இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஜப்பான் தூதரின் பேட்டி வெளியாகி உள்ளது..நிச்சயமாக அது நம் கண்களை திறக்கும் என்று நம்புகிறேன்.
***. பௌத்தம் எங்கள் நாடி நரம்புகளில் ஓடுகிறது...
இந்த்துத்வா..நம் நாடி நரம்புகளில் ஓடவேண்டுமே..ஓடுகிறதா...ஓடுகி
*** அரசின் செயல்பாடுகள் பற்றிய “அதிக விமர்சனம் “..ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட சிறந்ததுதான்.
அரசை விமர்சிப்பதை இங்கு ஆட்சியாளர்கள் ரசிப்பதில்லையே..ஏன் ...விரும்புவதே இல்லையே..அவர்கள் மீது “கருப்பு முத்திரை “ குத்தப்படுகிறதே...பிரதமரும்..
*** சீனாவின் வளர்ச்சி அபாரமானது..ஆனால் அதன் “எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும் “ என்னும் ஆசை அநியாயமானது..
அருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு எல்லைப்புர மாகாணங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பை இனியாவது இந்திய அரசு கண்டுகொள்ளுமா?..உஷாராய் இருக்குமா?..
*** இந்தியாவில் 4500 ஜப்பானியர்கள் தொழில் செய்கின்றனர்..அவர்களிடம் வேலை செய்யும் இந்திய இளைஞர்கள்..ஜப்பானிய தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படும் “கடுமையன கட்டுப்பாடுகளை “..கடைபிடித்து சிறந்த முறையில் செயல் படுகின்றனர்..
இதையே நம் இளைஞர்கள் நம் தொழிற்சாலைகளிலும் கடைபிடித்தால் நாடு எங்கோ போய் விடுமே..செய்வார்களா?
*** இந்திய ரூபாயின் மதிப்பு நிலையில்லாமல் இருப்பதே..இந்தியாவோடு நிரந்தரமான நீண்டகால முதலீடுகளை செய்யத்தடையாக இருக்கிறது..
இதுதான் மன்மோகன் சிங்கின் பொருளாதார புரட்சியா...சீர்திருத்தமா?...
*** ஜப்பான் அணு உலை கசிவுகள் இன்னும் நின்ற பாடில்லை
இந்தியாவில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் ( நடக்கவேண்டாம்..நடக்கக் கூடாது ) ஆட்சியாளர்களுக்கு இப்படி ஒத்துக்கொள்ள தைரியம் வந்திருக்குமா?
கடுமையான உழைப்பு
வேலையில் முழு ஈடுபாடு
போலி மதசார்பின்மை
ஆட்சின் குறைபாடுகளை ஒத்துக்கொள்ளும் நெஞ்சுரம்
இவை ஜப்பானுக்கு மட்டுமே சொந்தமா...நம்மிடமும் இருக்கவேண்டாமா?
No comments:
Post a Comment