குளிர்கால பாராளுமன்ற கூட்டம் வரும் 26ந்தேதி தொடங்குகிறது.அதற்கு
தனது கட்சி எம்.பிக்களை வழி அனுப்பி வைக்கும் போது த்மிழக முதல்வர் “ஜெ’
அவர்கள், சொன்ன வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை..
“
மத்திய அரசின் கூட்டணியில் நாம் இல்லை..அந்த அரசுக்கு பிரச்சினைகளின்
அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறோம்..அதை உணர்ந்து செயல்
படுவீர்கள்”--எனச் சொல்லியிருக்கிறார்.
“மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்..பொன்.ராதாகிருஷ்ணன் ..ஆகீயோர்
தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், பேசி உள்ளனர்..நான் என்ன
சொல்லவருகிறென் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்”--
இதுதான் அவர் பேச்சின் “ஹை லைட்”--
இதை யார் எப்படி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..பத்திரிக் கைகளும் அவரவர் பாணியில் தலைப்பிட்டு எழுதியுள்ளது..
பாஜகவை
பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் வெள்ளப்பாதிப்பு என்றவுடனே அமீத்ஷா
அவர்கள், அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன்--பொன். ராதாகிருஷ்ணன் கொண்ட
மூவர் குழுவை அமைத்தார்..அடுத்த இரண்டு நாளில், அவர்கள் சென்னையின்
பலபகுதிகள் மற்றும் கடலூர் அகியவற்றை பார்வை யிட்டனர்..அவர்களோடு
மாநிலத்தலைவர் தமிழிசை மற்றும் , அகிலபாரத பொதுச்செயலாளர் முரளிதர் ராவ்
ஆகியோரும் சென்றனர்..
அடுத்து நடந்த பத்திரிக்கையாளர்
கூட்டத்தில்,கண்ணில் “கண்டதை”-விளக்கினர்..”நிவாரன பணிகள் முழுவீச்சில்
நடைபெறவில்லை...சாக்கடை நீரும் மழைநீரும், குடிநீரில் கலந்ததால்,சுகாதார
சீர்கேடு, மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அவர்கள் அரசை
எச்சரித்தனர்..மாநில அரசின் நிவாரண நிதிஉதவி கோரிக்கை (21.11.15) இன்று வரை
மத்திய அரசிடம் வரவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்..
இப்படி உண்மைகளை போட்டு உடைத்ததால், அம்மாவுக்கு கோபம் என சில பத்திரிக்கைகள் எழுதின..
மத்தியில்
ஆளும் பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் போல எந்த மாநில அரசையும் மாற்றாந்தாய்
மனப்பான்மையுடன் நடத்தியதில்லை..தமிழக அரசு கோரிக்கை வைத்த (23.11.)உடன்
அடுத்த 2 மணி நேரத்தில் ரு.940 கோடி இடைக்கால நிவாரன உதவியை தந்தது..மிதி
தொகையை மத்திய நிபுணர் குழு வந்து பார்த்த உடன் தரும்- என மத்திய அரசு
அறிவித்துள்ளது..
சென்றமுறை தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் இடைக்கால நிவாரணதொகைக்கே 6 மாதம் இழுத்தடித்ததை நாடறியும்..
எம்.பி.க்களுக்கு “ஜெ” கூறிய அறிவுறைகளிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன?
சரத் குமார் கட்சிபோலவோ--தனியரசு--ஷேக்தாவு து
போலவோ..”மழையெ பெய்ய வில்லை--வெள்ளமே வரவில்லை--மக்கள் கஷ்டமெ படவில்லை
--என்று பாஜக கூற வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சியிடம் இருப்பது
தெரிகிறது..
மழைக்காலம் வரும் முன் ,முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக மட்டுமல்ல, சாதாரண பராமரிப்பு நடவடிக்கையாகவாவது, கால்வாய்களை
(உண்மையாக) துர்வாரியும், நீர் செல்லும் பாதைகளின் அதாவது வடிகால்களின்
அடைப்புக்களை சரிசெய்தும், இருந்தால், இந்தமழை “சாதுவாக” சும்மா
போயிருக்கும்..”அடைத்து வைத்ததால்” வீட்டுக்குள்புகுந்தது,..ரோடு களின் மீது தேங்கி நாசப்படுத்தியுள்ளது..
இந்த
“அடிப்படைகளை “ அம்மாவின் “ஆளும் விசுவாசிகள்” செய்திருந்தால், சென்னை
நகரம, தன்னை காத்துக்கொண்டிருக்கும்..கடலூர் பண்ருட்டியில், கால்வாய் சீறி
எழுந்து, பலமக்களை பலிவாங்கியிருக்காது..
எங்கள்
அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமனும், பொன்.ராதாகிருஷ்ணனும், அவரவ்ர் இலாகா
வேலைகளை, செய்து கொண்டு டெல்லியிலேயே இருந்திருப்பர்..
“அம்மா--சும்மா--கோபப்படக்கூடாது
No comments:
Post a Comment