ஆங்கில புத்தாண்டு அருமையாகவே தொடங்கியுள்ளது..பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது,..
”ஊன்றுகோல்லில்லாமல் நம் வெற்றிப் பயணம் தொடரும் “ என்று சென்னை கூட்டத்தில் சூளுரைத்த நம் தலைவர் பொன்னாரின் வாக்கு உண்மையாகிவிட்டது.
மின்வெட்டினாலும், பஸ்கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் மக்கள் செல்வாக்கை இழந்த அம்மாவை ...எப்படி தூக்கி சுமக்க முடியும் என கவலை பட்டுக்கொண்டிருந்த பாஜகவிற்கு அம்மாவின் அறிவிப்பினால் ஏக குஷி..
அம்மா திமுகவோடு கூட்டணி வருமா? வராதா? என தினம் தினம் பத்திரிக்கைகளில் தொடர்ந்த விவாதத்தினால், “மண்டை குடைச்சலில் “ இருந்த பாஜக தொண்டனுக்கு பெரும் நிம்மதி..
டெல்லியிலிருந்து சென்னை வரும் நம் தேசிய தலைவர்களெல்லாம் மாற்றி மாற்றி மரியாதை நிமித்தமாக போயஸ் தோட்டத்துக்கு செல்வதும்......கமலாலயம் அதை ”வெறுமனே “ பார்த்துக்கொண்டு இருந்ததற்கும் முற்றுப்புள்ளி வைத்த அம்மாவுக்கு நன்றி
எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத “அமைப்புச்செயலாளர் “ எனற “பொறுப்பு” போட்டு, அவருக்குக்கீழ் ஆயிரக்கணக்கானோர் ராப்பகலாக, வேலை பார்த்து, தொண்டர்களை தூங்க விடாமல், “இதைச்செய்---, அதைக்கொடு, “ என அமைப்பு, ரீதியாக வேலைவாங்கி,கட்சி தன் காலில் நிற்க,பயிற்சிகளும், பௌதிக்களும், கொடுத்த பிறகு,எங்கே நமது வெற்றியை அம்மா அபகரித்து விடுவாரோ என நாம் பயந்தபோது ....தானாக விலகிக்கொண்ட அம்மாவிற்கு நன்றி..
நல்ல வேளை அம்மா பெரிய மனது பண்ணி ஒண்ணரை வருடத்திற்கு முன்பே உண்மையை போட்டு உடைத்தார்கள்..இதனால்,மின்வெட்
காங்கிரசோடு சேர்வதற்கு அம்மாவிற்கு தயக்கம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.செல்லாக்காசாகிப்போன காங்கிரஸ் ஊழல்களின் மகாயக்ஞத்தினால், தோற்று துவண்டு போய் விட்டது.என்பதை புரிந்து கொண்ட அம்மாவின் முடிவு சரிதான்...
பாஜகவின் மீது அம்மாவிற்கு காவிரிதான் கோபம் என்றால்.... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து ஷெட்டர்..ஷட்டரை திறந்து விட்டாரே..ஆர்ப்பாட்டம் நடத்தி கெடுத்தது யார் ?...கவுடாவும் காங்கிரசும்தானே.
இந்த உண்மை அம்மாவிற்கு தெரியாமலா இருக்குமா?..பின் ஏன் இந்த அறிக்கை?...தமிழினத்தலைவர் சும்மாவா இருப்பார்?..தமிழனுக்கு தண்ணீர்தராத பாஜகவோடு கூட்டா? என அம்மாவை “ஐய்யா” கிழித்தெடுத்துவிடுவார்..என்ற பயமும் இருக்குமோ?
அல்லது மோடி பிரதமாவது நிச்சயம்...தன்னைப்போல ஒரு சாதாரண மாநில முதல்வருக்கு இந்த அந்தஸ்தா?...எதுவாக இருந்தாலும்..அது தனக்கு...தனக்குமட்டுமே...வரவே
அல்லது...அம்மாவுக்கு துதிபாடி, இப்போதே, கூட்டணி பஸ்ஸில் இடம் பிடிக்க, “துண்டு போட்டு விட்ட” தா.பாண்டியன்...ஜி.ராமகிருஷ்னன்
எதுவாக இருந்தாலும் “வெகுவாக மக்கள் விரோதத்தை “ சம்பாத்தித்த அம்மாவை....வெகுவாக மக்கள் ஆதரவை சம்பாதித்த பாஜக தூக்கி சுமக்க வேண்டி ய சூழலை உருவாக்காமல் ....நம்மை காப்பாற்றிய அம்மாவிற்கு மீண்டும் நன்றி..,
1 comment:
hghgh
Post a Comment