உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் “ஜெ” க்கே ஆச்சரியமாக இருந்திருக்கும்..கூட்டணி கிடைக்காமல் ( பா.ஜ.தவிர )மற்ற கட்சிகள் வேறு வழியில்லாமல் தனியாக நின்றன.
நிச்சயம் எல்லா கட்சிகளுக்குமென்று ஒரு ஓட்டு வங்கி உண்டு.அதனால் ஓட்டு பிரியும் போது “ஜெ “ இமாலய வெற்றி பெற முடியாது என்றுதான் அரசியல் நோக்கர்கள் கருதினார்கள்.
அதுவுமின்றி உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட “தனிப்பட்ட செல்வாக்கும் “ ஒரு குறிப்படதக்க அங்கம்...எனவே எல்லா கட்சிகளும் தன் பலத்தை காண்பிக்கும் என்றுதான் நம்பினோம்.
ஆனால் திமுக மீது மக்களுக்கு இருந்த கோபம் இன்னும் தீரவில்லை எனபது மறுபடியும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும் “ எனபது போல “வாக்காளர் தெய்வம் “”போயஸ் தோட்டதை “பிய்த்துக்கொண்டு கொட்டிவிட்டது. இது அதிமுகவிற்கு அஜீரணக் கோளாரை “உண்டு பண்ணிவிடுமோ என்பதே நம்கவலை.
10 மாநகராட்சிகளிலும் வெற்றி..எல்லா இடங்களிலும் ஏகோபித்த வெற்றி..இந்த மிருக பலம் “சர்வாதிகாரத்திற்கு “ வித்திடுமோ என்கிற ஐயப்பாடு எல்லோர் மனதிலும் ஏற்படுகிறது.
திமுக எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து நிற்கிறது..அதற்கு மேல் அவர்களை பயமுறுத்த “நில அபகரிப்பு “வழக்குகளை ஏதோ “பாஞ்சாலி சேலை “போல உரிய உரிய போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்..பல முன்னாள் மந்திரிகள் “ஜெயிலுக்குள்”…..திமுக சோர்ந்து போயிருக்கிறது.
ஏற்கனவே “அஞ்சாநெஞ்சன் “ அமைதியாகிவிட்டார்…ஸ்டாலினும் வம்பு தும்புக்கு போகாமல் “ஏதோ சம்பிரதாயத்துக்கு “ அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் திமுகவிடமிருந்து எதிர்க்கட்சியின் செயல்பாடுகளை எதிர்பார்ப்பது “வேஸ்ட்”
அடுத்த “பொறுப்பு “ விஜய்காந்த்துக்குத்தான். ..29 எம்.எல்ஏக்களுடன் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியும் அவர்தான்.கடந்த 6 மாதத்தில் அவர் சட்டமன்றத்திலும் சரி , வெளியிலும் சரி, வாய் திறக்கவே இல்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அவர் கட்சியை போட்டுத்தாக்கி குப்புற கவிழ்த்து விட்டது..ஏற்கனவே ஏராளமான மக்கள் பிரதிநிதிகள் இருந்தது போலவும் இப்போது இழந்துவிட்டார் போலவும் இதற்கு அர்த்தமில்லை.
தமிழ்நாட்டில் தற்போது “ ஜெ “ கலைஞர்—தவிர மூன்றாவது நபர் முதல்வர் என்று சட்டமன்ற தேர்தலில் பேசப்பட்டது விஜயகாந்த் மட்டும்தான்..ஆனால் இன்று இளங்கோவனும்—வாசனும்—திருமாவும் “ அடுத்த முதல்வரே வருக “ என்று தனக்குத்தானே போஸ்டர் ஒட்டிக்கொள்வதற்கு விஜயகாந்த் நிலை சமாமாகிவிட்ட பரிதாபம்.
விஜயகாந்த்துக்கு அரசியல் புதிது..தேர்தல் புதிது..எதிர்கட்சி தலைவரும் புதிது.இந்த கடைசி புதிதை வைத்துக்கொண்டு அவர் முயன்றால் தமிழகத்துக்கு பல புதிதுகளை செய்ய முடியும்.
மக்கள் வாக்களித்து பெற்றுக்கொடுத்த “எதிர்கட்சி தலைவர் “ பதவியை அவர் மக்களுக்காக பயன் படுத்த வேண்டும்.
திமுக புறமுதுகு காட்டி ஓடும் நிலையில்…பாஜகவிற்கு தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வரும் 5 ஆண்டுகள் விஜயகாந்த்தின் செயல்பாடுகளே “ ஜெ “ யின் அசுரபல அஜீரணத்தை செரிமானம் ஆக்கும் “ சூரணமாக “ அமையும்.—செய்வாரா?
2 comments:
Vijayakanth can't do anything. Today he has said, that elections have proved the faith people have on Jaya. He is only an actor and accidentally became a politician.He can't survive in T.Nadu politics. Jaya will pull his MLAS to AIADMK. It the time for BJP to be aggressive in T.Nadu because during forth coming Parliament elections Cong will be eradicated.
Let us hope for things to change for better.
SOMA
தேர்தல் முடிவு குறித்த அலசல் அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
Post a Comment