என் நண்பரின் பேரனிடம்
”கை”.ய்யில் எந்த பொருளை கொடுத்தாலும்..கீழே போட்டு உடைத்து விடுவான்..பொருளின் “வலிமையை”
சோதிக்க அவனிடம் கொடுத்தால் போதும்.அவன் “ கை” பட்டு பொருள் உடையவில்லை என்றால் அது
ஐ.எஸ்.ஓ.—ஐ.எஸ்.ஐ..சான்றுக்கு மேலானது..
மெஜரிட்டியே இல்லாமல்..ஒரு
மைனாரிட்டி சர்க்காரை உயிர்போகாமல் காப்பது எப்படி –(நரசிம்மராவ்..அரசு)…
மாநிலமே(தெலுங்கானா-ஆந்திரா) தீப்பற்றி
எரிந்தாலும் ஆட்சி கவிழாமல் இருக்க வைப்பது எப்படி?---
ஆதர்ஷவில் இருந்து
2-ஜி- ஊழல்வரை—எவ்வளவு “ஸ்கேம்கள்” வெளிச்சம் போட்டாலும்” தைரியமாக முகத்தை காட்டிக்கொண்டு
வெளியில் நடமாடுவது எப்படி”?
தற்போது வசமாக
மாட்டிக்கொண்ட “நிலக்கரி ஒதிக்கீட்டு” ஊழலிலும்..அதனால் பார்லிமெண்ட் முடக்கத்திலிருந்தும்
தப்பிப்பது எப்படி ?” என்கிற கலைகளிலும்…புதிய பாடம் எழுதி—புதிய சிலபஸ் உருவாக்கி…பி.ஹெச்.டி—பட்டம்
பெருவது எப்படி?---
என உலகிற்கே ஊழலில் வழிகாட்டியாய் இருக்கும் காங்கிரசின் நெகட்டிவ்
திறமையை பார்த்து மயிர்கூச்செரிகிறது..
10 நாட்களுக்கு
மேலாக பார்லிமெண்ட் நடக்கவில்லை…பிஜெபியின் இந்த அரசியல் வெற்றியை எப்படி முறியடிக்க
முடியும்?—என திட்டம் போட்டது காங்கிரஸ்..தனது ஒவ்வொரு பழைய--- பதுக்கி வைத்த பாடங்களை
தூசி தட்டி எடுத்தது காங்கிரஸ்..
முதலில் தன் கட்டுபாட்டில்
உள்ள சிபிஐ கோர்ட்டின் குஜராத் நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக வாசித்து..ஒரு
களயபரம் உண்டு பண்ன முயற்சி செய்தது…ஆனால் எதிர்பார்த்த அளவு அதில் வெற்றி பெறவில்லை..
நிலக்கரி ஒதிக்கீடு
ஊழலில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வலியுருத்தியதன் பேரில்தான் “ஸ்டீரிங் கமிட்டி”
நடைமுறையை பின்பற்றினோம் என்றது,,
ஆனால் நிலக்கரி
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிரது..ஸ்டீயரிங் கமிட்டி சட்டபூர்வ அந்தஸ்து இல்லாதது..அதை
மத்திய அரசு “பைபாஸ்” செய்ய முடியும்..என்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தவுடன் காங்கிரசின்
ஆட்டம் அடங்கிப்போனது..
ஆனாலும் முழுமையாக
அடங்கவில்லை..எந்த விஷயத்தை எடுத்தால் எல்லோரும் “வாய் மூடுவர்—பிஜேபி அடங்கும்”—என
“ரூம்” போட்டு யோசித்து—இப்போது SC/ST அதிகாரிகள்
பதவி உயர்வு சட்டத்தை கைய்யில் எடுத்துள்ளது..
எல்லோரும் கேட்கும்
கேள்விதான்..காங்கிரசுக்கு இந்த மசோதா மீது திடீரென ஏன் ஆவல்—பாசம்—இது பற்றி இத்தனை
ஆண்டுகளாகளில் குறிப்பாக—இந்த ஆண்டில்-- அதிலும் குறிப்பாக இந்த மழைக்கால கூட்டத்தொடரில்..எந்த பேச்சும் இல்லையே..இப்போது
திடீரென ஏன்?..இப்படி?—
2—3—நாட்களாக இந்த
“காங்”(சா)-ணக்கிய கும்பல் ராப்-பகலாக ஒர்க்
பண்ணி..இந்த ”ஐயிட்டத்தை”—தேடிப்பிடித்து… இன்று எல்லா கட்சிகளின் காங்—எதிர்ப்பை முடக்கி—அவர்களை
திருப்பி முடக்கும் வித்தையை துவக்கி---புதிய விறு விறுப்பை உருவாக்கியுள்ளது..
மக்களுக்கு நல்லாட்சி
தர சிந்திக்கும் பாஜக ஒரு பக்கம்—ஆட்சியை பிடிக்க ஆலாய் பறக்கும் மற்ற கட்சிகள்..மறு
பக்கம்…
இதில் ஆட்சியை
தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே செய்யும் காங்கிரசின் மறு பக்கம் மீண்டும் வெளியே தெரிந்து
விட்டது..
இதுவும் எத்தனை
நாளைக்குத்தான் பார்ப்போமே….
5 comments:
பார்ரா.....
பாப்போம் பாப்போம்
எப்படி இழுத்து புடிச்சாலும் ஒரு வருஷம் தான அண்ணா ! 10 வருஷம் குப்ப கொட்டியாச்சு !இனி எவன் எப்படி போனா என்ன ? அவன்,அவங்க வயிறு போதுமான வரை நிரம்பியாச்சு !
அன்புள்ள அண்ணா,
காங்கிரஸ் போன்ற இழி பிறவிகளை சாணக்கியருடன் இணை வைக்க வேண்டுமா?.இந்த
இட ஒதுக்கீடு மசோதாவே முழு அயோக்கியத்தனமானது என்று நினைக்கிறேன்.பதவி
உயர்வு என்பதாவது தகுதி அடிப்படையில் இருக்க வேண்டும் என
நினைக்கிறேன்.எது எதில் தான் இடஒதுக்கீடு என்பதற்கு ஒரு அளவுகோள்
தேவையில்லையா? இது போன்ற முரணான சட்டங்களை பாஜக ஆதரிப்பது சரியல்ல என்றே
தனிப்பட்ட முறையில் எண்ணுகிறேன்.இட ஒதுக்கீடு பேசுபவர்கள் எல்லாம் சமூக
நீதிக்காரர்கள் என்றும் மற்றயவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்றும்
பீம் ஸ்ருதியை பின்பற்றும் அனைவராலும் பரப்பப்படுக்கிறது.இதை நான்
தீவிரமாக எதிர்க்கிறேன்.தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்.
அன்புடன்,
ராஜமாணிக்கம்.
மண்ணு மோகன்சிங்க் காலத்தில் இன்னும்
என்ன என்னவெல்லாம கிளம்பப் போகிறதோ?
இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
அரசியல் அலசல் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிறப்பான ஆக்கம் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .
Post a Comment