Pages

Thursday, February 10, 2011

ஜெ --யைக் --காத்த திமுக

ஜெ --யைக்  --காத்த திமுக

சட்ட மன்ற கூட்டத்தொடர்களில் ஜெ கலந்து கொள்வதே இல்லை--அத்தி பூத்த மாதிரி அது இரண்டுமுறை மட்டுமே நடந்தது.
தொடர்ந்து 60 நாள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடில்  எம்.எல்.ஏ . பதவி பறிபோகும் --இதை காப்பாற்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாவிடிலும்-- அவ்வப்போது சட்டசபைக்கு வேலியே    உள்ள "ரிஜிஸ்டரில்     "கைய்யேழுத்துப்போட்டு --ஜெ பதவியை காப்பாற்றி வந்துள்ளார்.

அதுவும் அவருக்கு "போரடிச்சு போச்சு "--சரி இதுக்கு நிரந்தரமாக ஏதாவது வழி செய்யவேண்டுமே?--அவர்கள் கட்சி எம்.எல்.ஏ. எல்லாம் ஒன்று சேர்ந்து ""அம்மாவுக்கு உடம்புக்கு  நோவு ""--என டாக்டர் சர்டிபிகேட் வாங்கினார்கள்.

சட்டசபையில் தீர்மானம் போட்டு " லீவு"-- சொன்னால் --சட்டபூர்வமாக "டிமிக்கி " கொடுக்கலாம்--
  அதிமுக தீர்மானத்தை முன்மொழிந்தது..தீர்மான எதிர்ப்பின்றி நிறைவேறியது --எதிர்ப்பு காட்டவேண்டிய திமுக மவுனம் காத்தது..அம்மா இனி சட்டசபைக்கு வரவேண்டாம்--பதவியும் பறிபோகாது --

அம்மாவை திமுக காத்தது. அம்மாவுக்கு உஅடம்பு  நன்றாகவேதான் உள்ளது. எல்லா வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது திமுகவுக்கு தெரியாதா?" மெடிகல் சர்டிபிகேட் பொய் " என்பதும் திமுக அறியாததா?---அம்மா சட்டசபைக்கு வருவதால் திமுக வுக்கு பயமா?

இதில் எதுவுமே காரணமில்லை --திமுக ஆட்சியில் அதிமுக தலைவியும் --அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதியும் --சட்டசபைக்கு வருவதே இல்லை--வெளி ரிஜிஸ்டரில் கையெழுத்து போடுவதோடு சரி. இதுதான் இவர்களின்  " மக்கள் பிரதிநிதி லட்சணம் "--ஜனநாயகத்தை மதிக்கும் மாண்பு ---

அடுத்த சட்டமன்றத்திலும் கருணாநிதிக்கு இதே நிலைதான் ஏற்ப்படும் என திமுக நினைப்பதால் --திமுகவே முந்திக்கொண்டு "அம்மாவைக் காப்பாற்றியுள்ளது"--அதனால் தான் தனக்காக ---தான் எதிர்க்கட்சி தலைவராக வந்துவிட்டால் ---என --:எதிர்க்கட்சி தலைவருக்கான  அறையை "பெரிய்ய "அறையாக கட்டியுள்ளார் கருணாநிதி..

காமராஜர் சொன்னது இன்றும் உண்மையாக உள்ளது--""கூட்டுக்களவாணிகள்---ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் "--திமுக --அதிமுக

""ஜேக்கு பூரண ஓய்வு--டாக்டர்கள் அறிவுரை "--இதுதான் பத்திரிக்கை தலைப்பு செய்தி---ஆம் ஜெயக்கு மட்டுமல்ல கலைஞருக்கும்--பூரண ஓய்வு --அரசியலிலிருந்தும் கொடுத்து விடலாம்--அதுதான் தமிழ்நாட்டிற்கும்--மக்களுக்கும்--தமிழ் இனத்திற்கும் நல்லது.. 

No comments: