அன்பிற்கினியவர்களே-
மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மாவை--கிருஸ்துமஸ் தினத்தன்று--பங்காரு அடிகளார்----அம்மாவுக்கு சிலுவை அணிவித்து--தலையில் ஜீஸஸ் கீரீடம் வைத்து--- குழந்தை யேசுவை கைய்யில் கொடுத்து--- மருவூர் அரசிக்கு -- புது அவதாரம் கொடுத்து-- --தன் மத நல்லிணக்கத்தை பறைசாற்றியுள்ளார்-----
இந்த எழுத்தின் நோக்கம்--மேல்மருவத்தூர் பங்காரு அடிகளை அவமதிப்பதல்ல--
$ பராசக்தி மாதாவை மேரி மாதாவாக மாற்ற இவருக்கு என்ன உரிமை இருக்கிறது?--
$ யார் அதிகாரம் கொடுத்தது?
$ ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில்--இப்படி செய்ய- ஆகம விதிகளில் இடமுண்டா?
$ இவரை நம்பும் லட்சக்கணக்கான் பக்தர்களுக்கு இவரின் இந்த செயலுக்கு ஒப்புதல் உண்டா?
பக்தன் பகவானை எட்டிநின்றுதான் பார்க்கவேண்டும்-- தொட்டுப் பார்க்க முடியாது எனபதை மாற்றி--- யார் வேண்டுமானாலும் பகவானை தொட்டு அபிஷேகம் செய்யலாம் என மாற்றியவர் அடிகளார்---பாராட்டுகிறோம்
பெண்கள் “”எப்போது வேண்டுமானாலும் “ பகவானிடம் போகலாம் --தொடலாம்--அர்ச்சனை--அபிஷேகம் செய்யலாம்” என கீழ்த்தட்டு மக்களையும் பகவானிடம் நெருக்கமாக செய்தவர் அடிகளார் அவர்கள்--பாராட்டுகிறோம்.அதற்கா
நாம் நம்பும்--வணங்கும் கடவுளுக்கு வேற்று மதத்து சின்னங்களை அணிவித்து அட்டஹாசம் செய்வதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்?--கேட்காமல் இருக்க முடியும்
கோடிக்கணக்கில் பக்தர்கள் குவியும் சபரிமலையில் கூட “வாவர் சமாதி” என்று ஒன்று உண்டு--லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் மதுரையில் “கள்ளழகர் ஆற்றில் இறங்கும் “ திருவிழாவில் கூட --அடுத்தநாள் அழகர் “துலுக்க நாச்சியார்” மண்டபதிற்கு செல்வார்---இவையெல்லாம் “வரலாற்று திரிபுகள்”--இடைக்காலத்தில் “”யாரையோ திருப்திப்படுத்த--யாரோ எழுதிய கட்டுக்கதைகள்--என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.
இல்லாதவற்றை சொல்லி இணைத்து வைப்பதல்ல இணக்கம்--மத நல்லிணக்கம்--அது இயல்பாகவே வரவேண்டும்--இது “இந்துக்களிடம் நிச்சயம் உண்டு--என்றும் உண்டு “ நல்லிணக்கத்தை இப்பொய்யுரை தான் “ ஏற்படுத்தும் என்றால்--இதுவரை அது ஏன் இன்னும் ஏற்படவில்லை?--இன்னும் அது ஏன் ஒருதலை காதலாகவே உள்ளது?--இது ஒரு பெரிய விவாதம் --அதற்குள் போவது என் எண்ணம் இல்லை..
--அதிமுக காரன் உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதாவை மேரிமாதாவாக சித்தரித்தான் --கிறிஸ்தவம் வெகுண்டு எழுந்தது----பாதிரியார்கள் மாநிலம் முழுக்க அவர்கள் பள்ளிகளில் படிக்கும் நம் வீட்டுக்குழந்தைகளை வைத்து எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார்கள்..
ஏற்கனவே இந்துமதம் எவ்வளவு பேரையோ ஏற்றுக்கொண்டுள்ளது--இங்கு ஏற்கனவே முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள்--அதோடு சேர்ந்து நாம் ஏசுவையும் இன்னொரு தேவதையாக ஏற்பதில் ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை--பிரச்சினை யேசுவல்ல---யேசுவை கோவில்லுக்குள் இழுத்ததுதான் --
நம் சாமிகளுக்கு நாம் மோகினி அலங்காரம் --ராமர் அலங்காரம் --கிருஷ்ணர் அலன்காரம் --என பல பல அலங்காரங்களை செய்துள்ளோம்--
முதல் முதல் இந்து சமய வரலாற்றில் ஆதி பராசக்தி அம்மாவுக்கு “”யேசு அலங்காரம் “ செய்த பெருமை ---பங்காரு அடிகளாருக்கே உண்டு--இதை பெருமையோடு அவர்கள் நடத்தும் “” சக்தி ஒளி “ பத்திரிக்கையிலே வேறு வெளியிட்டுள்ளார்கள்.
சில இந்து சாமியார்கள் பிறை--சிலுவை--ஓம்--என மூன்றையும்--ஒன்றாக போட்டு நன்றாக “”ஆன்மீக வியாபாரம்””செய்து வருகிறார்கள்--- இன்று மதத்தை மாசு படுத்த-- மற்றோருவர்-- -கிளம்பியிருக்கிறார்
வருத்தமாக இருக்கிறது--நெஞ்சம் வேதனைப் படுகிறது--
11 comments:
அய்யப்பன் வழிபாடில் வாவர் வந்ததும், மாரியம்மை மேரியம்மையானது கண்டு துடிக்கும் நீங்கள் !!! // இவையெல்லாம் “வரலாற்று திரிபுகள்”--இடைக்காலத்தில் “”யாரையோ திருப்திப்படுத்த--யாரோ எழுதிய கட்டுக்கதைகள்--என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவார்கள்.
// என பொங்கும் நீங்கள் ! இன்னும் சில வரலாற்றுத் தகவல்களை அறிய வேண்டுமய்யா???
பௌத்த மத காவல் தெய்வமான சாஸ்தாவாய் அய்யப்பனாகவும், பௌத்த மத திசைத் தெய்வமான அர்கதனை அய்யனாராகவும், சமண சமய பெண் தெய்வமான கண்ணகி அம்மனை மாரியம்மனாகவும், திரித்தவர்கள் எவரோ??? யாரையோ திருப்திபடுத்தத் தானே !!! யாரோ எழுதிய கட்டுக்கதைகள் தானே !!!
வரலாற்றை முதலில் நீங்கள் படித்து திருத்துங்கள், பங்காரு எல்லாம் தானாக திருந்துவார்கள்......... . . .
வருத்தமாக இருக்கிறது--நெஞ்சம் வேதனைப் படுகிறத
Dear Sir
I have read one of your article sent to my brother about Mariamman saying that it is Kannagi who has been portrayed as Mariamman.But according to my knowledge Mariamman is called Renuka devi and wife of Jamathagni munivar.And purana says that when she was fetching water got attracted towards the beauty of Indra(at that time he was travelling in heaven)knowing this the munivar ordered his son to slain her but she escaped and hidden in the fisherman area.For this help she blessed the poor fishermen.so in end it depicted that Mariamman is the protector of poor people as she lives in simple and doesn't expect hi-fi life.Also Mari means 'Rain' she was given that name because mariamman always shower her blessing as rain.Whether I am right or wrong at the end we always pray godess be it in any form at the end she is sakthi the power.About depicting Aadhi parasakthi as Mother Mary.Iam sorry it is Adikalar,CEO of Melmaruvathur Aadhi parasakthi ltd company's brand promotion and corporate gimmick
--
Warm Regards
DHIVAKAR BALAJI K
அடக்கடவுளே! இது என்ன புதுக்கதை? அவர் கூறியது சரியா அல்லது தவறா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஒரு சில விடயங்களை கூற முடியும்.
1) இந்து மதம் என்பது உண்மையில் ஒரு மதம் அல்ல. அது வாழ்வியல் நெறிமுறை. நாம் எவற்றையும் ( நல்ல விடயங்களை) ஏற்று பழக்கப்பட்ட நல்ல நெறிகளுடன் கூடிய சித்தாந்தங்களை உள்வாங்கி வாழ்பவர்கள். பெயரில் வேண்டுமானால் (இந்து)மதம் இருக்கலாம், ஆனால் நமக்கு மதம் பிடிக்கவில்லை என்பது உண்மை தான். ஏனென்றால் நமக்கு மதம் பிடித்திருந்தால், இவர்கள் எல்லாம் துவம்சம் ஆகி இருப்பார்களே!
2) இவ்வளவு விடயங்களை தன் ஞான பார்வையில் கண்டவர், அவர் கூறிய சமண, பௌத்த சமயங்கள் எம்முள் தோன்றியதே அன்றி வெளி நாட்டில் இருந்து யாரும் கொணர்ந்து தினித்தது அல்ல அல்லது அடுத்தவரிடம் இருந்து திருடியதும் அல்ல என்பதை அறியாமல் போனது ஆச்சரியமே!
