Pages

Sunday, June 5, 2011

புதிய ஊழல் போராளிகள்— ஒரு இந்து நேசனின் சிந்தனைகள்.

புதிய ஊழல் போராளிகள்—
ஒரு இந்து நேசனின் சிந்தனைகள்.

64 ஆண்டுகளாக ஊழல் கொத்துகொத்தாக பெருகி இன்று “சிக்கு பிடித்த ஜடாமுடியாக” தலை விரித்து ஆடுகிறது.
எல்லா கொசுவிரட்டிகளும் பயனற்றுப் போய் இந்தியாவை இன்று ஊழல கொசு …கடித்து…குதறி..ரத்தம் உறிஞ்சி ”அனீமிக் “ ஆக்கி வருகிறது.

ஊழலின் மனோத்துவம் என்ன?..அது இந்தியாவில் வளர்ந்த கதை என்ன?

ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ்..ஊழலை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியது காங்கிரஸ்..நேருவின் “முந்த்ரா”..ஊழல்---இந்திராவின் “நகர்வாலா “ ஊழல்---ராஜீவின் “பொஃபர்ஸ்” ஊழல்---நரசிம்ஹராவின் எம்பிக்களை “விலைக்குவாங்கிய ஊழல்---இந்த ஊழல் “கேஸ் பைப்பின் “”பிரஷரை”—அதிகமாக்கி உடைத்தது—2ஜி..ச்பெக்ட்ரம் ஊழல்—அந்தவகையில் தமிழனின் தலைகுனிவுக்கு “”மா””--- பெருமை சேர்த்தது..ஆண்டிமுத்து ராசாதான்…தமிழனை அனாதையாக விடாமல்..கை கோர்த்து காத்தது..கல்மாடிதான்..

மந்திரிகள் அடித்த கொள்ளைகளுக்கு வழிவகை செய்து கொடுத்து அதில் சிந்தியதை அள்ளிப்பருகும் அதிகாரிகள்…இவர்களின் ஊழலை “கண்காணிக்காமல்”..கண்னை மூடிக்கொண்டு ....ஊழலை ஊர்வலம் வரவிட்ட  பிரதமர்…

இது எப்போது மறையும்?...இதிலிருந்து எப்போது விடுதலை?...ஆள்பவர்கள் வாக்கு கொடுப்பது..வாளாவிருப்பதும்…வாடிக்கையாய் போய் விட்டதே?..என வருந்திய மக்களுக்கு--- தேவதூதனாக  வந்தார் சமூக சேவகர் அண்ணா  ஹஸாரே..

வெடித்துசிதறிய மக்கள் குமுறல்களின் வடிகாலே அண்ணா ஹஸாரே…நாலே நாட்களில் நாடே அவரிடம் போனது…சொல்லிலும் செயலிலும் தூய்மையும்..நேர்மையும் கலந்து…….சதோஷ் ஹெக்டே…அரவிந்த் ஹெஜ்ரிவால்…கிரண்பெடி…ஷாந்தி பூஷன்..என்ற வலுவான வழி நடத்தும் “டெக்னிக்கல்”…குழுகொண்ட சமூக இயக்கமானது”

யாரையும் காயப்படுத்தி முடமாக்கும் காங்கிரஸ்..அண்ணா ஹஸாரேவை முடமாக்க ஷாந்தி பூஷன் மீது சேற்றை வாரி இரைத்தது..அக்குழுவை உடைக்க அத்தனை “தகிடு தத்தங்களையும் செய்தது..மக்கள் பலம் பெருகியதால் அரசு பேச்சு வார்தைக்குவந்தது..ஜனலோக்பால் வரைவு பேச்சுவார்தை தினசரி நடந்தது..பலன் பூஜ்யமாகும் வண்ணம் சகுனிகள் கபில் சிபலும் வீரப்பமொய்லியும் பார்த்துக்கொள்ள பணிக்கப்பட்டனர்.

இதே நேரத்தில் ஊழல் எதிற்புக்கு புதிய “காற்றழுத்த தாழ்வு மண்டலம்” தோன்றி “பாபா ராம்தேவ் என்ற புதிய ஊழல் எதிற்பு புயல் உருவானது..இது காவியுடை போர்த்திய புயல்..கருப்புப்பணத்தை வெளியே கொண்டுவர கடுமையான 10 கோரிக்கைகளை அரசிடம் வைத்தது...


பேச்சு வார்த்தை என்னும் பெயரில் மத்திய மந்திரிசபையே அவரிடம் மண்டியிட்டது..”சிவில் சொசைட்டி “குழுவை உடைத்தெரிய நினைத்து அன்னா ஹசாரேயை தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் அரசு  தொடர்கிறது..

பாபா ராம்தேவின் பலம் என்ன?...அரியானாவில் சாதாரண யாதவ் குடும்பத்தில் பிறந்த நடுவயது சாமியாருக்கு 40 லட்சம் பேரில்  தொடங்கிய ஆதரவு… இன்று நாடே அவர் பின்னால் வரக்காத்திருக்கிறது..பெருகி வந்த ஆதரவில் பயந்துபோன மன்மோகன் சிங் அரசு ஸ்டார் ஓட்டலிலும்…விமான நிலய ஓய்வு அறைகளிலும் அவரிடம் துரத்தி துரத்தி பேச்சு வார்த்தை நடத்தி எதிர் பார்த்த மாதிரியே ஏமாற்றி கையெழுத்து வாங்கிக்கொண்டது..

உண்ண விரதம் இருந்த ராம்தேவ்..ராம்லீலா மைதானத்திலிருந்து நள்ளிரவில் அகற்றம்,,,..தடியடி..கண்ணீர்புகை ..இனி பேச்சு வார்த்தை நடக்குமா? பாபா ராம்தேவால் ஊழலை ஒழித்துவிட முடியுமா?..வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணம இந்தியாவுக்குள் வருமா? ஆள்பவர்கள் பணிவார்களா?..இவை அத்தனையும் “மில்லியன் டாலர் கேள்விகள்”

ஊழலை ஒழிக்க ஒரு சாமியார் புறப்பட்டுரிக்கிறார்..இது எந்த அளவு வெற்றியில் முடியும்?—சரித்திரம் கண்ட சாட்சிகள் என்ன?

1885 முதல் 1909 வரை சுதந்திரப் போராட்டம் மிதவாதிகள் கைய்யில் இருந்தது..பிறகு திலகரும் லாலா லஜபதிராய் போன்ற வேகமான தலைவர்கள் கைகளில் வந்தது..மக்களை தட்டி எழுப்ப அன்றைய சூழலில் திலகர் “சத்ரபதி சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய தினம்…கணேஷ் சதுர்த்தி “ முதலியவற்றைக் கொண்டாடினார்..

சும்மா இருக்குமா பிரிட்டிஷ் அரசு…அதுவரை மதபேதமின்றி நடந்த சுதந்திர போராட்டத்திற்கு ஆங்கில அரசு  இந்துமதச்சாயம்
பூசியது..முஸ்லிம்களுக்கு சலுகை அளித்து திசை திருப்பியது.. விளைவு சுதந்திரப் போராட்டம் இந்து—முஸ்லிம் பிரிவினைப்போராட்டமாகி..நாடும் துண்டாடப்பட்டது..சரித்திரம்..

பாபா ராம்தேவின் தீவிரம்..அவரை நாடி வரும் லட்சக்கணக்கான
மக்கள் கூட்டம்—இவைகளைக்கண்டு காங்கிரஸ் அரசு அதிர்ந்து போயிருக்கிறது..இது அரசை கவிழ்த்துவிடும் என்பதால் எதிர்பார்த்த படியே பாபா மீது சேற்றை வாரி வீசத்துவங்கியுள்ளது..

தனியார் ஜெட் விமானத்தில் அவரது பயணம்..ஸ்டார் ஓட்டலில் அவருடன் பேச்சு வார்த்தை..இவைகள் குற்றச்சாட்டுகளாய் காங்கிரஸ் கூறதுவங்கி விட்டது…

ராம் தேவும் தன் பங்குக்கு ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்வதையும் விரைவில் காங்கிரஸ் கையில் எடுக்கும்..தெலுங்கானா கோரிக்கையை வெட்டி சாய்த்தது போல நாடுமுழுதும் உள்ள இந்தி பேசாத மக்களை பாபாவிடமிருந்து வெட்டிப் பிரிக்கும்.. மொழியின் பெயரால் எதிர்ப்பு அலையை உருவாக்கும்..

யோகாவிற்கு முதலிடம் என்ற அவரது கோரிக்கைக்கு இந்துமத சாயம் பூசி முஸ்லிம்..கிறிஸ்தவர்களை ஊழல் எதிற்பு இயக்கத்திலிருந்து  பிரிக்க முயலும்..

