Pages

Tuesday, February 22, 2011

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி

ஹசன் அலி கான் என்ற ஜகஜால கில்லாடி 

ஒரு நடுத்தட்டு வர்க்கம் --ஒரு ஆண்டு வரி கட்டாமலே இருந்தாலே --வரிந்து கட்டிக்கொண்டு நோட்டிஸ் அனுப்பும் வருமான வரித்துறை---பல ஆண்டுகளாக --அதுவும் பல்லாயிரம் கோடி ரூபாய் --வரி கட்டவேண்டியவருக்கு --நம் மன்மோகன் சிங்ஜி அரசு --இப்போதுதான் நோட்டிஸ் அனிப்பியுள்ளது .

புனேவை சேர்ந்த ஒரு குதிரை வியாபாரி--சுவிஸ் வங்கியில் ஒரே நேரத்தில் 8 பில்லியன் டாலர் பரிவர்த்தனை செய்கிறார்.உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் ""ஹவாலா''--மற்றும் "கறுப்புப் பண பரிவர்த்தனைகள்--பல்வேறு பத்திரிகைகள்--போட்டி போட்டுக்கொண்டு "ஹசன் அலி கான் " என்ற அந்த :நலல்வரின் "--முகத்திரையை கிழிக்கின்றது.

மன்மோகனும் சோனியாவும் கண்ண்டுகொள்ளவே இல்லை --காங்கிரசின் உறக்கம் கலையவே இல்லை--

திடிரென சுயநினைவு வந்த  சோனியா அரசு --ஹசன் அலியை ஏதாவது ஒரு வகையில் கைது செய்யாவிடில் மீடியாக்கள் வாயை மூடமுடியாது --எனவே ஒரு கேஸ் போடுவது மாதிரி போட்டு விட்டுடுவோம்-- என முடிவு செய்து ரூ .70 ஆயிரம் கோடி ரூபாய் வரி கட்ட சொல்லியுள்ளது.. 

இதில் வேடிக்கை என்னவென்றால் --ஹசன் அலிக்கு ஒரு பைசா சொத்து கூட இந்தியாவில் கிடையாது--ஹசன் அலியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ""அத்தனையும் போலி"-- இவர் மீது போடப்படும் எந்த வழக்கும் நிற்காது--இவை எல்லாம் தெரிந்து தான் இந்த "நோட்டிஸ் " அனுப்பப்பட்டுள்ளது. ஹசன் அலி எவ்வளவு "ஜகஜால கில்லாடி " பாருங்கள்.

ஒரு வேளை ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜாவும் --கருணாவும் --கொஞ்சம் நாளைக்கு முன்பே ஹசன்  அலி யை "கன்சல்ட் "செய்திருந்தால் ---சி.பி.ஐ.இடம் சிக்காமல் தப்பித்திருக்கலாமோ?

No comments: