Pages

Sunday, April 29, 2012

அபிஷேக் சிங்வியும்----அய்யோ பாவம் பங்காரு லட்சுமண்ணும்



பா.ஜ.க.காரன் எதை செய்தாலும் வெளிப்படையாகவே செய்வான்..5000 ரூபாய் லஞ்சம் வாங்கினாலும் “கேமரா “ முன்புதான் வாங்குவான்..இப்படி ஒரு கிண்டல் விமர்சனத்தை “சோ” கூட எழுதியதுண்டு ..

ஒரு காங்கிரஸ்காரர் சொன்னார்..”நீங்கள்ளாம் நீலப்படத்தை சட்டசபையில் பார்த்ததற்கே பிடிபட்டீர்கள்..எங்கள் ”அபிஷேக் சிங்வி “ நீலப்படத்துல நடிச்சதற்கே பிடிபடல்ல..என்றார்..பாஜக சாமர்த்தியம் அவ்வளவுதான் என்று என்னால் திருப்பி பதில் சொல்ல முடியவில்லை.

2ஜி..ஆதர்ஷ்...காமன்வெல்த்...பொபர்ஸ்...என நடந்த உண்மையான ஊழல்களில் சிக்கிய காங்கிரஸ் காரர்களின் மீது வெறும் “கேஸ்” மட்டுமே நடந்து வருகிறது.
ஆனால் நடக்காத பேரத்தில்---கிடைக்காத ஆர்டரில்...இடைக்கால நிவாரணம் ஒரு லட்சம் வாங்கியதாக பங்காருக்கு 4 ஆண்டு சிறை..ஒரு லட்சம் அபராதம்..ப.சிதம்பரத்தின் சிபிஐ கோர்ட்டுதான் பாஜக விஷயத்தில்..என்ன  பாஸ்ட்...என்ன நேர்மை...

நோ எண்ட்ரில போய் பிடிபட்டவனும் கொலைகாரனும் “குற்றம் புரிந்தவர்கள் தான்”--சட்டப்படி தவறிழைத்தவர்கள்தான்..இருவரையும் ஒன்றாக பார்க்க வேண்டுமென்பது கொலைகாரன் தரப்பு வாதம்..அதுதான் சரி என்பதும் “மீடியாவின் “ வாதம் ..காங்கிரஸ் காரனை காப்பாற்றுவதற்காகவே அவதரித்தவர்கள் அவர்கள்.

இருவருக்கும் தண்டனைதான் வேறு பாடு..அசிங்கம் ..அவமானம்..மாறுபடாது என்றால்...நோ எண்ட்ரி காரன் கொலைபுரிய துவங்கிவிட்டால்..மனீஷ் திவாரிகள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமே..

இப்போது ஒரு புதுமையான பழக்கம் பரவ ஆரம்பித்துள்ளது..

”அவனை நிறுத்தச்சொல்லு..நான் நிறுத்தறேன்.”
.
”நீ மட்டும் என்ன யோக்கியனா..என்ன யோக்கியன்னான்னு கேக்க”

”நீயும் ஒழுங்கில்லை..நானும் ஒழுங்கில்லை..”

”I AM NOT OK...YOU ARE NOT ALSO OK”..

மனோதத்துவப்படி இது குற்றம் புரிவோரின் மனநிலை
அதனால் இதை “காங்கிரஸாரின் மனநிலை” என்றும் சொல்லலாம்.

No comments: