கேக்குரத்துக்கு பலபேருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே…
இது வெறும் தலைப்புதானா..உண்மையா>>?—உண்மை ன்னா உடனே விவரம் சொல்லுங்க…நாங்க ரொம்ப ஆர்வ இருக்கம்…என்று எவ்வளவு குரல்கள் காதில் விழுது…எவ்வளவு துடிக்கும் இதயங்களின் சப்தம் காதை பிளக்கிறது..
ஆம்! தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில்தான் இதே மாதிரியான ஒரு சட்ட முன்வரைவு கொண்டு வரப்பட்டுரிக்கிறது..
மெக்ஸிகோ நாட்டு மக்களுக்கு திருமண பந்தத்தில் நுழைவது சிரமமில்லையாம்…அதிலிருந்து நினைத்த நேரத்தில் வெளியே வருவதில்தான் சிரமமாம்…”டைவர்ஸ் “ விதிமுறைகள் மிகவும் நோகடிக்க செய்கிறதாம்.
புதிய சட்டத்தின்படி திருமணம் என்பது 2 ஆண்டு ஒப்பந்தமாம்…விருப்பபட்டால் அதை மேலும் நீட்டித்துக் கொள்ளலாமாம்..ஒப்பந்தம் காலாவதி ஆனவுடன் வீடு காலி பண்ணுவது போல்..இருவரும் வேறு வேறு ஆளை தேடிக்கொள்லலமாம்..
இதில் ஒரு பிரச்சினையாம்..அதாவது..ஒப்பந் தகாலத்தில் சம்பாதிக்கும் சொத்தும்..உருவாகும் வாரிசும் யார் யாருக்கு எனபதுதானாம்..இதையும் “ சீரியஸாக” யோசித்து வருகிறார்களாம்..
ஏற்கனவே ஓரின சேர்க்கை..ஓரின திருமணம்..இவைகளுக்குபல நாடுகள் சட்ட அங்கீகாரம் கொடுத்து விட்டது..இப்போது வீடு ஒப்பந்தம்—வீடு லீஸ்—வீடு ஒத்தி----மாதிரி திருமண பந்தமும் “காண்ட்ராக்ட் “ முறையில் கொண்டுவர சட்டமியற்ற மெக்ஸிகோ நாடு தயாராகி வருகிறது..
இது இந்தியாவிற்கு உடனே வருமா?—நாளாகுமா?---இந்தக் கேள்வியும் காதில் விழத்தான் செய்கிறது--
No comments:
Post a Comment