ஜெ..மாறவில்லை..பெற்றோர் வேதனை தீரவில்லை..
கல்விக்கட்டணத்தை கண்டபடி உயர்த்தி..பெற்றோர்கள் வயிற்றில் பெட்ரோலை ஊற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகள் ஜெ.யுக்கு தெரியாதாம்..
நேற்றைக்கு கல்விக்கட்டணம் பற்றிய ஒரு கேள்விக்கு ஜெ..யின் பதில் நெஞ்சில் நெருப்பை ஊற்றியது..”இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை..வந்தால் பரிசீலிக்கிறேன்’—இதுதான் அவர் பதில்.
போனவாரம்..கட்டண உயர்வில் அரசு தலையீடாது..என அவர் சொன்னதும் நெஞ்சு திக்கு..திக்கு. என்றது.
நான்காண்டுகாலமாக..,மாணவர்கள் தனியார் பள்ளிகள் முன்பு அனாதையாக கூடிநிற்பதும்… பள்ளிகள் தலைக்குதலை..கைக்கு வந்தபடி கல்விக்கட்டணம் வசூல் செய்வதும்..எல்லா டி.விக்களும்---ஜெயா டிவி. உட்பட காட்டினார்களே..
கட்டணத்தை “அழுதுவிட்டு” பெற்றோர்..டிவி முன் அழுததை ஜெயா டிவியும் கரிசனமாக ஒளிபரப்பியதே..கொடநாட்டில் கேபிள் இல்லையா/--டிஷ் டிவி கிடையாதா?—இதையெல்லாம் பார்க்க ஜெ யிக்கு நேரமில்லையா?
கலர் டிவியையும் 2ஜி பணத்தையும் மட்டுமே நம்பியதால் கலைஞர் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்..ஜனங்களின் “”நாடித்துடிப்பை” அறியாதவர்கள்..வாக்கு சீட்டுகள்மூலம் “நாதியற்றவர்கள்” ஆவது வரலாறு..அது நடந்து முடிந்து 15 நாட்கள்தான் ஆகிறது..
கடந்தாகால தவறுகளை திருத்திக்கொள்பவன்..எதிரி செய்த தவறை தொடராதவன்……புதிய தவறை புரியாதவன்….ஆட்சியிலிருந்து அகற்றப்பட முடியாதவன் ஆகிறான்..என்கிறது சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம்..
இதுதெரியாத மற்றவர்கள் “உள்ளே வந்தவுடன்..வெளியே அனுப்பும் தேதி..குறிக்கப்படுகிறார்கள்”….
கலைஞரை ஆட்சியில் அமர்த்த ஜெ யின் முதல் முயற்சியா இது?
1 comment:
பிஜேபி தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்ப் போல் ஒரு ஊழலை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஊழலை கொண்டுவந்திருக்கிறோம். காமராஜ் கூறியபடி இரண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
Post a Comment