அரசியல் சதுரங்கம் எப்போதும் வேகமாகவே நகரும்.சிந்திப்பதற்குமுன் பலகாய்கள் தலைசாய்ந்திருக்கும்..
இந்த வேகத்துடன் ஒரு காய் நகர்த்தல் டெல்லியில் இருந்து துவக்கி இருக்கிறது
1999 “ டீ பார்ட்டியால்” வாஜ்பாய் அரசை வீழ்த்திய ஜெ..இம்முறை சோனியாவின் டீபார்ட்டி அழைப்பை ஏற்றிருப்பதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.
ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறுகின்றனவே…..திமுகவுடன் “விவாகரத்து” ஆகாததற்கு முன்பே அதிமுகவுடன் திருமண பேச்சு வார்த்தைகள் துவங்கிவிட்டனவே?...என்ற சந்தேகங்கள் பலர் மனதில் எழுவது இயற்கைதான்.
திமுக அரசின் மீதான கடுங்கோபமே
அதிமுகவை கோபுர உச்சிக்கு கொண்டு போயிருக்கிறது என்பதை “ஜெ” இம்முறை அறிந்திருக்கிறார்..இதை அவரது பேட்டியிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
“தமிழ் நாட்டுமக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றவும்…திமுகவின் குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்து இருக்கிறார்கள்” என வெளிப்படையாக பேசியிருப்பது ,…இம்முறை அவர் “பக்குவப்பட்டிருக்கிறார்”..என் பதற்கான அறிகுறிகள்..
“தனது அரசு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்றும்…மின்வெட்டு….விலைவாசி… சட்டம் ஒழுங்குக்கு முன்னுரிமை”..என்றும் அவர் கூறியிருப்பது அவர் விரைவாக செயல்பட துடிகிறார்…என்பதை காட்டுகிறது…
இவைகளை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்திய அரசின் நிதியும் ...உதவிகளும்... ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஒரு லஷத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி..அதிகமாகவும்…விரைவாகவும். .கிடைக்க மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்..என்கிற எம்ஜிஆர் ஃபார்முலாவை…”ஜெ” அறியாதவர் அல்ல.. அதனால் சோனியாவின் “டீ பார்ட்டியை” “ஜெ”…ஏற்றது ஆச்சர்யமல்ல.
ஆதர்ஷ் ஊழல்..காமன் வெல்த் ஊழல்…2ஜி ஊழல்..என காங்கிரசின் பெயர் நாடு முழுதும் கெட்டுப்போய் கிடக்கிறது..இதில் 2ஜி ஊழலில் சிக்கிய திமுகவுடனான கூட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை தழுவியிருக்கிறது…திமுக உறவு காங்கிரஸுக்கு பெரும் சுமை என்றாலும் 2ஜி ஊழலில் காங்கிரஸும் சம்பந்தப்பட்டிருப்பதால்…திமு கவை உடனே “கை” கழுவமுடியாது..
2014 தேர்தல் காங்கிரஸுன் முன்னுரிமை…அதனால் “ஜெ”யுடன் உறவுக்கு அடித்தளம் போட இந்த “டீ பார்டி”—என்பதெல்லாம்…ரொம்ப “பேராசை சிந்தனைகள்”
காங்கிரஸை முதுகில் சுமக்க “ஜெ” என்ன முதிர்ச்சி இல்லாதவரா?---காங்கிரஸுக்கு எதிராக “ஆண்ட்டி இன்கம்பன்ஸி ஃபாக்டர்” உள்ளது..”வின்னபிலிட்டி ஃபாக்டரும்”—காங்கிரஸிடம் இல்லை…இதே காரணங்களுக்காகவே மதிமுகவை கழற்றிவிட்டு விஜைகாந்த்தை..”ஜெ” சேர்த்துக்கொண்டார்..என்பது குறிப்பிடத்தக்கது..
இச்சூழலில்..”ஜெ” யுடைய முழுநோக்கமும்….மாநில நிர்வாகத்தை தூக்கிநிறுத்தி …”இது நல்ல அரசு” என மக்களிடம் உடனடியாக பெயர் வாங்குவதும் தான் …இதற்கு மத்திய அரசோடு ”மோதுவது…முரண்டு பிடிப்பது”….நலன் பயக்காது எனபதை “ஜெ” பத்தாண்டு ஆட்சி அனுபவத்தில் அறியாதவர் அல்ல.
அதனால்..”டெல்லி தந்திர பூமியில்”…2011 மே மாத டீ பார்ட்டிக்கு…”ஜெ” ஒத்துக்கொண்டது…திமுக விட்டுச்சென்ற பிரச்சினைகளை சரிசெய்ய எடுக்கும் முயற்சியின் முதல் தந்திரம்தான்..
இரண்டு பேருக்கும் இருவரது உறவும் வேண்டும்…காங்கிரஸுக்கு 2014 பாராளுமன்ற தேர்தல் ஒருகண்…திமுக உறவை கழற்றி விடுவது மற்றொரு கண்..”ஜெ”யுக்கு..மாநிலத்தை சீர் செய்ய மத்திய நிதியில் ஒரு கண்…அரசியல் எதிரி திமுகவை “நிராதரவாக நிறுத்தவேண்டும்”..என்பது மற்றொரு கண்…
டெல்லியில் இந்த நான்கு கண்கள் சந்திப்பதில் ”கண்”டிப்பாக தமிழகத்திற்கு நல்லது இருந்தால் சரிதான்.
No comments:
Post a Comment