உலகநாடுகளிலேயே மிக வேகமா வளர்ந்து வரும் இந்தியா...இதன்  சாபக்கேடு “ஊழல்” …..ஏக இந்தியாவும் பொங்கியெழுந்து அதை ஒழிக்க துடிக்கும் இவ்வேளையில்…ராம்தேவை  இந்துமதவாதியாக்கி…மதச்சாயம் பூசும் படலம் தொடங்கியாகிவிட்டது..எதிபார்த்தபடி அபிஷேக் சிங்வியும்..திக் விஜய சிங்கும் இதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்..இதைத்தான்  பிரிட்டிஷார் திலகருக்கெதிராக அன்றே செய்தார்கள்..இன்று காங்கிரஸ் செய்கிறது..

ராம்தேவ்வின் ஆஸ்ரமம் இனி அரசால் சல்லடை போட்டு சலிக்கப்படும்..இன்றைக்குள்ள சில “கார்பரேட்” சாமியார்கள் போல ராம்தேவ்வும் சற்று தூக்கலாக இருப்பது காங்கிரஸின் “உடைப்பு” வேலைகளுக்கு பக்கபலமாக இருக்கும்…அண்னா ஹசாரேவின் பேச்சு… நடவடிக்கைகள்…. போல பாபாவின் பேச்சுக்கள் ஸ்திரமாக இல்லாததும் ..குழப்பம் ஏற்படுத்தும் காங்கிரஸின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும்..

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்ப்பது அரசு நிர்வாகத்தில் அவரது மதிப்பை குறைக்கும்..அவர் குற்றமற்றவர் என பின்னாளில் நிரூபிக்கப் பட்டாலும் அரசு நிர்வாகம் சீர்குலையும்..ஸ்தம்பிக்கும் எனபது ஒரு வாதம்…சமூக குழுக்கள் இன்று பிரதமரை சேர்க்க வலியுறுத்துவதன் நோக்கம் ,,மன்மோகன் சிங் மாதிரி ஒரு பிரதமர்..ஊழலை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பதும்..தடுக்க வேண்டியவரே துணை போவதாலும்தான்..

வரி ஏய்ப்பு என்பது நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்ட்டம்..ஆனாலும் இந்தியாவில் சம்பாதித்த கருப்புப் பணத்தை அந்நிய வங்கிகளில் முதலீடு செய்வது நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்..அது சர்வதேச பயங்கரவாதிகள் கையில் விளையாடுகிறதா? நம் நாட்டிற்க்கு எதிரானவர்களிடம் முதலீடு செய்யப் படுகிறதா?—யாருக்குத் தெரியும்?—இந்த முதலீடுகள் நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள்..

உள்நாட்டில் ஊழலையும் வெளிநாட்டில் கருப்பு பண முதலீடுகளையும் –கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவு சோனியா தலைமயிலுள்ள கங்கிரஸ் அரசு செய்து வருகிறது..இந்த கொதிப்பின் வெளிப்பாடே பாபா ராம் தேவும்..அண்னா ஹசாரேயும்..

1975இல் லோக்நாயக் ஜயபிராகாஷ் நாரயண் விடுத்த அறைகூவல்“முழுப் புரட்சி”.....அதற்கு நாடு இப்போதுதான் தயாராகி வருகிறது..நம் கவலையெல்லாம் “வெண்ணெய் திரண்டும் வரும் போது தாழி உடைந்து விடக்கூடாதே” எனபதுதான்..

நாட்டை பிளந்தவர்கள்…16000 சதுரமைல்கள் சீனாவிடம் விட்டுக்கொடுத்தவர்கள்…கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர்கள்...கூர்க்காலேண்ட்—தெலிங்கானா போராட்டங்களை சிதைத்தவர்கள்..அந்நியப் பெண்ணை இந்தியப் பிரதமாக்கி... நாட்டை இத்தாலிக்கு அடகு வைக்க துடிப்பவர்கள்.....இந்த காங்கிரஸ்காரகள்..

இவர்கள் பாபாராம்தேவ் –அன்னா ஹசாரே..தலைமயிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை..உடைத்து விடாமலிருக்க இவ்விருவருமே விழிப்போடு இருக்கவேண்டும்..

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது வந்த மாமணி போல் உள்ளது…இன்றைய ஊழல் எதிர்ப்பு இயக்கம்..இது காக்கப்பட வில்லையானால்..அது நம் ஜனநாயகத்திற்கு பேரிடியாகும்..

No comments: