Pages

Thursday, January 10, 2013

முஸ்லீம்கள் உயிரின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா?


” எல்லோரும் இன்புற்று இருப்பதைத்தவிர வேறொன்றரியேன் பராபரமே—தாயுமானவர்..”


“எல்லோரையும் துன்புறுத்துவதைத் தவிர வேரொன்றரிவேன் பராபரனே”—காங்கிரஸ் கட்சி..


எல்லா உயிர்களும் சமமானது..விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்..


இப்போது விஷயத்துக்கு வருவோம்..

காங்கிரஸ் ஆளும் மராட்டிய மாநிலம் “தூலே “ என்னும் ஊரில் 3 நாளைக்கு முன் நடந்த கலவரத்தில், போலீஸ் துப்பாக்கி சூடூ நடத்தியதில், 5 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.70 போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இந்த துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதரவாக எந்த “போலி மதசார்பற்ற கட்சிகளும்’ கண்டனமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை.


காரணம் கொன்றவர்க்ள் காங்கிரஸ்காரர்கள்..காங்கிரசால் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால்..அது உயிரில்லையா? அதற்கு மதிப்பில்லையா?


ஏன் ..ஒரு இரங்கல்…கண்டனம் கூட இல்லையா?..இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம்கள்.. நிலை..எப்போதும் வெறும் வாயை மெல்லும் கருணாநிதியும், லாலுபிரசாத்தும், பிரகாஷ்கரத்தும், வாய்மூடி மவுனியாய் இருப்பது ஏன்?


போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்தும், என்.டி.டி.வி. பர்க்காதத்தும், சி..என்.என்.ஐ.பி.என்…ராஜ்தீப் சர்தேசாயும், ஏன் விவாதம் நடத்தவில்லை?..ொன்றன் காங்கிரஸ்காரன் என்போ?


குஜராத்தோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயோ, இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தால்தான், கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என கருதப்படுவர்களோ?
அங்குதான் அவர்களின் உயிரின் மதிப்பு உயர்ந்ததோ?
அப்போதுதான் கண்டனங்களும், விவாதங்களும், இரங்கல் அறிக்கைகளும் வருமோ?


நான் ”தூலே” துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, January 4, 2013

இந்துப் பத்திரிக்கையின் தரம் தாழ்ந்த செய்கைகள்..



இந்துப்பத்திரிக்கை 150 ஆண்டுகளை கடந்தது..சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றியது..இதெல்லாம் சரித்திரம்...ஆனால் 30 ஆண்டுகளாக..அதன் செய்கைகள்...செயல்பாடுகள்..செய்திகள்...கட்டுரைகள்...தலையங்கங்கள்...அத்தனையும் கடும் விமரசனத்துக்கு உள்ளாகின்ற வகையில் உள்ளது..

பொதுக்கருத்துக்கு எதிராக, இந்து சமுகத்தை அவதூறு செய்யும் முறையில், சிகப்பு சித்தாந்ததின் அடிவருடியாக ”இந்து”உள்ளது.

எவ்வளவோ கண்டனங்கள் வந்த பின்பும் அதன் எழுத்தை மாற்றிக்கொள்ளாதது மட்டுமல்ல...மேலும் மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் முறையை தொடர்கிறது.

அதன் வெளிப்பாடாக நேற்றைய ( 3.1.13.) இதழில், ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது..அதன் ஆசிரியர் பெயர் சஞ்சை ஸ்ரீவத்சவாவாம்..சிகப்பில் ஊறி செஞ்சாயம் ஏறியவர் போலுள்ளது.

இதே மாதிரி “ மண்டபத்தில் திரிந்து கொண்டிருக்கும் பலரை “ விட்டு இந்து விரோத, கலாச்சார விரோத கட்டுரைகளை எழுதி வாங்கி பிரசுரிப்பது இந்துவின் வாடிக்கை ..அப்படி ஒன்றுதான் நேற்றைய கட்டுரையும்..

சரி..அது கிடக்கட்டும் ..விஷயத்துக்கு வருவோம்..

கட்டுரை என்ன சொல்கிறது.

1.டெல்லி மருத்துவ மாணவியின் பாலியல் பலாத்காரம்--கொலைக்கு க
ரணம் கண்டு பிடிக்க முயன்றுள்ளது..சட்ட ரீதியாக புலனாய்வு ரீதியாகவோ அல்ல.. கலாச்சார ரீதியாகவாம்..

2.இந்தியாவின் “ஆணாதிக்கம்தான்..” இதற்கு காரணமாம்.

3..போகிற போக்கில் புழுதி ரி தூற்றும் விதமாக.. கட்டுரைக்கு சம்பந்தமே இல்லாமல் ..
விவேகானந்தரின் 150 ஆவது ஜெயந்தி ஆண்டில் அவரை அவமான ப்படுத்த முயன்றுள்ளது....

முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் கருத்து சொல்ல தயாரில்லை.. ஏனெனில் அவை முற்றும் உளரல்கள்..

ஆணும் பெண்ணும் சமமென பறை சாற்றும் அமெரிக்கா..பிரிட்டன்..ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளில் பெண்களின் மீது பாலியல் வன்முறை இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம்..பூகோள பரப்பளவு..மற்றும் மக்கள் தொகையை கணக்கிட்டால் இந்தியாவை விட 16 மடங்கு அதிகம்...
இதைப்பற்றி ”இந்து”மூச்சு விடவில்லையே

ஷரியத் சட்டமான.--.கண்ணுக்கு கண்---கைக்கு கை----என தண்டனையுள்ள அரேபிய நாடுகளின் லட்சணம் என்ன? அங்கு பெண்கள்.”.மனிதர்கள்..அல்ல...ஜடம்...பொருள்கள்...வெரும் போக வஸ்துக்கள்.”.இதைப் பற்றி இவர்க்ளால் எழுத முடியுமா?

”போலீஸ் 15 நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளட்டும்..100 கோடி இந்துக்களையும் வெட்டி சாய்த்து விடுகிறேன்” என் கொக்கரித்த ஆந்திர முஸ்லீம் எம்.எல்.ஏ அக்பருதீன் ஓவாசி பற்றி ஒரு கட்டுரையோ கண்டனமோ எழுதும் “ஆண்மை “ இந்துவுக்கு உண்டா?

இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே “இந்து “ இக்கட்டுரையை இந்த நேரத்தில் வெளியிட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டாவது ----ஆண்களை போற்றும் பண்டிகை ஒன்றை குறிப்பிட்டு ..இந்தியா ஆணாதிக்க நாடாம்...அட ஞானசூனியமே..உன் பெண்டாட்டி ...நீ நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே அதை கொண்டாடுகிறாள்..

நவராத்திரியின் 9 நாளும் நாம் பெண்ணை “சக்தியாக--காளியாக மகிஷாசுரமர்த்தினியாக” வணங்குகிறோமே..அப்படியென்றால் இது பெண்ணாதிக்க நாடா?..மூளையை “சிகப்பில் தோய்த்து “  எழுதினால் இப்படித்தான் எழுத்ததோன்றும்..

இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்கிற ”அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் ”--அறியாத முழு ஞானசூனியம் “ இந்து என்பது இப்போது புறிகிறதா?

பெண்ணுக்கு பண்டிகைள் கொண்டாடுகிறிர்கள்..என்றால் டெல்லி பாலியல் பலத்காரம் நடந்திருக்ககூடாதல்லவா? என்பது இன்னொருவாதம்..

சாராயம் உள்ளே போனால், மகளிராவது..மண்ணாவது...தூணாவது.....துரும்பாவது...எல்லாம் ஒண்ணுதான் என்பது அமெரிக்காவிலிருந்து...அமிஞ்சிக்கரை வரையில் நாம் பார்க்கிறோமே.அான் வெள்ளைக்காரன் கொடத்ுவிட்டுப்போனக்கின் மிமை....டெல்லி முதல் உலகெங்கும் இம்மாதிரி வன்முறைகள் “சரக்கு உள்ளே போனவுடன் தான்  “ நடைபெறுகிறது.இதில் ஆணாதிக்கம் எங்கே வந்தது.. இது உண்மையில் “ஆல்கஹால் ஆதிக்கம் “.

இறுதியாக “ஆண் தன்மைக்கு “ எங்கேயோ தேடிப்பிடித்து ஒரு விவேகானந்தர் படத்தை பிரசுரித்து அதன் கீழ் அவரை அவமதிக்கும் வாக்கியம் வேறு எழுதியுள்ளது “இந்து”--இது கண்டிக்கத்தக்கது.

அட..மர மண்டை “இந்துவே”..அது விவேகானந்தரின் பக்தர் ஒருவர் சுவாமியை “கம்பீரமான காட்சியாக “ வரைந்த ஓவியம்..அது விவேகனந்தர் கொடுத்த “போஸ் “ அல்ல.அது ஆண் தன்மையின் காட்சி அல்ல..சுயகவுரவத்தின்...கம்பீரத்தின் சாட்சி...உன் ஊனக்கண்ணுக்கு --காமாலைக்கண்ணுக்கு மாற்றித்தான் தெரியும்..


அல்லாவும்...யேசுவும்..ஆண்கள்தான்  அல்லவா?.அல்லது .பெண்களா?--அவர் ஸ்தாபித்த மதத்தை கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் வழி படுகிறார்களே..அது என்ன ஆணாதிக்கமா?அை பற்ி எழினால் உக்க என்ன ஆகும் என்றெரியும் என்பால் எழில்லையா?
உங்கள் “எடிட்டர்” சித்தார்த் வரதராசனும்..முன்னாள் எடிட்டர்..ராமும் என்ன “ஜெண்டர்” சொல்வீர்களா?ஆண்களா? பெண்களா?

“இச்சமூகத்தின் முன்னேற்றம்  ஆணும் பெண்ணும் சேர்ந்து முயன்லே சாத்தியப்படும்...பெண்களை விட்டு விட்டு இச்சமூகம் எக்காலத்தும் முன்னேற முடியாது..  பறவை ஒரு சிறகால் பறப்பது எப்படி முடியாதோ அது போல தான் இதுவும்..” என பெண் உயர்வை போற்றியவர்  விவேகானந்தர்..அவருடைய கருத்துக்கள் முழுவதையும் உலகெங்கும் கொண்டு சென்றவர் சகோதரி நிவேதிதை என்ற பெண் தான்.

இவையெல்லாம் தெரியாமலா ஒரு கட்டுரையில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் விவேகானந்தர் பெயரை புகுத்தி-- படத்தை போட்டுள்ளது ”இந்து”..அதன் நோக்கம்..இதன் மூலம் இந்து கலாச்சாரத்தை அவமதிக்க வேண்டும் எனபது.மட்டுமே..

.இது இந்தியாவில் இந்து இயக்கங்கள் உள்ளவரை நடவாது...இன்றுமுதல் ..இந்துவுக்கு கண்டனங்களை அனுப்பியவண்ணம் இருப்போம்.

“திருந்தாத ஜென்மம் இருந்தென்ன லாபம்?”

Wednesday, January 2, 2013

1.1/2--ஆண்டுக்கு முன்பே உண்மையை உரைத்த அம்மாவுக்கு நன்றி



ஆங்கில புத்தாண்டு அருமையாகவே தொடங்கியுள்ளது..பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டது,..

”ஊன்றுகோல்லில்லாமல் நம் வெற்றிப் பயம் ொடும் “ என்று சென்னை கூட்டத்ில் சூளுரத் நம் ைவர் பொன்னாரின் வாக்கு உண்மையாகிவிட்டு.

மின்வெட்டினாலும், பஸ்கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் மக்கள் செல்வாக்கை இழந்த அம்மாவை ...எப்படி தூக்கிுமக்க   முடியும் என கவலை பட்டுக்கொண்டிருந்த பாஜகவிற்கு அம்மாவின் அறிவிப்பினால் ஏக குஷி..

அம்மா திமுகவோடு கூட்டணி வருமா? வராதா? என தினம் தினம் பத்திரிக்கைகளில் தொடர்ந்த விவாதத்தினால், “மண்டை குடைச்சலில் “ இருந்த பாஜக தொண்டனுக்கு பெரும் நிம்மதி..

டெல்லியிலிருந்து சென்னை வரும் நம் தேசிய தலைவர்களெல்லாம் மாற்றி மாற்றி மரியாதை நிமித்தமாக போயஸ் தோட்டத்துக்கு செல்வதும்......கமலாலயம் அதை ”வெறுமனே “ பார்த்துக்கொண்டு இருந்ததற்கும் முற்றுப்புள்ளி வைத்த அம்மாவுக்கு நன்றி

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத “அமைப்புச்செயலாளர் “ எனற “பொறுப்பு” போட்டு, அவருக்குக்கீழ் ஆயிரக்கணக்கானோர் ராப்பகலாக, வேலை பார்த்து, தொண்டர்களை தூங்க விடாமல், “இதைச்செய்---, அதைக்கொடு, “ என அமைப்பு, ரீதியாக வேலைவாங்கி,கட்சி தன் காலில் நிற்க,பயிற்சிகளும், பௌதிக்களும், கொடுத்த பிறகு,எங்கே நமது வெற்றியை அம்மா அபகரித்து விடுவாரோ என நாம் பயந்தபோது ....தானாக விலகிக்கொண்ட  அம்மாவிற்கு நன்றி..

நல்ல வேளை அம்மா பெரிய மனது பண்ணி ஒண்ணரை வருடத்திற்கு முன்பே உண்மையை போட்டு உடைத்தார்கள்..இதனால்,மின்வெட்டிற்கெதிரான போராட்டம் முதல் பல போராட்டங்களை நடத்த பாஜகவிற்கு வாய்ப்பளித்த அம்மாவிற்கு சிறப்பு  நன்றி.

காங்கிரசோடு சேர்வதற்கு அம்மாவிற்கு தயக்கம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.செல்லாக்காசாகிப்போன காங்கிரஸ் ஊழல்களின் மகாயக்ஞத்தினால், தோற்று துவண்டு போய் விட்டது.என்பதை புரிந்து கொண்ட அம்மாவின் முடிவு சரிதான்...

பாஜகவின் மீது அம்மாவிற்கு காவிரிதான் கோபம் என்றால்.... சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து ஷெட்டர்..ஷட்டரை திறந்து விட்டாரே..ஆர்ப்பாட்டம் நடத்தி கெடுத்தது யார் ?...கவுடாவும் காங்கிரசும்தானே.

இந்த உண்மை  அம்மாவிற்கு தெரியாமலா இருக்குமா?..பின் ஏன் இந்த அறிக்கை?...தமிழினத்தலைவர் சும்மாவா இருப்பார்?..தமிழனுக்கு தண்ணீர்தராத பாஜகவோடு கூட்டா? என அம்மாவை “ஐய்யா” கிழித்தெடுத்துவிடுவார்..என்ற பயமும் இருக்குமோ?

அல்லது மோடி பிரதமாவது நிச்சயம்...தன்னைப்போல ஒரு தாரண மாநில முதல்வருக்கு இந்த அந்தஸ்தா?...எதுவாக இருந்தாலும்..அது தனக்கு...தனக்குமட்டுமே...வரவேண்டும்...என்ற அம்மாவின் மனநிலையால்தான்   இந்த அறிக்கையோ?

அல்லது...அம்மாவுக்கு துதிபாடி, இப்போதே, கூட்டணி பஸ்ஸில் இடம் பிடிக்க, “துண்டு போட்டு விட்ட” தா.பாண்டியன்...ஜி.ராமகிருஷ்னன். போன்ற மார்க்ஸிஸ்ட்களை, விலக்க வேண்டி வருமோ என்கிற அச்சமோ?

எதுவாக இருந்தாலும் “வெகுவாக மக்கள் விரோதத்தை “ சம்பாத்தித்த அம்மாவை....வெகுவாக மக்கள் ஆதரவை சம்பாதித்த பாஜக தூக்கி சுமக்க வேண்டி ய சூழலை உருவாக்காமல் ....நம்மை காப்பாற்றிய  அம்மாவிற்கு மீண்டும் நன்றி..,

Saturday, December 22, 2012

ஹிண்டு....காங்கிரஸ்....கோயபெல்ஸ்”

ஒருவர் வெற்றி பெற்றால் அவரை பாராட்டுவதும்..மரணமடைந்து விட்டால் அவரது நற்குணங்களை சுட்டிக்காட்டி புகழ்வதும்…நம்நாட்டின் பண்பாடு..



இந்த பண்பாடும், நாகரீகமும், மாநிலத்துக்கு மாநிலம மாறுபடுவதில்லை…எல்லா மாநிலத்திலும் பின் பற்றப்படுவதுதான்..



ஆனால் காங்கிரஸ் கட்சியும் ”இந்துப்” பத்திரிக்கையும் என்.டி.டி.வியும் இதற்கு விதி விலக்கு!

தேர்தல் முடிவுகளை மீடியாக்கள் அலசிக்கொண்டிருக்கும் போது, அதில் பங்கு பெற்ற காங்கிரசின் திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் மோடியை புழுதி வாரி தூற்றினார்…



இந்தியாவிலுள்ள அனைத்து மதசார்பற்ற சக்திகளும் ஒன்று சேர்ந்து, குஜராத்தில் முகாமிட்டு மோடியை தோற்கடித்திருக்க வேண்டும்…என்றார்.



தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் , மோடியை, “ ஒரு மதவாதி…வன்முறையாளர், பிற்போக்குவாதி, “ என்றெல்லாம் திட்டி தீர்த்தார்.



அதற்கு பதிலடியாக நான் சொன்னேன்..” 6 கோடி குஜராத்திகளால் ஜனநாயக முறைப்படி , தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை, இப்படி கண்ணியக்குறைவாக பேச காங்கிரஸ் உங்களுக்கு சொல்லிக்கொடுதிருக்கிறதா?”..என்றேன்.
ோடியை முஜத்ிக்கள் ஓட்டுப்போட்டெர்ந்த்டத்ர்..என்ற உங்கு வம்...த்மா கந்தியும்...ர்ார் வல்லாய் பட்டேலும், மொரார்ஜி ேசாயும் கொடத்ுஜத்ையும் குஜத் மக்கையும் அவானத்ும் விாக.... இருக்கிறு என்றேன்..
  

1950 முதல் 2000 மாவது ஆண்டுவரையிலான 50 ஆண்டுகளில் இந்தியாவில நடந்த மதக்கலவரங்கள் சுமார் 1194..அதில் சுமார் 80 சதம் காங்கிரசின் பிரதமர்கள் , திரு நேரு, திருமதி. இந்திரா காந்தி, திரு ராஜீவ் காந்தி ஆகியோர் காலத்தில் நடை பெற்றது..இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்றுகுவித்தது காங்கிரஸ் கட்சிதான்..இதற்காக இவர்களுக்கு கிடைத்த பரிசு மூன்று “பாரத ரத்னா”..பட்டம்



இப்படி கலவரங்களை உண்டாக்கி முஸ்லீம்களை கொன்று குவித்த காங்கிரசுக்கு மதசார்பற்ற தன்மை பற்றி பேச அருகதை கிடையாது—என பீட்டருக்கு நான் பதிலளித்தேன்.

மாறாக இமாச்சலத்தில் தோல்வியை தழுவிய பாஜகவின் முதல்வர் பிரேம் குமார் தூமல்..”மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்” என்றார்.

காங்கிரசின் ராகுலையோ, சோனியாவையோ அவர் அவதூறாக பேசவில்லை.

கட்சிகளுக்குள்ளே கலாச்சார மாறுபாடுகளை பாருங்கள்..

.

மோடி மதவாதியாக இருந்திருந்தால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த 19 தொகுதிகளில் 12 தொகுதியை பாஜக எப்படி ஜெயித்து இருக்க  முடியும்?..

உண்மையை ஏற்றுக்கொள்ள என்றும் இவர்கள் தயாரில்லை..



வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்து சொல்ல தயாரில்லாத..( தகுதியில்லாத பத்த்ரிக்கை  என்று நான் சொல்வேன்..) இந்து பத்திரிக்கை இப்படி தலையங்கம் எழுதியது..

“ மோடி…அவருடைய காட்டின் அரசன்…( KING OF HIS JUNGLE ) முஸ்லீம்களை கொன்று குவித்தவர்…டெல்லிக்கு படையெடுக்க முயற்சிக்கிறார்”—என்ன அநாகரீகம்..என்ன வயிற்றெரிச்சல்…



மோடி மதவெறியனாக இருந்திருந்தால்….2002 குஜ்ராத் கலவரத்தில் ஒரு இந்து கூட சுடப்பட்டுரிக்க கூடாது…மரணமடைந்திருக்கக் கூடாது…கைது செய்யப்பட்டு இருக்கக்கூடாது…..தண்டிக்க பட்டு இருக்கக்கூடாது..



ஆனால் துப்பாக்கி சூட்டில்…இந்து 193 பேர் முஸ்லீம் 77.. பேர்

கொல்லப்பட்டதில் இந்து 283 பேர்..முஸ்லீம்..788 பேர்

கைது செய்யப்பட்டதில் இந்து 27,000 பேர்..முஸ்லீம் 7000 பேர்



இவ்வளவு உண்மைகளுக்கிடையே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லும் கோயபெல்ஸ் இந்து பத்திரிக்கை----என்.டி.டி.வி. மற்றும் காங்கிரசை என்ன செய்வது…..



குஜராத்தைப் போல…2014 லில்..டெல்லியையும் பிடிப்பத்தே இவரகளுக்கு பாடம் புகட்டும் ஒரே வழி.

Sunday, December 16, 2012

லஞ்சமாகும் மானியங்கள்..தினமலர்

மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மேலெழுந்தவாரியாக பார்த்தால், இது ஒரு சிறந்த திட்டமாக தெரியும். அரசின் பல்வேறு திட்டத்தில் கொடுக்கப்படும் இலவசங்கள், மானியங்கள், மக்களை சென்றடைவதில்லை. இடையில் ஏற்படும் ஒழுகல், சிந்தல், சிதறல், உதிரல் போன்றவை, ராஜிவ் சொன்னது போல, ஒரு ரூபாய்க்கு, 17 பைசா தான் மக்களை சென்றடைகிறது என்றது உண்மையே.இக்குறையை சரி செய்யத்தான், மக்களுக்கு, மானியங்களை பணமாக, அதுவும் வங்கி மூலமாக, நேரடியாக அவர்கள் கணக்கிலேயே செலுத்தி விட, அரசு முடிவு செய்துள்ளது; இது தவறா?

