கடந்த புதன் கிழமை முதல் தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் துவங்கின..”வரலாறு காணாத “ நியூஸ் கவரேஜ்” இதற்கு..
1.பரிட்சை எழுதும்போது செய்யவேண்டியதென்ன?---மூத்த ஆசிரியை “டிப்ஸ்”
2. ஹாலுக்குள் நுழைந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?--ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையின் குறிப்புக்கள்..
3. பரிசை நாட்களில் உட்கொள்ளவேண்டிய உணவுப்பழக்கங்கள்..என்ன?--டயட்
4. இன்னும் மாணவர்களை ஊக்கப்படுத்த “அள்ளி இரைக்கப்படும்”--குழப்பக் கரைசல்கள்--
5. மின்வெட்டால் ஏற்பட்ட பாதிப்புக்களை போக்க எத்தனை ஜெனரேட்டர்கள்--எத்தனை செண்டர்கள்--எத்தனை ஆசிரியர்கள்--காப்பி அடித்தால் பிடிக்க பறக்கும் படைகள்..என ஏராளமான “புள்ளி விவர அவலங்கள்”
6. அரசு அலுவலர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை.--.”.பிளஸ் 2 அப்பாக்கள்”--..20 நாட்கள் லீவு போட்டுவிட்டு தன் குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்யும் “திரைமறைவு காட்சிகள்”..
”தேர்வுகள் “ --ஏன் “டென்ஷனை “ உண்டாக்கும் “உணர்வுகளாக” மாற்றப்பட்டு வருகின்றன ?
“செய்திகள்” என்ற பெயரில் “மீடியாக்கள்” ஏன் அவசியமற்ற புள்ளிவிவரங்களை “கடித்து துப்புகின்றன” ?
எப்போதும் நடக்கும் சாதாரண நடப்புக்களை..செய்திகளாக்கி இப்படி “இறக்கை கட்டி “ பறக்க விட வேண்டுமா?..
இப்போது என்ன “ மூன்றாம் உலக சண்டையா நடக்கிறது” ?
No comments:
Post a Comment