மூசா என்கிறவன் மேற்கு வங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவன். திருப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வந்தான். இரண்டுகுழந்தைகளுக்கு தந்தை. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பவன் என்கிற தகவலின் அடிப்படையில் மேற்கு வங்க போலீஸ் திருப்பூர் வந்து கைதுசெய்தது.
யாரிடமும் பேசமாட்டான். மிகவும் அமைதியானவர். தான் உண்டு, தன் வேலைஉண்டுஎன்றுஇருப்பவன்.
6 மாதத்திற்கு ஒரு முறை மேற்கு வங்காளம் சென்றுஏராளமான இளைஞர்களை அழைத்து வந்து திருப்பூரில் வேலைக்கு சேர்த்து விடுவான்.
இவனை கைது செய்ததும், அவனைச் சுற்றி இருந்த வீடுகளில் இருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த ஆள் இவ்வளவு பெரிய பயங்கரவாதியா என நெஞ்சம் பதைத்தனர்.
இவனிடம் நவீன வகை ஆயுதங்கள், மிக அதி நவீன தொலைதொடர்பு சாதனங்கள், இதை விட முக்கியமாக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் முதலியவைகைப்பற்றப்பட்டன.
காஞ்சிபுரம் படப்பையில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் மில்லில் கடந்த 3 ஆண்டு காலமாக வேலை பார்த்து வந்த லீனா ஜோஸ் மேரி கைது செய்யப்பட்டார். இவர்ஒருஅபாயகரமானநக்சலைட்.2002ம் ஆண்டு நடந்த கொலைகளில் இவர் சம்பந்தப்பட்டவர்.
கரூரில் வெங்கமேடு பகுதியில், ஒரு குடிசையில் வாழ்ந்து வந்த கலா, சந்திரா ஆகிய 50 வயது மதிக்கத்தக்க பெண்கள், நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்கள்கைது.
போலீஸ் பிடித்த உடனேயே ஆயுதப் புரட்சி வெல்க, நக்சல்பரி இயக்கம் வாழ்க" என கோஷம் போட்டனர்.
சாதாரண குடிசைவாழ் கிராமத்துப் பெண்கள் உடையில் இருந்த இவர்களின் கைது, சுற்றியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த இரு கைதுகளிலும் ஒற்றுமைகள் இருக்கின்றன. திருப்பூரில் பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி மூசாவைப் பற்றிய தகவல்கள் அக்கம்பக்கத்தாருக்குதெரிந்திருக்கவில்லை! மிகவும் அமைதியான ஒரு மளிகைக் கடைக்காரனாக, உள்ளூர் கம்பெனிகளுக்கு ஆள் சேர்ப்பவனாக தன்னை முன்னிலைபடுத்தியிருக்கிறான்.
அதுபோல நக்சல் இயக்க ஆதரவாளர்களும் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள். உடை, நடை, பாவனைகளில் அவர்கள் உள்ளூர் மக்களோடுஒன்றியிருந்திருக்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் வேறு ஒரு ஐ.எஸ் பயங்கரவாதியை கைது செய்யப்போய், அவனிடத்திலிருந்த ஆதாரங்களில் மூசாவும் ஒரு பயங்கரவாதி என்பது தெரிந்து,மேற்கு வங்க போலீஸ் வந்து கைது நடத்தியிருக்கிறது.
உள்ளூர்க்காரர்களால், பெறமுடியாத ரேஷன் அட்டையை மூசாவால் பெற முடிந்திருக்கிறது. தனது ரகசியம் வெளியே தெரியாதிருக்க, தன் குழந்தைகளுக்குக்கூட தமிழ் பெயர் சூட்டியுள்ளான்.இவனை கைது செய்தபோது பலருக்கு திகிலாக இருந்திருக்கிறது.
நக்சலிசமும் ஐ எஸ் பயங்கரவாதமும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக இந்து முன்னணிதலைவர் ராமகோபாலனும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அரசை எச்சரிக்கும் போதெல்லாம் ஓட்டு வங்கி அரசியல் குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.
சாதாரணமாக, கிராமங்களில் யாராவது புதிய நபர்கள் நுழைந்தால், ஊருக்கே தெரிந்துவிடும். மரத்தடி மாமன்ற பெரிசுகள் விசாரணையிலிருந்து, அவர்கள் தப்பமுடியாது.
