பல்வேறு ஊர்களில் பல்வேறு பெண்களின் மீது ஆசிட் வீசி-- அவர்கள் முகத்தை பாழ் அடித்தது ஒருபுறம்--- உயிருக்கு உலை வைத்தது ஒரு புறம்---
எதனால் வீசினார்கள்?
எப்படி வீசினார்கள்?
நீண்ட ஆராய்ச்சிக்கு உரியவை.இவை---. இதனால் ஏற்ப்படும் இழப்புக்கள் நிரந்தரமானவை ---கொடுரமானவை --
முகமோ உடலின் ஏதாவது ஒரு பகுதியோ வெந்து போகும்..--முகத்தில் வீசினால் பலநேரம் கண்கள் குருடாகும் --
இதனால் "ஆசிட் விர்ப்பனையை தடை செய்ய மற்றும் முறைப்படுத்த தமிழக அரசும் மற்ற மாநில அரசுகளும், சட்டம் இயற்ற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
எந்த ஆசிட்டை எப்படி வீசினால், எவ்வளவு முகம் சிதைந்து போகும்? என " பார்மூலா " எல்லாம் நான் எழுதி பாவம் சம்பாதிக்க போவது இல்லை..
மாறாக ....பெரும் காயம்---பெரும் தீங்கு ---ஏற்படுத்துவது கந்தக அமிலமும், (சல்புரிக் ஆசிட்) --நைட்ரிக் ஆசிடும், ( நைட்ரிக் அமிலம் ), தான்..
இவைகள் கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவது இல்லை. வீடுகளில் ட்டாயலேட் சுத்தம் செய்யவும்-- பொதுவாக பயன் படுத்துவது இல்லை..காரணம் இவை ரொம்ப காட்டமானது.. விநியோகஸ்தர்கள் இடம் மட்டுமே கிடைக்கும்---தங்க நகை தயாரிப்பாளர்கள் தங்கள் பணிக்காக இதை வைத்து இருப்பார்கள்..
" பெரும் பாதிப்புக்களை " உண்டாக்கும் இவை சாதாரண கடைகளில் கிடைக்காது. குற்றவாளிகள் இதை திட்டம் போட்டு --இருக்கும் இடம் அறிந்து, போய் மட்டுமே வாங்க முடியும்,,
மூன்றாவது ஆசிட் ஹைடிரோ குளோரிக் ஆசிட்.---.இது 33% மட்டும் சக்தி கொண்டதே சந்தையில் கிடைக்கும்..கண் தவிர உடலின் எந்த பகுதியில் இது பட்டாலும் , உடனடியாக தண்ணீர் கொண்டு கழுவினால், போதுமானது..நீண்ட நேரம் கழித்து கழுவினால், காயமோ எரிச்சலோ உண்டாகும்,,
இந்த குறிப்புக்கள் எழுதுவதன் காரணம், கடைகளில் பாட்டில்களில் அடைத்து "வைத்துள்ள ஸ்டெயின் ரிமொவர்கள்"25% முதல் 30% வரை மட்டுமே ஹைடிரோ குளோரிக் அமிலம் கொண்டது..அதுவும் ஒருசில கம்பனி அமிலங்களில் 20% முதல் 25% ஆசிட்டும், 25% சோப்பும் கலந்தது..
இவை உடனடியாக தொலை எரிக்காது ..
இவைகளை விற்க லைசன்ஸ் போடுவது அபத்தம் ...காரணம் இவைகளை பெரும்பாலும் "குறுந்தொழில்" முனைவோரே செய்து கொண்டு இருக்கிறார்கள்.
மற்றபடி நைட்ரிக் --கந்தக அமிலங்கள், விற்பதை முறைப்படுத்த வேண்டியது கட்டாயம் --அதுவும் உடனடியாக ..
1 comment:
லைசன்ஸ் போடுவது அபத்தம் உண்மை
Post a Comment