இந்துப் பத்திரிக்க்கையில்
உங்கள் கட்டுரை வரவேண்டுமா? அது ஒன்றும் கஷட்டமான விஷயம் இல்லை..நரேந்திர மோடியை தரக்குறைவாக
திட்டி எழுதுங்கள்..அது கட்டுரை என்ற பெயரில் பிரசுரமாகிவிடும்.அப்படித்தான் ஊர் பேர்
தெரியாத பலரிந்-..இன்றுகூட பத்ரி ரெய்னா என்பவர் உட்பட கட்டுரைகளை இந்து பிரசுரித்து
வருகிறது..அப்படி வந்த பல வார்த்தைகளை படித்ததனால் கிடைத்த”ஞானமே” இக்கட்டுரையின் கரு.
புது புதிதாக வார்த்தைகளை
கண்டுபிடிப்பதில் மீடியாக்கள் கில்லாடிகள்.முதலில் “மதவாதத்தை” –கண்டு பிடித்தார்கள்…அதற்கு
எதிர்ப்பதம் தெரியாதமல் தவித்த போது ஒரு அறிவு ஜீவி ஓடிவந்து ”சுக்குலர்”—மதசார்பற்றவன்—என் பதை
வீசி எறிந்தார்.
இரண்டிலும் சிக்கியவர்கள்
“சூடோ செக்குலர்” என்ற வார்த்தையை தேடிக்கண்டு பிடித்தனர்.
இப்படி வார்த்தை
ஜாலங்கள் மண்ணில் ஆடியது போதாதென்று விண்ணில் ஆடி அது தற்போது குஜராத்தில் கீழிறங்கியது.
அதுதான் “மெஜாரிடி
கம்யூனலிசம்”—பெரும்பான்மை மதவாதமாம்..இதற்க்கு எதிப்பதம் சொல்லாமலே தெரியுமல்லவா?
ஆம் அதுதான் சிறுபான்மை மதவாதம்..
கோத்ரா கலவரத்திற்கு
பின்பு குஜராத் மயான பூமியானது..என்று சொல்லி மீடியாக்கள் மோடியை துரத்தின..மோடி ஓடினார்…
நரோடா பாட்டியா..பெஸ்ட்
பேக்கரி வழக்கு—ஷொராபுதின் வழக்கு என கேஸ்மேல் கேஸ்..மோடியை துரத்தியது....மோடி ஒடினார்..
2007 தேர்தலில்
இரை கிடைக்காமல் தவித்த இதே பூதங்களை தூக்கிவீசிய மக்கள் மோடி மீது வெற்றி மாலையை சூடினார்கள்.
காங்கிரஸ் ஆதரவு
மீடியாக்களுக்கு அப்போதும் வன்மம் தீரவில்லை.2002இல் மோடிக்கெதிரன அவர்களுடைய “மைனாரிட்டி
கம்யூனலிசமே” 2007 லும் அவர்களது ஆயுதமாகியது..
குஜராத்துக்கு
வெளியே மக்கள் இந்த வாதங்களை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்..ஆனால் குஜராத் மக்களோ மோடியை
தங்கள் “பாதுகாவலனாக”—”ஆபத்பாந்தவனாக”— பார்த்தார்கள்.
எதிர்ப்பை ஏற்படுத்தும்
என நினைத்த மீடியாக்களின் பிரச்சாரம்..எதிர்விளைவை ஏற்படுத்தியதால் ஏமாந்துபோனார்கள்.
குஜராத் இன்று
மோடியின் கோட்டை..இம்முறை மோடியின் வெற்றி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை..மாதவ் சிங்
சோலங்கி பெற்ற 140 இடங்களை விட அதிகம் வெற்றியை
நோக்கி மோடி போய்க்கொண்டிருக்கிறார்.
பிரச்சாரதில்
3-டி போன்ற தகவல் தொழில்நுட்பம்—ஒரே நேரத்தில் 10 ஊர்களில் மக்களிடம் நேரடிப்பேச்சு..இந்த
தொழில்நுட்ப உரிமையை 2014 வரை தானே சொந்தமாக்கிக்கொண்ட சாமர்த்தியம்..
தினசரி 10 ஊர்களி
பொதுக்கூட்டம்—10 மணிநேரம் வானில் பறக்கும் வேகம்—யாரு நினத்துப்பார்க்கமுடியாத வியூகம்—பிரச்சார
தந்திரம்.. ..இதனால் ஆடிப்போன எதிரி மீடியாக்களின் கடைசி ஆயுதந்தான்..”மெஜாரிட்டி கம்யூனலிசம்”—பெரும்பான்மை
வகுப்புவாதம்—
இதை---இதை—இதைத்தானே
எதிர்பார்த்தோம்..
ஓடஓட மோடியை விரட்டிய
மீடியாக்கள் அவர் திரும்பியவுடன் தலைதெரிக்க ஓடுகிரது..
மோடியை மீடியா
துரத்திய 2002 போய்
மோடி மீடியாவை
துரத்தும் 2012 வந்துள்ளது
என்னே காலத்தின்
அபூர்வம்
தர்மத்தின் தீர்மானம்.
No comments:
Post a Comment