நகர வாழ்வில், நாம் எதிர்வீட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூட நட்பு வைத்துக் கொள்வதில்லை. இதனால் என்றாவது ஒருநாள் குற்றம் நடந்து முடிந்துபோலீஸ் வரும்போது தான் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
உடுமலைப்பேட்டை, கோகுல்ராஜ் கொலையிலும் ,நுங்கம்பாக்கம் சுவாதி கொலையிலும் அக்கம்பக்கத்தில் இருந்த மக்களின் செயல்பாடற்ற, பொறுப்பற்றதன்மை ...மந்தமாகிப் போன மனித மனத்திற்கு உதாரணம்.
அதிலும் உடுமலைப்பேட்டை வீடியோ, கொலை நடக்கும்போது சுற்றி நின்ற மக்களின் செயலற்ற மனநிலையை முழுதும் வெளிப்படுத்துகிறது.
ஒரு சம்பவம் நடந்து முடிந்தவுடன் முழுக்குற்றமும் போலீஸ் மீது சுமத்தப்படும். ஆனால் அச்சம்பவத்தின், அருகே இருந்த மக்களின் சமூகப் பொறுப்பு என்னஎன்பதை நாம் உணரவோ, விவாதிக்கவோ தயாரில்லை.
நம் நாட்டில் இப்போது தான் ஆதார் அடையாள அட்டையின் மூலம் ஒவ்வொரு குடிமகனின், கைவிரல் ரேகை, கண் மற்றும் புகைப்படம் ஆவணப்படுத்தப்பட்டுவருகிறது.குற்றவாளிகளை கண்டுபிடிக்க இனி இவை உபயோகமாக இருக்கும்.
ஏற்கனவே தகவல் தொழில் நுட்பம், குறிப்பாக செல்போன் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதில் பெரிதும் உதவி வருகிறது.
தேசத்திற்கு எதிரான குற்றங்களில் தனி மனிதனால் மட்டும் ஈடுபட முடியாது. ஒரு குழு அல்லது சமூகம் அவர்களுக்கு உதவாமல் இது சாத்தியப்படாது.
ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பு நடக்கும்போது, அதை நடத்தும் குற்றவாளி வெளியூரை அல்லது வெளிநாட்டை இருக்கிறான்.
உள்ளூருக்கு அவனால் எப்படி வரமுடியும்? உள்ளூர் மக்களின் ஆதரவில்லாமல் அவனால் எப்படி குற்றத்தை அரங்கேற்ற முடியும்? எனவே உளவுப்பிரிவு,போலீஸ் கண்காணிப்பு வளையம் என்பதற்கெல்லாம் ஒரு எல்லை மட்டுமே உள்ளது.
ஆனால் ஜாதியும் மதமும் குற்றச்செயல்களை பாதுகாப்பதில் எல்லை கடந்து இருக்கிறது. இப்போது இது மாதிரி குற்றவாளிகள் பிடிபட்டாலும் உடனே அந்தமார்க்கம் சார்பின் கண்டன அறிக்கை மட்டும் வரும். ஒருபோதும் இதை ஆதரிக்க மாட்டோம் என்பதும் எங்கள் மார்க்கம் வன்முறைக்கு எதிரானது என்றவகையில் அறிக்கை இருக்கும்.
அப்படியானால் திருப்பூர் ஐ.எஸ் பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? திருப்பூரை அடையாளம் காட்டியது யார்?
அடிக்கடி மேற்கு வங்கம் சென்று ஆட்களை கொண்டு வேலையில் சேர்த்தாரே? அவர்களெல்லாம் யார்?
போலீஸ் சீர்திருத்தத்தில் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது ”கம்யூனிட்டி போலீஸ்”. ஒரு தெருவுக்கு அல்லது ஒரு பகுதிக்கு ஒரு காவலர் பொறுப்பாகஇருப்பார். அவருக்கு இடமாறுதல் கிடையாது. அந்தப் பகுதியில் யார் புதிதாக வந்தாலும் அவர் கண்டுபிடித்து விடுவார். இந்த முறை நடைமுறைக்கு வருமானால்,மூசாக்களும் ரோஸ் மேரிக்களும், கலா, சந்திராக்களும் உடனடியாக பிடிபடுவார்கள்.
இது ஒரு புறமிருக்க, மக்களுக்கும் சமூக பொறுப்புள்ளது. நம் பகுதியில் நடக்கும் வித்தியாசமான, மாறுபட்ட விஷயங்கள் நபர்களிலின் செயல்பாடுகளை நாமும்கண்காணிக்க வேண்டும். காவல்துறையிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் அந்தமாதிரிபதுங்கியிருக்கும் மிருகங்களை மனிதர்களாகிய நாம் அடையாளம்காணமுடியும்.
No comments:
Post a Comment