குஜராத்துக்கு வரும், 13 மற்றும் 17ம் தேதி தேர்தல். இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல், 51 மாவட்டங்களில், நான்கு மாவட்டம் குஜராத்தில் இருக்கின்றன.வாக்காளர் என்றால், காங்கிரசின் ஓட்டு கொட்டும் ஒரு ஏ.டி.எம்., காசு என்னும் கார்டை, வாயில், "ஸ்வைப்' செய்தால், வயிற்றிலிருந்து, "ஓட்டை' கொட்டும் இந்த இயந்திரம். இதை உறுதி செய்யும் சம்பவங்கள், சரித்திரத்தில் நடந்தேறியுள்ளன.

கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், "கரீபி ஹகட்டாவோ' வறுமையே வெளியேறு என்ற, கோஷத்தை முன் வைத்து, இந்திரா வெற்றி கண்டார்.கடந்த, 1971ம் வருடம், சுதந்திரம் பெற்று அன்று, 24 ஆண்டு ஆகியும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. இன்றும் அப்படித்தான் என்பது, வேறு விஷயம்.தோற்றுப்போகும் சூழல் உருவாகும் போதெல்லாம், காங்கிரஸ் புத்தியில் புதிய புதிய ஏமாற்றுத் திட்டங்கள் வேர்க்கும். அதே மாதிரி ஒன்று தான், இந்த மானியங்களை பணமாக, வங்கி மூலம் வழங்கும் திட்டம்.ஓட்டுக்காக, கட்சி பணத்துக்கு பதில், அரசு பணத்தையே, அதாவது, மக்கள் பணத்தையே, மக்களுக்கு கொடுக்க அறிவித்ததுதான் இந்த திட்டம்.

வெளிநாட்டிலிருந்து, ஈமு கோழி என்ற ஒரு பறவையை, இங்கு கொண்டு வந்து, அது இந்தியாவின் தட்பவெட்ப சூழலுக்கு வளருமா என்பதை பற்றி கவலைப்படாமல், விவசாயிகளிடம் ஆசை வார்த்தை காட்டி, கோடிக்கணக்கில் சுருட்டினர்.காலம் காலமாக வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை புதிய கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைகள் காட்டி, அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டு, காவல் நிலைய வாசல்களில், அசலுக்காக தவங்கிடக்கும் காட்சி, தினசரி பத்திரிகைகள் படம் பிடித்து காட்டுகின்றன. சில தனிப்பட்ட நபர்களின் ஆசை வார்த்தைகள், கவர்ச்சி திட்டங்களில், மக்கள் ஏமாந்து போகின்றனர் என்பது, நிதர்சனமான உண்மை.

தனியார், மக்களை ஏமாற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அரசே, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டை பறித்து ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதும், ஒரு சாராரின் கேள்வி.வாஜ்பாய், "வேலைக்கு உணவு' திட்டத்தை கொண்டு வந்தார்; எதற்காக? அன்றைய தினம், உணவு கிடங்குகளில், கோதுமை நிரம்பி வழிந்தது. சேமிக்க இடமில்லை. தானியங்கள் வீணாகாமல் தடுக்க, அதை ஏழைகளுக்கு கொடுக்க விரும்பினார்.மக்கள், அரசிடம் கையேந்தக் கூடாது. எனவே, இலவசமாக கொடுக்க விரும்பாமல், அவர்களே அதை சம்பாதித்துக்கொள்ளும் வழியில், 8 மணி நேரம் வேலை கொடுத்து, சம்பளமாக கோதுமை கொடுத்தார்.வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, அதே திட்டத்தை, மாற்றுப்பெயரில் காங்கிரஸ் தொடர்ந்தது. பெயர் மட்டுமல்ல, வழிமுறை, செயல்பாடுகளும் மாறின. "தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம்' என்பது தான், அந்த புதிய பெயர். இதில், தானியத்துக்கு பதிலாக, பணம் கொடுக்கப்பட்டது. கணக்குக்கு, 100 முதல், 110 ரூபாய் சம்பளம். கைக்கு வருவதோ, 60 அல்லது 70 ரூபாய் மட்டுமே. இடையில், 40 முதல், 50 ரூபாய் வரை, ஒழுகல் இருந்ததால், உருப்படியான வேலை ஏதும் நடைபெறவில்லை.

தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றும், ஆளும் கட்சிக்காரர்கள் பிரித்தாண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர். தொடர்ந்த வேலைக்கு, அவர்கள் கேட்ட விலை, தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும் எனும் நிபந்தனை தான். இப்போது, "வங்கி மூலம் மானிய பணம்' திட்டம், நிஜமாகவே, ஒரு ஜாக்பாட் தான். இதே திட்டத்தை, இப்போது அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, "மாதிரி திட்டமாக' காங்கிரஸ் ஆளும், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், "கோட்காசிம்' தாலுகாவில், நவம்பர், 2011ல் அறிமுகப்படுத்தினர்.முதலில் ஏழை குடும்ப கார்டுதாரருக்கு, வங்கி கணக்கு ஏற்படுத்தி கொடுத்து, மண்ணெண்ணெய்க்கு மானியத்தை, வங்கியில் செலுத்த முடிவு செய்தனர். அதாவது, ஒரு கார்டுதாரர், மாதம், 10 லிட்டர் மண்ணெண்ணெய், லிட்டருக்கு, 15 ரூபாய் என, மானிய விலையில் கொடுத்ததை, அதன் சந்தை விலையான, 49 ரூபாய்க்கு வாங்கி கொள்ள வேண்டும்.

திட்டத்தின் முதல் மாத மானியம், 340 ரூபாயை, முன்கூட்டியே வங்கி கணக்கில் கட்டி விடுவது என, முடிவு செய்தனர். இது முதல், மூன்று மாதங்களுக்கு தொடரும். இரண்டாவது, மூன்றாவது மாதத்திலிருந்து, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், வாங்கும் மண்ணெண்ணெய்யின் அளவை பொறுத்து, மானிய தொகை, வங்கியில் செலுத்துவது என்பது ஏற்பாடு. திட்டம் துவங்கிய கடந்த ஓராண்டில், ஒரு சிலரைத் தவிர, யாருக்கும் மானிய தொகை, வங்கியில் செலுத்தப்படவில்லை. சந்தை விலைக்கே, ரேஷனில் மண்ணெண்ணெய்யை விற்பதால், எண்ணெய் வாங்க ஆளில்லை. அதாவது, ரேஷனில் மண்ணெண்ணெய் விற்பனை, 70 சதவீதம் குறைந்ததுஇந்த விற்பனை குறைவை, அரசு, தற்போது கையில் எடுத்துள்ளது. ரேஷன் மண்ணெண்ணெய், கள்ள மார்க்கெட்டுக்கு போனதை, அரசு தடுத்து விட்டதாம். இந்த திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அரசு இதை வைக்கிறது.
ஆனால், உண்மை நிலவரம் வேறு. அரசின் மானியம், வங்கி கணக்கில் ஏறாததால், சந்தை விலையான லிட்டர், 49 ரூபாய்க்கு மக்களால் மண்ணெண்ணெய்யை வாங்க முடியாததால், கிராமவாசிகள், காட்டில் கிடைக்கும் விறகுகளை பொறுக்கி, ஜீவனம் நடத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

இது தவிர, இந்த திட்டத்தில் வேறு என்ன பாதகங்கள் இருக்கின்றன என்று, கேட்பவர்களுக்கு, சில விவரங்கள்: வங்கிகள் இல்லாத கிராமங்கள் நாட்டில், 40 சதவீதத்துக்கும் அதிகம். பெரும்பாலான கிராம மக்கள், தபால் நிலையங்களில், கணக்கு வைத்துள்ளனர்.நாட்டின், 60 சதவீத தபால் நிலையங்கள், "இன்டர்நெட்'டினால் இணைக்கப்படவில்லை. இதை செய்து முடிக்க, அரசுக்கு, 2013 ஜூனில் ஆரம்பித்து, 15 மாத காலம் ஆகும் என, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.ஆக, "மாதிரி திட்டமே' ஓராண்டு கால சாதனையாக, வேதனையே தந்துள்ளது. அதுவும், ஒரே ஒரு பொருளுக்கு, அதாவது, மண்ணெண்ணெய் மானியத்துக்கு மட்டும்.

மிக முக்கியமான வங்கி கணக்கு வசதியே முழுமை பெறவில்லை. அரசு அறிவித்துள்ள, 51 மாவட்டங்களில் கூட, 71 சதவீதம், வங்கிகள் மூலம் மட்டுமே பணம் செலுத்தும் வசதி உள்ளதாக, மத்திய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால், இதை அவசர, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? "தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ், இத்திட்டத்தை அறிவித்துள்ளது' என்ற குற்றச்சாட்டிற்கு, அமைச்சர் வாக்குமூலம் வலு சேர்க்கிறதே.நலத்திட்டங்கள், மானியங்கள், ஏழை மக்களை சமூகத்தில் முன்னேறியவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுவதற்காக, அரசு செய்ய வேண்டிய கட்டாயங்கள். அதனால் தான், நம் நாட்டின் அரசை, அரசமைப்பு சட்டத்தில், "மக்கள் நல அரசாங்கம்' என்று
குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இன்றைய அரசு, குறிப்பாக, "காந்தி' பெயர் கொண்ட, நேரு குடும்ப தலைமையிலான அரசுகள், மானியங்களை பணமாக தருகிறோம் என்ற பெயரில், லஞ்சமாக மாற்ற முயல்வது, இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது.

Thursday, December 6, 2012

மீடியாவை துரத்து மோடி

இந்துப் பத்திரிக்க்கையில் உங்கள் கட்டுரை வரவேண்டுமா? அது ஒன்றும் கஷட்டமான விஷயம் இல்லை..நரேந்திர மோடியை தரக்குறைவாக திட்டி எழுதுங்கள்..அது கட்டுரை என்ற பெயரில் பிரசுரமாகிவிடும்.அப்படித்தான் ஊர் பேர் தெரியாத பலரிந்-..இன்றுகூட பத்ரி ரெய்னா என்பவர் உட்பட கட்டுரைகளை இந்து பிரசுரித்து வருகிறது..அப்படி வந்த பல வார்த்தைகளை படித்ததனால் கிடைத்த”ஞானமே” இக்கட்டுரையின் கரு.

புது புதிதாக வார்த்தைகளை கண்டுபிடிப்பதில் மீடியாக்கள் கில்லாடிகள்.முதலில் “மதவாதத்தை” –கண்டு பிடித்தார்கள்…அதற்கு எதிர்ப்பதம் தெரியாதமல் தவித்த போது ஒரு அறிவு ஜீவி ஓடிவந்து ”சுக்குலர்”—மதசார்பற்றவன்—என்பதை வீசி எறிந்தார்.

இரண்டிலும் சிக்கியவர்கள் “சூடோ செக்குலர்” என்ற வார்த்தையை தேடிக்கண்டு பிடித்தனர்.
இப்படி வார்த்தை ஜாலங்கள் மண்ணில் ஆடியது போதாதென்று விண்ணில் ஆடி அது தற்போது குஜராத்தில் கீழிறங்கியது.

அதுதான் “மெஜாரிடி கம்யூனலிசம்”—பெரும்பான்மை மதவாதமாம்..இதற்க்கு எதிப்பதம் சொல்லாமலே தெரியுமல்லவா? ஆம் அதுதான் சிறுபான்மை மதவாதம்..

கோத்ரா கலவரத்திற்கு பின்பு குஜராத் மயான பூமியானது..என்று சொல்லி மீடியாக்கள் மோடியை துரத்தின..மோடி ஓடினார்…

நரோடா பாட்டியா..பெஸ்ட் பேக்கரி வழக்கு—ஷொராபுதின் வழக்கு என கேஸ்மேல் கேஸ்..மோடியை துரத்தியது....மோடி ஒடினார்..

