ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்விகளை . உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..ஏனெனில் நான் ஒரு “கைநாட்டு”--அவ்வளவு ஞானம் இல்லை ..நீங்கள் பதில் சொல்லுங்களேன்..
1.தமிழர்களுக்கு தீர்வுக்காக நாம் இலங்கையுடன் “போர் தொடுக்கலாமா?”--அது முடியுமா?--உலகநாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா?--போர் தொடுத்தால் தீர்வு கிடைத்து விடுமா?ஏற்கனவே ராஜீவ் காந்தி அதைத்தானே செய்தார்..
2.தமிழ் நாட்டில் இன்னும் அதிகமாக “ஆர்ப்பாட்டம்--போராட்டம்--கண்டன அறிக்கை”-மனித சங்கிலி --இவைகளை நடத்தினால் ராஜபக்ஷே பயந்து “தீர்வு” கொடுத்து விடுவாரா?
3.எதற்கும்--எக்காரணத்திற்கும் --இந்தியாவிற்குள் ராஜபக்ஷேவை அழைக்காமல். அனுமதிக்காமல் இருந்தால் தீர்வு உடனடியாக கிடக்குமா?
4.ராஜபக்ஷேவிற்கு நெருக்கமாக உள்ள சீனாவையோ--பாகிஸ்தானையோ பார்த்து சமாதான தூது விட்டால் “காரியம்” நிறைவேறுமா?
5.ஐ.நா---மனித உரிமை அமைப்புக்கள்---நவநீதம் பிள்ளை---நார்வே நாடு---இன்னும் சமாதானம் பேசிய பலரை “மேலும் அழுத்தம் “ கொடுத்து மீண்டும் பேசச்சொன்னால் “வேலை ஆகுமா”?
6.இல்லை --டெல்லிக்கு கூப்பிட்டு..”மிரட்டி” அனுப்புதல் சரியா? அப்படி கூப்பிட வேண்டும் என்றால் அவரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல்--”நடுவானத்தில் வைத்து” பேசலாமா?
மொத்தத்தில் “அழைத்து பேசும் “ராஜதந்திர உக்தியா?”
ஆர்ப்பாட்டம் செய்து நாமும் வீணாய் போய்--தமிழர்களுக்கும் “உதட்டளவு ஆதரவோடு” நிறுத்திக்கொள்வதா?
மோடி இன்னும் “செய்யவே ஆரம்பிக்க வில்லையே?” அதற்குள் கூப்பாடு போடுவது தமிழர்களின் மீது நமக்கு உள்ள அக்கரையை காட்டவா? அல்லது “இரச்சல் மட்டும் போட்டுவிட்டு” உட்கார்ந்துகொள்ளவா?
ராஜபக்ஷேவுடன் பேச்சு வார்த்தை ந்டத்தவே முடியாத காங்கிரஸ் அரசைவிட --ராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் “மோடி நிச்சயம் “ உருப்படியாக ஏதாவது செய்வார் என்று நான் நினைக்கிறேன் “--என்றார்..
இது சரியா தோழர்களே?
5 comments:
1. //ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்விகளை . உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..ஏனெனில் நான் ஒரு “கைநாட்டு”--அவ்வளவு ஞானம் இல்லை ..நீங்கள் பதில் சொல்லுங்களேன்..//
இப்படியான கேள்விகளைக் கேட்டவர் உண்மையில் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் தானா அல்லது அவரும் ராஜபக்சவின் சொம்புதூக்கிகளில் ஒருவரா என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம். :-)
2. //.தமிழர்களுக்கு தீர்வுக்காக நாம் இலங்கையுடன் “போர் தொடுக்கலாமா?”--அது முடியுமா?--உலகநாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா?--போர் தொடுத்தால் தீர்வு கிடைத்து விடுமா?ஏற்கனவே ராஜீவ் காந்தி அதைத்தானே செய்தார்..///
ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும், அவர்களுக்கிழைக்கப்பட்ட மனிதவிரிமை மீறல்கள் பற்றிய நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழ்ப்பகுதிகளில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் தடைசெயப்பட வேண்டுமெனக் கூறும் கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் எதுவுமே இலங்கையின் மீது போர் தொடுக்க வேண்டுமெனக் கூறவில்லையே. இந்தியா உண்மையில் ஈழத்தமிழர்களுக்கு உதவ விரும்பினால். அவர்களுடன் ஒத்துழைக்கலாமே. இலங்கைத் தமிழர்கள் கூட இந்தியாவை இலங்கை மீது போர் தொடுக்குமாறு கேட்கவில்லையே. இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து, சிங்களவர்களுக்கு இந்திய அரசு உதவுவதை நிறுத்துமாறு மட்டும் தான் ஈழத்தமிழர்கள் கேட்கிறார்கள்.
ராஜீவ் காந்தி ஈழத் தமிழர்களுக்காக போர் தொடுக்கவில்லை, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை தனக்குச் சாதமாக்கிக் கொண்டு, இலங்கையை வற்புறுத்தி, இந்திய நலன்களைப் பாதுகாத்துக் கொண்டதுடன், சிங்களவர்களின் புத்திசாலித்தனத்தையும், அவர்களுக்கு எந்த ஒப்பந்தத்ததையும் மதித்து நடக்கும்வழக்கம் கிடையாது என்பதும் தெரியாமல், ஆழம் தெரியாமல் காலை விட்டு, ஈழத்தமிழர்களின் அழிவுக்கும் காரணமானார்.
//2.தமிழ் நாட்டில் இன்னும் அதிகமாக “ஆர்ப்பாட்டம்--போராட்டம்--கண்டன அறிக்கை”-மனித சங்கிலி --இவைகளை நடத்தினால் ராஜபக்ஷே பயந்து “தீர்வு” கொடுத்து விடுவாரா?///
இந்தப் போராட்டங்களுக்கு ராஜபக்சவுக்கு பயமெதுவும் கிடையாது. இந்தப் போராட்டங்கள் ராஜபக்சவைப் பயமுறுத்த நடைபெறுவதுமில்லை. தமிழ்நாடு தனிநாடல்ல, இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களை விட அதிகாரமேதுமற்ற நீர்வளமற்ற மாநிலம். தமிழ்நாட்டுப் போராட்டங்களுக்கு இந்திய மத்திய அரசு செவி சாய்க்கிறதா, தனது சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறதா, தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் அவர்களின் தமிழரல்லாத இந்தியச் சகோதர்கள் ஆதவளிக்கிறார்களா, அவர்களையும் உணர்வுள்ள மனிதர்களாக, இந்தியர்களாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்கிறார்களா என்பது தான் கேள்வி. அப்படி எதுவும் நடைபெறாத வரையில், தமிழ்நாட்டுத் தமழரகுள் தமது இனத்துக்காக குரலெழுப்புகிறார்கள் என்று உலக நாடுகள் நினைத்துக் கொள்ளுமே தவிர, அவற்றால் எந்தப் பயனுமில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டங்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் சொந்த அரசும், சொந்த நாட்டு மக்களும் மதிப்பளிக்காது விட்டால், அது எப்படி இலங்கையிலோ, உலக நாடுகளிலோ தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
//3.எதற்கும்--எக்காரணத்திற்கும் --இந்தியாவிற்குள் ராஜபக்ஷேவை அழைக்காமல். அனுமதிக்காமல் இருந்தால் தீர்வு உடனடியாக கிடக்குமா?///
மிகவும் முக்கியமான அயல் நாடாகிய இந்தியாவே, ராஜபக்சவை உறுதியாக எதிக்கிறது என்று தெரிந்தால், இலங்கை பிளவு படுவதை விரும்பாத பெரும்பான்மைச் சிங்களவர்கள் மத்தியில் ராஜபக்சவுள்ள ஆதரவு குறையும் அதனால் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு, கலாச்சார அழிப்பு, தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ராஜபக்சவுக்கு ஏற்படும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள், அதாவது இந்திய மக்களின் ஒருபகுதியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர்க்குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்காது விட்டால், அது இந்திய ஒற்றுமைக்கும், சனநாயகப் பண்பாட்டுக்கும் தான் எடுத்துக்காட்டாக அமையும்.
தமிழகம்,இந்தியா,உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமேயில்லாமல் ராஜபக்சே முழு மனதோடு ஈழத்தமிழர்களுக்கான தீர்வை போர் காலத்தின் போதோ அல்லது போர் முடிந்த ஓரிரு வருடத்திற்குள்ளோ செய்திருக்கலாம்.ஆனால் தமிழகத்தின் எதிர்ப்பு,முக்கியமாக மனித உரிமைக்குழுவின் ஆலோசனைகளையெல்லாம் புறம் தள்ளி நாட்களை நகர்த்துவதிலிருந்தே ராஜபக்சேயின் யுக்திகள் தெளிவாக தெரிகின்றன.
தமிழர்களின் எதிர்ப்பும் ஒரு ஆயுதமே.போர் முடிந்த விட்ட போதும் தமிழர்களின் உரிமைக்கான அடிப்படைக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன.
//4.ராஜபக்ஷேவிற்கு நெருக்கமாக உள்ள சீனாவையோ--பாகிஸ்தானையோ பார்த்து சமாதான தூது விட்டால் “காரியம்” நிறைவேறுமா?///
அப்படியானால் சீனாவையும் பாகிஸ்தானையும் விட இந்தியா பலம் குறைந்த நாடு, தனது கொல்லைப்புறத்திலேயே தனது ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ள முடியாத பிச்சைக்கார நாடு, ஆனால் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல, ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர ஆசனம் கேட்கும் அளவுக்கு ஆசை மட்டுமுள்ள நாடு, ஆனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில், தனது சுற்று வட்டாரத்திலேயே உள்ள பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியாது, சீனாவிடம் பணிந்து போகும் நாடு, என்று நீங்கள் - இந்தியர்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்- என்று உலக நாடுகள் நினைத்துக் கொள்ளும்.
இலங்கையில் சீனா காலூன்ற வழி வகுத்ததே இந்தியா தான் என்பது சிங்களவர்களுக்குத் தெரியும். இந்தியா தலையிட்டிருந்தால் சீனா இலங்கையில் காலூன்றியிருக்காது. இந்திய ஆட்சியாளார்களிடம் மட்டுமல்ல, இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழர் எதிர்ப்பும் இதற்குக் காரணமாகும். அதாவது மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகளின் தாலியறுந்தால் போதும் என்பது போல, ஈழத்தமிழர்களை அழிக்க, அவர்களைப் பழிவாங்க, இலங்கையில் தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாகக் கூடாதென்பதற்காக சிங்க்ளவர்களுக்குச் சீனா உதவவும், இலங்கையில் அவர்கள் காலூன்றவும் Anti Tamil இந்தியர்கள் உதவினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பாராத வகையில் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புக்கும் சீனா என்ற உருவில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இன்று இந்தியா உள்ளது என்பது தான் உண்மை.
///5.ஐ.நா---மனித உரிமை அமைப்புக்கள்---நவநீதம் பிள்ளை---நார்வே நாடு---இன்னும் சமாதானம் பேசிய பலரை “மேலும் அழுத்தம் “ கொடுத்து மீண்டும் பேசச்சொன்னால் “வேலை ஆகுமா”?///
மேலைநாடுகள், ஐ.நா, நவநீதம்பிள்ளை யார் வந்தாலும் இந்தியா, பாஜக, ஹிந்தியன்கள், பார்ப்பனர்கள், ஆர் எஸ் எஸ் எல்லாம் சிங்களவர்களுக்கு ஆதவு கொடுக்கும் வரை, ஈழத்தமிழர்களுக்கு அழிவு தான்.
//6.இல்லை --டெல்லிக்கு கூப்பிட்டு..”மிரட்டி” அனுப்புதல் சரியா? அப்படி கூப்பிட வேண்டும் என்றால் அவரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல்--”நடுவானத்தில் வைத்து” பேசலாமா?///
கூப்பிட்டுத் தான் மிரட்ட வேண்டுமென்ற தேவை கிடையாது. இந்தியா இலங்கையை அப்படி மிரட்டவும் முடியாது. கூப்பிட்டு ராஜ உபசாரம் கொடுத்து யாரும் மிரட்டுவதில்லை. உதாரணாமாக ராஜபக்சவின் மீது போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட பின்னர் எந்த மேலை நாடும் ராஜபக்சவை அரச விருந்தினராக அழைப்பதில்லை. அப்படித்தான் தான் உண்மையான ஜனநாயக நாடுகள் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது வழக்கம்.
இந்தியா முழுவதுமே தமிழின எதிர்ப்பு அதிகம். இலங்கையில் தமிழர்களுக்குப் பதிலாக, மலையாளிகளோ அல்லது ஹிந்தியன்களோ இருந்தால்,. இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் தனிநாடு எப்போதோ பிரிந்திருக்கும்.
