Pages

Wednesday, October 24, 2012

மோடி ராஜ்ஜியம் –ராம ராஜ்ஜியம்---1

கடந்த வாரம் பணி நிமித்தமாக குஜராத் போயிருந்தேன்…மோடி மீதும் பா.ஜ.க மீதும் சேற்றை வாரி இறைக்கும் “மீடியா” வும்,,காங்கிரசும் சொல்லுவது உண்மைதானா?..என்பதை கண்ணால் கண்டுவிடவேண்டும் என்பதை மனம் சொல்லிக்கொண்டிருந்தது..

குஜராத் தலைநகர் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல்.ஒவ்வொரு வினாடியையும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தேன்..கண்ணால் காண்பது எல்லாம் மனதுக்குள் “போட்டோ” பிடித்து வைத்துக்கொண்டேன்.
தங்குமிடம் செல்ல “ஆட்டோவையே”.. தேர்வு செய்தேன்..பேச்சு கொடுக்கலாமல்லவா?..ஊர் நிலவரம் தெரிந்து கொள்ளலாமல்லவா?



“மஹிந்தர் ராஜ்புட்”..ஆட்டோவாலா..(அங்கு அப்படித்தான் நாமகரணம்)…பேசுகிறார்…”மோதி..ராஜ்ஜியத்தில் ( குஜராத்தில் “மோடி”யை..”மோதி” என்றுதான் உச்சரிக்கிறார்கள் )நாங்கள் சுதந்திரமாக ஆட்டோ ஓட்ட முடிகிறது…ஒரு பகுதியிலிருந்து முன்னமெல்லாம் நினைத்த போது செல்ல முடியாது..மாதத்தில் பாதி நாள் “ஊரடங்கு உத்தரவு—144 தடை “ இருக்கும்..சில பகுதிகளில் இந்த தடை மாதக்கணக்கிலும் நீடிக்கும்..அதனால் எங்களுக்கு நோட்டம் இருக்காது..வருமானம் இருக்காது..
இப்போது அதெல்லாம் “பழங்கதை”..மீண்டும் இந்த தேர்தலில் “மோதிதான்”ஜெயிப்பார்..அதுவும் பெரும் மெஜாரிட்டியோடு>>ஏனெனில் அவர்தான் எங்களுக்கு “பாதுகாப்பு”..

ஆரம்பமே நல்லா இருக்கே..போகப்போக எப்படி இருக்கும்..என் ஆர்வம் அதிகரித்தது..பார்த்துவிடுவோம்.என .தங்குமிடத்துக்கு வந்தவுடன் ஓட்டல்காரரை கேட்டேன்..
“ 24 மணி நேரமும் “தரமான மின்சாரம்”.( லோ..வோல்டேஜ்..இல்லை)..எங்கள் ஓட்டலில் யு.பி.எஸ்.இல்லை..ஜெனெரெட்டர் இல்லை..24 மணிநேரமும் “டேப்பை” திருகிணால் தண்ணீர்..அதும் குடி தண்ணீர்.”மோதி சாப்” வந்தவுடன் நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்.அரசு அதிகாரிகளிடமிருந்து எந்த “டார்ச்சரும்” இல்லை..”

நான் நாடு மாறி போய் விட்டேனா?—இல்லை கனவு கண்டு கொண்டிருக்கிறேனா?—கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்..
மனம் சும்மா இருக்க விடவில்லை..சாலையில் சென்று “ஒரு பாணிபூரி வாலாவை” பார்த்தேன்..கேட்டேன்..கேள்விக்கணைகளை தொடுத்தேன்..

“நான் ராஜஸ்தானை சேர்ந்தவன்..குஜராத் வந்து 20 வருஷமாகிறது..எனக்கு 2 பெண் குழந்தைகள்..பள்ளியில் படிக்கிறார்கள்..படிப்பு—புத்தகம்—சீருடை—மதிய உணவு இலவசம்..(நம்மூர் பாஷை படி “விலையில்லா”) இப்போது அரசே “இலவச…விலையில்லா..ஸ்கூல் பஸ்” குழந்தைகளை வீடுதேடி வந்து கூட்டிப்போகிறது..”
“மோதி” வந்த பிறகு சாலையில் வியாபாரம் செய்யும் என்னிடம் இதுவரை எந்த போலீஸும் “கை நீட்டியதில்லை”
சலை வியாபாரிகள் ரோட்டை ஆக்கிரமிக்காது..அசுத்தப்படுத்தாது..வியாபாரம் செய்தால்..மோதி சர்க்கார் ஒன்றும் செய்யாது..குஜராத்தில் வெளிமாநிலத்துக்காரர்கள் நிம்மதியாக வாழ முடிகிறது…இந்த தேர்தலில் “வெளிமாநில ஓட்டுக்கள் முழுதும்” மோதிக்குத்தான்..”என கொட்டித்தீர்த்தார்.

ஆஹா..நரி முகத்தில் முழித்துவிட்டுத்தான்..ஆமதாபாத்..பிளைட் ஏறினோம் போலிருக்கிறது..என நினைத்துக்கொண்டேன்.படுக்கப்போகும் முன் ஒரு கிளாஸ் “தூத்”.(பால்) ஆர்டர் செய்தேன்..வந்தது..ஒரு கண்ணாடி டம்ளரில் சுமார் அரை லிட்டருக்கு பக்கமிருக்கும்.குடித்தால் கிளாஸிலிருந்து பால் வெளியெ வர வெட்கப்பட்டது. அவ்வளவு “திக்னஸ்”—கள்ளிச்சொட்டாய்”” ”அமுல்” தந்த  தேசமல்லவா..பாலுக்கு என்ன குறைச்சல்..

அடுத்த நாள் என் வேட்டையை தொடர்ந்தேன்..இம்முறை நம் தமிழ் நண்பர்களை பார்த்துவிடுவதென்று,,
ஆமதாபாத் தமிழ்ச்சங்கத்தலைவர் ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்தேன்..அவர் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நம்மை அழைத்துச் சென்றார்…குஜராத்தின் “தமிழ்க்குரல்” எப்படி இருக்குமோ என பயந்தேன்..ஆனால் பார்த்தவுடன்..-கேட்டவுடன்....வியந்தேன்..

“மோடி ராஜ்ஜியம்—ராம ராஜ்ஜியம்---2”--தொடரும்

1 comment:

கோவை நேரம் said...

நமக்கு ஒரு மோதி வேனும்...இல்லேனா நாடு குட்டிசுவருதான்,,,