2007 தேர்தலில் இரை கிடைக்காமல் தவித்த இதே பூதங்களை தூக்கிவீசிய மக்கள் மோடி மீது வெற்றி மாலையை சூடினார்கள்.
காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களுக்கு அப்போதும் வன்மம் தீரவில்லை.2002இல் மோடிக்கெதிரன அவர்களுடைய “மைனாரிட்டி கம்யூனலிசமே” 2007 லும் அவர்களது ஆயுதமாகியது..

குஜராத்துக்கு வெளியே மக்கள் இந்த வாதங்களை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்..ஆனால் குஜராத் மக்களோ மோடியை தங்கள் “பாதுகாவலனாக”—”ஆபத்பாந்தவனாக”—பார்த்தார்கள்.
எதிர்ப்பை ஏற்படுத்தும் என நினைத்த மீடியாக்களின் பிரச்சாரம்..எதிர்விளைவை ஏற்படுத்தியதால் ஏமாந்துபோனார்கள்.

குஜராத் இன்று மோடியின் கோட்டை..இம்முறை மோடியின் வெற்றி சாதாரணமானதாக இருக்கப்போவதில்லை..மாதவ் சிங் சோலங்கி பெற்ற 140 இடங்களை விட  அதிகம் வெற்றியை நோக்கி மோடி போய்க்கொண்டிருக்கிறார்.

பிரச்சாரதில் 3-டி போன்ற தகவல் தொழில்நுட்பம்—ஒரே நேரத்தில் 10 ஊர்களில் மக்களிடம் நேரடிப்பேச்சு..இந்த தொழில்நுட்ப உரிமையை 2014 வரை தானே சொந்தமாக்கிக்கொண்ட சாமர்த்தியம்..

தினசரி 10 ஊர்களி பொதுக்கூட்டம்—10 மணிநேரம் வானில் பறக்கும் வேகம்—யாரு நினத்துப்பார்க்கமுடியாத வியூகம்—பிரச்சார தந்திரம்.. ..இதனால் ஆடிப்போன எதிரி மீடியாக்களின் கடைசி ஆயுதந்தான்..”மெஜாரிட்டி கம்யூனலிசம்”—பெரும்பான்மை வகுப்புவாதம்—

இதை---இதை—இதைத்தானே எதிர்பார்த்தோம்..
ஓடஓட மோடியை விரட்டிய மீடியாக்கள் அவர் திரும்பியவுடன் தலைதெரிக்க  ஓடுகிரது..
மோடியை மீடியா துரத்திய 2002 போய்
மோடி மீடியாவை துரத்தும் 2012 வந்துள்ளது
என்னே காலத்தின் அபூர்வம்
தர்மத்தின் தீர்மானம்.

Wednesday, November 28, 2012

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவை லேத்துபட்டறை மாணிக்கத்தின் மனம் நொந்த மடல்



அன்புடையீர் வணக்கம்.
நான் கடந்த 40 ஆண்டுகளாக கோவையில் லேத் வொர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறேன்..கடந்த 4 ஆண்டுகளாக சரியாக “கரண்ட்” வராததால். என் சர்வீஸை 36 ஆண்டுகளாக குறைத்து கொள்கிறேன்.

நான் என்ன சொல்லவருகிறேன் எனபது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்...மின்வெட்டு என்றால் ...கடிதம் மாநில முதல்வருக்கோ,,,மின்துறை அமைச்சருக்கோதானே எழுத வேண்டும் எங்களுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது..

இந்த மின்வெட்டு பிரச்சனை தீர்ப்பதில் உங்களுடைய தனிப்பட்ட பங்கு..மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டுப் பங்கை நீங்கள் செய்யாததால் தான் எழுதுகிறேன்.

முதலில் ஆளும் அண்ணா (அம்மா) திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என் வணக்கம்.
மின்வெட்டினால் நான் ரொம்பவே நொந்து போயிருக்கேனுங்க.உங்க அம்மா..”நாங்க ஆட்சிக்கு வந்தா 6 மாதத்துல மின் வெட்ட சரிசெய்வேன்னு “ சொனனாங்க..ரொம்பவே சந்தோஷப்பட்டு பின்னங்கால் பிடரியில் இடிக்க குடும்பத்தோட ஓடிப்போய் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டேன்.
கண்ட பலன் என்ன? கருணாநிதி ஆட்சியில 4 மணி நேரமாய் இருந்த “பவர்கட்” உங்க ஆட்சியில 16 மணிநேரமாய் பதவி உயர்வு பெற்றதுதான் மிச்சம்…

மிக்ஸி--,கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள்னு கொடுத்து தான்சொன்ன வாக்குறுதியெல்லாம் நிறைவேத்தின உங்கள் “அம்மா” மின்வெட்ட மட்டும் நீக்காம எங்க வாழ்க்கையை நடு ரோட்டுக்கே கொண்டு வந்துட்டாங்க..

கரண்ட் இல்லாததால் வேலை இல்லை..அதனால் வருவாய் இல்லை..செலவுக்கு பணம் இல்லாததால் கடன்.--.கடன்--..என கடன் மேல் கடன் வாங்கி..கடனில் மூழ்கி வருகிறேன்..நானும் என்னை நம்பியுள்ள 4 தொழிலாளர்களும் வாழவழி தெரியாமல் பித்து பிடித்து அலைகிறோம்..
இனியும் என்னால் பொறுக்க முடியாது எனது 4 கோரிக்கைகளில் எதாவது ஒன்றையாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்..வணக்கம்,

கேப்டனின் சட்டமன்ற அன்புத்தம்பிகளுக்கு வணக்கம்..
நீங்களெல்லாம் சட்டமன்றத்துக்கு போனதும் நீறைய நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தேன்..கேப்டனும் அம்மாவும் சேர்ந்து வெற்றி பெற்ற மாதிரி மின்வெட்டையும் சேர்ந்து ஜெயிப்பார்கள் என்று காத்திருந்தேன்.

