Pages

Tuesday, April 14, 2015

ராமானுஜர் மீது கருணாநிதிக்கு காதல் ஏன்?

டி.வி.சீரியல் தயாரிப்பாளர் குட்டி பத்மினிக்கு, மாமியார் –மருமகள் சண்டை கதைகள் புளித்திப் போய்,விட்டது..மாற்று சீரியல் எடுக்க விரும்பினார்..ஆன்மீகம்..”ராமானுஜர்” சீரியல் என்றால், கலைஞர் டி.வி “சிலாட்” கொடுக்குமா?—என்ற சந்தேகம்—சிலாட் கிடைக்க கலைஞரையே வசனம் எழுத வைத்துவிட்டால்>>முதலாளியே வசனம் எழுதினால்…சிலாட் நிச்சயம் அல்லவா?—

கலைஞரை நாடினார்—ஆடி..ஓட முடியாவிட்டாலும்..”நாடி”’ தளரவில்லையல்லவா?—ஒத்துக்கொண்டார்..ஏன்?—எதற்காக?—எப்படி?—ஒத்துக்கொண்டார்?—..என்பதுதான்..”அறிவாலய ரகசியம்”—அதை உடைப்பதுதான்..இக்கட்டுரையின் “அவசியம்”—

பள்ளி நாட்களிலேயே ராமானுஜரை படித்திருக்கிறேன் என்றும், அப்போது அவரை பற்றி எழுத இயலவில்லை என்றும்..ராமானுஜருக்கு வசனம் எழுதினாலும்..நாத்திகத்திலிருந்து “பிரளப்போவதில்லை” என்றும்..கலைஞர் பேட்டியளித்திருக்கிறார்..

ராமானுஜர் தொடர் என்னும் வியாபார உத்திக்கு..கலைஞர் வசனம் எழுதினால்…ராமானுஜருக்கு மேலும் புகழ் சேரப்போகிறதா?---அல்லது நாத்திக கருத்துக்களை..ஒரு ஆத்தீகர் மூலம் “செரிவூட்டும்”..செய்ய கருணாநிதி விழயப்போகிறாரா?
ராமானுஜர் மீது கலைஞருக்கு என்ன காதல்?—மஞ்சள் துண்டு போடச்சொன்ன சோதிடன்-மஞ்சள் பை தூக்கும் ஏழை பிறாமண சாமியார் தொடருக்கு வசனம் எழுதினால்…மீண்டும் ஒருமுறை முதல்வராகலாம் என சொல்லி இருப்பாரோ?

திருக்குவளை குல தெய்வம் அங்காள பரமேஸ்வரிக்கு பிறகு..1000 ஆண்டுகாலத்திற்கு முன்பே..அரிஜன ஆலயபிரவேசம் செய்யவைத்த…தீண்டாமையை உண்மையிலேயே எதிர்த்த..ஒதிக்கிய..ஒழிக்க உழைத்த… ”ஓம் நமோ நாராயணா”—என்னும் பிரணவ மந்திரத்தை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கும் ஓதிய…”நிஜப் பகுத்தறிவாளன்”—வைணவ மகாப் பெரியவர் ராமானுஜரை துதித்தால்…(அப்படி ஒறிரு வசனம் வருமாறு கருணாநிதி பார்த்துக்கொள்வார்)”குடும்பச்சண்டை தீரும்—ஆட்சி வசப்படும்—எனவும் அச்சோதிடர் சொல்லியிருக்கலாமோ?
ஏனெனில், வைணவ சம்பிரதாய நம்பிக்கை படி, ராமானுஜர் திருமாலின்…ஆதி சேஷசன் அவதாரம்..அதாவது நாக தோஷம் –காலசர்ப்ப தோஷம்—இவைகளுக்கு பரிகாரம் செய்ய காளஹஸ்திக்கு போவதற்கு பதிலாக, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் போதும் என்னும் நம்பிக்கை உள்ளது..இது கலைஞருக்கு தெரியாமல் இருக்காது..ஏனெனில் கலைஞரின் “யோகா மாஸ்டர் “ முதல்..டாக்டர் வக்கீல்—ஆடிட்டர்—வரை அனைவரும்..அவர் அன்றாடல்..அறிக்கையில் “புழுதி வாறி” தூற்றும் பிராமணர்கள்தான்..

சேலத்தில் அவரும் அவரது அடிப்பொடிகளும்..செருப்புமாலை அணிவித்த வினாயகர்தான்…மனைவி தயாளு அம்மாள் மூலமாக கோபாலபுரம் வீட்டுமுன்பிருந்து..கலைஞருக்கு அருள் பாலித்து வருகிறார்....
இப்படி எதிர்ப்பவர்களை எதிரில் வைத்துக்கொண்டு..ஆலோசனை கேட்பதும்..
அரவணைத்து மகிழ்வதும்…கலைஞருக்கு கைவந்த கலை
..
சரி—சப்ஜெட்டுக்கு வருகிறேன்..திராவிட இயக்கத்தவர்கள் தமிழிலே புலமை பெற்றவர்கள் போலவும்..இலக்கியத்திலும்..சரித்திரத்திலும், பி.ஹெச்.டி பட்டம் பெற்றவ்ர்கள் போலவும் பேசுவார்கள்—எழுதுவார்கள்—ஆனால் உண்மை என்ன?
சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும்..இடையே நடந்த “வைதீக திருமணத்தை” சீர்திருத்த திருமணம் என்று ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும்.. எழுதினார்கள்…,
“கனக—விஜயர்”—தலையில் கல்சுமக்க வைத்தான் சேரன் செங்குட்டுவன்”—என்பதும் ஆதாரமற்ற கட்டுக்கதை..

இப்படி “எட்டுகட்டி எழுதும்” கட்டுக்கதை சரித்திரமும், இலக்கியமும், இன்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது..
“ஈ.வே.ரா” வியாபாரமும் படுத்துவிட்டது..பட்டுக்கோடையாரும், பாரதிதாசனாரும், அறிவாலய “லைப்ரரி” புத்தக ஸ்டாண்டுக்குள் அடங்கிப்போனார்கள்..

“நர்மதை நதிக்கு தெற்கே திராவிட நாடு” என மராட்டியத்தையும், குஜராத்தையும் பூகோளம் தெரியாமல் திராவிட நாட்டுக்குள் கொண்டுவந்த “பேரறிஞர்” அண்ணா…போல..ராமானுஜரை வசனமெழுதி என்ன பாடு படுத்த்ப்போகிறரோ தெரியவில்லை.
.
இனி இந்துத்வா—காட்டில்தான் நல்ல மழை என்பதால் ராமானுஜரை கையில் எடுத்திருக்கிறார் கலைஞர்..
கலைஞரின் “தமிழ் வியாபாரம்” கடுமையான பாஜக போட்டியால் படுத்துவிட்டது..திருக்குறளையும் –திருவள்ளுவரியும் வடமாநில பாஜக எம்.பி. தருண்விஜய்…கையில் எடுத்து “போடு..போடு “ என போட்டுக்கொண்டிருக்கிறார்..

தமிழ்நாடு முழுதும் உள்ள..திமுகவினருக்கு க்கூட தெரியாத தமிழ் அறிஞர்களையும், அவர்கள் வாழ்ந்த ஊர்களையும், தருண் விஜய் யாத்திரை செய்து தொடர்பு கொண்டுவிட்டார்.

.கலைஞரின் “கைத்தடி” கவிஞர் வைரமுத்துக்கூட எதற்கும் இருக்கட்டுமே –என முந்திக்கொண்டு—தருண்விஜய்க்கு பாராட்டுக்கூட்டம் நடத்திவிட்டார்..
சமஸ்கிருத –இந்திவெறி—சங்கபரிவாரோ—நாக்பூரில் கடந்தமாதம் நடந்த அகிலபாரத செயற்குழுவில், “தாய் மொழியிலும்---மாநில மொழியிலுமே” பள்ளிகளில் கல்வி கற்பிக்க வேண்டும் என தீர்மானம் போட்டு கலைஞர் பிழைப்பில்” மண்ணை “ அள்ளி போட்டிருக்கிறது..

இந்த நிலையில் “ராமனுக்கு பர்த் சர்டிஃபிகேட்” உள்ளதா?—இந்து என்றால் அராபிய மொழியில் திருடன் என்று உள்ளது…என்ற நக்கல் பேச்சையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு “உண்மையான பகுத்தறிவு வாதி” ராமானுஜர்தான் ”தனக்கு ஒரே துடுப்பு”—என்ற முடிவுக்கு கருணாநிதி வந்திருக்கலாம்…எனபது ஒருசாராரின் கருத்து…

வழிப்பரி கொள்ளைக்காரனாக இருந்த “வால்மீகியே” மனந்திருந்தி..இறையருள் பெற்று இராமாயண காவியம் இயற்றியது போல…91 வது வயதில் கருணாநிதி மனம் திருந்தியதன் விளைவுதான் “இராமானுஜர் தொடர் வசனம்”—என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே….”என் நாத்திகம் இதானால் பிரழ்ன்று போகாது” என கருணாநிதி சூளுரத்திருக்கிறார்.
.
“போலீஸ்காரன் மகளையும்”—வேலைக்காரியையும்” எழுதிய காமரச குழுவிலொருவர் –சரித்திரத்தையும், இலக்கியத்தையும், தன் இஷ்ட்டத்துக்கு, பிறழ்ன்று..சுழன்று..எழுதும் கூட்டத்தின் நாயகர், ராமானுஜர் சரித்திரத்தையாவது முழுதும் படித்துவிட்டு, முறையாக வசன் எழுதுவார் என்று நம்புவோ்மாக..

தவறான சரித்திரம்—தறிகெட்ட வசனங்கள்---ராமானுஜர் தொடரில் வராது என நாம் எதிர்பார்ப்போமாக..

அப்படி ஒருவேளை கலைஞர் எழுதிவிட்டால் என்ன செய்வது?—
கவலை வேண்டாம்..இந்து அமைப்பினரை பற்றி கலைஞர் நன்கறிவார்..

குடும்பச்சண்டையில் “மண்டை காய்ந்து கொண்டிருக்கும் “ கலைஞர் ராமானுஜர் தொடர் மூலம்..இன்னொரு சண்டையை விலை கொடுத்து..(வசனம் எழுதி_)..வாங்க மாட்டார்..என நம்புவோமாக..
ஜெய்..ராமானுஜம்.

No comments: