Pages

Saturday, February 25, 2012

என்கவுண்டர்களும் ...எதிர்ப்புக்களும்



”பாதுகாப்பு என்பது பகல் கனவாகிவிட்டதா
போலீஸ் எனபது பொறுப்பற்றதாகி விட்டதா
மனித உரிமைகள் மாசுபட்டுவிட்டதா
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதா”

சென்னையை சுற்றியுள்ள இரண்டு வங்கிகளில் கொள்ளை அடித்த வடமாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்களை போலீஸ் போட்டுத்தள்ளியுள்ளது..

இதை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்கள் ஒலித்தவண்னம் உள்ளது.

“தவறுகளை முளையிலேயே கிள்ளி எரிந்தால்தான் மற்றவர்களுக்கு தவறு செய்யும் எண்னமே வராது..அரபுநாடுகளிலுள்ள கடுமையான தண்டனைகள்தான் அங்கு குற்றங்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளது.”.என்கின்றனர் இதை ஆதரிப்போர்..

இதை எதிர்ப்போர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்...”தவறு செய்தவர்களை தண்டிக்கவேண்டும் எனபதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.அதை முறையாக விசாரித்து நீதிமன்றம் தான் தண்டிக்கவேண்டும்..எனகவுண்டர் மூலம் போலீஸ் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.”.என்கின்றனர்..

இப்படி விவாதங்கள் நீண்டுகொண்டே போனாலும் இதற்குள் பொதிந்திருக்கின்ற விஷயங்கள்தான் என்ன?

வங்கிகள் கிளைகள் விஸ்தரிக்கப்படுகிறது..தனியார் நகை..பணம்..அடகுக்கடைகள்..புற்றீசல்போல் பெருகிவருகிறது..

தங்கவிலை வானத்தை தொட்டாலும்....பெரிய குழுமங்கள் ஊர்தோரும் பிர்மாண்டமான சைஸ் கடைகளை திறந்து வருகிறது..

சென்னையை போன்ற “மெகா சிட்டியின் “ அதிரும் பொருளாதார வளர்ச்சி...கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி ஈர்க்கப்படும்  மக்கள் கூட்டம்..இதனால் போலீஸ் ஸ்டேஷனின் எல்லை விரிவடைந்து வருகிறது...போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய துறைகளின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது..ஆனால் போலீஸ் ஸ்டேஷனின் எண்ணிக்கையோ..போலீஸ்காரர்களின் எண்ணிக்கையோ இதேவைகளின் அடிப்படையில் உயரவில்லை.

சரி..ஒரு குற்றம் நிகழ்ந்து விட்டால்..அதுவும் உடனடியாக குற்றவாளிகள் பிடிபடாவிட்டால்...போலீஸுக்கு கொடுக்கப்படும் “நெருக்கடிகள்”..அதுவும் பத்திரிக்கைகள்..ஊடகங்கள்..எதிர்கட்சிகள்..தொடுக்கும் விமர்சனங்கள்...போலிஸின் பணிகளை விரைவுபடுத்துவதற்கு உதவுவதில்லை..மாறக சோர்வடையச் செய்கிறது.

குற்றச்செயல்களுக்கான காரணங்கள் பலப்பல..பாதுகாப்பு குறவினால் நிகழும் குற்றங்களுக்கு போலீஸை மட்டுமே பொறுப்பாக்க முடியாது..அத்தனை பேருக்குமே போலீஸ் பாதுகாப்பு தரமுடியும்... எனபது நடைமுறை சாத்தியமல்ல..

வங்கிகளும்..வட்டிக்கடைகளும்.. நகைமாளிகைகளும்..தங்களுக்கு தாங்களே பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் குற்றம் நடந்த இடங்களில் பாதுகாப்பு வசதிகளை ( CC.TV...BURGLAR ALARM...ARMED SECURITY GUARD ETC.) இவர்கள் செய்துகொள்ளவில்லை..என்பதும் ஒரு செய்தி..

சென்னை என்கவுண்டரில் ஏராளமான “முரண்பாடுகள்” இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன..அவை என்னவாக இருந்தாலும் அரசே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது..ஒரு ஆறுதல்..
..
ஒரு ஜனநாயக நாட்டில் போலீஸே சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு..தீர்த்துக்கட்டுவதும்...கொல்லப்பட்டவர்கள் மீது கண்டுபிடிக்கப்படாத மற்ற கேஸ்களை போட்டு..’”ஃபைலை குளோஸ்” செய்வதும்..ஆரோக்கியமான செயலகள் அல்ல.

எனகவுண்டரை ஆதரித்து பொதுமக்கள் சொன்ன கருத்துக்கள் ஆரோக்கியமானதா என்பது தெரியவில்லை..ஆனால், வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கள் மற்றும் தண்டனை இல்லாததும்.....குற்றவாளிகள் தப்பிப்பதை.. பார்த்துப்பார்த்து வெறுத்துப்போன மக்களுக்கு ஏற்பட்ட கோபம்தான் இந்த குரல்கள்...

எங்ஙெங்கு காணினும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் போலிஸ் பந்தோபஸ்து கோரப்படுகிறது..இப்படி போலீஸ் பாதுகாப்பை நம்பியே ஒரு சமூகம் வாழ்முடியுமா? என்பதும் சிந்தனைக்குரிய கேள்வி.


மனித உரிமைக்கு ஆதரவான குரல்.வரவேற்கப்படுகிறது..அது குற்றவாளிகளை பாதுகாக்க பயன்படாமல் இருக்கும் வரை..
போலீஸ் செயலபாடுகளில் உள்ள குறைகள் களையப்படவேண்டும்..
குற்றவாளிகள் தப்பிக்காமல்..விரைவாக தண்டனை பெற்றுத்தரவேண்டும்..
“நமக்கு நாமே” பாதுகாப்பை  ஏற்படுத்தி நம்மையும்..சமூகத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்...

அப்போதே என்கவுண்டரும் நடக்காது..எதிர்ப்பும் கிளம்பாது..

1 comment:

Ashok sundaresan said...

Sir

One of the most balanced write ups on the burning issue.
Very often, we see only articles by others which blatantly take a populist stand, failing to analyse the issue from all angles.
Your article demonstrates good journalism..

Regards
S Ashok Sundaresan