காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் முக்கிய குற்றவாளி..காங்கிரஸ் எம்.பி. ---காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்..சுரேஷ் கல்மாடி..---சிபிஐயால் கைது செய்யப்பட்டது…அதில் டெல்லி முதல்வர் ஷிலா திஷித்தும் சம்பந்தப்பட்டுரிக்கிறார்..என ….ஷுங்லு கமிட்டி அறிக்கை குற்றம்சாட்டியது…
ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மத்தியமந்திரி சரத்பவாருக்கு தொடர்பிருக்கிறது என்கிற செய்தி….ஐ.மு.கூ.தலைவர் சோனியா காந்தி ஸ்விஸ் வங்கியில் பலகோடி ரூபாய் பதுக்கியிருக்கிறார் என சுப்ரமணிய சாமியும் ஸ்வீடன் பத்திரிக்கியும் வெளியிட்ட தகவல்…----இதற்கு இன்னும் சோனியாகாந்தி மறுப்பு தெரிவிக்காத நிலை….
2ஜி ஊழலில் ஆண்டிமுத்து ராசா அம்புதான்…முக்கிய குற்றவாளிகள் காங்கிரஸூக்குள் இருக்கிறார்கள்…என்ற குற்றச்சாட்டு…சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அமெரிக்காவால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு------ சம்பந்தமே இல்லாமல் திக்விஜய்சிங் இரங்கல் தெரிவித்து கெட்டபெயர் வாங்கிக்கொண்டது….
உ.பி.விவசாயிகள் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார்கள்…என தவறான..அரைவேக்காட்டுத்தனமான தகவலுடன் ஜனாதிபதியிடம் ராகுல்காந்தி புகார் தந்தது…என காங்கிரஸ் கலகலத்துப்போனாலும்..வெட்கமில் லாமல் வெளியேவந்து நடமாடுவது வேறுவிஷயம்…..
ஊழல் கண்காணிப்பு அதிகாரி தாமஸ் நியமனம் செல்லாது என சுப்ரீம்கோர்ட் அளித்த உத்தரவுக்கு ராஜினாமா செய்யாமல் பிரதமரும் சோனியாவும் வெளியே தலைகாட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பு….
தமிழக சட்டமன்ற தேர்தலில் மரண அடி வாங்கியபிறகு ரேடியோ..டி.வி..ஸ்டேஷன்களில்.. பேட்டிகொடுக்கமுடியாமல்..சத்தமி ல்லாமல்..”பேனல் டிஸ்கஷன்களில்” கலந்துகொள்ள தைரியமில்லாமல் ஓடிஒளிந்த கார்த்சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கும்பல்…
இந்நிலையில் “பிஜேபி வீடு பற்றி எரிகிறது”—என முதலைக்கண்ணீர் விடும் காங்கிரஸார்…அவுட்லுக் பத்திரிக்கையில் சுஷ்மாவின் பேட்டி வெளிப்படை…-----இன்றைய “இந்துப் பத்திரிக்கையின்..நீனாவியாஸ்”-- -அதை அப்படியே வெளியிட்டுள்ளார்..அவர்கள் அதற்கு கொடுத்த விளக்கம் உள்நோக்கமானது..பொய்யானது..என் பது படித்தாலே புரியும்..
வரிவிடாமல் படியுங்கள்…அதில் எங்கே கருத்து வேறுபாடு….எங்கே குடுமிப்புடி சண்டை…எங்கே கோஷ்டி மோதல்…..நம்மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லமுடியாதவர்கள்….பிஜேபி ஆளும் மாநில அரசுகளெல்லாம்..அசுரவேகத்தில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாதவர்கள்…கடைசியாக எடுத்திருக்கும் ஆயுதம்..அதுவும் “டூத்..பிக்கை” (பல்குத்தும் குச்சி)..எடுத்து தாக்குதல் நடத்துகிறார்களாம்…பரிதாப பட்ட ஜென்மங்கள்…
வரிந்து கட்டிக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் விமர்சிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது…சாவின் விளிம்பிலுள்ள காங்கிரஸூக்கு வாய்திறக்க வழிவேண்டாமா?.....
ஆனால் கலஞர் டி.வி.க்கு என்ன வந்தது…ஆமாம்….அவர்களும் மரண பயத்தின் உச்சத்தில் தானே இருக்கிறார்கள்…சட்டமன்ற தேர்தலில் வாங்கிய மரண அடிக்கு..மானாட..மயிலாட..வும்…. சமுதாய செய்திகளுமே கண்பித்தவர்களுக்கு..அரசியல் செய்தி வேண்டாமா?...அதனால்தான்..தமி ழகத்தை தாண்டி போகமுடியாதவர்களுக்கு..அரசியல் செய்தி தேவைப்பட்டது..டெல்லி திஹார் ஜெயிலுக்கு படையெடுக்கும் கட்சிக்கு பிஜேபி செய்திதான் ஒரு ஆறுதலோ?...
ஒன்று மட்டும் உண்மை…அரசியலில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது..( நல்லவனாக இருக்கவேண்டியதில்லை..என்பதே காங்கிரஸ்—திமுக..அரசியல் )..வல்லவனாகவும் இருக்கவேண்டும்..
இவர்கள் அவிழ்த்துவிடும் “கோயபல்ஸ் புளுகு மூட்டைகளை” நாடறியும்..காங்கிரஸாரே...இப் படி வம்பு பேசுவதை நிறுத்திவிட்டு.......ஊழல்..வி லைவாசி உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் இனியாவது கொஞ்சம் நல்லெண்ணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யுங்களேன்.
2 comments:
அருமையான கருத்துக்கள். போலி மதவாதம் பேசித்திரியும் பிளாக்கர்கள் மத்தியில் தைரியமாக பதிவு செய்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
காங்கிரஸாரே...இப்படி வம்பு பேசுவதை நிறுத்திவிட்டு.......ஊழல்..விலைவாசி உயர்வால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடம் இனியாவது கொஞ்சம் நல்லெண்ணத்தை சம்பாதிக்க முயற்சி செய்யுங்களேன்
Post a Comment