Pages

Sunday, July 22, 2012

பழக்கு........மாறும்..பழக்கம்

திருமணம் ஆகி புறப்பட்டுப்போன என் மகள்..அமெரிக்காவிலிருந்து 2/12 ஆண்டுகள் கழித்து வந்திருந்தாள்.

கொஞ்சம் கலர் கூடியிருந்தாள்..மற்றபடி மாற்றம் ஒன்றும் இல்லை.
நுனிநாக்கு ஆங்கிலம் இல்லை.. What is this wet toilet ?-இல்லை..நம் கலாச்சாரத்தை மீறிய மேற்கத்திய டிரஸ் இல்லை.


எங்கள் வீடு முழுவதையும் இரண்டு நாள் முயன்று தானே கழுவி சுத்தம் செய்தாள்.ஆண்டுகளாக பீரோவில் தூங்கிய துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டு கரண்ட் பில்லை ஏற்றினாள்.
வீட்டுக்குள் வைத்திருந்த குப்பை போடும் தொட்டியை கூட அருமையாக சுத்தம் செய்து புதிய பொலிவு கொடுத்தாள்.

வீட்டிற்கு பின்புறம் உள்ள ஒரு மருந்து கடைக்கு போக ”ஒரு நோ எண்ட்ரி” –குருக்கு வழி உள்ளது.அதை தவிர்த்து ரோடு சுற்றி போனாள்.
தொண்டை கரகரப்புக்கு வாங்கிய மருந்தை வாயில் போட்டுக்கொண்டு அதன் “ராப்பரை”..தன் கைப்பைக்குள் போட்டு ( ரோட்டில் வீசாமல் )வீட்டுக்கு வந்து குப்பை தொட்டியில் போட்டாள்..

இவையெல்லம் அடிப்படை விஷயங்கள் தானே..இதில் என்ன ஆச்சரியம் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

ஆனந்த விகடனின் பழைய பதிப்பில் ஒரு பேட்டியில் பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயா.அவர்கள்..”பல் தேய்த்து விட்டுத்தான் காப்பி குடிக்க வேண்டும் “ என்பதை தனக்கு எம் ஜி ஆர். தான் கற்றுக்கொடுத்தார்.என குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படை விஷயங்களை கூட மற்றவர்கள் சொல்லி தெரிய வேண்டியிருக்கிறதா? அதற்காக  அமெரிக்கா போக வேண்டுமா? நாம் கற்றுக்கொடுப்பதில்லையா?

கற்றுக்கொடுக்கிறோம்..ஆனால் கடை பிடிப்பதில்லை..கடை பிடித்தாலும் தொடர முடிவதில்லை..தொடர்ந்தால் நம்மை பைத்தியக்காரனாக பார்க்கிறார்கள்.

அதெல்லாம் சரி..அனைவரும் தொடர..அரசு செலவில் அமெரிக்கா போய் வருவோமா?..
அங்கே போய் வந்தாலாவது மாறுவோமா?
இதற்கு அம்மா உதவுவாரா?

1 comment:

கோவை நேரம் said...

அப்போ நமக்கும் ஒரு டிக்கெட் எடுத்திடலாம்...