கேப்டனுக்கு சினிமாவில் வாய்ப்பு வராததால் சட்டசபைக்கு போய் சண்டை காட்சிகளில் நடிச்சார்..நாக்கை துருத்தி கையை மடக்கி ஆவேசப்பட்டவரை அம்மா வெளியே அனுப்பினார்..அப்போது போனவர்தான் இன்னும் வரவில்லை.
தமிழ் நாட்டின் தலைஎழுத்து எதிர் கட்சித்தலைவர் சட்டசபைக்கு வருவதே இல்லை.இனி எங்கள் கோரிக்கைகளை எதிர் கட்சியாய் யார் பேசுவார்.
உங்களிடத்திலும் அதே 4 கோரிக்கைகளை வைக்கிறேன்..உடனடியாக ஏதாவது ஒன்றை நிறைவேற்றுங்கள்.. வணக்கம்.

மேன்மை தங்கிய கலைஞர் சட்டமன்ற் உறுப்பினர்களுக்கு வணக்கம்.
“செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பது பழமொழி…நீங்கள் தோற்றும் “கெடுத்து”தான் வருகிறிர்கள்.தமிழகத்தை ஆண்டபோது 4 மணிநேரம் பவர்கட் உங்கள் பரிசளிப்பு…இப்போது இந்தியாவை ஆளும் போது மன்மோகந்-சோனியாவிடமிருந்து “கரண்ட்” வாங்கித்தர மறுக்கிறீர்கள்.அம்மாமேல இருக்கிற கோபத்தை எங்கள் மீது காட்டுகிறீர்கள்.

மத்திய மின்சாரத்தை கையில் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு மின்சாரம் தர மறுக்கும் நீங்கள் தமிழர்கள் தானா? என சந்தேகம் வருகிறது.
மத்தியிலிருந்து உடனடியாக தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரமுடியாவிட்டால்..என்னுடைய நான்காவது கோரிக்கையாவது உடனடியக நிறைவேற்றுங்கள்..

அன்பிற்கினிய காங்கிரஸ் பேரியக்க சட்டமன்ற சகோதரர்களுக்கு வணக்கம்..
அடுத்த கூட்டணியை பற்றி மட்டுமே கவலைப்படும் உங்களிடம் சொல்லி எந்தப்பயனுமில்லை..வாய்பேசாத வாசன்..ஞானம் மட்டுமே உள்ள “பாவம்”தேசிகன்..வாயையே மூடாத நாரயண சாமி,,இவர்களெல்லாம் இருந்து என்ன பயன்?--குறைந்த பட்சம் சோனியாவிடம் சொல்லி டெல்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்..வேண்டாமென்று ஒப்படைத்த1745 மேகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தர செய்யுங்கள்..

சோனியாவுக்கு தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருப்பது தெரியாது..பாவம் அவர் இத்தலிக்காரர்..நீங்கள் இந்திய வரைபடத்தை காட்டி புரியவைய்யுங்கள்.
முடியாவிட்டால் எனது 4வது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள்.

போராட்டம் செய்யவும்..கூட்டணியில் இடம்பிடிக்க துண்டுபோடுவைதையும் மட்டுமே தெரிந்த கம்யூனிஸ்ட் தோழர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதால் அவர்களுக்கு இந்த கடிதம் இல்லை.

ராமதாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் இல்லை ..அவரிடம் மின்சாரம் கேட்டால்..மின்சாரம் கொடுக்கும் “ஷாக்கை” விட பெரிய ஷாக் கொடுப்பார்..அதான் அன்புமணியை முதலமைச்சார் ஆக்குங்கள்  என்பார்..

அன்பிற்கினிய தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வணக்கம்..
என்னைப்போல பாதிக்கப்பட்ட லட்சக்கணகானவர்களின் சார்பாக என் 4 கோரிக்கைகள் வருமாறு…

1…மின்வெட்டை ரத்து செய்து உடனடியாக 16 மணிநேரமாவது தொடர் மின்சாரம் கொடுங்கள்.

2..முடியாவிட்டால்..உடனடியாக..”மாற்றுவழி மின்சாரம்—ALTERNATIVE POWER”—கொடுங்கள்..இலவசமாக வேண்டாம்—மானியமும் வேண்டாம்..இப்போது அரசு வசூலிக்கும் மின்விலைக்கு சம்மான மின்விலைக்கு கொடுங்கள்.

3..அதுவும் முடியாவிட்டால்..திமுக ஆட்சியில் ஒன்றரை வருடம் உங்கள் ஆட்சியில் ஒன்றரை வருடமாக கரண்ட் இன்றி நஷ்ட்டம் தலைக்கேறி நொந்து நூடுல்ஸ் ஆன எனக்கும் என்னிடம் வேலை பார்க்கும் 4 ஊழியர்களுக்கும் இன்றைய விலைவாசியில் குடும்பம் நடத்த மாதம் தலா ரூ.10,000/= மாவது கொடுங்கள்.

4…அதுவும் முடியாவிட்டால்..உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ—பதவி--..ராஜினாமை கொடுங்கள்..மின்சாரம் தரும் வல்லமை உடைய வேறு ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்….
( ஆண்டவா..இம்முறையாவது வாக்குறுதியை கொடுத்துவிட்டு..ஏமாற்றாத எம்.எல்.ஏயை எங்களுக்குத்தருவாயா?)

 வணக்கம்………………………………………………………………………………………………………இங்ஙனம்
மிசாரத்துக்காக ஏங்கி  காத்துக்கிடக்கும்       மாணிக்கம்-கோவை