Pages

Wednesday, July 6, 2011

ஏன் பிறந்தாய் மகனே

ஏன்  பிறந்தாய்  மகனே

பழைய தலைப்பு…..புதிய எழுத்து..
பிறந்த போது யாருக்குத் தெரியும்
வளர்ந்த போதும் தெரியாமல் வாழுவோர்
மண்டிக் கிடக்கும் மந்தை யில்
ஒண்டியாய் சிந்தித்து உயர நினைத்தேன்

சிந்திக்க தொடங்கியதும்……
.சந்திக்கு வந்ததும்….
உதிரம் சிந்தும் ராணுவ வீரருக்கு
ரத்தம்தர ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்று
கொடுத்தது ரத்தம் மட்டுமல்ல
வாழ்வையும் நாட்டுக்காகவே…..……

விளையாட அழைத்துப்  போய்
விளையாட்டாய் கொள்கை ஊட்டி
வாழ்க்கை விளையாட்டை
ஒலிம்பிக் ரேஞ்சுக்கு உயர்த்தினர்…

பாரதியும் பகத் சிங்கும்
வாஞ்சியும் மதன்லால் டிங்ராவும்
சாவர்க்கரும் திலகரும்
விவேகானந்தரோடு சேர்த்துக் குழைத்து
ஊட்டிய அமுதம் உரம் ஏற்றியதால்
ஓடுகிறேன்..ஓடுகிறேன்..இன்றும்..இன்னும்..

ஆட்டுக் கூட்டத்துக்குள் சிங்கக்குட்டியா..?
அவசியமில்லை..புலிக்கூட்டத்தில்..சிங்கக்குட்டி
மாற்றம் வேண்டி சிந்தித்ததால்
மர மூளைகளுக்கு ஏற்பில்லை
மாத்தி யோசி மறந்து போய்
” பார்த்து யோசி”.. படமெடுத்து ஆடியது

சிக்கலில் சுற்றியிருந்த மன வலையை
பக்குவமாய் அவிழ்த் தெரிந்தார் wayne dyer
Eric Berனும் தாமஸ் ஹாரிஸூம்
தொடர்ந்து வந்து தூண்டி விட்டனர்.

தன்னை அறிதல்.... உன்னை அறிதல்...
என்னை அறிதல்..... நம்மை அறிதலென...
கீதையில் சொன்ன சாரங்களை
ஆங்கில ஆசிரியன் அழகாய் சொன்னான்…

என்னை அறியும் முயற்சியால் ஒருஏகாந்தம்
தன்னை அறியாதவர் போடும் பகல்வேஷம்
பார்த்தவுடன் தெரிந்தது கேட்காமலே புரிந்தது

ஓநாயையும்…..ஓணானையும்..
பசுவையும்……பாம்பையும்
போர்வையை… விலக்காமலே
பார்வையே படம் பிடித்தது

உணந்த     விஷயங்களை
விதைத்து.......விளைவிக்க
எழுத்தை..... ஏராக்கினேன்
உழுதலைத்.... தொடர்ந்தேன்

கால்டுவெல்லும்…மெக்காலேயும்
விதைத்த “பார்த்தீனியனை”
அழிக்கும் விதைகளை
அக்கம் பக்கம் தூவி
அழைக்கிறேன் புது விடியலை

வாஜ்பாயும்    கலாமும்
வித்திட்ட   புரட்சிக்கு
”ஜேப்பி”   எதிர்பார்த்த
முழுப்  புரட்சிக்கு

வடிவமாய்..வழிகாட்டியாய்
ஏற்றிவைப்பேன் என்னெழுத்தை

வேதாந்த தேசிகரும் ராமானுஜரும்
சங்கரரும் நாரயண குருவும்
ஆற்றிய பணிகளில் வராத மாற்றம்
என் எழுத்தால் வருமா..?
முயல்கிறேன் முழுமூச்சாய்..

அப்போதே என்பிறப்பு முழுமை பெறும்
அன்றோடு இப்பிறவி..நிறைவுறும்


--

No comments: