ஆசிரமத்திலிருந்த
எலிகளை விரட்ட சாமியார் பூனை ஒன்றை வளர்த்தார்.
பூனைக்கு பால்
கொடுக்க பசு ஒன்றையும், அதன் பாலை கறக்க, பராமரிக்க, மேய்க்க, என சிலரையும், --இவர்களுக்கு
சோறு போட ஒரு சமையல்காரியையும் சேர்த்தார்.
சமையல் கட்டிற்குள்ளிருந்த
சமையல்காரி --சரோஜா --சந்நிதானத்திற்குள் வந்தாள்…சந்ததிகளை தந்தாள்..இது கதை..
அண்ணா ஹசாரே ஊழலை
ஒழிக்க புறப்பட்டார்..சரி—16 நாள் உண்ணாவிரதம் இருந்தார்..சரி—ஜனலோக்பல் வேண்டுமென
முரண்டு பிடித்தார்..சரி—ப.சிதம்பரம்—கபில் சிபல் உள்ளிட்ட மந்திரிமார் வீட்டுமுன்
ஆர்பாட்டம் செய்யத் தூண்டினார்…சரி—
எதுவும் தேறாததால்
மீண்டும் ஒரு உண்ணா விரதத்தை துவக்கினார்..இங்குதான் சமையல்காரி சரோஜா உள்ளே புகுந்தாள்...கூட்டம்
வராததால், கெஜ்ரிவாலும் பிரஷாந்த் புஷனும், ஓதி அடித்த வேப்பிலையால், சம்சார சாகரத்தில்
,அரசியல் கடலில், குதித்தார்.
.
இதுவும் சரிதான்..—இதுவரை-1339
கட்சிகள்..1340 ஆக இவர்களையும் வரவேற்கிறோம்..கட்சி ஆரம்பிக்க காரணம் சொன்னார்களே..அப்பப்பா..அதுதான்
இவர்களின் அகத்தை தோலுரித்து காட்டியது..
ஒரு மாற்று அரசியலாம்..யாருக்கு
மாற்று..--காங்கிரசுக்கு என்றால் பாஜக இருக்கிறதே..அப்புறம் எதுக்கு மாற்று?
எது மாற்று அரசியல்?—மதசார்பற்ரவர்கள்
அணிதிரளும் ஊழல் எதிர்ப்பு என்கிறாரே…அதுவா?
ஊழலுக்கு ஏதையா
மதம்?—அது என்ன பச்சை சட்டை போட்டு வருகிறதா?—மஞ்சள் சட்டை?--போட்டு வருகிறதா?—அல்லது
கலர் கலராக சட்டை போட்டு வருகிறதா?—அது பெரும்பாலும் வெள்ளை சட்டை..கதர் குல்லா அல்லவா
போட்டு வருகிரது..
என்ன தெளிவு என்ன
தொலை நோக்கு?—ஊழலை ஒழிக்க யாரிடம் போய் மனு கொடுத்தார்?— “INSTITUTIONALIZE பண்ணிய காங்கிரஸ்
கட்சியின் “ஊழல் மகா ராணி”..சோனியா காந்தியிடம் .இதில் .ராகுலை வரவேற்று அறிக்கை வேறு..
ஊழல் ஒழிப்பு என்றால்
ஆளும் கட்சியின் ஊழல் தானே..அப்படியானால் காங்கிரசின் ஊழல்தானே…அப்ப கட்சி ஆரம்பித்தால்
ஊழல் எதிர்ப்பு ஓட்டு பிரியும் தானே…அப்ப அது காங்கிரசுக்கு லாபம் தானே..
அப்ப இவ்வளவுநாள்
போராடியது காங்கிரசுக்கு லாபம் தேடித்தரவா?..அப்ப இவர் கட்சி ஆரம்பித்தால் அது காங்கிரசின்
வெற்றிக்குத்தானே? அப்ப இவர் காங்கிரஸ் வீசிய வலையில் வீழ்ந்து விட்டார் என்று சொல்வது
சரிதானே?
ஒரு பக்கம் மோடியை
கட்டித்தழுவும் பாபா ராம்தேவை கட்டிதழுவுகிறார்.
இன்னொறுபக்கம்,
மோடியை இவர் குருப்பில் இருந்தே ஒருவரை வாய்கூசாமல் விமர்சனம் செய்யத்தூண்டுகிறார்…இப்போதே
பழுத்த அரசியல் வாதி ஆகிவிட்டார்..இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே வாயால் மோடியையும்,
குஜராத் அரசையும் பூமாரிப் பொழிந்தவர்தான் இவர்.
ஆர்.எஸ்.எஸ்ஸோடு
தொடர்பு கிடையாதாம்…அவர்களை பார்த்தது கூட கிடையாதாம்…தலையில் வைத்திருக்கும் காந்தி
குல்லாவை தயவு செய்து கழற்றிவிட்டு இந்த பச்சை பொய்யை சொல்லுங்கள் அண்ணாஜி..
மலேகன் சித்தி
கிராமத்தோடு புதைந்து போயிருக்க வேண்டிய இவரது சரித்திரத்தை, உலகம் புகழ வைத்தது யார்
என இவரது நெஞ்சம் மட்டுமல்ல , இவரோடு சுற்றியிருப்பவர்களும் தொட்டுப்பார்த்து சொல்லட்டும்..
நாங்கள் ஏற்றி
விட மட்டுமே தெரிந்தவர்கள் என எண்ணி ஏமாறாதீர்..அண்ணாஜி..
ஊழல் என்பது சமூகத்தின்
அனைத்து இடங்களிலும் புரையோடிய புண்..அதை ஆற்ற ..நீக்க…அரசும், --அரசியலும் மட்டுமே
போதாது..அரசாங்கத்தாலே மட்டுமே முடியும் என்றால் --அது என்றோ ஊதி தள்ளப்பட்டிருக்கும்.
அரசியலுக்கு…வெளியிலிருந்து…காந்தியின்
கிலாபத் இயக்கம் போல,, வினோபா பாவேயின் பூமிதான இயக்கம் போல…ஜயப்பிரகாஷ் நாராயணின்
மக்கள் போராட்டம் போல..ஊழல் எதிர்ப்பை நீங்கள் மக்கள் இயக்கமாக வழி நடத்துவீர்கள் –அரசுக்கு
ஆராய்ச்சி மணியாக—அங்குசமாக இருப்பீர்கள் என்றுதான் மக்கள் நினைத்தார்கள்..
கட்சி ஆரம்பித்து
காங்கிரஸ் விரித்த வலையில் வீழ்ந்து, கடைசி காலத்தில் கரை படிந்து, மனம் ஒடிந்து காணாமல்
போவீர்கள் என நாங்கள் நினைக்க வில்லை.
எப்போ நீங்கள்
---அன்று உண்ணாவிரதத்தை முடிக்கும் போது, முஸ்லீம் மற்றும் அரிசன சிறுவர்களை அருகில்
வைத்து முடித்தீர்களோ..அப்போதே உங்கள் மனதில் அரசியல் ஆசை துவங்கிவிட்டது என்பது தெரிந்து
விட்டது.
எப்போ நீங்கள்
ஊழல் எதிர்ப்புக்கு மதச்சாயம் பூசதுவங்கினீர்களோ..அப்போதே உங்கள் நேர்மை மறையத் தொடங்கிவிட்டது..
எப்போ நீங்கள்
ஆர்.எஸ்..எஸ்ஸை..நான் பார்த்ததே இல்லை என்றீர்களோ அப்போதே நீங்கள் தர்மத்துக்கு எதிராக
கண்ணை மூடத்துவங்கி விட்டீர்கள் என்பது தெரிந்து விட்டது.
ஆயிரக்கணக்கான
மண்டல்கள், லட்சக்கணக்கான கிளைகள், கோடிக்கணக்கான தொண்டர்கள், --இவர்களுக்கு பக்கபலமாக
இருக்கும் நூற்றுக்க்கணக்கான சங்க பரிவார் அமைப்புக்கள் அதிலுள்ள “ஜீவனையே” நாட்டிற்களிக்கும்
கோடிக்கணக்கான செயல் மறவர்கள்,
இந்த விஸ்வரூப
சங்க மகா பரிவாரின் அங்கமான பாஜக யார் தடுத்தாலும் இம்முறை ஆட்சிக்கு வரப்போவது உறுதி..
ஊடகங்கள் தூக்கிப்பிடித்த..ஒருநாள்
ராஜா..சோளக்காட்டு பொம்மை---நீங்கள் ஆட்சியை பிடிக்க ஆசைப்படுவது..இந்த தள்ளாத வயதில்
பொல்லாத சோகத்தை மட்டுமே.பரிசாகத் தரும் அண்ணாஜி…சாரி..அய்யாஜி..
1 comment:
Dear Friend,
I have to redirect to you your commendation Abharam, paraattukkal to you.
You have wonderfully lampooned the old man in the right diction.
R.Natarajan
Post a Comment