எனக்கு இதை கொடு...அதைக் கொடு...என அரசாங்கத்திடம் கேட்டு வாங்க எத்தனையோ சங்கங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை..
“நான் உயிரோடு இருக்கிறேன்...என்னை நம்பு...
நான் சாகவில்லை..என்னை நம்பு..
நான் பேயல்ல என்னை நம்பு..”--
என்கிற “மிரிடெக் சங்கம்”--(MIRITEK SANGH ")
“செத்தவர்கள் சங்கம் “..ஒன்று உ.பி.யில் உள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் தான்... இது வெளியே தெரிந்தது.சந்தோஷ் குமார் சிங்..(32 ) நம்மூர் பத்மராஜன் மாதிரி..( வி ஐ. பி. க்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிடுபவர் )..ஜனாதிபதி தேர்தலில் மனு தாக்கல் செய்ய சென்றார்,,பத்மராஜன் மாதிரி தேர்தல் தோறும் நின்று விளம்பரம் தேட அல்ல..தான் செத்துவிட்டதாக “ பொய் சர்ட்டிபிகேட் “ கொடுத்த அரசாங்கத்துக்கு ..தான் உயுருடன் இருப்பதாக,,காண்பிக்க..
அடையாள அட்டை கேட்டார்கள்...செத்தவனுக்கு ஏது அடையாள அட்டை?..வேட்பு மனுதர மறுத்தார்கள்...அதனால் மனு தாக்கல் செய்யமுடியாமல் வெளியே வந்த போதுதான் “ விஷயம் வெளியே தெரிந்தது”..
உயர்சாதி சந்தோஷ் குமார் சிங்..ஒரு தலித் பெண்ணைக்கூட்டிக்கொண்டு ஒடிப்போனதால் ,,ரேஷன் கார்டிலிருந்து நீக்கப்பட்டு..அரசின் ரெக்கார்டுகளில்...” சவமாக்கப்பட்டார்”
இதே மாதிரி ..” ஒரு வழக்கில் “..சிக்கி --உள்ளே போன ராம் நாராயணனும்...குடும்பச்சண்டையி
உத்திரப்பிரதேசம் முழுதும் இம்மாதிரி 50,000 பேர்கள் அரசின் ரெக்கார்டுகளிலிருந்து “மாயமாகியுள்ளனர்”
தேசிய மனித உரிமை கமிஷன் முயன்ற பிறகு ஒரு 300 பேருக்கு மட்டும் “ உயிர் பிச்சை “ கொடுத்தது அரசாங்கம்..
இன்னும் ”பிணமாகவே வாழும் “ லால் பிஹாரிகளும்..சந்தோஷ் குமார்களும் நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களாம்..
இவர்கள் ஆரம்பித்த “செத்தவர்கள் சங்கம் “ இம்மாதம் 36 ஆவது “செத்த ஆண்டை “ கொண்டாடுகிறதாம்.
அதி சரி ...உயிரோடு இருக்கும் நாம் ..சோனியா ஆட்சியில் பிணமாக அல்லவா வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..
அதற்கு என்ன செய்வது?..
“பேய் ஆட்சி செய்தால் பிணமாகும் வாழ்க்கைதானே”
2 comments:
அட இது வேறயா? பினிசிங் கேள்வி???????
கவனிக்கப்பட வேண்டிய விடயம் ................
" இருக்கிறோம் என்று அடிகடி நினைவூட்ட வேண்டும் இல்லைஎன்றால் இறந்தவர்கள் வரிசையில் இணைத்துவிடுவார்கள் "
Post a Comment