வரலாறு காணாத தோல்வியை
காங்கிரஸ் சந்திக்கும்---
மூணாவது அணி கானல்நீர்----என்ற----
அத்வானியின் கருத்தை மீடியா ஏன்
மாற்றிச்சொன்னது?
”நடிகை ஹேமமாலினி
வீட்டில் வாஜ்பாய்”—என பிலிட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா 1970 களில் எழுதியது எனக்கு நினைவுக்கு
வருகிறது…ஆனால்..நடந்தது என்ன?
ஹேமமாலினி பங்கேற்ற
நாட்டிய நாடக நிகழ்ச்சியில் வாஜ்பாயும் பங்கேற்றார்..இது எப்படி திரித்து கூறப்பட்டது..அந்த
எழுத்து எப்படி உள்நோக்கமானது..
அதுவே இப்போதும்
நடந்தேறியுள்ளது..ஆனால்..வேறு வடிவில்..அத்வானிக்கு..
இதுவரை மோடியை
துரத்திய “மீடியா” இப்போது பாஜகவை அத்வானிமூலம் துரத்த முயல்கிறது.
அவர் எழுதிய கருத்தை
பாதி பாதியாக…. முன்னுக்குப் பின் முரணக..போட்டிருப்பதும்.. அதுவும் நாடு முழுதும்
பாஜகவை தூற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் ஒரே தலைப்பிட்டு போட்டிருப்பதும் –தோல்வி ஜுரத்தில்
உள்ள காங்கிரஸின் சகுனி வேலை..
பேசினால்.. இல்லை
என்று சொல்லலாம்..மறுக்கலாம்..தவறாக எழுதிவிட்டார்கள்..எனலாம்..அத் வானி தனது “பிளாகில்”
எழுதியது…ஆதாரம்..அதை திரித்து போடும் “மீடியாக்களின் “செயல்.. தடுக்கமுடியாத பாஜக
வெற்றி வாய்ப்பினால் ஏற்பட்ட பயம்..
நேற்றைய மீடியாக்களின்
செய்தியில் மாபெரும் சூது உள்ளது என்பதற்கு ஆதாரம்…
நாடுமுழுதும் ஒரே தலைப்பிட்ட செய்தி—அதற்கு..உடனே
காங்கிரஸிடமிருந்து பதில்..
எதை தின்றால் பித்தம்
தெளியும் என்றிருந்த காங்கிரஸின் காட்டில் சிறிது தூரல்..அத்வானியின் “பிளாகிற்க்குள்”
சென்று படித்து பார்த்தால்..அத்தனை உண்மையும் வெளிப்படும் ..காங்கிரஸ் மீண்டும் வரண்டு
போகும்.
பிரதீபா பட்டீலின்
பிரிவுபசார விழாவில் இரண்டு காங்கிரஸ் மூத்த மந்திரிகள் அத்வானியிடம் உளறிக்கொட்டியதை
பேர் சொல்லாமல் எழுதுகிறார்.
**2014 தேர்தலில்
காங்கிரசோ—பாஜகவோ “தனி மெஜரிட்டி பெரும் கூட்டணிகளை “ அமைக்க முடியாது.
** 2013—அல்லது
14 இல் எப்போது லோக்சபா தேர்தல் வந்தாலும்..அமையும் அரசு மூன்றாவது அணி அமைக்கும் அரசு
மாதிரிதான் இருக்கும்..
இவை காங்கிரஸ்
மந்திரிகள் உதிர்த்த பொன்மொழி..இதில் காங்கிரஸ் தோற்க்கும் என்பதைஒத்துக்கொண்டிருக்கிறார் கள்.
இதற்கு அத்வானியின்
பதில்---
”உங்கள் கவலை எனக்கு புரிகிறது..ஆனால் உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை
–( அதாவது பாஜகவும் தோற்கும் என்பதில் )
சரி தன் கருத்தாக
அத்வானி என்ன சொன்னார்…அவரே எழுதுகிறர்.
“**கடந்த 25 ஆண்டுகளாக
டெல்லியில் அமையும் அரசுகள் காங்கிரசோ—பாஜகவோ ஆதரவின்றி அமையவில்லை.
** எனவே மூன்றாவது
அணி (மாதிரி) என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது காங்..மூத்த
மந்திரிகளின் கருத்துக்கு பதிலாக அத்வானி எழுதியுள்ளார்..
மூனாவது அணி பெரும்
தோல்வியே என அதன் பிரதமர்கள் பெயரை குறிப்பிட்டு பின்னால் இரண்டு பாராக்களில் விளக்கியுள்ளார்.
” **மத்தியில் பாஜகவோ—காங்கிரசோதான் நிலையான ஆட்சியை
தரமுடியும்.
** ஆனால் ஐ.மு.கூ1..ஐ.மு.கூ2
அரசின் மிகக்கேவலமான நிர்வாகம் காரணமாக காங்கிரஸ்.. தோல்வி பயத்தில் பரிதவிப்பதை என்னால்
உணர முடிகிறது..”
””**எமர்ஜென்சி
காலத்திற்கு பிறகு 1977 தேர்தலில் காங்கிரஸ் மிகபெரிய தோல்வியை சந்த்தித்தது..வருகின்ற
லோக்சபா தேர்தலிலும்-- 1952 க்கு பிறகு வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்..”—என
எழுதியுள்ளார்..
இதில் பாஜக தோல்வி
எங்கே வந்தது..3வது அணி ஆட்சி எங்கே வந்தது..?
திரித்துக்கூற எல்லை வேண்டாமா..மீடியா
தம்பிகளா?
கேக்குறவன் கேனையனா
இருந்தா நண்டுகூட “நானோ கார்” ஓட்டுமாம்..
அடப்போங்கப்பா..வேற
வேலைய பாருங்க…
2 comments:
வணக்கம்
அந்த பிளாக் லிங்க் கொடுங்களேன் ப்ளீஸ்
தெளிவான விளக்கம் ,நன்றி அண்ணா ,
அத்வானி ஜி எழுதிய link இருந்தால் சிறப்பாக இருக்கும் .ஆங்கிலம் தெரிந்தவர்கள் படித்துகொள்ளலாமே !
கேக்குறவன் கேனையனா இருந்தா நண்டுகூட “நானோ கார்” ஓட்டுமாம்..
அருமை! அருமை !
இத்தனை பொருளாதார சீர்கேடுகளுக்கு யார் காரணம் ? மக்களுக்கு தெரியும் ! உலக சந்தை தாக்கம் இருந்தாலும் ,மறு சீரமைக்க வெறும் பக்கம் பக்கமான அறிக்கைகள் வாசித்து என்ன பயன் ?
Post a Comment