அமெரிக்காவின் வாஷிங்கன் டி.சி...ரயில் நிலயம் ..காலை 9.00 மணி..”பீக் ஹவர் “ என்னும் கூட்ட நெரிசல் நேரம்..
ஒரு இளஞர் வயலினை எடுத்து மிக அருமையான பாடல் ஒன்றை வாசிக்கிறார்.அது அமெரிக்காவின் டாப் டென் பாடல்களில் ஒன்று..
கூட்டம் சட்டை செய்ததாக தெரியவில்லை..ரயிலை பிடிக்க அவசரமாக ஓடிய வண்ணமே இருந்தனர்..
3வது நிமிடம் ...தூரத்திலிருந்து ஒரு அம்மணி.. ஒருடாலரை வீசி எரிந்தார்..7வது நிமிடம் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு..வந்த ஒருசிறுவன் ..வைத்தகண் வாங்காமல் இசை பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்..அவனது அம்மா தரதரவென இழுத்துக்கொண்டு போனதுதான் மிச்சம்.
10வது நிமிடம் ஒருவர் வந்தார்..இசையை ஒருநிமிடம் கேட்டார்.வாட்சை பார்த்தவண்ணம் வேகமாக நடையை கட்டினார்..
மொத்தம் 45 நிமிடம்.. 7 டாப் பாடல்களை பாடினார்..1100 பேர் கடந்து சென்றனர்..முடிக்கும் போது கைத்தட்டல் இல்லை ஆரவாரம் இல்லை..பாராட்ட யாருமே இல்லை..
அந்த கலைஞ்னின் பெயர் ஜொஹுவா பெல்..அமெரிக்காவின் மிகப்பிரபலமான இசைஞன்...அவன் வாசித்த இசைக்கருவியின் மதிப்பு 35 லட்சம் டாலர்..2 நாளைக்குமுன் போஸ்டன் நகரத்தில் அவன் நிகழ்த்திய நிகழ்ச்சி “ஹ்வுஸ்புல்” ஆனதுமட்டுமல்ல ஒரு டிக்கட் விலை 100 டாலர்..
மக்களுடைய சமூக கண்ணோட்டம்---ரசனை மற்றும் முன்னுரிமை பற்றி அறிய ...அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை “வாஷிங்டன் போஸ்ட்” ஆய்வுக்காக நடத்திய ஒரு சாம்பிள் தான் இந்நிகழ்ச்சி.
இதுபோல எத்தனையோ நல்ல விஷயங்கள்--இதமான ...வாழ்க்கைக்கு தேவையான... விஷயங்களை நாம் தாண்டிப்போகிறோம்..அல்லது நம்மை வை தாண்டிப்போகிறது..
.நாம் அறியாமலே...நம்மை அறியாமலே..... நாம் இதை அனுபவிக்காமல்... இழக்கிறோம்.....
இயந்திரமாக வாழும் ........மரத்துப்போன....பழக்கத்
No comments:
Post a Comment