ஒருவாரம் பெய்தமழை தமிழ் நாட்டை உலுக்கி விட்டது..அப்படியானால் பேய் மழையா?—வரலாறு காணாத மழையா?—ஆண்டு சராசரியை தூக்கியடித்து “சிரபுஞ்சி நிலையா”?—ஊம்…ஹூம்…ஒன்றும் இல்லை..
பின் ஏன் இந்த நிலை?—தினசரி செய்தியில் வானிலை ஆராய்ச்சி மைய டைரக்டர் ரமணன் என்ன சொல்கிறார் என் எல்லோரும் ஆவலோடு பார்த்தனர்…
சென்னைக்குள் “ஆயிரம் குளங்கள் “—அம்பத்தூர் போன்ற “அவுட்டர் ஏரியாக்களில்”-சில இடம் “கடலாக காட்சி “—”நீ வரவேண்டாம் நானே வருகிறேன் “—என் சில தாழ்வுப் பகுதிகளில் வீட்டுக்குள் வந்த வெள்ளம்—தண்ணிக்கு அல்லாடும் திருப்பூர் பகுதியில் “ஆறு—ஊருக்குள் “ புகுந்து அழித்த அவலம்..
வேட்டியை மடித்துக்கட்டி..குடை சகிதமாக “மேயர்களும்—ம்ந்திரிகளும்”—தண்ணீருக்குள் மக்கள் படும் அவலத்தை பார்த்த காட்சி..படங்களுடன் செய்தி..
இப்படி மக்கள் அல்லாட காரணம் என்ன?—அளவான் மழையே அளவில்லா சேதம் ஏற்படுத்த காரணம் என்ன?—இப்படி ஆயிரம் “என்னக்கள் “ உள்ளனவே இதற்கெல்லாம்.பதில்தான் என்ன..என்ன...
ரொம்ப சிம்பிள்—எதையும் திட்டமிட்டு செய்தால்…எந்த பேரிடரும் தீங்கிழைக்க முடியாமல் ஓடி ஒளியும்..
கோவையில் நிரஞ்சன் மார்டி என்பவர் கமிஷனராக இருந்தார்..பருவ மழை காலத்திற்கு முன்பே ஓடைகளை, கழிவுநீர் பாதைகளை, தூர்வாரி, சாலைக்குழிகளை செப்பனிட்டு விடுவார்..இதுதான் வருமுன் காத்தல்.இதை கடந்த முறை கமிஷனாராக இருந்த அன்சுல் மிஸ்ராவும் செய்தார்..அதை முடிக்குமுன்னே அவர் தூக்கியடிக்கபட்டார்..
இவைகளை செய்திருந்தால் “மழையால் மரணமடைந்தவர்” யாரும் இருந்திருக்க மாட்டார்கள்.ஒரு லட்சம் உதவி அவசியமாய் இருந்திருக்காது .சென்னை தி.நகரில் சாலைக்குழிக்குள் ஆசிரியை விழுந்து அநியாயமாக பலியாகி இருக்க மாட்டார்கள். கருப்பு பேண்ட் போட்டுக்கொண்டு கணுக்கால் தண்ணியில் ஸ்டாலின் “பிரெட்” வினியோகித்திருக்க மாட்டார்..
நமக்கருகில் இருக்கும் தாய்லாந்து நாட்டிலும் வரலாறு காணாத மழை..4 தலைமுறையாக இதுபொன்ற மழையை மக்கள் பார்த்ததில்லையாம்.உலகின் மிகப்பெரிய கம்யூட்டர் ஹார்டுவேர் பொருட்களும்—கார் உதிரி பாகங்களும் தயார் செய்யும் நிறுவனங்கள்..இங்குதான் இருக்கின்றன.
ஒருசில உதிரி பாகங்கள் –உலகில் தயாரிக்க படுவதில் நான்கில் ஒரு பகுதி இங்குதான் தயாரிக்க படுகிறது என்றால் எவ்வளவு பெரிய தொழிற்சாலைகள் இங்கிருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்..
நம்மூரில் தண்ணீர் வடிந்து விட்டது..அங்கு மூன்று வாரமாகியும் தண்ணீர் வடிந்த பாடில்லை….ராட்ஷ்ச மோட்டார்கள் 24 மணிநேரமும் வேலை செய்தும் நீர் குறைந்த பாடில்லை..அரிக்கும் அமிலத்தன்மையில் தண்ணீர் இருக்கிறதென்றால் எவ்வளவு “மாசு “பாருங்கள்..நாம் தேவலாமோ?
ஆம்..அவர்களும் சில விஷயங்களில் நம்மோடு போட்டி போடுகிறார்கள்..வடக்கு பாங்காக்கில் தான் இவ்வளவு சேதம்..காரணம்—விளை நிலங்கள் அழிக்கப்பட்டு—நம்மைப்போல் ரியல் எஸ்டேட்—ஷாப்பிங் மால்—தொழிற்சாலை கட்டப்பட்டதால்..நீ உறிய—வடிய வழியில்லாமல் போனதாம்..
இதற்குக் காரணம் நில உடமைதாரர்களுன் பேராசைதான் காரணம் என்கின்றனர் அங்குள்ளவர்கள்..எப்படி தாய்லாந்தும் நம் தாய்நாடு தமிழ்நாடும் ஒரே மாதிரி இருக்கிறதல்லவா?
அது கிடக்கட்டும்..இந்த மழையை தாங்கி விட்டோம்—அடுத்த ஆண்டு வரும் மழையை தாய்லாந்து தாங்க முடியுமா? என்றால்..நிச்சயமாக தாங்கமுடியாது..என்கிறார்கள் தாய்லாந்துகாரர்கள்..ஆனால் அதற்குள் வடிகால் உருவாக்கி விடிவு காண்போம் என்றும் சொல்கிறார்கள்.
நம்மால் அப்படி சொல்ல முடியுமா?—எத்தனை ஆண்டுகளாக மழை பெய்கிறது..வெள்ளம் வருகிறது—குடில்கள் சேதம்—சாலை சேதம்—பொருள் சேதம்—உயிர் சேதம் ஏற்படுகிறது--.விடிவு உண்டா?—ஆட்சி மாறுகிறது—காட்சிகள் மாறுவதில்லையே?—கஷ்ட்டப்படுவது எங்கள் விதி—தலை எழுத்து—இது எப்போதும் மாறாது-----இதுதானே சரி…
2 comments:
100 % true
சரியா சொன்னிங்க தலைவா
Post a Comment