//மொத்தத்தில் “அழைத்து பேசும் “ராஜதந்திர உக்தியா?”///
இல்லை, இது தமிழ்நாட்டுத் தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை. உதாரணமாக 300,000 தமிழ்க் கனேடியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ராஜபக்சவையோ அல்லது சிங்கள அரசியல்வாதிகளையோ அல்லது இராணுவ அதிகாரிகளையோ கனேடிய அரசு கனடாவுக்குள் அனுமதிப்பதில்லை, விசாவும் அளிப்பதில்லை. காமன்வெல்த் மாநாட்டையே முற்றாக புறக்கணித்தது. ராஜபக்ச தலைவராக இருக்கும் வரை காமன்வெல்த்துக்குக் கனடா அளிக்கும் 10 மில்லியன் டொலர் நன்கொடையையும் நிறுத்தியுள்ளது. ஆனால் ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளை, விருப்பு வெறுப்புகளை இந்தியா மதிப்பதில்லை என்பது தான் உண்மை.
//ஆர்ப்பாட்டம் செய்து நாமும் வீணாய் போய்--தமிழர்களுக்கும் “உதட்டளவு ஆதரவோடு” நிறுத்திக்கொள்வதா?//
தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஆர்ப்பட்டங்களுக்கு இந்திய அரசு செவிசாய்க்கும் வரை, ஈழத்தமிழர்களுக்கு அவற்றால் எந்தப் பயனுமில்லை. சுஸ்மா சிவராஜ், சுப்பிரமணியம் சுவாமி, ஆர் எஸ் எஸ் போன்ற சிங்கள ஆதரவாளர்கள் மோடியின் அரசிலிருக்கும் வரை ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையில் ஒரு விடிவும் ஏற்படாது.
//2.தமிழ் நாட்டில் இன்னும் அதிகமாக “ஆர்ப்பாட்டம்--போராட்டம்--கண்டன அறிக்கை”-மனித சங்கிலி --இவைகளை நடத்தினால் ராஜபக்ஷே பயந்து “தீர்வு” கொடுத்து விடுவாரா?//
இந்தப் போராட்டங்களுக்கு ராஜபக்சவுக்கு பயமேதுவும் கிடையாது. இந்தப் போராட்டங்கள் ராஜபக்சவைப் பயமுறுத்த நடைபெறுவ்துமில்லை. தமிழ்நாடு தனிநாடல்ல, இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களை விட அதிகாரமேதுமற்ற நீர்வளமற்ற மாநிலம். தமிழ்நாட்டுப் போராட்டங்களுக்கு இந்திய மத்திய அரசு செவி சாய்க்கிறதா, தனது சொந்த நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறதா, தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டங்களுக்கும் உணர்வுகளுக்கும் அவர்களின் தமிழரல்லாத இந்தியச் சகோதர்கள் ஆதவளிக்கிறார்களா, அவர்களையும் உணர்வுள்ள மனிதர்களாக, தமது இந்தியர்களாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்கிறார்களா என்பது தான் கேள்வி. அப்படி எதுவும் நடைபெறாத வரையில், தமிழ்நாட்டுத் தமழரகுள் தமது இனத்துக்காக குரலெழுப்புகிறார்கள் என்று உலக நாடுகள் நினைத்துக் கொள்ளுமே தவிர, அவற்றால் எந்தப் பயனுமில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டங்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் சொந்த அரசும், சொந்த நாட்டு மக்களும் மதிப்பளிக்காது விட்டால், அது எப்படி இலங்கையிலோ, உலக நாடுகளிலோ தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
//3.எதற்கும்--எக்காரணத்திற்கும் --இந்தியாவிற்குள் ராஜபக்ஷேவை அழைக்காமல். அனுமதிக்காமல் இருந்தால் தீர்வு உடனடியாக கிடக்குமா?///
மிகவும் முக்கியமான அயல் நாடாகிய இந்தியாவே, ராஜபக்சவை உறுதியாக எதிர்க்கிறது என்று தெரிந்தால், இலங்கை பிளவுபடுவதை விரும்பாத பெரும்பான்மைச் சிங்களவர்கள் மத்தியில் ராஜபக்சவுக்குள்ள ஆதரவு குறையும் அதனால் இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனவழிப்பு, கலாச்சார அழிப்பு, தமிழ்ப்பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ராஜபக்சவுக்கு ஏற்படும். தமிழ்நாட்டுத் தமிழர்கள், அதாவது இந்திய மக்களின் ஒருபகுதியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து போர்க்குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்சவை இந்திய அரசு இந்தியாவுக்குள் அனுமதிக்காது விட்டால், அது இந்திய ஒற்றுமைக்கும், சனநாயகப் பண்பாட்டுக்கும் தான் எடுத்துக்காட்டாக அமையும்.
Post a Comment