாழ உயர்ந்துநிற்க உதவிபுரியுங்கள்
மகர சங்கராந்தியில் மாற்றி யோசிப்போம்
உழவர் திருநாளில் உயர்ந்து சிந்திப்போம்
No comments:
Post a Comment