சரித்திரத்தை மறந்துவிடுவது
நமக்கு சகஜமாக போய்விட்டது.
சரித்திரத்தை மறக்கடிப்பதும் காங்கிரஸுக்கு சகஜமாய் போய்விட்டது..
ஒவ்வொருமுறையும்
பழைய சரித்திரத்தை முறியடிக்கும்--
புதிய சரித்திரத்தை உண்டாக்குவதால் மக்களுக்கும் மறதி
அதிகமாய் விட்டது..
ஜனாதிபதி தேர்தலும்
அப்படி ஆகிவிட்டமாதிரி உள்ளது..
பாஜகவிற்கு எதிராக
பேசப்படுவது
ஒன்று..பாஜகவில்
ஜனாதிபதி வேட்பாளருக்கு பஞ்சம்….
ஆள் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்…
கையை பிசைகிறார்கள்…
இதில் கடைசி ஒன்று
மட்டும் உண்மை…
ஆம்…”கை”’யை பின்பக்கம் திருப்பி ஒரேடியாக உடைக்க போகிறோம்..
அதனால் ஏற்பட்ட
வயிற்றெரிச்சல் தான் பல அவதூறுகள்.
பாஜகவில் ஜனாதிபதிக்கோ…பிரதமர்
பதவிக்கோ ..
வேட்பாளர்கள் கொட்டிக்கிடக்கிறார்கள்..
அதனால் போட்டி கடுமை..அதனால்.தேர்வு
தாமதம்..
காங்கிரஸில்-- சோனியா
மட்டும்தான்…ராகுல் மட்டும்தான்..
வேறு யாராவது கையை தூக்கினால்…”கை” யே கையை முறிக்கும்.
அப்படியும் இப்படியுமாக
அறிவிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி ..
எப்படி அறிவிக்கப்பட்டார்…எவ்வளவு நாள் கடந்தது…
எவ்வளவு
இழுபறி..எவ்வளவு எதிர்ப்பு..
இப்போதுள்ள ஜனாதிபதி
பிரதிப பாட்டீல் எப்போது அறிவிக்கப்பட்டார்?..
கடைசி நேரத்தில் திடீரென அல்லவா வந்து
குதித்தார்..
இது மறந்து போச்சே..
காங்கிரஸின் அதிகார
பூர்வ வேட்பாளர் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து
அதன் பிரதம மந்திரியே…இந்திரா காந்தியே..…வி.வி.
கிரியை ஜெயிக்க வைத்தாரே..
இது மறந்து போச்சே.
ஜனதிபதி போஸ்ட்
என்ன சோனியா வீட்டு துணி தோய்க்கும் போஸ்ட்டா..ஆராயாமல் அறிவிக்க..
ஆகவேதான் பாஜக
அலசி ஆராய்ந்து ..நல்லவரை..வல்லவரை..எளியவரை.. வலியவரை…இதுவரை பிரதிநித்வம் கொடுக்கப்படாத
வடகிழக்கு மாநிலத்தவரை……ஒரு பழங்குடி இனத்தவரை பி.எ.சங்மாவை அறிவித்துள்ளது..
காங்கிரஸ் முக்கி
முனகி வேட்பாளராக அறிவித்த முகர்ஜி மேல்
இப்போது தோண்ட தோண்ட ஊழல் பூதம் ஒவ்வொன்றாக
வெளிவருகிறது..
நேரு குடும்ப வீட்டு
வேலைக்காரர்..அல்லது ரப்பர் ஸ்டாம்ப்..
அல்லது ஊழல் பெருச்சாளி..இவைதானே காங்கிரஸில்
வேட்பாளர்களின் தகுதி…
முகர்ஜி காங்கிரஸ்
கலாச்சாரத்தை காப்பாற்றுவாரா....
அல்லது சோனியாவுக்கு தண்ணி காண்பித்து இத்தாலிக்கு
ஓட்டுவாரா…
வேடிக்கை ..பார்ப்போம்..
2 comments:
வணக்கம்
வித்தியாசமான பார்வை -பார்ப்போம்..
நல்ல அலசல் அண்ணா ,திரு .சங்மாவை ஆதரிக்க இன்னும் சில கட்சிகள் முன்னேற வேண்டும் .
Post a Comment