3) நமது இனம் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டு பழமையானது. அதனால் முழுமையான வரலாற்று தகவல்கள் சரி வர வந்து சேரவில்லை என்பது ஓரளவு உண்மை தான் எனினும் வெறும் 1400 வருடம் உள்ள மதத்தை பின் பற்றும் தாம், 700 வருடங்களுக்கு முன் வாழ்ந்த தம் முன்னோர்கள் என்னவாக வாழ்ந்திருப்பார்கள், எந்த கலாச்சாரத்தை பின் பற்றினார்கள் என்பதை அறிந்து தன்னை மாற்றிக்கொள்ள தயாரா? மதத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத இவர்கள், தமது வம்ச முன்னோர்கள் பொருளுக்காகவோ அல்லது உயிர் பயத்திலோ தான் தமது மதம் மாறி, இவர்களுக்கும் மதம் பிடிக்க காரணமானார்கள் என்பதை உணர்ந்து எவனோ ஒருவனுடைய, தன்னோடும் இந்த மண்ணோடும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒன்றை, தம்முடையது என்று சொந்தம் கொண்டாடுவதை தூக்கி எறிய முடிந்தால் இது பற்றி நாமும் யோசிக்கலாம்.
4)அடுத்து, இந்து மத துறவிகள் ஆன்மிக வியாபாரத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். மன்னிக்கவும், முற்றும் துறந்தவன் மட்டுமே துறவி. வியாபாரி துறவி ஆக முடியாது. ஒருவேளை அவர் துறவி என்று கூறியிருப்பது அவர்களுடைய முன்னோரை போன்றவர்களாக இருக்கலாம்.
kamal kumar-namakkal
திவாகர் பாலாஜி கூற்றுப்படி ரேணுகா தேவி என்னும் கடவுள் கஷ்மீர சைவ சித்தாந்தில் இருப்பது உண்மையே ! இன்று கூட பலர் சைவ சித்தாந்தம் தமிழ்நாட்டில் தோன்றியதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், ஆனால் அது கஷ்மீரத்தில் தோன்றி தமிழ்நாட்டு கொண்டுவரப்பட்ட சித்தாந்தம். அப்படி வந்த பொழுது தான் உள்நாட்டில் வலுவிழந்த பௌத்த/சமணக் கடவுளை உள்வாங்கிக் கொண்டு கார்த்திகேயனை முருகனாகவும், பார்வதியை அம்மனாகாவும், மாற்றி வைத்தனர்.
மாரியம்மன் தான் ரேணுகா தேவி என்று புராணத்தில் எவ்விளக்கமும் இல்லை. மாரியம்மன் எனப்படும் வழிபாடு முறை பத்தினி வழிபாடில் இருந்து தோன்றியது என்பது வரலாற்று உண்மை.
மருத்துவராரின் ஆன்மிக வியாபாரத்தை ஆதரிக்கவில்லை, ஆனாலும் வரலாற்றை நாம் தெரிந்துக் கொள்வது நல்லது.
திரு கமல் நாமக்கல் அவர்களே !!!
இந்து மதம் ஒரு மதம் அல்ல ! அது தான் உண்மை அது இந்திய வைதிக மதங்களின் தொகுப்பு தான். இந்து மதம் வாழ்க்கை முறை என்பதை விட வைதிக வாழ்க்கை முறை, இந்திய நாத்திக வாழ்க்கை முறை என இரண்டு என்பதை உணர வேண்டும்.
அது போல பௌத்த/சமண இந்தியாவில் தோன்றியது தான். ஆனால் அவற்றை இந்து மதத்தில் சேர்ப்பது முட்டாள் தனம். வைதிக அறுசமயங்களில் நாஸ்தீக சமயங்களான பௌத்தம்/சமணம்/ஆசீவகம் இடம்பெறுவதில்லை. ஏனென்றால் அவையாவும் பிரம்மத்தையும், வேதத்தையும் மறுப்பவை.
அதே போல சமணரும்/பௌத்தரும் தம்மை இந்துவாக கூறுவதில்லை. இந்திய உச்சநீதிமன்மும் இதனை உறுதி செய்துள்ளது. பௌத்தரும், மகாவீரரும் வைதீகத்தை எதிர்த்து போராடினவர்கள். அம்பேதகார் கூட இந்து மதத்தில் இருந்து பௌத்தத்துக்கு மாறியது எதனால்? பௌத்தமும்/சமணமும் இந்து மதத்தில் அடங்காது என்பதால் தான்.
இறுதியாக கமல் அவர்களே !!! இக்பால் என்று பெயர் வைத்தால் நான் இஸ்லாமியன் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. கமல் என்று தாங்களும் தான் இஸ்லாமிய பெயர் வைத்துள்ளீர்கள். அப்படி என்றால் 700 வருடம் முன்தோன்றிய சமயத்துக்கு விளக்கம் நான் தரத்தேவை இல்லை தானே !!!
வணக்கம் இந்து இக்பால் அவர்களே!
கமல் என்பது தாமரையை குறிக்கும் சொல். கமால் என்ற பெயர் இஸ்லாம் நண்பர்களிடம் கண்டுள்ளேன். ஆனால் கமல் என்ற பெயரை இஸ்லாமிலும் உள்ளது என்று முதல் முறையாக உம்மிடம் இருந்து கேள்விபடுவதுடன், நான் கேட்ட கேள்விக்கு சாமர்த்தியமாக பதில் சொல்வதைப் போல் நழுவிவிட்டுருக்கிறீர்கள் என்பதையும் உணர்கிறேன்.
நான் ஏற்கனவே கூறியிருப்பது போல், நான் முறையான வரலாறு தெரியாத விடயங்களுக்கு வாதாட விரும்பவில்லை. அதனால் உங்கள் விளக்கங்களில் எனக்கு எழும்பும் கேள்விகள் சில மட்டும் பின் வருமாறு.
1)தாங்கள் குறிப்பிட்ட நாத்திக மதங்களில் சிறு தெய்வங்கள் எவ்வாறு வந்தார்கள்? ”நாத்திக மதங்களில் தெய்வங்கள்”- அர்த்தங்கள் குழப்புவதாக இல்லை!
2)அம்பேத்கார் புத்த மதத்திற்கு மாற சொல்லி தந்தை பெரியாரிடம் கூறிய போது, நான் இந்து-வாக இருந்து எதிர்த்தால் தான் ஏற்பார்கள், இல்லையென்றால் விட்டு போனவன் இதைப்பற்றி பேச கூடாது என்பார்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அம்பேத்கார் கூறியது என்ன தெரியுமா! நான் இந்து மதத்தின் ஒரு பிரிவான புத்த மதத்திற்கு தான் மாறியுள்ளேன் என்பது தான். இது தான் நான் அறிந்த வரலாறு. இதற்கு ஏதேனும் விளக்கம் உண்டா?
3) தாங்கள் கூறிய மதங்கள் உள்பட 27 வகையான மத பிரிவினர் நீதி மன்றத்தை அணுகி தங்களுக்கு தனி மத மரியாதை வழங்க வேண்டும் என கோரிய போது, இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களும் இந்து என்ற ஒரே பிரிவில் தான் இருக்க முடியும், வெளி நாட்டில் இருந்து வந்த இஸ்லாம், கிருத்துவம் மற்றும் பார்ஸி மட்டும் தான் வேறு மதங்கள் என்ற பட்டியலிட முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல், நான் 700 வருடம் முன் தோன்றிய மதத்துக்கு விளக்கமமும் கேட்கவில்லை, எனக்கு எந்த மதமும் எதிரியும் இல்லை. ஏனென்றால் நான் இந்து பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பின் பற்றுகிறேன். ஆனால், அதே சமயம், இதுவெல்லாம் மதம் / மத வழிமுறை என்று சொல்லி வாழ்கை முறையை மாற்றி கொள்வது, அத்துடன் தான் ஏதோ ஆகாயத்தில் இருந்து குதித்தவன் போல் பாசாங்கு செய்வது, தான் முன்பு பல தலைமுறையாக கடைப்பிடித்த அதே விசயத்தை தற்போது அதீத ஏளனம் செய்வது போன்ற கீழ் தரமான செயல்களைத்தான் கண்டிக்கிறேன்.எம்மதமும் சம்மதம் போன்ற வார்த்தைகளும், சமுக மத நல்லிணக்க சிந்தனைகளும் செயல்களும் அதிக பட்சம் இந்துக்களிடம் மட்டுமே காண முடிகிறது. மற்றவர்களில் வெகு வெகு சிலர் மட்டுமே காணமுடிகிறது. இந்து பல மதங்களின் கூட்டாக இருப்பதுடன் கலாச்சாரத்துடன் இணைந்து இருப்பதால் அனைவரையும் எற்கும் பக்குவம் உள்ளது. அதற்காக இந்து என்பவன் நல்லவன் என்பதற்காக எவ்வளவு தான் அடித்தாலும் தாங்க தான் வேண்டுமா என்ன?
KAMAL--NAMAKKAL
But this fellow will not allow ''WIDOWS'' TO PARTICIPATE IN ANY PUJA rituals. H e will ask the 'sumangalis ' to come forward. Just MINTING money.
karthik+amma
he is making money with that temple.literally doing rowdism in the name of religion.he is not the person to set standard in hindu religion.actually for women we should not allow them for three days inside the temple.prviously for three days they ask them to sit away from all people that is one end this is another end.what to do?
இது மிகப் பெரிய அவமானம் .
Muslims are trying to change our history by lies and are trying to convert us.i have investigated their statements but found out all are utter lies.
Post a Comment