இந்தியாவை தூற்றும் டாக்குமண்ட்ரி---”இந்தியாவின் மகள்”
இந்தியா
பாம்பாட்டிகள், பிச்சைகாரர்கள் மிகுந்த ஏழைகள் நாடு என்ற .......
”ஸ்லம் டாக் மிலியனர்” திரைப்படம்
இந்தியா காமவெறிபிடித்த “ ரேப்பிஸ்ட்கள் நாடு” -என்கிற இண்டியாஸ்
டாட்டர்" டாக்குமெண்ட்ரி
”கருத்துச் சுதந்திரம் பத்திரிக்கை
சுதந்திரம் பறிபோய் விட்டது”
- பத்திரிக்கைகள் ஊடகங்கள் இந்நாட்டில் சுதந்திரமாக செயல்பட
முடியவில்லை”.
இப்படித்தான் கடந்த ஒரு வாரமாக
கூக்குரல்கள், விவாதங்கள், மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மை என்ன?
ஊடகங்கள் தாங்களாக ஒருவிஷயத்தை
எடுத்து-- தனக்கு சாதகமான வரிகளை மேற்கோள் காட்டி,-- தனக்கு “ஒத்த” கருத்தியலாளர்களை வைத்து கூட்டம் போட்டு”,--” தன் கருத்தே சரி” என்கிற மாதிரி கேள்விகள் கேட்டு,-- கருத்துக்களை பெற்று-- வெளியிட்டு--
தீர்ப்பு சொல்லும் ஒரு “புதிய நீதிகோர்ட்டுகளாக”
உருவாகி வருகிறது.
அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் “இந்தியாவின் மகள்” என்கிற “லெஸ்லி எட்வின்” என்கிற பிரிட்டிஷ் திரைப்பட
தயாரிப்பாளர் எடுத்த “டாக்குமெண்டரியை”
வெளியிடக்கூடாது என்கிற இடைக்கால நிறுத்தம் ... தடை அல்ல “Restrain" பற்றிய விவாதங்கள்.
இந்த “Restrain” டெல்லி
மெட்ரோ பாலிட்டன் கோர்ட்டின் நீதிபதி திரு. புனித் பாவா கொடுத்த
தீர்ப்பாகும்! “மத்திய அரசு தடை செய்தது” என்பது இங்கே எப்படி வந்தது? தடை
என்பது “Ban”-- இந்த Restrain-ம் நிரந்தரம் அல்ல. இந்த Restrain-ம் முழு டாகுமெண்டரிக்கும் அல்ல... வழக்கு விசாரணையில் உள்ள “ நிர்பயா” குற்றவாளிகளின் இன்டர்வியூக்கு” மட்டும்தான்.
சரி இது ஒருபுறம் இருந்தாலும், படத் தயாரிப்பாளர் பிரிட்டிஷ் பெண் லெஸ்லி வுட்வின் கூற்றுப்படி== அவர் மத்திய உள்துறை அமைச்சகம்,
திஹார் ஜெயில் ஆகியவற்றின் clearance-ஐ பெற்றுவிட்டேன்.. என்று பேட்டி அளித்திருக்கிறார்.
அவரது பேட்டியிலும் அவருக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்திருக்கும்
மீடியாக்களிலும் ”மறைக்கப்பட்ட” மிக முக்கியமான உண்மை... லெஸ்லி
உட்வின் திஹார் ஜெயில் அதிகாரிகளிடம் படம் எடுக்க கேட்ட அனுமதி....” இந்த திரைப்படம் ”ஆராய்ச்சி
மாணவர்களுக்காக”, ”academic purpose”-- என்பதுதான் ஆனல் நடந்தது என்ன?
நேற்று
திங்கள் கிழமை உலக சந்தையில் இதை விற்பதற்கு “வியாபார நோக்குடன்” ஹாலிவுட்
திரைப்பட நடிகர்களை வைத்து நியூயார்க் நகரில் வெளியிட்டு இருக்கிறார்? இது
தான் academic ஆ?
“கல்லூரிகள்,
பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடம் நடத்த” என்று அனுமதி கேட்டு-
படம் எடுத்துவிட்டு, இந்திய வியாபாரத்திற்கு NDTV-யும் உலக வியாபாரத்திற்கு
ஹாலிவுட்டையும் தேர்ந்தெடுத்ததை “நம் நாட்டு கருத்து சுதந்திர
ஆதரவாளர்கள்” ஏன் சவுகரியமாக கவனிக்கவில்லை.....
இந்தியாவை
“ரேப்பிஸ்டுகள் நாடு” என்று உலகமுழுவதும் இப்படம் கொண்டு செல்லும் அதுதான்
அவரின் நோக்கமும் கூட என்று நாம் சொன்னால் நம்மீது “கருத்து சுதந்திரம்”
வெகுண்டு எழும்.
ஆனால்
இன்றைய நாளிதழில், ஜெர்மனில், ஆரய்ச்சி மாணவர் ஒருவர், அவர் இந்தியர்,
அவருக்கு தன் குழுவில் சேர்த்துக்கொண்டு பாடம் நடத்த, அந்த ஜெர்மானிய
பேராசிரியர் மறுத்திருக்கிறார். காரணம், இந்தியர ரேப்பிஸ்டுகள் நாடு,
அதிலிருந்து வந்திருக்கும் இந்திய மாணவரை நம்பத்தயாரில்லை என தன்னுடைய
இணையதளத்தில் கூறி --அனுமதி மறுத்திருக்கிறார்...
இந்நிலைக்கு
யார் காரணம்? கருத்து சுதந்திரம் என்னும் பெயரில் “இந்திய கௌரவத்தை சீர்
குலைக்க முயற்ச்சிக்கும்” பிரிட்டிஷ் படங்களுக்கு வக்காலத்து வாங்கும்
நண்பர்கள் சொல்வார்களா?
பிரிட்டன்
--இந்திய மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு, அங்கு நடக்கும் பெண்கள் மீதான
பாலியல் வன்கொடுமை நம்மைவிட 3 மடங்கு அதிகம்! அந்த கொடுமை செய்தவர்களை படம்
எடுத்து உலகம் முழுவதும் வினியோகிக்க நமது “தூர்தர்ஷனுக்கு” பிரிட்டிஷ்
அரசு அனுமதி கொடுக்குமா?
கருத்து சுதந்திரத்தில் பிரிடின், இந்தியா என்று ஊடகவியலாருக்கு பாகுபாடு உண்டா?
ஸ்லம்டாக் மிலினியர்” என்ற திரைப்படம் ஆஸ்கார் பரிசுகளை வென்றது! ஏன்? இந்தியாவை பிச்சைக்கார நாடாக காண்பித்ததற்காக?
“இந்தியாவின் மகள்” படத்தை உலகமுழுவதும் திரையிட்ட அன்றே ஜெர்மனியில் இந்திய ஆராய்ச்சி மாணவருக்கு இடம் தர மறுத்துள்ளனர்!
இந்த
வகையாக “இந்தியாவை கேவலமாக அந்நியர்கள் சித்தரிக்கும் செயல்பாடுகளை
ஆதரிப்பது தான் கருத்து சுதந்திரம் என்றால்-- இந்தியாவை, காக்க நாம்
இன்னும் போராட வேண்டியிருக்கும்.
2 comments:
அதற்கு என்ன சார் ! மற்றவன் வீட்டில் மூன்று கொலை நடந்துவிட்டது என்பதால் நம் வீட்டின் ஒரு கொலை தவறில்லை என்பதாகுமா? இறந்த ஜோதியின் பெற்றோரே இந்த ஆவணப் படத்தை அனைவரும் காண வேண்டும் எனக் கூறுகின்றார்கள். ஒருவேளை ஜோதி உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்திருந்தால், பெண்ணை விடவும் நாடு தான் முக்கியம் என பேசி இருக்க மாட்டீர்கள்.
எந்தவொரு கருத்தும் நல்லதோ கெட்டதோ மக்கள் பார்ப்பதற்கும் அலசி ஒரு முடிவுக்கு வருவதற்கும் முழு உரிமை இருக்கின்றது. இந்த ஆவணப் படம் பிழை என்றால் காலம் தன்னாலே நிராகரித்துவிடும். ஆனால் இந்த ஆவணப் படத்தை ஒன்றுக்கு பலமுறை பார்த்துவிட்டேன் அதில் இந்தியாவை இழிவு செய்யும் எந்தவொரு வசனமும் உள்நோக்கமும் இருப்பதாக எனக்குப் படவில்லை. பார்த்த பலரும் அதனைத் தான் செப்புகின்றனர். காணாத சிலரே பொங்கி எழுகின்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அது மட்டுமே ஜோதி போன்றோரது இறப்பிற்கு ஒரு அர்த்தம் உடையதாக இருக்கும்.
குற்றவாளிகள் இத்தனை ஆண்டு சிறைக்குள் இருந்தும் தாம் செய்தது தவறு என கருதாமல் பேசுவதும், அவர்தம்முக்கு வக்கலாத்து வாங்கும் வழக்குரைஞர்கள் பேசுவதும் தான் இந்த ஆவணப் படத்தின் அடிநாதம். மாற்றம் என்பதை எவ்வாறு கொண்டு வரப் போகின்றோம்.
இந்த சம்பவத்தில் பெருங்குற்றம் ஆற்றிய அந்த 17 வயது பையன் வயது குறைந்தவன் என்பதால் மூன்றாண்டு சிறைவாசம் மட்டுமே பெற்று இந்த ஆண்டு திசம்பர் விடுதலை ஆகப் போகின்றான். 17 வயதில் கற்பழிப்பு செய்தால் குற்றமாகாதா? நம் சட்டங்களில் சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகளை யார் எடுத்துச் சொன்னாலும் நிகர் செய்வதே மானிட தருமம். அதை சொல்பவள் அந்நியப் பெண் என்பதால் நாட்டின் மானம் பறிபோய்விட்டது எனக் கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.
சூப்பர்
Post a Comment