சிந்துபாத்தும்
ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையும்
தினத்தந்தியில்
சிந்துபாத் தொடர் முடிந்தாலும் முடியும் ஆனால்
இலங்கை தமிழர் பிரச்சினை முடிவுக்கு வராது போலிருக்கிறதே..
அப்படித்தான் நேற்றைய
இன்றைய செயல்பாடுகள் தொடர்கின்றன..
இது தமிழர் பிரச்சினை
என்ற குறுகிய வட்டத்துக்குள் கொண்டு போவதால் ஆந்திராவை தாண்டி டெல்லிவரை இதை என்னவென்று
தெரிந்து கொள்ள பலர் தயாரில்லை எனும் சூழல்.
எதோ அமெரிக்க தீமானமாம்…ஜெனீவாவாம்…மனித
உறிமை மீரலாம்..இலங்கை மீது கண்டன தீர்மானமாம்…அமெரிக்கா கொண்டுவரும் தீர்மான “ஷ்ரத்துக்களை
“ “ மவுன மோகன் சிங் “ படித்துப்பார்க்கவில்லையாம்.. ஆனாலும் ஆதரவு தெரிவிக்க தயாராம்..
பிரிட்டனின் “சானல்-4
“ போட்டுக்காட்டிய டி.வி. படங்கள் மனித இனத்தின் ரத்தத்தையே உறைய வைக்கிறது.காங்கிரஸுக்கும்..சோ னியாவுக்கும்..மௌனமோகன்
சிங்குக்கும் ரத்தம் ஓடுகிறதா என்பது தெரியவில்லை.
தான் கட்டிய கட்டடத்தில்
நூலகம் வரவில்லையானால் “தீக்குளிப்பேன் “ என மிரட்டும் கருணாநிதி பாராளுமன்றத்தில்
குடியரசு தலைவர் உரை திருத்தத்தில் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவு தரும் வாசகத்தை
சேர்க்க ஏன் தயக்கம் காட்டினார்?..”பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் “ என்ற அவரின்
ரெட்டை முகம்தானே இது..
சரி! அமெரிக்காவின்
இந்த தீர்மானம் இலங்கை மனித உரிமை மீறல்களை கண்டிக்குமா?..இலங்கையின் ”தமிழினக்கொடூரன்”..ராஜபட்சே
குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவாரா?
மனித உரிமைகளின்
சர்வதேச அமைப்பு இலங்கைக்கு சென்று விசாரணை நடத்தி..அதை ஐ.நா. ஏற்று ராஜபட்சே உள்ளிட்ட
மனித உரிமை மீறல் வாதிகளுக்கு தண்டனை கொடுக்குமா?
எந்த “பிஸ்கோத்தும்
“ இல்லை.இல்ங்கை அரசே நடத்தும் விசாரணைக்குத்தான் இவ்வளவு “அலம்பல்களும்”..ஈரான் ஈராக்கில்
அமெரிக்கா நடத்தும் மனித உரிமை மீரல்களுக்கு யார் தண்டனை கொடுபார்கள்.? என்பது வேறு
விஷயம்..
அப்படியானால் இலங்கையிலுள்ள
தமிழர்கள் ராஜபட்சே கையில் இன்றும் ..நாளை வேறு ஒரு பட்சேயோ..நாயகாவிடமோ சிக்கி “பரலோகம்
‘ போகவேண்டியதுதானா?அதுதான் அவர்கள் தலை விதியா?
காங்கிரஸும் சோனியாவும்
தங்கள் தலைவர் கொலைக்கு இலங்கை தமிழர்களை மறைமுகமாக பழிவாங்கி வருகிறார்கள்..அதை தன்கையால்
செய்ய முடியாது என்பதால் ஏற்கனவே தமிழர்கள் மீது “இனப்பகை “ கொண்ட ராஜ பட்சே மூலமாக செயல் படுத்தி வருகிறார்கள்..
அப்படியானால் காங்கிரஸை
வீட்டுக்கு அனுப்பிவிட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு விடுமா?..பிஜேபி தமிழர்
பிரச்சினையை தீர்க்குமா?..ஆம்..தீர்க்கும்..
எப்படி?—
மதுரையில்
“டெசோ” மாநாடு தொடங்கி வல்லவன் வாஜ்பாய் தமிழினத்தின் மீது வைத்திருந்த பாசம்—நேசம்
காரணமாக..1998—2004 ஆட்சி வரை அவர் ஆட்சி செய்தகாலத்தில் இலங்கை அரசு தமிழர்கள் மீது
வன்முறையை நிகழ்த்த அஞ்சியது உலகறிந்த உண்மை.
தமிழக மீனவர்கள்
மீது இன்று தாக்குதல் நடத்தும் இதே சிங்கள ராணுவம்..வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் தமிழக
மீனவர்கள் மீது கைவைக்க நடுக்கியது என்பதும் வரலாற்று உண்மை.இதனால்
இலங்கை பிரச்சினை
தொடர்ந்தால்..அதை அரசியலாக்கி தாங்களும் ஆட்சியில் தொடரலாம் என்ற திராவிட கட்சிகள் வாஜ்பாய்
ஆட்சியில் வேறு “வேலை பார்க்க வேண்டியிருந்தது..
இலங்கை தமிழர்கள்
அனைவரும் இந்துக்கள்..இதை இந்துக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதியாக எடுத்துச் சென்றால்..இந்தியா
முழுதும் வெகுண்டெழும்..உலக இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஆதரிப்பர்.
மலேசியாவில் தமிழர்கள்
தாக்கப்பட்டபோது அதை மலேசிய இந்துக்கள் பிரச்சினையாக எடுத்ததால்தான்..மலேசிய முஸ்லீம்
அரசு பணிந்தது.அதே போல சிங்கள இலங்கை அர்சும் பணிய நாம் ஒன்று சேர்வோம்..கழங்களின்
“போலி திராவிட தமிழ்” முகமூடியை கிழிப்போம்.
No comments:
Post a Comment